| 07.09.2012.BY.Rajah. |
| கொலிவுட்டில் உருவாகும் எதிரி எண் 3 படத்திற்காக நடிகர் ஸ்ரீகாந்த் பாடல் ஒன்றை பாட உள்ளார். |
|
நண்பன் வெற்றிக்குப் பின்பு புதிய பாதையில் பயணிக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். இந்நிலையில் தற்போது நடித்து வரும் எதிரி எண் 3 படத்தில் பாடல் ஒன்றை பாட உள்ளார் ஸ்ரீகாந்த். இப்பாடலுக்கு சிம்புவின் போடா போடி படத்திற்கு இசையமைக்கும் தரண் இசை அமைத்துள்ளார். நண்பர்களை மையமாக வைத்தே இப்பாடல் இடம் பெறுகின்றது. இப்படத்தில் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடிக்கிறார். சுமன், ஜெய்பிரகாஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
வெள்ளி, 7 செப்டம்பர், 2012
பாடகரானார் ஸ்ரீகாந்த்
வெள்ளி, செப்டம்பர் 07, 2012
செய்திகள்
அஜித்துடன் நடிக்க பயம்: டாப்சி
வெள்ளி, செப்டம்பர் 07, 2012
செய்திகள்
| 07.09.2012.BY.Rajah. |
| விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் அஜித் ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். |
|
இதற்கிடையில் தெலுங்கில் ரவி தேஜாவுடன் அவர் நடித்துள்ள ‘தருவு’ படம், தமிழில்
‘புல்லட் ராஜா’ என்ற பெயரில் மொழி மாற்றம் ஆகிறது. விரைவில் அதில் பங்கேற்கிறேன். இதில் நடிப்பதற்கு நடுக்கமாகவே இருக்கிறது. காரணம் இதில் அஜித் நடிக்கிறார். முதல்முறையாக அவருடன் நடிக்கிறேன். நயன்தாரா, ஆர்யாவும் இதில் நடிக்கின்றனர் என்றும் பயமும், நடுக்கமும் இருந்தாலும் படப்பிடிப்பில் பங்கேற்கும் நாளுக்காக காத்திருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். |
முகப் பொலிவிற்கு தேங்காய்
வெள்ளி, செப்டம்பர் 07, 2012
உடல் நலம்
| 07.09.2012.BY.Rajah.தேங்காய் உடலுக்கு மட்டும்
ஆரோக்கியத்தை தரவில்லை, சருமத்திற்கும் பல நன்மைகளை தருகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய் ஆகவும், அதற்கு முன்
உடல் ஆரோக்கியத்திற்கு இளநீராகவும் மற்றும் இதன் ஓடு வீட்டில் சமைப்பதற்கு தேவையான
நெருப்பை மூட்ட என்றெல்லாம் உதவுகிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க * ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் கூழ் எடுத்துக் கொண்டு, அதில் சிறிது பேக்கிங் சோடாவை கலந்து, முகம், கை மற்றும் கால்களுக்கு 2-3 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் அதனை வெதுவெதுப்பான நீரால் கழுவி விட வேண்டும். இது சருமத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த ஸ்கரப். இதனால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் சற்று கூடும். * மற்றொரு முறை தேங்காய் தண்ணீரை வைத்து செய்வது. அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் நீர் மற்றும் ஏதேனும் பருப்பு பேஸ்ட் எடுத்து கலந்து கொண்டு, சருமத்திற்கு 1-2 நிமிடம் தேய்த்து, பின்னர் கழுவ வேண்டும். இதனால் சருமத்திற்கு தேவையான நீர் சத்து கிடைப்பதோடு, அழகும் அதிகரிக்கும். * தேங்காயை சிறிது ஆப்ரிக்காட் பழத்துடன் அரைத்து, முகத்திற்கு ஃபேசியல் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் சற்று இறுக்கமடைந்து இளமை தோற்றத்தை தரும். சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க * தேங்காய் சருமத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த மாஸ்சுரைசர். தினமும் படுக்கும் முன் சிறிது தேங்காய் நீரை சருமத்திற்கு தடவி, பின்னர் படுக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அனைத்து புள்ளிகளும் நீங்கி, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும். * தேங்காய் நீருடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, பின் சருமம் முழுவதும் தடவி, ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமம் எண்ணெய் பசையுடன் காணப்படுவதோடு, பளபளப்பாக மின்னவும் செய்யும். * தினமும் குளித்த பின்னர், தேங்காய் பாலை வைத்து முகத்தினை கழுவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின்னர் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். ஆகவே முகம் நன்கு பொலிவோடு இருப்பதோடு, சற்று சருமத்தின் நிறம் அதிகரித்தும் காணப்படும். முகப்பரு நீங்க * முகப்பரு விரைவில் போவதற்கு, ஈஸியான வழி இருக்கிறது. அதற்கு தொடர்ந்து இரவில் படுக்கும் முன் தேங்காய் நீரை முகத்திற்கு தடவி பிறகு தூங்க வேண்டும். இதனை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்தால், முகப்பரு நீங்கி சருமம் மென்மையாகவும், சருமத்துளைகள் நீங்கியும் காணப்படும். * இல்லையென்றால் தேங்காயின் கூழ் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து ஒரு ஃபேஸ் பேக் போன்று, வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம் |
முத்தக் காட்சியில் நடிப்பது தவறில்லை: காஜல் அகர்வால்
வெள்ளி, செப்டம்பர் 07, 2012
செய்திகள்
| முத்தக் காட்சியில் நடிப்பது தவறில்லை என்று முன்னணி நாயகி காஜல் அகர்வால் கூறியுள்ளார். |
|
தற்போது முன்னணி இயக்குனர்களில் கைகளில் நடித்துக் கொண்டிருக்கிறார் காஜல். ஏனெனில் பாலிவுட்டில் உதட்டு முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இது குறித்து காஜல் அகர்வால், பாலிவுட்டை பொறுத்தவரை உதட்டு முத்தக் காட்சி என்பது சாதாரண விடயமாகும். படத்திற்கான காட்சி அமைப்பிற்கு அவசியம் என இயக்குனர் என்னிடம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில்தான் முத்தக் காட்சியில் நடித்துக்கொடுத்தேன் என காஜல் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஆபாசமாக நடிக்க அழைப்பு வந்தால் எந்த மொழிப்படமாக இருந்தாலும் ஒத்துக் கொள்ள மாட்டேன் என ஆவேசமாக கூறியிருக்கிறார் |
மீண்டும் விஜய்யுடன் இணையும் அமலா பால்
வெள்ளி, செப்டம்பர் 07, 2012
செய்திகள்
| 07.09.2012.BY.Rajah- |
| இயக்குனர் விஜய்யின் படத்தில் இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க அமலா பால் பரிசீலனையில் உள்ளார். |
|
துப்பாக்கி படத்தை முடித்த கையோடு இளைய தளபதி விஜய், ஏ.எல். விஜய் இயக்கத்தில்
நடிக்க உள்ளார். இதில் நடிகை அமலா பால் முன் வரிசையில் நிற்கின்றார். ஏனெனில் இயக்குனர் விஜய் படமான தெய்வத் திருமகளில் ஆசிரியை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் அமலா. பின்னர் தாண்டவம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை. இந்நிலையில் மீண்டும் விஜய் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறார். ஏற்கனவே கோடம்பாக்கத்தில் விஜய்யும் அமலா பாலும் காதலிக்கிறார்கள் என்றும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதை இயக்குனர் விஜய்யும் அமலா பாலும் சேர்ந்தே மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. |
இலங்கையின் மொத்த உற்பத்திக்கு வடக்கின் பங்களிப்பு போதாது; 3.7 வீத பங்களிப்பே வழங்கியுள்ளது
வெள்ளி, செப்டம்பர் 07, 2012
இணைய செய்தி
|
07.09.2012.BY.Rajah.இலங்கையின் மொத்த உற்பத்திக்கு வட பிராந்தியம்
3.7 சதவீத பங்களிப்பையே வழங்கியுள்ளது. 2010 ஆம் ஆண்டில் 3.4 சதவீதமாக
காணப்பட்டபங்க ளிப்பு 2011ஆம் ஆண்டில் உயர்வடைந்துள்ள போதிலும் ஏனைய மாகாணங் களைவிட
வடமாகாணம் பின் தங்கியதாகக் காணப்படுகின்றது.
2011ஆம் ஆண்டில் இலங் கையின் மொத்த உற்பத்திக்கு
ஒவ்வொரு மாகாணங்களும் பங்களிப்பு தொடர்பான விவரங்களை இலங்கை மத்திய வங்கி வெளி
யிட்டுள்ளது. இதில் மேல் மாகா ணம் கடந்த ஆண்டு 44.4 சதவீத பங்களிப்பை இலங்கையின்
மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வழங்கி முதல் நிலையில் உள்ளது.
இருப்பினும் 2010ஆம் ஆண்டு 44.8 சதவீத பங்களிப்பை
வழங்கிய மேல் மாகாணம் 0.4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. வடமாகா ணத்தைப்
பொறுத்தவரையில் 2010ஆம் ஆண்டு 3.4 சத வீத பங்களிப்பை வழங்கியுள்ளது. இது 2011 ஆம்
ஆண் டில் 0.3 சதவீதத் தால் அதிகரித்து 3.7 சத வீதமாகியுள்ளது.
வட மாகாணத்தின் இந்த வளர்ச்சி வீதமானது ஏனைய
மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாகவே உள்ளது. வடமாகாணத்தின் உள் நாட்டு
உற்பத்திக்கான மொத்த பங்களிப்பு 241 பில்லியன் ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| ||
|
மனித அவலம் ஒன்று இந்தோனேசிய கரையில் நிகழும் அபாயம்
வெள்ளி, செப்டம்பர் 07, 2012
தகவல்கள் புகைப்படங்கள்
07.09.2012.BY.Rajah.
எரிபொருள் தீர்ந்த நிலையில் மேற்கு இந்தோனேசியாவில்
தரித்து நிற்கும் கப்பலில் இருந்து வெளியேற 53 ஈழத்தமிழர்கள் மறுப்பு
தெரிவித்துள்ளதுடன் உண்ணாவிரதமிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்டகளாக நடந்து கொண்டுள்ள இச் சம்பவம் சாதாரண சம்பவமாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் ஊடகங்களில் பார்வையில் எட்டாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ள மனித அவலமாகவே இச் சம்பவம் உள்ளது.
இது தொடர்பில் எமக்குக் கிடைக்கப் பெற்ற தகவல்கள்,
கடந்த 9ம் நாள் தமிழ்நாட்டு கிழக்கு கடல் மகாபலிபுரத்திற்கும் காசிமேட்டுக்கும் இடையில் உள்ள ஒரு பகுதியில் உள்ள துறைமுகம் ஒன்றில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி ஈழப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 53 பேருடன் புறப்பட்ட படகு ஒன்று எரிபொருள் தீர்ந்த நிலையில் இந்தோனேசியாவில் கரையொதுங்கியுள்ளது.
அப் படகை தற்போது இந்தோனேசியக் கடற்படை சுற்றி வளைத்துள்ளதுடன் அவர்களை கரையிறக்கி சிறிலங்கா அரசிடம் கையளிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
ஆனால் படகில் இருந்து இறங்க மறுத்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தாம் சிறிலங்காவிடம் திருப்பி கையளிக்கப்பட்டால் கொல்லப்பட்டு விடுவோம் எனக் கூறித் தம்மை ஐ.நா நிறுவனங்கள் அல்லது மனித உரிமை நிறுவனங்களிடம் கையளிக்கும் படி
கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளதுடன் உணவுத் தவிர்ப்பையும் மேற்கொண்டு வருகின்றனர்.
53 பயணிகளை கொண்ட இப் படகில் இரு ஊனமுற்றவர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் நான்கு பெண்கள் இருப்பதாக அறிய முடிகின்றது.
கடந்த 19ம் திகதி எரிபொருள் தீர்ந்த நிலையில் தத்தளித்த படகை சில மீனவர்கள் கண்டு 100 லீற்றர் டீசல் வழங்கி நகர உதவியதாக தெரிவிக்கும் அப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீண்டும் 28ம் திகதி வரை பயணம் மேற்கொண்ட நிலையில். எரிபொருள் தீர்ந்து காற்றில் அடித்து செல்லப்பட்டு இந்தோனேசியாவில் சிக்காப் எனப்படும் பிரதேசத்தில் உள்ள துறைமுகத்தில்
தரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆபத்தான கடல் பயணத்தை தொடர்ந்து கடந்த நான்கு நாட்கள் உணவுத் தவிர்ப்பை மேற்கொண்டு வரும் இவர்கள் உடல் நிலை மிகவும் மோசமடைந்து கொண்டுள்ளதாகவும் இன்னும் ஒரு இரு நாட்கள் தாமதிப்பின் மனித அவலம் ஒன்று இந்தோனேசிய கரையில் நிகழும் எனவும் அவ் படகில் உள்ள ஈழப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே நேரம் பிறிதொரு படகில் பயணித்த இன்னொரு தொகுதி புகலிடக்கோரிக்கைiயாளர்கள் படகில் இருந்து இறக்கப்பட்டடு ஒரு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிலும் பெண்கள் குழந்தைகள் அடங்கிய ஈழத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளதாகவும் அறிய முடிகின்றது.

அராலி-வேலணை கடற்பாதை அபிவிருத்தி செய்வது எப்போது?; பிரதேச சபையினர் கேள்வி
வெள்ளி, செப்டம்பர் 07, 2012
இணைய செய்தி
| 07.09.2012.BY.Rajah. |
|
அராலிவேலணை கடலுக்கு ஊடான பாதையை அபிவிருத்தி
செய்வது குறித்து யாழ்.கிளிநொச்சி மாவட்ட ஒருங் கிணைப்புக் குழுக் கூட்டத்தில்
தெரிவித்து 10 மாதங்கள் கடந்துள்ளபோதும் இதுவரையில் இந்தப் பாதையின் அபிவிருத்தி
குறித்து எந்தப் பதிலும் கூறப்படவில்லை.
தீவகமக்களும்வலிகாமம் மக்களும் இதை எதிர்பார்த்த
வண்ணம் உள்ளனர் என்று பிரதேச சபையினர் தெரிவிக் கின்றனர்.யாழ்.மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழு ஊடான அபிவிருத்தி எனும் தலைப்பில் கருத்து தெரிவிக்கப்பட்ட
போதே மேற்படி விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இந்த
மாத முற்பகுதியில் இடம்பெறும் என அரச அதிபர் அறிவித்துள்ளார்.ஆனால் கடந்த கால
கூட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகள் இதுவரை உள்ளூராட்சி சபைகளுக்கு
கிடைக்கவில்லை.
முன்னேற்ற அறிக்கைகளை உடனுக்குடன் அனுப்பி
வைக்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கோரியும் இதுவரை கிடைக்கவில்லை.இந்த
நிலையில் இடம்பெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கல்வி,
சுகாதாரம், வீதி அபிவிருத்தி புறநெகும மற்றும் பல அபிவிருத்திகளுக்கான திட்டங்கள்
ஏற்றுக்கொள்ளப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
அராலிவேலணை கடற்பாதை அபிவிருத்தி குறித்தும்,
நிதி ஒதுக்கீடு குறித்தும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை கருத்திட்டத்தை முன்வைக்க
வேண்டும்.அத்துடன் இந்த அபிவிருத்தி எப்போது ஆரம்பிக்கப்பட்டு முடிவுறுத்தப்படும்
எனவும் அறிவிக்க இணைப்புக் குழுத் தலைவர் முன்வர வேண்டும்.
முன்னாள் அரச அதிபர் க.கணேஷ் காலத்தில்
மானிப்பாய், சுன்னாகம், கோப்பாய், நல்லூர் உள்ளிட்ட பிரதேச சபைகளை நகர சபைகளாக தரம்
உயர்த்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்மொழிந்து 4 வருடங்கள்
கழிந்த நிலையிலும் இந்த விடயம் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வடக்கில் சிறுவர் வைத்தியசாலை அமைய வேண்டும் என
பல கோரிக்கைகள் முன்வைத்த போதும் இதுவரை பதில் இல்லை.இவ்வாறான விடயங்களுக்கு மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழு ஊடாக நல்லதொரு அபிவிருத்தி ஏற்பட வேண்டும் எனவும் பிரதேசசபை
உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர். அத்துடன் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் எத்தனை
தீர்மானங்களுக்கு ஒருங்கிணைப்புக் குழு ஊடாக அபிவிருத்தி எய்தப்பட்டது?
அபிவிருத்தி எய்தப்படாமல் எத்தனை தீர்மானங்கள்
உள்ளன என்பன பற்றியும், மாவட்ட அரச அதிபர் வழங்கி உதவ முன்வர வேண்டும் எனவும்
அவர்கள் கேட்கின்றனர்.
|
பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபரை தலையை வெட்டி படுகொலை செய்த பெண்
வெள்ளி, செப்டம்பர் 07, 2012
இணைய செய்தி
| 07.09.2012.bx.rajah. | |
துருக்கியில் தன்னை பல மாதங்களாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பிணியாக்கிய நபரை கௌரவக் கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.
தென்மேற்கு துருக்கியிலுள்ள சிறிய கிராமமொன்றில் வாழும் இரு பிள்ளைகளின் தாயாரான நெவின் யிடிறிம் (வயது 26) என்பவரே தனது கணவர் கடந்த ஜனவரி மாதம் தொழிலுக்காக பிரிதொரு நகருக்கு சென்றதையடுத்து தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த நுரெட்டின் கிடெர் என்பவரை படுகொலை செய்துள்ளார்.
18 வருடங்களுக்கு முன்னரான கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது
வெள்ளி, செப்டம்பர் 07, 2012
இணைய செய்தி
| 07.09.2012.by.rajah. | |
பஸ்ஸர ௭ல்பிட்டிய பகுதியில் கடந்த 18 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 18 வருடங்களாக தேடப்பட்டுவந்த இச்சந்தேக நபர் பொலன்னறுவை பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
1994 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி பஸ்ஸர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட போது ஏற்பட்ட தகராறொன்றில் பஸ்ஸர நவஜனபதய பொல்கஹ கந்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஆர்.டீ.பபாநிஸ் ௭ன்பவர் கொல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார். நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பலதடைவைகள் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் அவர் தலைமறைவாகவே இருந்துள்ளார். இவ்வாறான நிலையில் வழக்கை விசாரணைக்கு ௭டுத்து கொண்ட பதுளை மேல் நீதிமன்றம் சந்தேக நபரை குற்றவாளியாக கருதி மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. 2011 செப்டெம்பர் 21 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்பினையடுத்தே நேற்று முன்தினம் இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)