siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 11 டிசம்பர், 2015

சிறுமியுடன் ஃபேஸ்புக் மூலம் பழக்கமான பாகிஸ்தான் தூதரக அதிகாரி மகன் கைது

அமெரிக்காவுக்கான, பாகிஸ்தான் நாட்டின் கம்யூனிட்டி வெல்பேர் கவுன்சிலர் என்ற பதவியில் இருப்பவர், முகமது முகீத் ரஹீமூன்.ஸ்கார்ஸ்டேல் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது உர் ரகுமான் ரஹிமூன்( வயது 20)
இந்நிலையில், 'விஸ்பர்' எனப்படும், சமூக வலைத்தளத்தின் மூலமாக, ப்ரோன்க்ஸ் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியுடன், ரகுமானுக்கு பழக்கம் ஏற்பட்டது. பிறகு அவ்வப்போது இருவரும் சந்தித்து பேச
 தொடங்கினர்.
டிசம்பர் 1ம்தேதி, இவ்விருவரும் மூன்றாவது முறையாக சந்தித்தனர். இந்த சந்திப்பு ஒட்டல் ஒன்றில் நடந்தது. அப்போது, இருவரும் உறவு கொண்டுள்ளனர். அதேநேரத்தில், சிறுமியை அழைத்துச் செல்ல பள்ளிக்கு வந்த அவரது தந்தை சிறுமியின் செல்போனுக்கு தொடர்புகொண்டு
 ஏங்கே இருக்கிறாய் 
என கேட்டுள்ளார். அப்போது போனை எடுத்து பேசிய ரகுமான், உங்கள் மகளுடன் உடற்பயிற்சி செய்துகொண்டுள்ளேன். உடற்பயிற்சி செய்ததும் கொண்டு வந்துவிட்டுவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில், சந்தேகமடைந்த சிறுமியின் தந்தை, சிறுமி வீட்டுக்கு வந்த பிறகு துருவி துருவி கேட்டுள்ளார். அப்போது நடந்ததை சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், போலீசார் ரகுமானை கைது செய்துள்ளனர்.தற்போது அவர ஜாமினில் விடுவிக்கபட்டு உள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் அதிகாரி கூறும் போது எனது மகன் நல்லவன் இது அனைத்தும் ஜோடிக்கபட்டது என கூறி உள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 8 டிசம்பர், 2015

மக்களின் மனங்களை பிரதிபலிக்கிறதா அகதிகளுக்கு எதிரான பிரச்சார பிரான்ஸ் தேர்தல்?

பிரான்ஸ் தேர்தலில் வலதுசாரி தேசிய முன்னணி கட்சி முன்னிலை பெற்றிருப்பது ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈரத்துள்ளது.
பிரான்சில் 13 மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கட்ட தேர்தல் கடந்த 6ம் திகதி நடந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் வலதுசாரி தேசிய முன்னணி கட்சி முன்னிலை பெற்றுள்ளது
கடந்த மாதம் 13ம் திகதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 132 பேர் உயிரிழந்தனர், இதற்கு பிறகு நடக்கும் தேர்தல் என்பதால் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதற்கிடையே தேசிய முன்னணி கட்சியின் தலைவரான மேரி லீ பென், அகதிகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு பிரான்சில் இடமில்லை என்றும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களை வெளியேற்றுவதாகவும் பிரச்சாரம்
 செய்தார்.
இந்நிலையில் தற்போது அந்த கட்சி முன்னிலை பெற்றிருப்பது ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதுமட்டுமின்றி அவரது கருத்துக்கு ஆதரவாகவே பிரான்ஸ் மக்களும் வாக்களித்திருப்பதாக 
கருதப்படுகிறது,
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



புதன், 2 டிசம்பர், 2015

தமிழ் இளையோர்களை காட்டி கொடுக்கும் முயற்சியில் ஆ.த.கா !

ஆஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ் அமைப்பும் , ஒரு சில தனிநபர்களை கொண்டு இயங்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆஸ்திரேலியா கிளையினரும் சேர்ந்தே சுமந்திரனுக்கான மக்கள் 
சந்திப்பை ஒழுங்குசெய்தனர் . இந்நிலையில் இச் சந்திப்புக்கு சென்ற தமிழின உணர்வாளர்கள் சுமந்திரனுக்கு எதிர்ப்பு காட்டி போராட்டத்தில் 
ஈடுபட்டனர் .
ஆஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ் அமைப்பின் தமிழ்த் தேசிய விரோத செயற்பாடு அம்பலத்துக்கு வந்த பின்னர் , அவ் அமைப்பு சுமந்திரனுக்கு எதிர்ப்பு காட்டிய தமிழ் இளையோர்களை காட்டி கொடுக்கும் 
முயற்சியில் 
ஈடுபட்டு வருகின்ற தகவல் கசிந்துள்ளது . அத்தோடு தமிழின உணர்வுள்ள இளையோர்களை , காட்டுமிராண்டிகள் ,காடையர்கள் , கடைசியாக கப்பலில் வந்தவர்கள் , என கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர் .
 ஆஸ்திரேலியா 
தமிழ் காங்கிரஸ் அமைப்பின் தமிழ்த் தேசிய விரோத போக்கை கண்டித்த அவ்வமைப்பின் ஒரு சில தேசியவாத உறுப்பினர்களும் அவ்வமைப்பின் நிர்வாகத்தில் இருந்து ஒதுக்கப்படுவதாக தகவல் 
கிடைத்துள்ளது .
தாயகத்தில் தமிழ்த் தேசிய தளத்தை சிதைக்க நினைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளையும் , புலத்தில் அதற்கு வலுச்சேர்க்க துடிக்கும் உலகத் தமிழர் பேரவையின் தலைமைகளையும் இனம் கண்டு உலகத் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதே காலத்தின் தேவையாக உள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 27 நவம்பர், 2015

ஆளில்லா விமான தாக்குதல் தளபதி பலி மேலும் 12 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஆப்கானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் பாகிஸ்தான் தலீபான் தளபதி சஜ்னா கொல்லப்பட்டார். அவருடன் மேலும் 12 தீவிரவாதிகள் பலியாகினர்.
தலீபான் தளபதி சஜ்னா
பாகிஸ்தான் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தளபதி கான் சயீத் சஜ்னா. இவர் கடந்த ஆண்டு பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் மத்திய தலைவர் முல்லா பஸ்லுல்லாவை நிராகரித்துவிட்டு தான் தனது குழுவுடன் தனியாக இயங்கப்போவதாக அறிவித்தார்.
முல்லா பஸ்லுல்லாவின் தலைமை தனக்குரிய ‘பாதையை’ இழந்து விட்டதாக கூறி சஜ்னா பிரிந்து வந்தார்.
ஆளில்லா விமான தாக்குதல்
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானில் கோஸ்ட் மாகாணத்தில், தம்மா பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பல்வேறு குழுக்களாக இயங்கி வந்த தலீபான் அமைப்புகள் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைவது தொடர்பாக சமரச பேச்சு வார்த்தை நடந்ததாக
 கூறப்படுகிறது.
அப்போது அங்கு அமெரிக்காவின் ஆளில்லா விமானம் குண்டு வீச்சு நடத்தியது.
கொல்லப்பட்டார் சஜ்னா
இந்த குண்டு வீச்சில் சஜ்னாவும், மேலும் 12 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 20 தீவிரவாதிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும்
 கூறுகின்றன.
இதுதொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
பாக். உளவு அதிகாரி உறுதி செய்தார்
ஆளில்லா விமான தாக்குதலில் சஜ்னா கொல்லப்பட்டு விட்டதை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க அதிகாரிகள் இது குறித்து எதுவும் தகவல் வெளியிடவில்லை.
அதே நேரத்தில் சஜ்னா தலைமை தாங்கி வந்த தலீபான் தீவிரவாதிகள் குழு இந்த தகவலை மறுக்கவில்லை.
மிகப்பெரிய அடி
சஜ்னா தொடர்பாக பெஷாவர் ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் தளபதியாக திகழ்ந்து வந்த சஜ்னாவை நீண்ட காலமாக பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு படைகள் பின்தொடர்ந்து வந்தன’’ என குறிப்பிட்டார்.
‘‘சஜ்னா, அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டது உண்மை என்றால், அது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாத இயக்கத்துக்கு விழுந்துள்ள மிகப்பெரிய அடியாக அமையும்’’ என பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் மற்றொரு
 தளபதி கூறி உள்ளார்.
2 தினங்களுக்கு முன் ஆப்கானில், குனார் மாகாணத்தில், காஜி மாவட்டத்தில் அமெரிக்கா நடத்திய மற்றொரு ஆளில்லா விமான தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தளபதி பிலால் அல் தாயிப் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பயங்கரவாதத்திற்காக தண்டனை பெற்றவர்கள் விரைவில் 50 பேர் தூக்கிலிடபடுவர்

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட 50 பேருக்கு தண்டனையை நிறைவேற்ற சவுதி அரேபியா திட்டமிட்டு உள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த  2 பத்திரிகைகள் இத்தகவலை தெரிவித்து உள்ளன. இந்த செயல் ஜிகாதிகளுக்கும் அதே நேரம் நாட்டில் தாக்குதல் நடத்த  திட்டமிடும் தீவிரவாதிகளுக்கும்  ஒரு எச்சரிக்கையாக
 இருக்கும்.
பயங்கரவாத குற்றங்களுக்கான  மரண தண்டனை குற்றத்திற்காக தூக்கிலிட 50 பேர் காத்திருக்கிறார்கள்.  இந்த பயங்கரவாதத்தில் 100 பொது மக்கள் 71 பாதுகாப்புபடை வீரர்கள் பலியாகி உள்ளதாக ஒகஸ் பத்திரிகை தெரிவித்து உள்ளது.இதில் அல் கொய்த இயக்கத்தை சேர்ந்த சிலரும், அவாமியா இயக்கங்களை சேர்ந்தவர்கள் சிலரும் உள்ளதாக அந்த பத்திரிகை தெரிவித்து உள்ளது.இதில் பெரும்பாலானவர்கள்  கிழக்கு மாகாணத்தில் எண்ணெய் உற்பத்தி நகரமான ஷியா நகரில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் ஆவார்கள் எனவும் தெரிவித்து உள்ளது.
ஆனால் ரியாத் தூதரக அதிகாரிகள் கூறும் போது  தங்கள் அரசு   ஷியா நகரில் போராட்டத்தில் ஈடுபட்டு தண்டிக்கபட்டவர்களுக்கு  மரண தண்டனை  இல்லை என உறுததி அளித்துள்ளனர். 
அல் ரியாத் பத்திரிகை வெளியிட்டு உள்ள தகவலில் விரைவில் 52 பேர் மரணதண்டனை விதிக்கப்படுவர் கூறி உள்ளது.பின்னர் எந்த வித விளக்கம் கூறாமல் தன் இணையதளத்தில் இருந்து அந்த தகவலை 
நீக்கி விட்டது.
20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சவுதி அரேபியாவில் இந்த வருடம்  150 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றபட்டு உள்ளது. இதில் அதிகமானவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தலைவெட்டபட்டு உள்ளனர். எனசர்வதேச மன்னிப்புச் சபை இந்த மாதம்
 தெரிவித்து உள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், 26 நவம்பர், 2015

அதிக வெப்பமான ஆண்டு 2015: காலநிலை அமைப்பு தகவல்

உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக 2015 இருக்கும் என ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக 2015 இருக்கும் என ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை அமைப்பு 
தெரிவித்துள்ளது.
1961-1990 ஆண்டுகளின் சராசரி வெப்பமாக 14 டிகிரி செல்சியஸ் பதிவானது. தற்போது 2015ம் ஆண்டு வெப்ப நிலையானது அதை விட 0.73 டிகிரி செல்சியஸ் அதிகமாகியுள்ளது.
இவ்வாறு அதிக வெப்பம் நிலவியதற்கு, எல் நினோவின் பாதிப்பு தான் காரணம் எனக் கூறப்படுகிறது.
மேலும், இந்த வெப்பநிலை வரவிருக்கும் 2016 ஆம் ஆண்டிலும் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக நிலப்பரப்பு மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலையானது இந்த அக்டோபர் மாதம் மட்டும் சராசரியாக 0.98 டிகிரி செல்சியஸ்
 நிலவியுள்ளது.
உலகத்தலைவர்கள் சந்திக்கும் பருவநிலை உச்சி மாநாடு வரும் நவம்பர் 30 ஆம் திகதி பாரீஸில் தொடங்கவிருக்கிறது, சுமார் 12 நாட்கள் நடக்கும், இந்த மாநாட்டில் உலகில் வெப்பத்தைக் குறைக்க என்ன செய்யலாம் என்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
மேலும், உலக அளவில் 2 டிகிரி அளவுக்கு வெப்பத்தைக் குறைக்கவும் ஆலோசிக்கப்படவுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


ஞாயிறு, 22 நவம்பர், 2015

மக்களுக்கு பிரதமர் எச்சரிக்கை குடிக்கும் தண்ணீரில் இரசாயனங்களை கலக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்?

பிரான்சில் மக்கள் குடிக்கும் தண்ணீரில்  இரசாயனங்களை கலந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பிருப்பதால் அந்நாட்டில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்சில் உள்ள Necker Paediatric மருத்துவமனையில், தொற்றுநோய் பாதுகாப்பு உறைகள், பாலித்தீன் பூட்ஸ், கையுறைகள் மற்றும் நுண்ணுயிரிகளிலிலுந்து காக்கும் முகமூடிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் 
திருடப்பட்டுள்ளன.
இந்த பாதுகாப்பு உபகரணங்கள் திருடப்பட்டுவிட்டதால், ஐ.எஸ் தீவிரவாதிகள் இதனை பயன்படுத்தி நகருக்கு குடிநீர் வினியோகிக்கும் நீர்நிலைகளில் மக்களை கொல்லும் இரசாயனங்களை கலக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் Manuel Vall கூறுகையில், தற்போதைய நிலையில், எதையும் நம்மால் நிராகரித்து சிந்திக்க இயலாது, எனவே தீவிரவாதிகள் மக்கள் குடிக்கும் தண்ணீரில் இராசயனங்களை கலப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதால் எச்சரிக்கையோடு இருக்க 
வேண்டும்.
இதன் காரணமாக, பாரீஸ் நகருக்கு தேவையான குடிநீரை வினியோகிக்கும் ஆறு நீரேற்று நிலையங்களைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முக்கிய உயரதிகாரிகள் தவிர இதர பணியாளர்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்பப்படுகின்றனர் என்று 
கூறியுள்ளார்.
இங்கு அழுத்தவும் 3முக்கிய வழின் நிழல்படங்கள் இணைப்பு >>>


சனி, 21 நவம்பர், 2015

ஹெலிகாப்டர் பனி பாறை பகுதியில் விபத்து: 7 பேர் பலி!!!

நியூசிலாந்து நாட்டில் பனி பாறை அமைந்த சுற்றுலா பகுதி ஒன்றில் ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து விபத்திற்குள்ளான சம்பவத்தில் அதில் பயணம் செய்த 7 பேரும் பலியாகி உள்ளனர் என போலீசார் கூறியுள்ளனர்.  இது பற்றி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நியூசிலாந்தின் தெற்கு தீவின் மேற்கு கடலோர பகுதியில் பனி பாறைகள் 
அதிகம் உள்ளன.
இதில், சுற்றுலா பகுதியாக அறியப்பட்டுள்ள பாக்ஸ் எனப்படும் பனி பாறை பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்றின் சிதைந்த பாகங்கள் மீட்பு படையினரால் கண்டறியப்பட்டுள்ளன.  ஆனால், கடுமையான சூழ்நிலையால் அப்பகுதிக்கு செல்ல முடியவில்லை என 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரின் விமானி மற்றும் 6 பயணிகளின் அடையாளம் காணப்பட்ட விவரம் வெளியிடப்படவில்லை.  மீட்பு பணி மற்றும் விசாரணை நடைபெற சில நாட்கள் ஆகும் என அவர்கள் கூறியுள்ளனர்.  ஆல்பைன் அட்வென்சர்ஸ் என்ற டிராவல் ஏஜென்சி ஒன்று இந்த ஹெலிகாப்டரை 
இயக்கியுள்ளனர்.
அவர்கள் விமானங்களை வழங்குவதுடன், பனி பாறை பகுதிகளில் தரை இறங்கி சுற்றுலா பகுதிகளை பார்வையிட தேவையான பணிகளை செய்திடுவர்.  கடந்த 2010ம் ஆண்டில் பாக்ஸ் கிளேசியர் பகுதிக்கு 
அருகிலுள்ள 
நகரிலிருந்து கிளம்பி சென்ற விமானம் ஒன்று பனி பாறை பகுதியில் வெடித்து சிதறிய சம்பவத்தில் அதில் இருந்த 9 பேரும்
 பலியாகி உள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 19 நவம்பர், 2015

லண்டனில் சனிக்கிழமை ஸ்னோ -1 வரை குளிர் என அறியப்படுகிறது !

ஆர்டிக் துருவத்தில் கிளர்ச்சி காரணமக ,  கடும் உறைபனிக் காற்று அங்கிருந்து நகர்ந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. இது பிரித்தானியாவை சனிக்கிழமை இரவு கடக்க இருக்கிறது. இதனால் பிரித்தானியாவில் கடும் குளிர் ஏற்பட உள்ளதோடு 
ஸ்னோ (பனிப் பொழிவு) ஏற்பட உள்ளது. ஸ்காட்லாந்தில் சுமார் 8 அங்குல உயரத்திற்கு இந்த பனி மொழிவு காணப்படும் என்று 
கூறப்படுகிறது.
லண்டனில் சிலவேளை குறைவாக காணப்படலாம். எனவே ஞாயிற்றுக் கிழமை ,வீதிகளில் பனி காணப்படலாம். வாகனத்தை ஓட்டுபவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 18 நவம்பர், 2015

தீவிரவாதிகள் லண்டனிலும் ஊடுறுவியதாக அதிர்ச்சித் தகவல்!

பிரான்ஸ் நாட்டை உலுக்கியுள்ள தீவிரவாத தாக்குதல் ஒரு புறம் இருக்க. அங்கே சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி ஒருவரின் பாஸ்போட்டை எடுத்து ஆராய்ந்துள்ள பிரெஞ்சுப் பொலிசார் அதிர்ந்து போய் 
உள்ளார்கள்.
குறித்த தீவிரவாதியின் பின் புலத்தையும் நண்பர்கள் , மற்றும் உறவினர்கள் என்று பலரை பிரெஞ்சுப் பொலிசார் ஆராய்ந்துள்ளார்கள். இதனூடாக திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளது. குறித்த நபரின் உறவினர்கள் சிலர், மற்றும் நண்பர்கள் சிலர் ஏற்கனவே ஐரோப்பாவுக்குள் வந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதனை பிரெஞ்சு அரசு பிரித்தானிய அரசுக்கும் அறிவித்துள்ளது. இதனை அடுத்து சற்று முன்னர் பிரித்தானியாவில் டேவிட் கமரூன் அவர்கள் அதி உச்ச பாதுகாப்பு அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகளை அழைத்து “கோபிரா” கூட்டத்தை கூட்டியுள்ளார். லண்டனில் தாக்குதல் நடத்த என ஏற்கனவே சிலர் புகுந்துவிட்டதாக கருதப்படுகிறது.
அது எங்கே அல்லது எபொழுது என்று தான் தெரியவில்லை என்கிறார்கள். நிச்சயம் லண்டனில் ஒரு கூட்டத்தில் இதுபோன்ற தாக்குதல் நடைபெறும் என்று அடித்துக் கூறப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>