siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 27 மே, 2016

ஜனாதிபதி மைத்திரிக்கு ஜப்பானில் அமோக வரவேற்பு!

ஜி - 7 நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜப்பான் சென்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. ஜப்பானில் நடைபெறும் ஜி - 7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக
 நேற்று பிற்பகல் கொழும்பிலிருந்து 
பயணத்தை ஆரம்பித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை முற்பகல் தெற்கு ஜப்பானின் நகோயா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். இலங்கை ஜனாதிபதியையும்
 அவருடன் வந்த
 தூதுக்குழுவினரையும் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஜி முத்தோ, மாவட்ட ஆளுநர் ஹீதேகி ஒமோரா ஆகியோர் உள்ளிட்ட அந்நாட்டு தூதுக்குழுவினர் மிக விமர்சையாக வரவேற்றனர். இந்த வரவேற்பையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால தங்கியிருக்கும் நகோயா ஹில்டனில் அவருக்கு சம்பிரதாயபூர்வமான வரவேற்பு நிகழ்வும்
 வழங்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 13 மே, 2016

லண்டன் மிச்சம் பகுதியில் தமிழ் பெண் விபத்தில் பலி!

இடம்பெற்ற விபத்தில் லண்டன் மிச்சம் பகுதியில் தமிழ் பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் இறந்த நடுத்தர வயதுடைய சுகந்தி என்ற பெண்மணி மூன்று பிள்ளைகளின் தாயார் என் 
அறியவருகிறது.
ஜேர்மனியில் இருந்து பிள்ளைகளின் கல்விக்காக அண்மையில் இவர் லண்டனுக்கு இடம்பெயர்ந்திருந்தார். உயிரிழந்த சுகந்தி விபத்து இடம்பெற்ற பிரதேசத்தில் உள்ள டட்லியா பல்பொருள் அங்காடியில் 
பணியாற்றியுள்ளார்.
பாதசாரிகளின் நடைபாதையில் பஸ் குறுக்கிட்டபோதே இவ்விபத்து நடைபெற்றுள்ளது. மேலும் காலையில் உருவாகியிருந்த பனிப்புகாரே இவ்விபத்துக்கு காரணமாயிருக்கலாம் என விபத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்து இடம்பெற்ற ஸ்தலத்திலேயே மரணம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் விபத்து நடந்த மிச்சம் – லண்டன் வீதி மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



திங்கள், 2 மே, 2016

தற்கொலைப்படை தீவிரவாதி- நடுவானில் பரபரப்பை கிளப்பிய பெண்

பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடும் பொருட்டு விமான பயணம் மேற்கொண்ட இளம்பெண் ஒருவர் தாம் தற்கொலைப்படை தீவிரவாதியென கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் இருந்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரம் நோக்கி இளம்பெண்கள் இருவர், தங்களில் ஒருவரது பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு பயணம்
 மேற்கொண்டிருந்தனர்.
விமானம் புறப்பட்டதில் இருந்தே இருவரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் பல முறை சக பயணிகள் எரிச்சலுற்று எச்சரிக்கையும் செய்துள்ளனர்.
பல முறை விமான ஊழியர்களிடம் மோதல் போக்கையும் கடைபிடித்து வந்துள்ளனர். சத்தமாக பாட்டு வைத்து சக பயணிகளின் கோபத்திற்கு ஆளானார்கள், மட்டுமின்றி விமானத்தில் அதிக மது வழங்க கேட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் 
ஈடுபட்டு வந்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

தமிழ் இளைஞர்கள் இருவர் ஏரியில் மூழ்கி பலி

கனடா ஒன்ராரியோவிலுள்ள ஈகிள் பார்க் நீர்ச்சுணையில் படகுப் பயணம் சென்று கொண்டிருந்தவேளை ஏற்பட்ட விபத்தில், இரு தமிழ் இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வட்டுக்கொட்டை சிவன் கோவிலடியை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர்களே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 24 வயது 
நிரம்பிய கஜன் கலாபாகன் மற்றும் 21 வயது நிரம்பிய லிங்கவிஜிதன் கிருபநாயகம் ஆகிய இருவருமே 
இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். உறவினர்கள் எழுவர் குறித்த படகில் இருந்ததாகவும், அவர்களில் இவர்கள் இருவரும் உயிர்காப்பு கவசம் அணியாதிருந்தனர் என ஒன்ராரியோ பொலிஸார் 
தெரிவித்துள்ளனர். படகு 
கவிழ்ந்தமை தொடர்பாக உடனடியாக காவற்துறைக்கு அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கிடையில் பூங்கா மீட்புக் குழுவினர் இருவரை மீட்டதாகவும் இருவர் மட்டும் காணாமல்
 போயிருந்ததாகவும் 
தெரிவிக்கப்படுகிறது. மேலும், திங்கள் இரவு காணாமல் போனவர்கள் செவ்வாய்க்கிழமை மதியமளவில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் நேற்று முன்தினம் அவர்கள் இனம் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர். 
அத்தோடு 
இந்த ஏரியில் இது படகு செலுத்துவதற்கான காலம் இல்லை எனவும் கூறப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக ஒன்ராரியோ மாகாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 27 ஏப்ரல், 2016

4,500 கோடி இலங்கை ரூபாய்க்கு அதிபதியான புலம்பெயர்ந்தவர்!


வெளிநாட்டில் எப்படி உழைக்க வேண்டும்?  ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் குடியேறிய நபர் ஒருவர் அந்த நாட்டில் 4,500 கோடி அளவிற்கு சொத்துக்கள் சேர்த்து கடுமையான உழைப்பிற்கு முன்னுதாரணமாக திகழ்ந்து
 வருகிறார்.
ரஷ்யாவில் உள்ள சைப்பீரியாவை சேர்ந்த Leon Kamenev என்ற ஒரு ஏழைச் சிறுவன் அங்குள்ள பள்ளியில் பயின்று பின்னர் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.
வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என தீர்மானித்த அவர் கையில் உள்ள சிறிய சேமிப்புடன் கடந்த 1990ம் ஆண்டில் அவுஸ்ரேலியா நாட்டில் குடியேறியுள்ளார்.
ஆரம்பத்தில் ஒரு சுற்றுலா ஏஜெண்டாக தனது பணியை தொடங்கியுள்ளார். பணியில் அக்கறையுடன் ஈடுப்பட்டதால் ரஷ்ய நாட்டை சேர்ந்த பலரை கவர்ந்து அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுலா வர ஏற்பாடுகள் செய்து முன்னேறியுள்ளார்.
பின்னர், சில ஆண்டுகள் கழித்து சொந்தமாக ‘பீட்ஸா உணவுகளை ஒவ்வொரு ஹொட்டலுக்கும் கொண்டு சென்று டெலிவரி செய்யும்’ நிறுவனத்தை தொடங்கி அவரே பீட்ஸாக்களை டெலிவரி செய்துள்ளார்.
ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையான உழைப்பை செலுத்திய அந்த நபருக்கு தற்போதைய வயது 58 ஆகும்.
கடந்த ஆண்டு அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் பணக்காரர்களின் பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார். இவரது ஒட்டுமொத்த சொத்தின் தற்போதைய மதிப்பு 308 மில்லியன் டொலர் (4,500 கோடி 
இலங்கை ரூபாய்).
இதுமட்டுமில்லாமல், அவுஸ்ரேலிய பணக்காரர்கள் வாங்குவதற்காக போராடி வந்த 4 முக்கிய வீடுகளை இவர் சில தினங்களுக்கு முன்னர் 80 மில்லியன் டொலருக்கு (1,100 கோடி இலங்கை ரூபாய்) சொந்தமாக
 வாங்கியுள்ளார்.
சிட்னியில் உள்ள Coolong என்ற சாலையின் ஓரத்தில் இந்த வீடுகள் அமைந்துள்ளன. தற்போதுள்ள இந்த 4 வீடுகளையும் இடித்து விட்டு அங்கு ஒரு புதிய ஹொட்டலை கட்ட முடிவு 
செய்துள்ளார்.
வெளிநாடுகளில் குடியேறி வாழ்க்கையில் முன்னேற போராடிவரும் பலருக்கு Leon Kamenev ஒரு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

அதிர்ஷ்டவசமாக 90 பயணிகளுடன் தப்பிய விமானம்!!!

பூடான் நாட்டு அரசுக்கு சொந்தமான டிரக் ஏர் நிறுவன விமானம், 90 பயணிகளுடன் தாய்லாந்துக்கு செல்லும் வழியில் அசாம் மாநில தலைநகர் கவுகாத்திக்கு வந்தது. அங்கு தரை இறங்க முயன்றபோது, சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையில் 
சிக்கிக்கொண்டது. 
இதனால், விமானத்தின் மூக்குப்பகுதி சேதம் அடைந்திருப்பது படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. நல்லவேளையாக, விமானம் பத்திரமாக தரை இறங்கியதால், 90 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக 
உயிர் தப்பினர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 11 ஏப்ரல், 2016

பனிமழை ரொரன்டோவில் நீடிக்கும் அபாயம்?

கனடா ரொரன்டோவில் வழக்கமாக ஏப்ரல் மாத ஆரம்பத்திலிருந்தே வசந்த காலம் ஆரம்பமாகும் என்ற போதிலும், தற்போது அங்கு பனி மழை நீடிப்பதால் இந்த நிலை நீடிக்கும் என்ற முன்னறிவிப்புக்கள்
 தற்போது வெளியாகியுள்ளன.
ஏப்ரலைத் தொடர்ந்து மே மாதத்திலும் இந்நிலை நீடிக்குமா? என்ற அச்சம் ரொரன்டோ வாசிகளிடையே எழுந்துள்ள நிலையில், இந்த முன்னறிவிப்பு அனைவரினதும் மத்தியில் அதிர்ச்சியை
 ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (ஞாயிற்று கிழமை) 3 – 5 சென்டிமீட்டர் அளவிற்கு பனி இருந்ததையடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பால், மீண்டும் 1979க்கு திரும்ப ஆரம்பித்து விட்டதோ ரொரன்டோ காலநிலை என நிபுணர்களும் ஆராயத் 
தொடங்கியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 30 மார்ச், 2016

தண்ணீர் குடித்தவரை ரயிலில் கட்டிவைத்து அடித்த சம்பவம்

மத்திய பிரதேசத்தில் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்த ஒருவரை ரயிலில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மத்திய பிரதேசத்தின் இடர்சி ரயில் நிலையத்தின் அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரை சேர்ந்தவரான சுமித் என்பவர், லோக் மான்ய திலக் ரயிலில் சென்று கொண்டிருந்த போது எதிரே அமர்ந்திருந்தவர்களின் தண்ணீரை எடுத்து பருகியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து சுமித்தை ரயிலில் கட்டி வைத்து அடித்துள்ளனர். 
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும் 
சுமித்திற்கு உதவ முன்வரவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக சுமித் அளித்த புகாரை தொடர்ந்து பீகாரை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் சம்பவம் நிகழ்ந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை 
என கூறப்படுகிறது. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 27 மார்ச், 2016

இலங்கைக்கு வந்துள்ளது சவுதியில் கொல்லப்பட்ட பெண்ணின் உடலம்

சவுதி அரேபியாவில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாத்தளை, உக்குவளை பரகாவெலயைச் சேர்ந்த இராமையா கிருஸ்ணகுமார் உதயகுமாரியின் உடல் நான்கு மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரு பிள்ளையின் தாயாரான உதயகுமாரி கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி தொழிலுக்காக சவுதி அரேபியாவிற்குச் 
சென்றிருந்தார்.
தனது கணவரான தங்கராஜ் யோகராஜா, சவுதி அரேபியா சென்று 15 நாட்களில் இவரும் அங்கு சென்றதாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.
இருவரும் ஒரே உரிமையாளரின் ஹோட்டல் மற்றும் வீட்டில் தொழில் புரிந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதி இரவு, உதயகுமாரி சவுதி அரேபியாவில் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாக உறவினர்களுக்குத் தகவல் 
கிடைத்திருந்தது.
எனினும், உதயகுமாரியின் உடலை இலங்கைக்குக் கொண்டு வருவதில் நிலவிய தாமதம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உதயகுமாரியின் கணவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கைக்கான சவுதி தூதரகம் 
அறிவித்திருந்தது.
சவுதி அரேபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட உதயகுமாரியின் பூதவுடல் மாத்தளையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக்கிரியை இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 22 மார்ச், 2016

றொப் போட் ( Rob Ford) முன்னாள் மேயர் காலமானார்.!

கனடிய தமிழ் தமிழ் மக்களிற்கு நன்கு அறிமகமான முன்னாள் ரொரன்ரோ மேயர் றொப் போட் அவர்கள் ரொரன்ரோவில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் தனது 46 வது வயதில் இன்று காலமானார்.என்பதை மிகுந்த கவலையுடன் அறியத் தருகிறோம்.அவரின் ஆத்மா சாந்தியடைவதற்காக அனைவரும் 
பிராத்திக்கின்றோம்க
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>