siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 3 நவம்பர், 2017

தமிழ் மொழி. கனடா பள்ளிகளில் இரண்டாம் மொழியாக படிக்கலாம்!

தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும்.
Prime Minister Trudeau attends TamilFest in Scarborough. August 26, 2017. //// Le premier ministre Trudeau participe au TamilFest, à Scarborough. 26 août 2017.
தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.
தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.
அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின.இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள் .
தென்னாபிரிக்கா, குயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட் டொபாகோ போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.
புலம் பெயர்ந்த தமிழர்களின் பெரு முயற்சியினால் தற்போது ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழ்மொழி இரண்டாம் மொழியாக பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>



புதன், 1 நவம்பர், 2017

சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

¨மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து தொழில்புரிகின்ற இந்திய, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்த நாட்டின் அரசாங்கம்$
 தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்காக மாதாந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, அந்த நாட்டின் குடிவரவுத் திணைக்களப் பணிப்பாளர் டடுக் செரி முஸ்தஃபார் அலி
 தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக தங்கி இருந்து தொழில் புரிகின்றவர்களை பதிவு செய்துக் கொள்வதற்காக அங்கு கால அவகாசம்
 வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பணியாளர்களுக்கு இலத்திரனியல் அட்டை(e-card) வழங்கப்பட்டு, அவர்களை பதிவு செய்யும் நடவடிக்கையும் கடந்த ஜுலை மாதம் வரையில் 
முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் எதிர்காலத்தில் சட்டவிரோத பணியாளர்களைக் கட்டுப்படுத்துவதற்காக, தீவிர சோதனைகள் நடத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 23 அக்டோபர், 2017

பிரான்சில் இருந்து இலங்கை வந்த 10 வயதான சிறுவன் பிரான்ஸ் - லியோனில் பகுதியில் உயிரிழந்துள்ளார்.

 
விடுமுறை காலப்பகுதியில் பிரான்சில் இருந்து இலங்கை வந்த 10 வயதான சிறுவன் பிரான்ஸ் - லியோனில் பகுதியில் வைத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் இலங்கைக்கு வந்திருந்த காலப்பகுதியில் திக்வெல கடற்கரையில் வைத்து வெறி நாய் கடித்துள்ளது. இதனை சிறுவனின் பெற்றோர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில், நாடு திரும்பிய குறித்த சிறுவன் நோய்வாய்ப்பட்டதை அடுத்து கடந்த 4ஆம் திகதி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து, சிறுவனின் இரத்த மாதிரியை சோதனை செய்த பஸ்தர் நிறுவனம், குறித்த சிறுவனுக்கு வெறிநாய் கடித்து ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியது.
மேலும், குறித்த சிறுவன் மூலம் பிரான்ஸ் நாட்டிற்குள் ரேபிஸ் நோய் (விசர்நாய் நோய்) பிரான்சிற்குள் வந்திருப்பதை தேசியக் குறிப்பு மையமான CNR (entre national de référence) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குறித்த சிறுவன் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்துள்ளார். மேலும், சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள நோய் தொற்று தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் மேலும் 
தெரிவித்துள்ளன.



வெள்ளி, 13 அக்டோபர், 2017

செஞ்சிலுவை சங்கத்தின் செயல்பாடுகளை ஆப்கானிஸ்தானில் குறைக்கிறது



இந்த ஆண்டில் மட்டும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை (ஐ.சி.ஆர்.சி) சேர்ந்த 7 பேர் ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள தனது தன்னார்வலர்களின் எண்ணிக்கையை பெரிய அளவில் குறைக்கிறது
 செஞ்சிலுவை சங்கம்.
 இரண்டு செஞ்சிலுவை அலுவலகங்கள் மூடப்பட உள்ளதோடு, மூன்றாவது அலுவலகத்தின் பணிகள் குறைக்கப்படவுள்ளது.
அந்நாட்டு செஞ்சிலுவை சங்க தலைவர், இந்த `வலிதரக்கூடிய முடிவினால்` என்பது வடக்கில் உள்ள மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் இனி கிடைக்காது என்றார்.




வியாழன், 10 ஆகஸ்ட், 2017

இரண்டு வாரத்தில் இந்தியா-சீனா போர்: தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா ?

இந்தியா-பூடான்-சீனா எல்லைப் பகுதியான டோக்லம் பீடபூமி பகுதியில் இந்தியாவும் சீனாவும் ராணுவ வீரர்களை குவித்துள்ளதால் போர் பதற்றம் அங்கு வெகு நாளாக நீடித்து வருவது அனைவரும் 
அறிந்த ஒன்றே.
இந்த நிலையில், இலங்கையில் அம்பான் தோட்டா பகுதியில் சீனா துறைமுகம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இதனை அமைத்துள்ளது சீனா..
சீனாவின் இந்த துறைமுகமானது உலகின் பரபரப்பான கப்பல் வழித்தடங்களை ஒட்டி அமைந்துள்ளதால் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக உடன்பாடு இல்லாத நிலையை தெரிவித்துள்ளன.
இந்த துறைமுகத்தை ஒட்டிய பகுதிகளில் சீனா போர்ப்பயிற்சி மேற்கொள்ள இருப்பதாகவும்இவையாவும் இந்தியாவிற்கு பயத்தை ஏற்படுத்த செய்யப்படும் வேலையாக இந்தியா கருதுகிறது.
மேலும் இந்த போர்ப்பயிற்சி சீன துறைமுக, ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்னும் இரண்டு வாரங்களில் இந்தியா சீனா போர் மூண்டு விடும் என்று குளோபல் டைம்ஸ் பத்திரிக்கையில் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனை சீனாவில் இருந்து வரும் தகவல்களும் உறுதி படுத்தின. இந்த நிலையில் தற்போது மருத்துவ கப்பல் என்ற பெயரில் இலங்கை துறைமுகத்திற்கு ஒரு கப்பல் நேற்று முன்தினம்
 வந்துள்ளது.
மருத்துவ உதவி வழங்குவதற்குத் தேவையான சகல வசதிகளும் நவீன ஏற்பாட்டுடன் இக்கப்பலில் காணப்படுகின்றன.
அத்துடன், அவசர தேவைகளின் போது தரையுடன் தொடர்புகொள்ள ஹெலிகொப்டர் இறங்கு தரையொன்றும் இக்கப்பலில் காணப்படுகின்றது.
வெகு விரைவில் இந்தக்கப்பல் சென்று விடும் என்று கூறப்பட்டாலும், இது ஒரு வேவு பார்க்கும் வேலையாக இருக்கும் என்று சந்தேகிக்க படுகிறது.
இலங்கை துறைமுகத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் தமிழகத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று 
கூறப்படுகிறது.
எல்லையில் படைகள் குவிகப்பட்டாலும், தமிழக கடல் எல்லையை பாதுகாப்பு வளையம் குறைந்த பகுதியாக 
சீனா கருதுகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






ஞாயிறு, 30 ஜூலை, 2017

ரூ.25,000 கோடியை ஓரே நாளில் சம்பாதித்த மார்க் ஜூக்கர்பெர்க்.

சமுக வலைத்தளத்தில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக் நிறுனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க்-கின் சொத்து மதிப்பு நாள்தோறும் உயர்ந்து கொண்டே 
இருக்கிறது.
ஆனால் இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 25,000 கோடி ரூபாய் அதாவது அமெரிக்கா டாலர் மதிப்பில் சுமார் 3.8 பில்லியன் டாலர் 
சம்பாதித்துள்ளார்.எப்படி.?
பேஸ்புக் நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி குறைவாக இருந்தாலும் இந்நிறுவனத்தின் வருவாய் ஈட்டும் திட்டங்கள் மிகப்பெரிய அளவில் 
வெற்றி அடைந்துள்ளது.
இதன் ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் பேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் 43 சதவீதம் உயரும் எனக் கணிப்புகள் வெளியானது.
அடித்து நொறுக்கியது..
பேஸ்புக் நிறுவனம் கணிப்புகளை அடித்து நொறுக்கி சுமார் 45 சதவீதம் அளவிலான வருவாய் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது 2015ஆம் ஆண்டை விடவும் குறைவாக இருந்தாலும் 2வது பெரிய வளர்ச்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இக்காலகட்டத்தில் மட்டும் பேஸ்புக் சுமார் 9.16 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது.பங்கு மதிப்பு
பேஸ்புக்-இன் காலாண்டு முடிவு அமெரிக்கப் பங்குச்சந்தையில் மிகப்பெரிய அதிர்வலைகளைப் பெற்றது இதன் காரணமாக, வியாழக்கிழமை வர்த்தகத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 5 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்குக் 
கொண்டு சென்றது.
இதன் மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு வரலாறு காணாத விதமாகச் சுமார் 175.49 ரூபாய் என்ற புதிய உச்சத்தைப் பெற்றது
3.8 பில்லியன் டாலர்
இதன் வாயிலாகப் பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க்-இன் மதிப்பு வியாழக்கிழமை மட்டும் சுமார் 3.8 பில்லியன் டாலர் வரை உயர்ந்தது.
இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 25,000,000,000 ரூபாய்.
50 சதவீத வளர்ச்சி
2017 ஜனவரி மாதத்தில் இருந்து பேஸ்புக் நிறுவனப் பங்குகள் சுமார் 50 சதவீதம் அளவிற்கு உயர்ந்து தற்போது இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 170 பில்லியன் டாலராக உள்ளது.
அதேபோல் ஜூக்கர்பெர்க்-இன் சொத்து மதிப்பும் ஜனவரி மாதத்தில் இருந்து 24 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது..5வது இடம்
இந்தத் திடீர் உயர்வின் மூலம் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் ஸ்லிம் ஹீலு 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஜூக்கர்பெர்க் 72.7 பில்லியன் டாலர் மதிப்புடன் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>



வியாழன், 27 ஜூலை, 2017

நாளை வடகொரியா மற்றுமொரு ஏவுகணையை ஏவ முயற்சி!

வடகொரியா நாளை மீண்டும் மற்றுமொரு கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை பரிசோதனை நடத்த போவதாக தென்கொரியா குற்றம் சுமத்தியுள்ளது.
தென்கொரியாவுடன் போர் நிறுத்தம் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதை வடகொரியா நாளை இராணுவ தினமாக கொண்டாடுகிறது.
இதனை முன்னிட்டு வடகொரியாவின் பியோங்கன் மாகாணத்தில் இருந்து மற்றுமொரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தென்கொரியா
 தெரிவித்துள்ளது.
இதற்கிடையே வடகொரியாவின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தென் கொரிய பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 6 ஜூலை, 2017

பேருந்து தீப்பிடித்து ஜேர்மனியில் 18 பேர் கருகிப் பலி!

தெற்கு ஜெர்மனியின் ஏ 9 நெடுஞ்சாலையில், ஒரு சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த 18 பேர் இறந்ததாக காவல்துறை கூறுகிறது. வடக்கு பவேரியாவில் உள்ள ஸ்டாம்பாக்கிற்கு அருகில் ஒரு லாரியுடன் இந்த
 பஸ் மோதியது. 30 பேர் தீயில் இருந்து தப்பித்தனர், சிலர் மோசமாக காயமடைந்தனர். சாக்சனியில் இருந்து
 ஓய்வூதியம் பெறும் ஜெர்மானியர்களை ஏற்றிக்கொண்டு இந்த
 பேருந்து சென்றது.
அவசரக் கால மீட்பு பணியாளர்களுக்கு உதவியாக மீட்பு ஹெலிகாப்டர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது பேருந்து கடுமையாக எரிந்துகொண்டிருந்தது. பேருந்து ஏன் விபத்துக்குள்ளானது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 
அந்த நேரத்தில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்ததாகக் கூறப்படுகிறது. அப்பேருந்தில் 46 பயணிகளும், இரண்டு ஓட்டுநர்களும் இருந்துள்ளனர். விபத்தில் இறந்தவர்களில் ஒரு ஓட்டுநரும்
 அடக்கம்.
அவசரகால மீட்புதவியாளர்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது, எரிந்து எலும்புக்கூடான பேருந்தைத்தான் பார்க்க முடிந்தது. விபத்து குறித்து வருத்தப்படுவதாகக் கூறிய சான்சலர் ஏங்கெலா மெர்க்கல்,காயமடைந்தவர்கள் மற்றும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தனது அனுதாபத்தையும் தெரிவித்தார். மோசமான சூழ்நிலையின் போது, மக்களைக் காப்பாற்றிய 
மீட்பு பணியாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். பவேரியா உள்துறை அமைச்சர் ஜோச்சிம் ஹெர்மேன் விபத்துக்குள்ளான இடத்திற்கு
 வந்துள்ளார்.
ஐந்து மீட்புதவி ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்திருந்தன விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருக்கும் பெய்ராய்த் நகரத்தில், போதுமான மருத்துவ வசதிகள் இருப்பதாக ஜெர்மன் செய்தி தொலைக்காட்சியான என். டி.வியிடம் ஒரு காவல்துறை செய்தி தொடர்பாளர்
 கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 5 ஜூலை, 2017

திடீர்ரென விமானத்தின் இன்ஜினில் எரிந்த தீ: அவசரமாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர் !

அமெரிக்காவில் விமானத்தில் இடது இன்ஜின் திடீரென்று தீ பற்றி எரிந்ததால், விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் United Express 5869 என்ற விமானம் கடந்த ஞாயிற்றுக் கிழமை Aspen பகுதியிலிருந்து Denver-க்கு 59-பயணிகள் மற்றும் 4-விமான ஊழியர்களுடன் சென்றுள்ளது.
அப்போது விமானம் Denver விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, திடீரென்று இடது பக்கம் இன்ஜின் தீப்பிடித்து 
எரிந்துள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 24 ஜூன், 2017

நிலச்சரிவில் சீனாவில் .உயிரோடு புதைந்த 100 பேர் !

சீனாவில் நிகழ்ந்த ஒரு பயங்கர நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டனர்.
சீனாவின் தென் மேற்கு மாகாணமான சிச்சுவான், மோக்சியான் பகுதியிலுள்ள ஜின்மோ கிராமத்தில் இந்த சம்பவம்
 நடந்துள்ளது.
அங்கு 40 வீடுகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. மலையின் ஒருபக்கம் இடிந்து விழுந்தததால் இந்த அசம்பாவிதம் 
நடந்துள்ளது.
கற்கள் அப்பகுதியில் பாயும் நதியின் குறுக்கே சுமார் 2 கி.மீ தூரத்திற்கு படர்ந்து நதியின் போக்கை தடுத்து நிறுத்திவிட்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவம் பெரும் மழை காரணமாக நடந்துள்ளது. புல்டோசர்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று 
வருகிறது
நிலாவரை.கொம் செய்திகள் >>>