siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

புதிய கருவி காணாமல் போன பொருட்களை கண்டுபிடிக்க,,


காணாமல் போன பொருட்களை ஓரிரு வினாடிகளிலேயே கண்டுபிடித்துக் கொடுக்கும், நவீன சென்சார் கருவியை, ஜெர்மன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜெர்மனியின், உல்ம் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டுள்ள, இந்த நவீன கருவியை, "ஸ்மார்ட் போன்' அல்லது கம்ப்யூட்டருடன் இணைத்து அதிலுள்ள தேடுதல் மூலம் காணாமல் போன பொருட்களை, எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
"பைண்டு மை ஸ்டப்' என்று அழைக்கப்படும், இந்தக் கருவியின் உதவியுடன், நாம் எதை தொலைத்து விட்டோமோ அதன் பெயரை கணனி திரையில் தட்டச்சு செய்ய வேண்டும்.
அதாவது, மணி பர்ஸ் அல்லது சாவிக்கொத்து போன்றவற்றின் பெயரை கணனி திரையில் தட்டச்சு செய்தால், ஓரிரு வினாடிக்குள்ளேயே, உங்களது, மணிபர்ஸ் அல்லது சாவிக் கொத்து, சோபா சீட்டின் அடியில் உள்ளது அல்லது அருகில் உள்ளது என்று நமக்கு தகவல் தெரிவிக்கும்.
இதுகுறித்து, இந்த கருவியை வடிவமைத்த, விஞ்ஞானி, புளோரியா சாப் கூறியதாவது:
இக்கருவியில் பயன்படுத்தப்பட்டுள்ள சென்சார் கருவி, டிரான்ஸ்மிட்டர்கள் மற்றும் சிப்ஸ் ஆகியவை, மிகவும் சிறியவை மட்டுமின்றி, இதன் விலையும் மிகவும் குறைவு.
மிகச்சிறிய நெட்வொர்க் மூலம் செயல்படுத்தப்படும், இக்கருவியைக் கொண்டு, நாம் தேடும் பொருளை சிரமமின்றி கண்டுபிடித்துவிடலாம்.
இன்றைய நவீன உலகில் கணனியின் உதவியுடன் நாம் எதனுடனும் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில், "பைண்டு மை ஸ்டப்' கருவியை, கணனி அல்லது ஸ்மார்ட் போனில் இணைத்து, நெட்வொர்க் மூலம், நாம் தேடும் பொருட்களை கண்டுபிடிக்கலாம்.
தொலைபேசி தயாரிப்பாளர்கள், இந்த கருவியை தாங்கள் தயாரிக்கும் போனிலும் பொருத்தலாம். அடுத்த மாதம், இக்கருவி சந்தைக்கு வருகிறது

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

பரிசு கிடைத்தும் பணத்தை பெறாத 12 கோடீஸ்வரர்கள்


இங்கிலாந்து அரசு நடத்தும் தேசிய லாட்டரி பரிசுக் குலுக்கல் கடந்த ஜூலை 26ம் திகதி நடைபெற்றது.
இந்த முறை 100 பேர் ஒரு மில்லியன் பவுண்ட் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் இதுவரை 88 பேர் பரிசினை பெற்றுச் சென்றுவிட்டார்கள். மீதியிருக்கும் அந்தப் 12 பேருக்காக அரசு காத்திருக்கின்றது.
இதற்கு முந்தைய குலுக்கல், ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா தின இரவு அன்று நடைபெற்றது. அதில் முதல் பரிசு 97 பேருக்கு அளிக்கப்பட்டது.
அதனால் மீதியுள்ளவர்களும் பரிசினைப் பெற்றால் இது ஒரு சாதனையாக அமையும் என்று அரசு கருதுகின்றது. 2014 ஆண்டு ஜனவரி முடிய இந்தப் பரிசினைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த டிக்கெட்டுகள் இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் வாங்கப்பட்டுள்ளன. தான் ஒரு கோடீஸ்வரன் என்பது தெரியாமலேயே அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கக் கூடும் என்று கூறும் லாட்டரிக் குழுவின் தகவல் அதிகாரி, 88 பேரின் வாழ்க்கையை இந்தக் குலுக்கல் மாற்றியுள்ளது.
மீதி உள்ள 12 பேரை நாங்கள் தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கின்றோம் என்று கூறுகின்றார்

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

கடிநாய்களை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு ஆயுள் தண்டனை


இங்கிலாந்து நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் மக்கள் நாய்கடிக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் உயிரிழக்கும் அபாயமும் நேர்கிறது.
கடந்த ஆண்டுகளில் 16 பேர் நாய் கடித்து உயிரிழந்துள்ளனர். எனவே, நாய்களை பொது இடங்களில் அலைய விடும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர்.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, ஒரு நபரை வளர்ப்பு நாய் கடித்து காயப்படுத்தினாலோ, அந்த நாயை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்த சட்டத்தை திருத்தி, காயத்தை ஏற்படுத்திய நாய்களின் உரிமையாளருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனையும், உயிரிழப்பை ஏற்படுத்தும் நாய்களின் உரிமையாளருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்குவதை வகை செய்யும் புதிய சட்டத்தை இயற்ற இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் என தெரிகிறது.
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவுக்கு மட்டும் இங்கிலாந்து அரசு ஆண்டுதோறும் 30 லட்சம் பவுண்டுகள் செலவிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 7 ஆகஸ்ட், 2013

பறக்கும் சைக்கிளை உலகின் முதல் கண்டுபிடித்து லண்டன்


 
 லண்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகளான, ஜான் போடன் மற்றும் யானிக் ரீட் ஆகியோர் இணைந்து உலகில் முதல் பறக்கும் சைக்கிளை வடிவமைத்து சாதனைப்படைத்துள்ளனர்.
பல ஆண்டுகளாக பறக்கும் சைக்கிளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்ட இவர்கள் இதன் பயனாக குறைந்த எடையும் அதிக திறனும் உடைய காற்றாடியும் இறக்கைகளும் பொருத்தப்பட்ட சைக்கிளை வடிவமைத்து உள்ளனர்.
பயோ டீசல் மூலம் சைக்கிளை இயக்குவதற்கான சிறிய இன்ஜின் வடிவமைக்கப்பட்டு அதில் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த இன்ஜின் மூலம் இயக்கப்படும் சைக்கிளானது, சற்று உயரத்தில் பறக்க ஆரம்பித்தவுடன் காற்றின் உதவியுடன் காற்றாடி சுழல ஆரம்பிக்கிறது.
இதனால் குறைந்த எடையில் வடிவமைக்கப்பட்ட சைக்கிள் காற்றின் உதவியுடன் பறக்கிறது. அதிக எரிபொருள் செலவில்லாமல் 40 கி.மீ., வேகத்தில் இயங்கும் இந்த சைக்கிள் தரையிலிருந்து 4,000 அடி உயரம் வரை பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதன் வடிவமைப்பாளர்கள் பறக்கும் சைக்கிளை மேலும் நவீனப்படுத்தி உலக அளவில் இதை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளனர். பலரையும் அணுகி அதற்கான நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். இந்த பறக்கும் சைக்கிளை இயக்க லைசென்சு எதுவும் தேவையில்லை என்பதே இதன் சிறப்பம்சமாகும்

தனது தூதரங்களை அமெரிக்கா, மூடக் காரணம் என்ன?


அல்கைதா இயக்கத் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலே அமெரிக்க தூதரங்கள் மூடப்படுவதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்கைதா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் சவாஹிரி இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
செம்டம்பர் 11 இரட்டைக் கோபுரக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் இவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாகவே வடஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள தூதரங்களை மூடியதாக அமெரிக்கா முன்னர் கூறியிருந்தது.
சுமார் 20 அமெரிக்க தூதரங்கள் மற்றும் கன்சியூலர் அலுவலகங்கள் நேற்று முன்தினம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அபுதாபி, அமான், கெய்ரோ, ரியாத், டஹ்ரான், ஜேட்டா, டோஹா, டுபாய், குவைத், மனாமா, மஸ்கட், சனா மற்றும் த்ரிப்போலி ஆகிய நகரங்களிலுள்ள இராஜதந்திர அலுவலகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதேவேளை, யேமனிலுள்ள தமது இராஜதந்திர அலுவலகங்களை பல ஐரோப்பிய நாடுகள் தற்காலிகமாக மூடியுள்ளதுடன், பிரித்தானியா தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது
 

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளும் சீன இளைஞர்கள்


நல்ல வேலைவாய்ப்புகள் பெறுவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளும் பழக்கம், சீன இளைஞர்களிடையே பிரபலமடைந்து வருகிறது.
நன்கு படித்திருந்தாலும், அதிக சம்பளத்தில், நல்ல வேலை கிடைப்பதற்கு முக அமைப்பும் முக்கியம் என்ற எண்ணம் சீனாவில், பெரும்பாலான இளைஞர்களிடையே பரவியுள்ளது.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள, ஜோங்டா மருத்துவமனையில், பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு உள்ளது.
இங்கு தினமும் 200 பேர் முக சீரமைப்பு அறுவை சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்களின், 70 சதவீதம் பேர் மாணவர்கள்.
கோடை விடுமுறையான, கடந்த மாதம், ஏராளமானோர், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனர்.
"நல்ல தோற்றமுள்ளவர்கள், சக ஊழியர்களிடம் நற்பெயர் பெற முடியும்' என்ற எண்ணம் அனைவரிடமும் நிலவுகிறது. இந்தக் காரணங்களுக்காக, தன் முகத்தை 20 ஆயிரம் ரூபாய் செலவில், சீரமைத்து கொண்டதாக பீஜிங்கில், முதுகலைப் பட்டப் படிப்பு படிக்கும், சேன் ரோங் கூறியுள்ளார்.
 

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

வெற்றி பெற்றவர்களுக்கு குழந்தைகள் பரிசாக வழங்கப்படும் வினோதம்!!


பாகிஸ்தானில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், வெற்றி பெற்றவர்களுக்கு குழந்தைகள் பரிசாக வழங்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் மிகப் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளரான ஹூசைன், அமான் ரம்ஜான் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
மதம் தொடர்பான கேள்விகள், விவாதங்களை கொண்ட இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு, இதுவரை மொபைல் போன், வாகனங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் தற்போது குழந்தைகள் பரிசாக வழங்கப்படுகிறது.
விவாத நிகழ்ச்சியின் ரேட்டிங்கை அதிகப்படுத்தும் முயற்சியாகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆனால், கைவிடப்பட்ட குழந்தைகளை, குழந்தையற்ற தம்பதிகளுக்கு பரிசளிப்பதில் தவறில்லை என்கிறார் ஹூசைன்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் குழந்தையை பரிசாக பெற்ற ஆயிஷா ரியாஸ் என்ற பெண், இந்த நிகழ்ச்சி தன்னை ஒரு தாயாக முழுமைப்படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் கடந்த ஒரு மாதத்தில் 3 குழந்தைகள் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆதரவற்ற குழந்தைகள் அமைப்பு ஒன்றுடன்இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது {(வீடியோ,புகைப்படங்கள், இணைப்பு})






 

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

இறந்ததாக சொல்ல‍ப்பட்ட‍வர், நேரில் தோன்றி அதிர்ச்சி!!


இறந்ததாக சொல்ல‍ப்பட்ட‍வர், நேரில் தோன்றி அதிர்ச்சி ஏற்படுத்தி திகில் சம்பவம் – அவரது முழு பேட்டி அடங்கிய வீடியோவினை கீழே காணலாம். சில நாட்களுக்கும்முன்பாக நடிகை கனகா, புற்று நோயால் பாதிக்கப் பட்டிருப்ப‍தாகவும், அவர் ஆலப்புழையில் உள்ள‍ ஒரு மருத்துவ மனையில் உள்நோயாளியாக அனுமதிக்க‍ப்படிருப்ப தாகவும் செய்திகள் வந்தது. அதை வ. மேலும், நேற்று பிற்பகலில் நோயின் தீவிரம் காரணமாகவும் சிகிச்சை பலனின்றியும், அவர் இறந்து விட்டார் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவியது.ஆனால்,  அவர், நேற்று மாலை செய்தி யாளர்கள் முன்னிலையில் தோன்றி, சிரித்துக் கொண்டே பேட்டி அளித்து அனைவரு க்கும் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளார். அவரது பேட்டியில் தான் உயிருடன் இருப்ப‍தாகவும், தனக்கு எந்தவிதமான வியாதியும் இல்லை என்றுகூறி சிரித்தார். இதோ அவரது முழு பேட்டி அடங்கிய வீடியோ .
எது எப்ப‍டியோ, இத்தனை நாட்களாக நடிகை கனகா எங்கிருக்கி றார் என்ற மர்மம் இதன் மூலம் விலகி, அவர் வெளியுலகிற்கு வந்து ள்ளார். மீண்டும் அவரது வாழ்வில் முன்னேற்ற‍ங்களையும், நீண்ட ஆயுளையும் பெற்று வாழ
      இந்த   இணையம் சார்பாகவு ம், அதன் வாசகர்களாகிய உங்கள் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.
 

புதன், 31 ஜூலை, 2013

தொலைபேசி அழைப்பு 79 பேரின் உயிரை பறித்தது

 
கடந்த வாரம் ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் இருந்து ஃபெர்ரால் நோக்கி கடந்த வாரம் சென்ற ரெயில் விபத்துக்குள்ளானதில் 79 பேர் பரிதாபமாக பலியாகினர்.
66 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 15 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட இருமடங்கு வேகத்தில் வந்த அந்த ரெயில் ஒரு வளைவில் திரும்பும் போது தடம்புரண்டு கவிழ்ந்த காட்சியின் சி.சி.டி.வி. பதிவுகள் உலக ஊடகங்களில் எல்லாம் ஒளிபரப்பாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த விபத்து நிகழ்ந்த போது ரயில் டிரைவர் கட்டுப்பாட்டு அறை அதிகாரியுடன் தொலைபேசியில் பேசிய தகவல் விபத்துக்குள்ளான ரயிலின் கருப்பு பெட்டியில் இருந்து சேகரிக்கப்பட்டு ஒலிப்பதிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
விபத்தையடுத்து கைது செய்யப்பட்ட டிரைவர் பிரான்சிஸ்கோ கர்சான் காயங்களுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். காயங்கள் ஆறி குணம் அடைந்ததையொட்டி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
விபத்து தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் பங்கேற்ற அவர் அனுமதிக்கப்பட்ட வேகத்தை கடந்து ரயிலை இயக்கியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 

செவ்வாய், 30 ஜூலை, 2013

கைதிகளை விடுவித்து சென்ற தீவிரவாதிகள் பொலிசார் வேடமிட்டு!!


பாகிஸ்தானில் பொலிசார் போன்று வேடமிட்டு சென்ற தீவிரவாதிகள், 300 கைதிகளை விடுவித்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள தேரா இஸ்மாயில் கான் என்ற பகுதியில் சிறைச்சாலை ஒன்று உள்ளது.
இதில் சுமார் 5000 கைதிகள் உள்ளனர், இவர்களில் 250 பேர் கொடூரமான தீவிரவாதிகள்.
இந்நிலையில் பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமிட்டு வந்த 150 தீவிரவாதிகள், வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் சிறையின் வெளிப்புற தடுப்புச்சுவர் தகர்க்கப்பட்டது.
இதனையடுத்து தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிறைக்காவலர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இருப்பினும் சிறையில் இருந்த 300 கைதிகளை தீவிரவாதிகள் விடுவித்து சென்றுள்ளனர்.
இத்தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தாலிபன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பின் தகவல் தொடர்பு அதிகாரி ஷாஹிதுல்லா ஷாஹித், தற்கொலை படையினர் 300 சென்றதாகவும், 300 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தகவலை சிறைத்துறையின் ஆலாசகர் மாலிக் காசிம் கட்டாக் உறுதி செய்துள்ளார்.
மேலும், இத்தாக்குதலில் ஏராளமான கைதிகளும், நான்கு சிறைக்காவலர்களும், இரண்டு போராளிகளும் இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு முன்னதாகவே, தீவிரவாதிகள் டிரான்ஸ்பார்மர்களை வெடிகுண்டு வீசித் தகர்த்து சிறையை இருட்டாக்கியதும், பொலிசார் தங்களை துரத்தாமல் இருக்க வாகனங்களை சேதப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.