siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

உயர்நீதிமன்ற ஜுரர் சபைக்கு இலங்கைத் தமிழர் நியமனம்

டென்மார்க் நாட்டின் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நற்பெயருக்கு மகுடம் சூட்டும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்மா தர்மகுலசிங்கம் வெஸ்ட் லேண்ட் நீதிமன்றத்தின் ஜுரர்கள் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
டென்மார்க்கின் மிகப் பெரிய வழக்குகளை விசாரிக்கும் மன்றாக வெஸ்ட் லேண்ட் நீதிமன்றம் திகழ்கின்றது. இங்கு தமிழர் ஒருவர் ஜுரர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது முதல்
 தடவையாகும்.

சுமார் 31 ஆண்டுகளாக டென்மார்க் வயன் நகரத்தில் வாழ்ந்து வரும் தர்மா தர்மகுலசிங்கம் கடந்த 12 ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்ற ஜுரர் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

டென்மார்க் நாட்டின் அரசியல், சமுதாயம், கலை, இலக்கியம், மனித உரிமைகள் என்று பல்துறைகளிலும் கால்பதித்து அந்நாட்டு புலம்பெயர்ந்தோர் வரலாற்றில் பல காத்திரமான சாதனைகளை படைத்துள்ளார். அது மாத்திரமன்றி, டென்மார்க் சோஷிலிச ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராகவும் செயற்படுகின்றார்.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற கால கட்டத்தில் டென்மார்க், வயன் நகர கலை, இலக்கிய மன்றத்தின் சமாதானத் தூதுக்குழு தர்மா தர்மகுலசிங்கம் தலைமையில் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தது.

இத்தூதுக் குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய தலைவர் களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை 
மேற்கொண்டிருந்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதன், 16 செப்டம்பர், 2015

ரயில் பேருந்துடன் மோதல் உயிர் தப்பிய சிறுவர்கள் (காணொளி இணைப்பு)

ஜேர்மனியின் Hamburg பகுதியில் பேருந்துடன் ரயில் மோதிக்கொண்டதில், பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியம் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Hamburg நகரின் புறநகர் பகுதியான Buxtehude அருகே ரயில் தண்டவாளத்தில் சிக்கிய பேருந்து மீது விரைவு ரயில் ஒன்று மோதிக்கொண்டது.

ரயில் தண்டவாளத்தை கடந்துவிடலாம் என்ற நோக்கில் பள்ளிச் சிறுவர்களுடன் பேருந்து ஒன்று வேகமாக வந்துள்ளது.

இந்நிலையில், பேருந்து தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது, ரயில் வருவதையொட்டி தானியங்கி தடுப்பு அந்த பேருந்தை நகரவிடாமல் தடுத்துள்ளது
.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/xyouXMsOjcw" frameborder="0" allowfullscreen></iframe>

சமயோசிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர், உடனடியாக பேருந்தில் இருந்த சிறுவர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார்.

இதனிடையே ரயில் ஓட்டுநருடன் தொடர்புகொள்ள எத்தனித்த பேருந்து ஓட்டுநருக்கு ஏமாற்றமே மிஞ்சியது,

மேலும் வேகமாக வந்த ரயில் தண்டவாளத்தில் சிக்கிய ரயில் மீது மோதி அதன் முன் பகுதியை உடைத்துக்கொண்டு சென்றது.

இதில் ரயிலுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டது, மேலும் ரயில் பயணி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்தனர்.

சமயோசிதமாக பேருந்து ஓட்டுநர் செயல்படவில்லை எனில் பெரும் விபத்து நேரிட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 9 செப்டம்பர், 2015

இந்த சிறுமி அறிவுத் திறனில்சிறந்த சாதனை.

பிரிட்டனில் மென்சா அமைப்பு அண்மையில் நடத்திய அறிவுத்திறன் தேர்வில் 12 வயது இந்திய வம்சாவளி மாணவி லிடியா அதிகபட்ச அளவான 162 மதிப்பெண்களை பெற்றார்.

இயற்பியல் அறிஞர்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாகிங் ஆகியோர் முன்பு இத்தேர்வில் 160 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தற்போது அவர் களை விட கூடுதல் மதிப்பெண் களை லிடியா பெற்றுள்ளார்.

அறிவுக்கூர்மை உடைய வர்களை உறுப்பினர்களாக கொண்ட உலகின் பழமையான மற்றும் மிகப்பெரிய சங்கமாக ‘மென்சா இன்டெர்நேஷனல்’ உள்ளது. உலகில் எவரும் இந்த அமைப்பு நடத்தும் தேர்வில் வெற்றிபெற்று இதன் உறுப்பினராக சேரலாம்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 3 செப்டம்பர், 2015

குழந்தை சடலம் கடல்கரையில் ஒதுங்கியது???

துருக்கி கடல்கரையில் 3 வயது சிறுவனது உடல் கரைஒதுங்கியது தொடர்பான புகைப்படங்கள் உலகம் முழுவதும் உள்ள மக்களில் நெஞ்சை பிளக்கும் விதமாக உள்ளது. 
லிபியா, சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் நிலவி வரும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு அமைதியற்ற சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அங்குள்ள பெரும்பாலான மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் 
அடைந்து 
வருகிறார்கள். சட்டவிரோதமாக படகுகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு மத்திய தரைக்கடல் வழியாக செல்லப்படுகிறது. இத்தகைய படகுகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு சம்பவமும் அரங்கேறிவருகிறது. இவ்வாறு 
விபத்துக்குள்ளாகி இந்த ஆண்டு மட்டும் சுமார் 2500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர் என்று ஐ.நா. சபை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
வங்காளதேசம் மற்றும் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்களும் அகதிகளாக ஐரோப்பிய யூனியனுக்கு செல்லும் சம்பவமும் அரங்கேறிவருகிறது. 
இதற்கிடையே அகதிகளின் ஆக்கிரமிப்பை  கட்டுப்படுத்த
 ஐரோப்பிய யூனியன் நடவடைக்கை எடுத்து வருகிறது. தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு அகதிகள் உள்ளே நுழைய தடையை ஏற்படுத்தி வருகின்றனர். இத்தாலி உள்ளிட்ட நாடுகள் அதிகள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அகதிகள் நுழைவதற்கு ஐரோப்பிய 
யூனியன் தடைசெய்து வரும்நிலையில் லிபியா, சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து செல்லும் அகதிகள் அங்கு செல்லவும் முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் கடலில் அலையோடு 
அலையாக ஆடும் சூழ்நிலையும் உள்ளது. சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மிகவும் கடுமையான சூழ்நிலையில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. 
இவ்வாறு எங்கும் செல்ல முடியாத நிலையில் அவர்கள் உயிரை விடும் நிலையும் நிலவுகிறது. 
இந்நிலையில் துருக்கி நாட்டில் சுற்றுலா பகுதியில் உள்ள கடற்கரையில் 3 வயது சிறுவனின் சடலம் கரைஒதுங்கி உள்ளது. இதுதொடர்பான புகைப்படமானது வெளியாகி உலக முழுவதும் உள்ள மக்களின் நெஞ்சை பிளக்கும் விதமாகவும், கண்ணீரை வரச்செய்யும் விதமாக கொடூரமாக உள்ளது. துள்ளி குறுநடைபோடக்கூடிய பச்சிளம் பிஞ்சு, வாடிய முகத்துடன் சடலமாக 
கிடப்பதை வீரர் ஒருவர் தூக்கும் காட்சி வெளியாகிஉள்ளது.  உயிரிழந்த குழந்தையானது சிரியாவை சேர்ந்தது என்று தெரியவந்து உள்ளது. குழந்தை சிவப்பு நிற டீசர்ட் மற்றும் நீல நிறத்திலான கால்சட்டையும் அணிந்து உள்ளது. மிகவும் அழகான அந்த பிஞ்சின் வாழ்க்கையை 
தண்ணீரே போய்விட்டது.
சிரியாவில் இருந்து கிரீஸ் நாட்டிக்கு பயணம் செய்த படகு ஒன்று கடலில் மூழ்கியது. இந்த படகில் இருந்த 12 பேர் உரிழந்தனர். 
படகில் இருந்த 3 வயது குழந்தையும் உயிரிழந்து, கரைஒதுங்கிஉள்ளது. குழந்தையின் பெயர் அய்லான் குர்தி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. மனிதாபிமானம் 
துடைத்தெரியபட்டது
 என்றும் ஒருபுகைப்படம் உலகை அமைதியடைய செய்தது என்ற டேக்குடன் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. ஒட்டுமொத்த உலக நாடுகளின் பார்வையையும் திருப்பி உள்ளது. புகைப்படத்தை பார்த்து அழும் சமூக வலைதள பயனாளர்கள் தங்களது கருத்தை 
தெரிவித்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

ஜெர்மனி இந்தியாவில் ரூ.6,600 கோடி முதலீடுசெய்கிறது ???

இந்தியாவின் முக்கிய திட்டங்களுக்காக, ரூ.6,600 கோடி முதலீடு செய்வது தொடர்பாக இந்திய-ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பில் உறுதி செய்யப்பட்டது. ஜெர்மனிக்கு 2 நாள் அரசு முறை பயணம் 
மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் பிராங் வால்டர் ஸ்டீன்மீரை சந்தித்து பேசினார்.
 இச்சந்திப்பின் போது, இந்தியா-பாகிஸ்தான் விவகாரம், ஆப்கனில் நிலவும் சூழல் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியாவும், ஜெர்மனியும் தங்கள் நாடுகளுக்கிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சோலார் திட்டம், கங்கையை துாய்மைப்படுத்தும் திட்டம், நவீன நகரங்கள் திட்டம், திறன்மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய திட்டங்களுகாக, இந்தியாவில் ஜெர்மன் ரூ.6,600 கோடி முதலீடு செய்ய முடிவு செய்வது பற்றி முடிவு செய்யப்பட்டது.
கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில், மீண்டும் ஜெர்மன் மொழியை கற்பிக்கவும், ஜெர்மன் பள்ளிகளில் சமஸ்கிருத மொழி கற்பிக்கவும் இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஜெர்மன் பிரதமரின் 
இந்திய வருகையின் போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

தொலைபேசி தகவலை வைத்து தொற்று நோய் பரவுவதை கண்டுபிடிப்பு.???

தொற்று நோய்கள் எவ்வாறு பரவுகின்றன என்பதை தொலைபேசி தகவல்களை வைத்து கண்டறிவதற்கான ஆய்வொன்று  ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வு ஆப்ரிக்க நாடான கென்யாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்காக 1.5 கோடி மக்களின் தொலைபேசி தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
தொலைபேசியில் பேசப்பட்ட நேரம், குறுந்தகவல் அனுப்பிய நேரம், அதன்போது தொலைபேசி பயனாளர் இருந்த இடம் போன்ற தகவல்கள் தொலைபேசி கோபுர, சமிக்ஞை மூலம் சேகரிக்கப்பட்டன. கடந்த 2008 ஜூன் முதல் 2009 ஜூன் வரை சேகரிக்கப்பட்ட 1,200 கோடி தொலைபேசி தகவல்கள்

 ஒருங்கிணைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
தொலைபேசி உரிமையாளர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எந்த நேரத்தில் செல்கின்றனர், ஒரே இடத்தில் எப்போது இருக்கின்றனர் என்பன 

போன்ற தகவல்களும் ஆராயப்பட்டன.
இத்தகவல்கள் அனைத்தும் கென்யாவில் ஆண்டிற்கு மூன்று முறை பரவலாகக் காணப்படும் ருபெல்லா எனப்படும் தொற்று நோய் பரவும் காலம் தொடர்பான தகவல்களுடன் ஒப்பீடு செய்யப்பட்டன.
ஆய்வின் முடிவில் ஆச்சரியப்படும் வகையில் தொலைபேசி உரிமையாளர்கள் இடம் பெயர்தல் தொடர்பான தகவல்கள் அமைந்த விதமும் ருபெல்லா நோய் பரவிய காலம் மற்றும் பகுதி போன்ற தகவல்கள் அமைந்த 

விதமும் ஒரே மாதிரியாக இருந்தன.
கென்யாவில் ஒரு ஆண்டில், பிப்ரவரி, மே, செப்டம்பர் மாதங்களில் ருபெல்லாவின் தாக்கம் அதிகமாக இருந்ததை உணர்த்தும் வகையில் தொலைபேசி தகவல்கள் அமைந்திருந்தன.
இதன் மூலம் தொலைபேசி தகவல்களை வைத்து தொற்று நோய் பரவல் நிகழும் பகுதிகள், காலம் போன்றவற்றை அறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது மோன்ற மேலதிக ஆய்வுகளும் தற்பொழுது ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வியாழன், 20 ஆகஸ்ட், 2015

சுமார் 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்ட கிறித்துவ பாதிரியார் மீதுள்ள வழக்கை தள்ளுபடி

உலகையே உலுக்கிய ரிவாண்டா நாட்டு இனப்படுகொலையில் சுமார் 10 லட்சம் அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் கிறித்துவ பாதிரியார் மீதுள்ள வழக்கை தள்ளுபடி செய்யவுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான ரிவாண்டாவின்
 அதிபர் Juvenal Habyarimana கடந்த 1994ம் ஆண்டு விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இது ஒரு திட்டமிடப்பட்ட சதி எனக்கூறி அவரது ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். 1994ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த இந்த உள்நாட்டு யுத்தத்தில் சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ரிவாண்டா நாட்டை சேர்ந்த Wenceslas Munyeshyaka என்ற கிறித்துவ பாதிரியார் ஒருவர், கிளர்ச்சியாளர்களுக்கு தன்னுடைய தேவாலயத்தில் அடைக்கலம் அளித்தற்கும், அங்கு ஏற்கனவே அடைக்கலம் ஆகியிருந்த நூற்றுக்கணக்கான சிறுமிகள் மற்றும் பெண்கள் கற்பழிப்பிற்கு காரணமாக இருந்துள்ளார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ரிவாண்டா நாட்டு சிறை தண்டனையிலிருந்து தப்பிக்க அந்த பாதிரியார் பிரான்ஸ் நாட்டில் அடைக்கலம் தேடி கடந்த 1995ம் ஆண்டு முதல் பிரான்ஸில் வசித்து வருகிறார்.
ரிவாண்டா நாட்டின் கோரிக்கையை ஏற்று பிரான்ஸ் அரசும் அவர் மீது வழக்கு போட்டதை தொடர்ந்து, ரிவாண்டா ராணுவ நீதிமன்றம் அந்த பாதிரியார் இல்லாமலே அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இதனை தொடர்ந்து, அவரை தன் நாட்டிடம் ஒப்படைக்குமாறு ரிவாண்டா விடுத்த கோரிக்கையை பிரான்ஸ் அரசு நிராகரித்து
 வந்துள்ளது.
பல ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த இந்த விசாரணையை தொடர்ந்து, தற்போது பாதிரியார் மீது சுமத்தப்பட்டுள்ள எந்த குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்கும் வகையில் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர் மீதுள்ள வழக்கை தள்ளுபடி செய்யவுள்ளதாக பிரான்ஸ் அரசு
 முடிவு செய்துள்ளது.
எனினும், இந்த முடிவை பிரான்ஸ் நாட்டு உச்சநீதிமன்றம் தான் இந்த வழக்கை மேலும் விசாரிக்க வேண்டுமா, வேண்டாமா என முடிவு செய்ய வேண்டும் என்றும் பாரிஸ் நகர வழக்கறிஞரான Francois Molins தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதிரியார் தற்போது தெற்கு பிரான்ஸின் Gisors என்ற நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 12 ஆகஸ்ட், 2015

புலம்பெயர் தமிழர்கள் நீதிமன்றத் தீர்ப்பினால் நெருக்கடியிலாம்???

பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பினால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் சமூகம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் பிரிட்டன் நீதிமன்றம் நேற்று இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தது. போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் 
சுமத்தப்பட்ட வேறு நாட்டு பிரஜை ஒருவரை பிரிட்டன் சட்டங்களின் அடிப்படையில் பிரிட்டனில் கைது செய்து வழக்குத் தொடர அதிகாரமில்லை என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
இந்த தீர்ப்பு இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள, பிரிட்டன் அரசாங்கத்திற்கும், புலி ஆதரவு புலம்பெயர் அமைப்புகளுக்கும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் செல்லும் வன்னிப் போரில் பங்கேற்ற படையினரை கைது செய்ய சில காலத்திற்கு முன் இருந்தே திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போர்க்குற்றச் செயல்கள் குற்றம் சுமத்தி லண்டனில் கைது செய்யப்பட்ட ருவன்டா புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் ஜெனரல் கரென்ஸி கராதே தொடர்பான வழக்கு விசாரணையின் போது இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெனரல் கரென்ஸி சார்பில் முன்னாள் பிரிட்டன் பிரதமர், டோனி பிளயரின் மனைவி நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
பிரிட்டன் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் ஜெனல் கரென்ஸி மீது போர்க்குற்றச் செயல்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தன. எனினும், ருவன்டா புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் 
பிரிட்டனுக்குள் குற்றம் இழைக்கவில்லை என்பதனால் அவரை தண்டிக்க முடியாது எனவும், அவரை விடுதலை செய்யுமாறும் உத்தரவிடடு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

காரை 360 டிகிரியில் சுழற்றிய நபர்: கதிகலங்கிய காரோட்டிகள் (காணொளி )

பிரித்தானியாவில் குடிபோதையில் கார் ஓட்டிய நபருக்கு 3 வருடங்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் நார்த்தாம்டன்ஷைர் கவுண்டியின் கெட்டரிங் என்ற இடத்தில் உள்ள A14 நெடுஞ்சாலையில், கடந்த நவம்பர் மாதம் மார்டின் கண்ட்ரில்(43) என்பவர், மின்னல் வேகத்தில் கார் ஓட்டியதோடு மட்டுமல்லாமல், தனது காரை 360 டிகிரியில் சுழற்றி பிற காரோட்டிகளை கதிகலங்க செய்துள்ளார்.
இவரின் இந்த செயலை நபர் ஒருவர் வீடியோ எடுத்து பொலிசிடம் புகார் அளித்துள்ளார், இதனைத் தொடர்ந்து மார்டினை கைது செய்த பொலிசார், அவரது உடலில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மூன்றரை மடங்கு ஆல்கஹால் இருப்பதை கண்டுபிடித்தனர்,
இதுதொடர்பாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், மார்டினை 10 மாதங்கள் பணியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யவும், 3 வருடங்கள் கார் ஓட்டுவதற்கு தடைவிதித்து
 தீர்ப்பளித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 5 ஆகஸ்ட், 2015

பிறந்தநாள் வாழ்த்து செல்வி திரு .அருளானந்தம் அபிநயா. 05 .08 .15.


யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு .அருளானந்தம்   தம்பதிகளின்  செல்வப்புதல்வி அபிநயா தனது  ஏழாவது  பிறந்த நாளை  05.08.2015.இன்று.தனது இல்லத்தில் மிக சிறப்பாக கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா அக்கா பெரியப்பா பெரியம்மா மற்றும் அப்பம்மா மாமி மார் மாமா மார்
 சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இறைஅருள் பெற்று பல்கலைகளும்  பெற்று சீரும்சிறப்புடன்  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் 
நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றனர்.
இன்று பிறந்தநாள் 
ஒரு மலர் மலர்ந்தநாள் 
என் பாசமலரின் பிறந்தநாள். 
இதோ..! உனக்காக.. 
ஒரு வாழ்த்து..! 
என் அன்பு 
வானத்தின் நட்சத்திரமே..! 
வாகை சூடி சரித்திரம் படைத்திடு.! 
வானம் தொடும் புகழ் அடைந்திடு.! 
வாழ்வில் நிம்மதி தஞ்சம் அடையட்டும் 
வாழம் வாழ்வில் உறுதி நெஞ்சம் இருக்கட்டும். 
வாழ்வில் வசந்தம் வீசட்டும்...! 
-நிம்மதியான 
வாழ்க்கையின் எல்லா செல்வமும் பெற்று 
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.! 
என் .இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!