siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதியில் !!!!


ஜப்பான், தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.8 புள்ளிகளாக பதிவாகி இருந்ததாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தலைநகர் தைபேயில் நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ஆனால் நிலநடுக்கம் காரணமாக பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.
இந்த நிலநடுக்கம் ஜப்பானின் ஒகினாவா தீவை சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டது. இதனையடுத்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனையடுத்து சிறிதுநேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

பெண் பலாத்காரம் கடற்படை மாலுமிகள்கைது !!!

கனடாவில் நடந்த ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள வந்த பிரித்தானிய கடற்படை மாலுமிகள் நால்வர் மீது பலாத்கார குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நோவ ஸ்கோசிய கனடிய கடற்படை போக்குவரத்து மையமான Shearwater-ல் கனடிய படையினருக்கும், பிரித்தானிய கடற்படை மாலுமிகளுக்கும் இடையே ஹாக்கி போட்டி நடந்துள்ளது.
இந்த போட்டியின் போது பிரிட்டிஷ் கடற்படை மாலுமிகள் கிறேய்க் ஸ்ரோனர், டரன் ஸ்மெலி, ஜோசுவா வின்போ மற்றும் சிமோன் றட்வோட் ஆகிய 4 பேர் மீது இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்துவிட்டதாக புகார் எழுந்தது.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த அன்றே தளத்தில் உள்ள ராணுவ பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் பாதிக்கப்பட்ட பெண் கனடிய படைகளின் உறுப்பினர் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நால்வரும் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை றோயல் கடற்படை மிகவும் தீவிரமானதாக எடுத்து கொள்வதாக தெரிவித்த பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் சட்ட நடவடிக்கைகள் தொடர்வதால் மேலதிக கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கமுடியாது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள நால்வரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 15 ஏப்ரல், 2015

முகாமில் ஈழத் தமிழர் மாரடைப்பால் மரணம்

அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவில் காணப்படும் கர்ட்டின் அகதி முகாமில் ஈழத்தை சேர்ந்த அகதி மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்.
50 வயதுடைய இராமைய்யா மகேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவர் கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் படகு பயணத்தின் மூலம் புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தார்.
இதனையடுத்து அவர் தொடர்ந்து கொக்கோஸ் தீவில் தங்க வைக்கப்பட்டதன் பின்னர் கிறிஸ்மஸ் தீவிற்கு மாற்றப்பட்டு கர்ட்டின் தீவில் தங்க வைக்கப்பட்டார்.
இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார்.
எனினும் அவுஸ்திரேலியாவிற்கு சென்றது முதல் இராமைய்யாவுக்கு சரியான முறையிலேயே வைத்திய சேவைகள் வழங்கப்பட்டு வந்துள்ளதாக சடலத்தை பரிசோதனை
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




செவ்வாய், 7 ஏப்ரல், 2015

ஸ்டர் பண்டிகையை கொண்டாடிய டேவிட் கேமரூன்--

வித்தியாசமான முறையில்  இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பிராணிகள் மீது ஆர்வம் கொண்டவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் வித்தியாசமான முறையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினார். நண்பர்களுடன் தனது சொந்த தொகுதியான விட்னி-யில் உள்ள டீன் லேன் பண்ணைக்கு அவர் சென்றார். அங்கு அண்மையில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியுடன்
 அவர் வெகு நேரம் செலவிட்டார். அதைக் கையில் தூக்கி கொஞ்சியும் முத்தம் கொடுத்தும் மகிழ்ந்தார். பின்னர் அந்த செம்மறி ஆட்டுக்குட்டிக்கு புட்டிப்பாலும் புகட்டினார். ஆனால் கேமரூனின் பிராணிகள் பாசத்தை எதிர்க்கட்சியினர் தேர்தல் வருவதால் இந்த வேஷம் என்று 
கேலி செய்கிறார்கள
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வெள்ளி, 3 ஏப்ரல், 2015

வான் எல்லையில் பச்சை நிற வேற்று கிரகவாசிகள்???'

 ஜப்பானில் பாராளுமன்ற கூட்டம் நடந்து வருகிறது.நேற்றை கூட்டத்தில் பேசிய அன்டோனியோ இனோகி என்ற எம்.பி. நமது நாட்டின் வான் வெளியில்  வேற்று கிரக வாசிகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்டுகிரது இது மக்களுக்கு மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.பச்சை நிற  வேற்று கிரகவாசிகள்  ஒருவிதமான வாகனத்தில் பறந்து வந்தது உண்மையா? என கேள்வி எழுப்பினார். அதை தொடர்ந்து எம்.பி.க்கள் பலரும் அது குறித்து கேள்விகேட்டனர்.
அதற்கு ராணுவ மந்திரி ஜெனரல் நகட்டானி பதில் அளித்தார். ஏதோ ஒருவித மான ஒரு பொருள் நமது நாட்டு வான் எல்லையில் பறந்ததை போர் விமானங்கள் கண்டு பிடித்துள்ளன.
ஆனால் அதில் வேற்று கிரகவாசிகள் இருந்தனரா? என தெளிவாக கூறவில்லை. ஒருவேளை அவை பறவையாகவோ வேறு ஒரு பொருளாகவோ இருக்கலாம். னவே நமது விமான பாகாப்பு அது குறித்து தீவிரமாக கண் காணித்து வருகிறது. நமது வான்வெளியில் வேற்று கிரகவாசிகளோ அவர்களின் விண்கலங்களோ வர அனு மதிக்க மாட்டோம் என உறுதி அளித்தார்.
அன்டோனியோ இனோகி ஓய்வுப் பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 2 ஏப்ரல், 2015

நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் அபார வெற்றி

நைஜீரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் முகமது புகாரி அபார வெற்றி பெற்றார்.
அதிபர் தேர்தல்
ஆப்பிரிக்க நாடான நைஜீரியா, போகோ ஹரம் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட மத அரசை நிறுவுவதற்காக ஆயுதம் ஏந்தி போராடி வருகிற அவர்கள், ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ளனர். அவர்களை தற்போதைய அதிபர் குட்லக் ஜோனத்தானால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் அங்கு கடந்த 28–ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் குட்லக் ஜோனத்தானுக்கும் (வயது 57), எதிர்க்கட்சி (அனைத்து முற்போக்கு காங்கிரஸ்) வேட்பாளர் முகமது புகாரிக்கும் (72) இடையே பலத்த போட்டி நிலவியது.

எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் கடந்த 2 தினங்களாக எண்ணப்பட்டு வந்தன. நேற்று தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போதைய அதிபர் குட்லக் ஜோனத்தான் தோல்வியை தழுவினார். எதிர்க்கட்சி வேட்பாளர் முகமது புகாரி அபார வெற்றி பெற்றார். முகமது புகாரிக்கு 1 கோடியே 54 லட்சத்து 24 ஆயிரத்து 921 ஓட்டுகள் கிடைத்தன. குட்லக் ஜோனத்தான் 1 கோடியே 28 லட்சத்து 53 ஆயிரத்து 162 ஓட்டுகளை பெற்றார்.
முதல் முறை
நைஜீரியாவில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடந்து, அதில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு வருவது இதுவே முதல் முறை என்பது முக்கிய அம்சம்.

இப்போது வெற்றி பெற்றுள்ள முகமது புகாரி, 1984, 1985–ம் ஆண்டுகளில் அந்த நாட்டின் ராணுவ ஆட்சியாளராக திகழ்ந்தவர். போகோ ஹரம் தீவிரவாதிகளின் கொலை முயற்சியில் தப்பியவர். அந்த தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு இவர்தான் ஏற்றவர் என்றே மக்கள் பெருவாரியாக இவருக்கு வாக்களித்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

ஜோனத்தானுக்கு பாராட்டு
இந்த தேர்தலில் அதிபர் குட்லக் ஜோனத்தான் தன் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், நாட்டு மக்களுக்கு அவர் டெலிவிஷனில் உரை ஆற்றினார். அப்போது அவர், ‘‘நேர்மையான, சுதந்திரமான முறையில் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என வாக்குறுதி அளித்தேன். நான் சொன்னதை நிறைவேற்றி விட்டேன்’’ என கூறினார்.
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முகமது புகாரி, ‘‘அதிபர் ஜோனத்தான் என் மதிப்புக்குரிய போட்டியாளர். அவருடன் கரம் கோர்க்கிறேன்’’என புகழாரம் சூட்டினார். மேலும், ‘‘ ஜனநாயகத்தை தழுவியுள்ள மக்கள் நாங்கள் என்று, உலகுக்கு நாங்கள் இருவரும் காட்டியுள்ளோம்’’ 
என்றும் கூறினார்.
தற்போதைய அதிபர் குட்லக் ஜோனத்தான், புதிய அதிபர் முகமது புகாரியிடம் அடுத்த மாதம் 29–ந் தேதி முறைப்படி அதிகாரத்தை ஒப்படைப்பார் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 31 மார்ச், 2015

தலைமையகம் மீது வாகனத்தை மோத முயற்சி மர்ம நபர் சுட்டுக்கொலை !!!

அமெரிக்காவில் மேரிலேண்டில் போர்ட் மியாடே என்ற இடத்தில் தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைமையகம் உள்ளது. நேற்று தலைமையக நுழைவாயில் கதவு மீது மோதும் வகையில், ஒரு வாகனம் வேகமாக வந்தது. அப்போது, பணியில் இருந்த பாதுகாவலர்கள், அந்த வாகனம் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில்,
 வாகனத்தில் இருந்த ஒரு மர்ம நபர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>



சனி, 28 மார்ச், 2015

நீராட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 10 பேர் மரணம்!!!

வங்கதேசத்தில் பிரம்மபுத்திரா நதியில் புனித நீராட்டத்தின்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.   30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.வங்கதேசம் தலைநகர் டாக்காவிற்கு வெளியே, அஷ்டமி தினமான இன்று பிரம்மபுத்திரா நதியில் பக்தர்கள் புனித நீராடினர். அப்போது கூட்டம் அதிகமானதால் குறுகிய இரண்டு பாதையின் வழியாக ஆற்றுக்குள் செல்ல பக்தர்கள் முயற்சித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இச்சம்பவத்தில் 7 பெண்கள் 
உள்பட 10 பேர்
 சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்கள் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். லாங்காபாத் என்ற இடத்தில் பிரம்மபுத்திரா நதியில் அஷ்டமியில் இந்த விழா கொண்டாடப்படுவது வழக்கமானது ஒன்று. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியா, நேபாளம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து மக்கள் செல்வது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





புதன், 25 மார்ச், 2015

நண்பனின் பெயரை மகளுக்கு சூட்டிய ஹாலிவுட் நடிகர்

கார் விபத்தில் பலியான சினிமா நண்பனின் பெயரை மகளுக்கு சூட்டிய ஹாலிவுட் நடிகர் வின் டீசல்
ப்ரைன் ஓ கார்னர்’ என்ற கதாபாத்திரத்தில், அசுர வேகத்தில் அசால்ட்டாக காரை ஓட்டிய ஸ்டைலிஷ் ஹீரோ ’பவுல் வாக்கர்’, ’பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ படம் பார்த்த ஒவ்வோரு ரசிகனின் மனதிலும் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டார். இந்த படத்தின் தொடர்ச்சியாக வந்த படங்களிலும் அதிவேகமாக காரை ஓட்டி ரசிகர்களை பரவசத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்ற பவுல் வாக்கர், 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த கார் விபத்தில் பலியாகி பல ரசிகர்களை ஆழ்ந்த சோகத்திலும் ஆழ்த்தினார். 
அவரது சக நடிகரும், உயிர் நண்பருமான ’வின் டீசல்’ பவுலின் மரணத்திற்கு பல மேடைகளில் அஞ்சலி செலுத்தி இருந்தாலும், விரைவில் திரைக்கு வர இருக்கும் ’பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ திரைப்பட வரிசையின் 7 வது பாகமான ’ப்யூரியஸ் 7’ திரையிடல் விழாவில் தன் மகளுக்கு ’பவுலின்’ என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவித்து, தன் ஆருயிர் நண்பன் பவுலுக்கு தனது நினைவுகளால் அஞ்சலி செலுத்தினார். 
விழாவில் பேசிய அவர் “வேறு யாரையும் ஒரே கருவில் பிறந்தவர்களைப் போல் நான் நினைத்ததில்லை. ஆனால் பவுல்... அவன் ஒரு அற்புதமான ஆன்மா... அவனுடைய நினைவை சுமந்து கொண்டிருப்பது, என் நினைவின், என் வாழ்வின் ஒரு பகுதி. திரைப்படத்தில் இருப்பது போன்றே உண்மையான வாழ்க்கையிலும் அவனுக்கும் எனக்குமான உறவு அன்பால் நிறைந்தது. ஒரு கொடூரமான கார் விபத்தினால், நான் என் 
சிறந்த நண்பனை, என் சகோதரனை இழந்து விட்டேன் “ என்று சொன்னபடி, உணர்ச்சிவசப்பட்டு மேடையில் ஸ்தம்பித்து நின்ற வின் டீசலை ரசிகர்கள் ஆசுவாசப்படுத்தினர். 
பொதுவாகவே தனது அந்தரங்க விஷயங்கள் பற்றி அதிகம் பகிர்ந்து கொள்ளாத வின் டீசல் கடந்த மார்ச் 16-ம் தேதி தனக்கும் தனது நீண்ட நாள் பெண் தோழி பலோமா ஜிமனேசுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளதாக பேஸ்புக்கில் தெரிவித்தார். இவர்களுக்கு ரிலே மற்றும் வின்செண்ட் சின்க்ளேர் என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 22 மார்ச், 2015

உலக தண்ணீர் தினம் இன்று மார்ச்.22.திகதி

ஜக்கிய நாடுகள் சபையின் தீர்மானத் திற்கு இணங்க 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் 22ஆம் தேதி  உலக தண்ணீர் தினம் என கொண்டாடப்படுகிறது.
நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும்.
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப் என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர்.
கடந்த 1992ஆம் ஆண்டு அய்.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண் டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படு கிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக் குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.
எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கோளில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறை களாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரை தான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான்.
உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாச டைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப் பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப் பட்டு வருகிறது. உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரி யாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள் ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது.
நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டி யது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம்.
நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம் என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்உலக தண்ணீர் தினம் இன்று மார்ச்.22.திகதி
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>