siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

புதுமைகள் படைப்பதில் சுவிஸ் முதலிடம்


ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய அண்மைகால ஆய்வின்படி, அதன் உறுப்பினர் நாடாக இல்லாத சுவிட்சர்லாந்து புதுமைகள் படைப்பதில் முதலிடத்தைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து புதுமை மதிப்பீட்டுக் கழகம் இந்த வாரம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் 27 உறுப்பினர் நாடுகளிலும் உள்ள ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை அறிந்து தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வில் குரோஷியா, ஐஸ்லாந்து, மேசிடோனியா, நார்வே, செர்பியா, துருக்கி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளும் சேர்த்து கொள்ளப்பட்டன.
பதினைந்து அம்சங்களை அடிப்படையாக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டதில் வெளிப்படையான, சிறப்பான மற்றும் கவர்ச்சியான ஆய்வு முறைகளை பின்பற்றுவதில் சுவிட்சர்லாந்து முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த மூன்று ஆய்வு முறைகளையும் நிறுவனமுதலீடு, அறிவுசார் சொத்துகள் மற்றும் பொருளாதார விளைவுகளை அறிவதற்கு சுவிட்சர்லாந்து பயன்படுத்தியுள்ளது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இருக்கும் ஸ்வீடன், ஜேர்மனி, டென்மார்க், ஃபின்லாந்து போன்ற நாடுகளும் புதுமைகள் படைப்பதில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது
 

திங்கள், 1 ஏப்ரல், 2013

கோஷ்டி சண்டையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி



கனடாவிலுள்ள டொரொண்ட்டோவில் அமைந்துள்ள வணிக வளாகக் கட்டிடத்தில் கடந்த சனிக்கிழமையன்று இரவு எட்டு மணியளவில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.
யார்க்டேல்(Yorkdale) என்ற பரபரப்பான வணிக வளாகத்தில் இரண்டு கோஷ்டியினருக்கிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மிக்கேல் நிகியுயென்(Michael Nguyen) என்பவர் பலியானார். அவரது உடலை நேற்று காலை பொலிசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இது குறித்து காவல்துறை அதிகாரி ராப் நார்த்(Rob North) கூறுகையில், வணிக வளாகத்திற்குள் இரண்டு கோஷ்டியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அச்சண்டை துப்பாக்கிச் சூடாக வெடித்துள்ளது என்று விளக்கிக் கூறினார்.
மேலும் துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் எவரும் பாதிப்படையவில்லை என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
யார்க்டேல் வணிக வளாக நிர்வாகம் பொலிசாருடன் ஒத்துழைப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 

சட்ட வல்லுனர்களின் மரணத்தால் விழுந்துள்ள மர்ம முடிச்சு -


அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள காப்மன் மாவட்டத்தின் அரசாங்க சட்டதரனி மைக் மெக்லெலாண்டு, அவரது மனைவி சிந்தியா வுட்வார்டுடன், நேற்று அவர்களது வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்ற ஜனவரி மாதம், இதே பகுதியைச் சேர்ந்த மைக் ஹாஸ்சி(57) என்ற அரசாங்க சட்டதரனி சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து நடந்துள்ள சட்டத்துறை வல்லுனர்களின் மரணங்கள், இதன் பின்னணியில் பெரிய திட்டங்கள் இருக்கக்கூடுமோ என்ற ஐயத்தையும், இது தொடரக்கூடும் என்ற பயத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அச்சமுற்ற மற்றவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இறந்த மைக் ஹஸ்சி, அமெரிக்காவின் வெள்ளை இனத்தைச் சேர்ந்த, சுமார் 20,000 பேருக்கும் மேலாக ஒரு குழுவாக செயல்பட்டு வந்த அமெரிக்கன் பிரதர்ஹுட் என்ற கொள்ளைக்கூட்டத்திற்கு எதிராகத் துப்பறிந்தவர் ஆவார். இதனால் அந்தக் கூட்டம் சட்டத்துறையினரைப் பழிவாங்கலாம் என்ற ஒரு கணிப்பு சென்ற டிசம்பர் மாதம் எழுந்தது.
தற்போது நடந்துள்ள இந்த இரு கொலைகளும் அந்தக் கருத்தை ஊர்ஜிதம் செய்வதுபோல் அமைந்துள்ளன. எனினும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று காவல்துறை உயரதிகாரி அல்பாக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

ஞாயிறு, 31 மார்ச், 2013

கண்காணிக்க செயற்கைக் கோள் அனுப்பும்


பூமியை துல்லியமாக கண்காணிக்கும் உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோளை சீனா, அடுத்த மாதம் விண்ணில் செலுத்த உள்ளது.
அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்த படியாக சீனா விண்வெளி ஆராய்ச்சியில் முன்னோடியாக திகழ்கிறது. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பும் முயற்சியிலும் அந்நாடு ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே, பூமியை துல்லியமாக கண்காணிக்கும் செயற்கைகோள் "த லாங் மார்ச் 2டி” என்ற ராக்கெட் மூலம் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இயற்கை சீற்றங்களை குறைக்கவும், இயற்கை வளங்களை காக்கவும் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மற்றும் சீன பாதுகாப்பு ஆகியவற்றை கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள் உதவும்.
மேலும் கடல் ஆய்வுகள் மற்றும் நகரங்களின் போக்குவரத்து கட்டுப்பாடு ஆகியவற்றிலும் இந்த செயற்கைகோளின் செயல்பாடு உதவும்.
 

வியாழன், 28 மார்ச், 2013

வளர்ச்சி வங்கி” அமைக்க பிரிக்ஸ் மாநாட்டில் முடிவு:


தென் ஆப்பிரிக்காவின் தலைநகரில் இன்று நடைபெறுகிற பிரிக்ஸ் மாநாட்டில் இதன் உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் நிதி அமைச்சர்கள் இன்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் பிரிக்ஸ் நாடுகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த தேவையான நிதியை வழங்க ”பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி” அமைக்க உடன்பாடு ஏற்பட்டது.
வளர்ச்சி வங்கியை அமைப்பது என்பது முக்கியமான முடிவு. உலக வங்கி, இந்த வங்கியுடன் இணைந்து செயல்பட்டு இரு வங்கிகளின் செயல் திறனை அதிகரிக்கச் செய்யும் என்று உலக வங்கி செய்தி வெளியிட்டுள்ளது.
 

புதன், 27 மார்ச், 2013

மக்கள் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன்: சர்தாரியின் மகன்

தந்தையுடன் ஏற்பட்ட மன வேற்றுமை காரணமாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி பாகிஸ்தானை விட்டு வெளியேறினார்.வரும் மே மாதம் 11ம் தேதி பாகிஸ்தான் பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நட்சத்திர பிரசாரகர் என கருதப்படும் பிலாவல் பாகிஸ்தானை விட்டு வெளியேறி துபாய் சென்று விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்காதது, பாகிஸ்தானில் பள்ளி மாணவி தாக்கப்பட்ட விவகாரம், குவெட்டா நகரில் ஷியா பிரிவினர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் ஆகியவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட சில மனவேறுபாடு காரணமாக அவர் தந்தையுடன் தகராறு செய்து கொண்டு துபாய் சென்று விட்டதாக பிலாவலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
'தேர்தலில் ஓட்டு போட நேர்ந்தாலும் இனி பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஓட்டு போட மாட்டேன்' என பிலாவல் கூறியதாகவும் தெரிய வருகிறது

செவ்வாய், 26 மார்ச், 2013

பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய்லாந்து பெண்ணுக்கு?



தாய்லாந்தைச் சேர்ந்த 43 வயதுப் பெண் இளம்பெண்களைக் கடத்தி சுவிட்சர்லாந்தில் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதிபடுத்தபட்டதை தொடர்ந்து பெர்ன் நீதிமன்றம் அவருக்கு ஆறாண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இந்த பெண் 50 இளம்பெண்களை வற்புறுத்தி இத்தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
மேலும் துர்காஉ(Thurgau) என்ற மாநிலத்தில் மூல்ஹீம்(Müllheim) என்ற இடத்தில் தனியாக ஒரு விடுதியையும் நடத்தி வந்துள்ளார்.
இதற்காக இந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.
விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி வந்த பெண்களிடம் தனக்கு அறுபதினாயிரம் ஃபிராங்க் சம்பாதித்துத் தர வேண்டும் என்று இப்பெண் கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
இது குறித்து இந்த பெண் கூறுகையில், தன் மீது எந்தத் தவறும் இல்லை, தன்னை ஒரு பகடைக்காயாகத் தான் பயன்படுத்தினார்கள் என்று கூறியதை பெர்ன் நீதிமன்றம் ஏற்க மறுத்து சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
 

தொடரும் இனக்கலவரம்: மக்கள் ஊரை விட்டு ஓட்டம்


மியான்மர் நாட்டின் மெய்திலா நகரில் புத்த மதத்தினர் மற்றும் முஸ்லிம் மதத்தினரிடையே கடந்த புதன்கிழமை முதல் கலவரம் வெடித்தது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற மோதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தினர் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மியான்மரின் மத்தியில் உள்ள கோன் நகரில் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் வீடுகள் மற்றும் மசூதிகளை இடித்தும், கொளுத்தியும் நாசமாக்கினர். இந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இறப்பு குறித்த செய்திகளும் கிடைக்கவில்லை. இதனால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை காலிசெய்து அகதிகளாக வெளியேறி வருகின்றனர். கடந்த வருடம் ராக்கைன் மாகாணத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்துக்கு 200 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

திங்கள், 25 மார்ச், 2013

திருமணநல் வாழ்த்து

திரு.திருமதி ஜெயச்சந்திரன் அருந்தா தம்பதியினருக்கு எங்கள் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்! - Bala Jeya, Bala Athavee, Ragu Swiss, Visakan Kuna, Yalini Sakeelan, Maheswaran Jeyachandran, Yogasingam Sellathuraiமற்றும் Kuna Thangarasa உடன்

ஜனாதிபதி மாளிகையை புரட்சிப்படையினர்?


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய ஆப்பிரிக்க குடியரசின் ஜனாதிபதியாக பிரான்கோயிஸ் பாசி பதவி வகித்து வருகிறார்.
இவரது ஆட்சிக்கு எதிராக புரட்சிப் படையினர் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.
இரு தரப்பினருக்கும் இடையில் கடந்த 2 மாதங்களாக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன.
இந்த முயற்சி பலனளிக்காத நிலையில், பன்குயி நகரை நேற்று முற்றுகையிட்ட புரட்சிப் படையினர், ஜனாதிபதி மாளிகையை இன்று கைப்பற்றினர்.
ஜனாதிபதி மாளிகை புரட்சிப் படையினர் வசம் வந்ததாக அறிவித்த தளபதி டுஜோமோ நர்கோயோ, ஜனாதிபதி பிரான்கோயிஸ் பாசி மாளிகையை விட்டு தப்பியோடி விட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, உள்ளூர் வானொலி மூலம் புரட்சிப் படையின் தலைவர் மைக்கேல் டுஜோடோடியா உரையாற்றுவார் என கூறிய அவர், இன்றுடன் எமது ஆயுதப் போராட்டம் முடிவடைந்தது. போராளிகள் அனைவரும் தங்களது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்