siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 4 ஜூலை, 2013

மாணவியின் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியரால்???


ஜப்பானில் ஆசிரியர் ஒருவர் 7 வயது மாணிவியின் வாயில் டேப் ஒட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜப்பானில் பள்ளி மாணவ- மாணவிகள் மதிய உணவை தங்கள் வகுப்பறையில் வைத்தே சாப்பிடுவது வழக்கம்.
அவ்வாறு சாப்பிடும் போது, சாப்பாடு பரிமாறும் மாணவிகள் தங்கள் வாய் மற்றும் மூக்கை மறைக்கும் மாஸ்க் எனப்படும் முகக்கவசம் அணியவேண்டும்.
இதனை மீறும் குழந்தைகளை ஆசிரியர்கள் கடுமையாக கண்டிக்கின்றனர்.
இந்நிலையில் வடக்கு டோக்கியோவின் டோச்சிகியில் உள்ள ஒரு பள்ளியில் இன்று மதிய உணவு பரிமாறிய 7 வயது சிறுமி, மாஸ்க் அணியவில்லை.
இதனால் அவரை ஆசிரியர் கண்டித்துள்ளார். அப்போது அந்த சிறுமி தனது மாஸ்க்கை எடுத்து வர மறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து ஆசிரியர் அந்த சிறுமியின் வாயில் இருந்து மற்றவர்களுக்கு கிருமிகள் பரவாமல் தடுக்கும் வகையில் வாயில் டேப் ஒட்டியிருக்கிறார்.
இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் ஆசிரியர் மன்னிப்பு கேட்டுள்ளார்
 

புதன், 3 ஜூலை, 2013

பிராஸ்னனின் செல்ல மகள் மரணம்


ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்து புகழ் பெற்ற பியர்ஸ் பிராஸ்னனின் மகள் சார்லட் பிராஸ்னன் புற்றுநோயால் மரணமடைந்துள்ளார்.
60 வயதாகும் பியர்ஸ் பிராஸ்னனுக்கு இரு மகன்கள் மட்டுமே, மகள் சார்லட்டை சிறு வயதிலேயே தத்தெடுத்து வளர்த்தார்.
இவரது தாயார் காஸென்ட்ரா தனது கணவரைப் பிரிந்து குழந்தையுடன் தனியாக நின்ற போது காஸென்ட்ராவை மணந்து கொண்டு சார்லெட்டை தத்தெடுத்துக் கொண்டார்.
மகள் மீது நிறையப் பிரியம் வைத்திருந்தார் பிராஸ்னன்.
சார்லெட்டுக்கு கருப்பை புற்றுநோய் இருந்தது சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தனக்கு புற்றுநோய் வந்திருப்பது தெரிந்தும் கூட மனம் தளராத சார்லெட், மிகவும் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் சிகிச்சையை தொடர்ந்து வந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சார்லெட்டின் நிலைமை மோசமானது.
இதையடுத்து அவர் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டார். கடந்த மாதம் 28ம் திகதி மரணமடைந்தார்.
இத்தகவலை பிராஸ்னன் ஒரு சிறு அறிக்கை மூலம் உலகுக்கு அறிவித்தார்.
அதில், ஜூன் 28ம் திகதி எனது அன்பு மகள் சார்லெட் எமிலி, இறைவனடி சேர்ந்தார். கருப்பை புற்றுநோயால் அவர் மரணமடைந்தார்.
அவர் மரணித்தபோது கணவர் அலெக்ஸ், குழந்தைகள் இசபெல்லா, லூகாஸ், சகோதரர்கள் கிறிஸ்டோபர், சீன் ஆகியோர் உடன் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தான் நடித்து வரும் நவம்பர் மேன் இன் செர்பியா என்ற படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட பிராஸ்னன், அதில் வரும் ஒரு சண்டைக் காட்சியில் வழக்கம்போல நடித்துக் கொடுத்தாராம்.
சார்லெட்டின் தாயார் காஸன்ட்ராவும் இதே போலத்தான் புற்று நோய்க்கு தனது 42வது வயதில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது

 

நாடுகளை உளவு பார்த்ததற்கு மன்னிப்பு கேட்க முடியாது:


மற்ற நாட்டு தூதரகங்களை உளவு பார்த்த விடயத்தில் யாரிடமும் மன்னிப்பு கேட்க தேவையில்லை என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பாட்ரிக் வென்ட்ரல் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் பெரும்பாலான நாடுகளுடன் மிகவும் நெருக்கமான நட்புறவுடன் உள்ளோம்.
அவர்களுடனான இந்த தூதரக ரீதியிலான உறவு மேலும் தொடரும். எனவே அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் உள்பட 38 நாடுகளின் தூதரகங்களை உளவு பார்த்த விஷயத்தில் யாரிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை.
இது அனைத்து நாடுகளும் மேற்கொள்ளும் வழக்கமான ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஐரோப்பிய நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்க தொடரும். இதுதொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் ஒருவாரத்தில் தொடங்க உள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பயனடைவார்கள். இதுவே மற்ற நாடுகளுடன் எங்களின் ஒளிவுமறைவற்ற செயல்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சான்று என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே இது தொடர்பாக ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், ஒரு நாடு மற்ற நாடுகளை உளவு பார்ப்பது என்பது வழக்கமான ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார்
 

ஆறுமுகம் தொண்டமானுக்கும் பா.சிதம்பரத்திற்கும் இடையில் பேச்சுக்கள்!


இந்தியா சென்றுள்ள சிறீலங்கா அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தலையிலான குழுவினருக்கும் இந்திய நிதிஅமைச்சர் பா.சிதம்பரத்திற்கம் இடையிலான பேச்சுக்கள் நடைபெற்றுள்ளது.
நேற்று மாலை இந்திய நிதிஅமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கடந்த மாதம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தொழிலாளர் காங்கிரசின் குழுவினர் இந்தியா காங்கிரஸ் கட்சி தலைவி சோனியாவுடன் கலந்துரையாடியுள்ளார்கள்
இதன் தொடர்ச்சியான பேச்சுக்களே சிதம்பரத்துடன் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
இதன்போது இந்திய வம்சாவளி தோட்ட மக்களுக்கான வீடமைப்பு,மாணவர்களுக்கான கல்வி, இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு,தொழில்பயிற்சி,தோட்ட மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 2 ஜூலை, 2013

மைதானத்தில் தோன்றிய திடீர் புத்தர் சிலை!


மட்டக்களப்பு ஓட்டமாவடிப்பகுதியில் பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் திடீர் என புத்தர் சிலை இருந்ததால் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வாழைச்சேனை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளது.
பிறைந்துரைச்சேனையில் உள்ள அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் சாதுலியா வித்தியாலயம் என்பவற்றுக்கு உள்ள ஒரே விளையாட்டு மைதானம் இம்மைதானமாகும். இம்மைதானம் வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரைக்கு அருகில் அமைந்துள்ளது.
கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக பாடசாலைகளின் விளையாட்டு நிகழ்ச்சிகள் பிரதேச விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டுப் போட்டிகள் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்று வந்தன.
விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதியால் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 01ம் திகதி சுற்றுமதில் உடைக்கப்பட்டு இக்காணி புத்த ஜயந்தி விகாரைக்குரிய காணி என்றும் இதற்குள் வெளியாட்கள் எவரும் விளையாட வரக்கூடாது என்று அறிவித்தார்.
இது தொடர்பில் பாடசாலை நிருவாகத்தால் வாழைச்சேனை பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் வழங்குத் தொடரப்பட்டு 11 தவணைகள் இடம்பெற்றதன் பின்னர் நீதிமன்றத்தால் விகாரைக்குரிய இடம் அல்ல என்று பாடசாலை மைதானம் என்று சுட்டிக்காட்டி 2013ம் ஆண்டு ஜீன் 25ம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.
இன்று திங்கட்கிழமை அதிகாலை மீண்டும் புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதியினால் மைதானத்தின் நடுவில் மேசையின் மீது புத்தர் சிலை ஒன்றை வைத்துள்ளதனால் குழப்பம் அடைந்த பாடசாலை நிருவாகம் வாழைச்சேனை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்

யாழில் சட்டவிரோத மணல் அகழ்வில் படையினர்!


வலி.கிழக்கின் அக்கரை கிராம கடற்கரையோரங்களில் படையினர் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் படையினர் என்னத்தையும் கொண்டு போகலாம் என்ற நிலையினை ஏற்றுக் கொள்ள முடியாது சட்டவிரோத மணல் அகழ்வினை காவல்துறையினரும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.இப்பகுதி நீண்ட காலமாக படை கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது மீள்குடியேற்றத்திற்காக அந்த பகுதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் மிதிவெடி உள்ளதாக மக்கள் அச்சங் கொண்டிருந்ததால் முழுமையாக அப்பகுதியை கண்ணிவெடியகற்றித் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்ததோடு அயல் கிராமங்களிலும் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.பொது மக்களது உழவு இயந்திரங்களைப் பாவித்து படையினர் மணல் அகழ்ந்து கொண்டு செல்கின்றனர்.
மணல் அள்ளப்படுவதற்குரிய எந்த அனுமதிகளும் உரியவாறு எடுக்கப்படவில்லை. கடற்கரையிலுள்ள இந்த மணலானது அகழ்ந்து எடுக்கப்படுவதானது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இதனைப் பொது மக்கள் கேட்டபோது பிரிகேடியரிடம் கேளுங்கள் அல்லது இராணுவத் தலைமையத்திடம் கேளுங்கள் என்ற பதில்கள் சொல்லப்படுகின்றது.
படையினர் தமக்கான புதிய முகாம்கள் அமைப்பதற்கும் புதிய பல விடயங்களைச் செய்வதற்கும் இந்த மணலைப் பாவிக்கின்றனர். படையினர் அடிக்கும் மணல் கொள்ளைக்கு இணையாக உழவு இயந்திரங்களை படையினருக்க வழங்குபவர்களும் கொள்ளை அடிக்கின்றனர்.அகழ்ந்த மணலை இராணுவம் கொண்டு செல்கின்றது என்று காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

திங்கள், 1 ஜூலை, 2013

பிரதம பூசாரி கொலை: சந்தேகநபர் ஒருவர் கைது

 
செல்லக்கதிர்காமம் ஈஸ்வரா தேவாலயத்தின் பிரதம பூசகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பதுளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 5ம் திகதி 70 வயதான ராஜபக்ச முதியான்சேலாகே பிரேமதாச என்ற பூசகரின் சடலம் கோயிலுக்கு பின்புறமாக உள்ள காட்டில் உரப் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை பதுளையில் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்று திஸ்ஸமஹாராமை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சந்தேகநபர் அளித்துள்ள வாக்குமூலத்திற்கு அமைய மேலும் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஞாயிறு, 30 ஜூன், 2013

ஆள ஊடுருவும் படையினரின் நச்சுவாயு முகமூடிகள்


2009ம் ஆண்டுக்கு முன்னதாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பல இடங்களில், இலங்கைப் படையின் ஆள ஊடுருவும் படையினர் தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள். குறிப்பாக இவர்களது தாக்குதல் விஸ்வமடு கிளிநொச்சி மற்றும், முல்லைத் தீவுக்குச் செல்லும் பாதைகளில் கூட நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். விடுதலைப் புலிகளின் அதி உச்ச தலைவர்கள் நடமாடும் இப் பிரதேசங்களை புலிகள் கடுமையாகப் பாதுகாத்து வந்தனர். இருப்பினும் அப்பிரதேசங்கள்ல் அவ்வேளைகளில் ஆள ஊடுருவும் இலங்கைப் படையால் நடத்தப்பட்ட சில தாக்குதல்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இருந்தபோதிலும் அதற்கான விடைகள் இப்போது கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் சில அதிர்சி தகவல்களும் உள்ளது. அதாவது வன்னியில் தற்சமயம் கண்ணிவெடிகளை அகற்றிவரும் சில அரசசார்பற்ற நிறுவனங்களில் வேலைசெய்யும் சிலர் வழங்கியுள்ள தகவல்கள் இவை. தாம் சில பகுதிகளில் ( பாதுகாப்பு காரணங்களுக்காக இடங்கள் குறிப்பிடப்படவில்லை) கண்ணிவெடிகளை அகற்றியவேளை, புதர் மற்றும் பற்றைகளில் இருந்து மறைத்துவைக்கப்பட்ட சீருடைகளை கண்டு பிடித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவை விடுதலைப் புலிகளினுடையது அல்ல என்றும், மாறாக இலங்கை இராணுவ சீருடைகளும் அல்ல எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப் பகுதிகளில் இவை ஏன் மறைத்துவைக்கப்பட்டுள்ளது என ஆராயப்பட்டவேளை சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இச் சீருடைகளை எடுத்துச் செல்லவந்த இராணுவத்தினர், அவை ஆள ஊடுருவும் அணியினர் பாவிக்கும் சீருடை என்று கூறியுள்ளார்கள். இதில் திடுக்கிடும் தகவல் என்னவென்றால், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீருடையுடன் அதி நவீன ஆயுதங்கள் மற்றும் தொடர்பாடல் கருவிகள் இருந்ததாகவும், கூடவே நச்சுவாய்க் குண்டுகளைப் பாவிக்கும்போது அணியும் தலைக் கவசமும் இருந்தாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் சில குறிப்புகள், மற்றும் வரை படங்கள் என்பன தமிழில் தான் எழுதப்பட்டிருந்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படி என்றால் இலங்கை இராணுவத்தின் ஆள ஊடுருவும் அணியை வழிநடத்தியது , இல்லை என்றால் இயக்கியதே கருணாவின் குழுவில் உள்ளவர்கள் தான் என்பது, தெளிவாகப் புலணாகிறது. இறு நேரத்தில் புலிகள் அமைப்பில் பல கருணாவின் குழுவின கலந்து போராளிகள் போல இருந்திருக்கிறார்கள். இவர்களே ஆள ஊடுருவும் அணியில் செயல்பட்டிருப்பதும் தற்போது ஆதாரபூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது -

பஸில் ராஜபக்ஷ இந்தியா பயணம்!


 சிறீலங்காவிற்கும் இந்தியாவுக்கும் இடையே இராஜதந்திர ரீதியிலும் படை ரீதியிலும் முறுகல் நிலை வலுவடைந்துள்ள இந்த நேரத்தில் இந்திய அரசின் அவசர அழைப்பின் பேரில் ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ எதிர்வரும் 4 ஆம் திகதி புதுடில்லிக்குப் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசமைப்பின் '13' ஆவது திருத்தம் மற்றும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் என்பன தொடர்பில் சிறீலங்கா அரசின் நிலைப்பாட்டை இந்தியாவுக்குத் தெளிவாக விளக்குவதற்கே பஸில் அழைக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய சிறீலங்கா ஒப்பந்தத்தை இல்லாதொழிப்பதற்கு சிறீலங்கா அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படும் நிலையில் இந்தியா இதற்குத் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.
அவ்வாறு ஏதாவது நடந்தால் சிறீலங்காவில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிப்பதற்கும் அது எண்ணியுள்ளது. அத்துடன் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எதிர்வரும் 7 ஆம் திகதி சிறீலங்கா செல்லவுள்ளார் இதேவேளை இந்தியாவில் பயிற்சிக்குச் சென்ற சிறீலங்கா படையினரை தமிழகத்தின் எதிர்ப்புக் காரணமாக நாட்டுக்குத் திருப்பி அழைத்துள்ளது இலங்கை. இவ்வாறாறு இராஜதந்திர முறுகல் நிலை வலுவடைந்து வரும் நிலையில் இந்திய அரசின் அவசர அழைப்பின் பேரில் அமைச் சர் பஸில் ராஜபக்ஷ புது டில்லிக்கு விரைகிறார் எனத் தெரியவருகிறது

சனி, 29 ஜூன், 2013

சிறிலங்காவை அழுத்தும் நவனீதம்பிள்ளை

     
 சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
 
 எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவுக்குப் விஜயம் மேற்கொள்ளவுள்ள நவநீதம்பிள்ளை, பிபிசிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே இதனை வலியுறுத்தியுள்ளார்.

 சிறிலங்காவில் போருக்குப் பிந்திய மாற்றங்கள் குறித்து தாம் அவதானிக்கவுள்ளதாகவும், தனது பயணத்தின் போது, சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 வரும் ஓகஸ்ட் 25ம் நாள் கொழும்பு செல்லும் நவநீதம்பிள்ளை, 31ம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருப்பார்.

 சிறிலங்கா அரசாங்கத்தினால் 2011ம் ஆண்டு விடுக்கப்பட்ட அழைப்பின் அடிப்படையில் இந்த விஜயம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.