07.09.2012.BY.Rajah. |
அராலிவேலணை கடலுக்கு ஊடான பாதையை அபிவிருத்தி
செய்வது குறித்து யாழ்.கிளிநொச்சி மாவட்ட ஒருங் கிணைப்புக் குழுக் கூட்டத்தில்
தெரிவித்து 10 மாதங்கள் கடந்துள்ளபோதும் இதுவரையில் இந்தப் பாதையின் அபிவிருத்தி
குறித்து எந்தப் பதிலும் கூறப்படவில்லை.
தீவகமக்களும்வலிகாமம் மக்களும் இதை எதிர்பார்த்த
வண்ணம் உள்ளனர் என்று பிரதேச சபையினர் தெரிவிக் கின்றனர்.யாழ்.மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழு ஊடான அபிவிருத்தி எனும் தலைப்பில் கருத்து தெரிவிக்கப்பட்ட
போதே மேற்படி விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இந்த
மாத முற்பகுதியில் இடம்பெறும் என அரச அதிபர் அறிவித்துள்ளார்.ஆனால் கடந்த கால
கூட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகள் இதுவரை உள்ளூராட்சி சபைகளுக்கு
கிடைக்கவில்லை.
முன்னேற்ற அறிக்கைகளை உடனுக்குடன் அனுப்பி
வைக்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கோரியும் இதுவரை கிடைக்கவில்லை.இந்த
நிலையில் இடம்பெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கல்வி,
சுகாதாரம், வீதி அபிவிருத்தி புறநெகும மற்றும் பல அபிவிருத்திகளுக்கான திட்டங்கள்
ஏற்றுக்கொள்ளப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
அராலிவேலணை கடற்பாதை அபிவிருத்தி குறித்தும்,
நிதி ஒதுக்கீடு குறித்தும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை கருத்திட்டத்தை முன்வைக்க
வேண்டும்.அத்துடன் இந்த அபிவிருத்தி எப்போது ஆரம்பிக்கப்பட்டு முடிவுறுத்தப்படும்
எனவும் அறிவிக்க இணைப்புக் குழுத் தலைவர் முன்வர வேண்டும்.
முன்னாள் அரச அதிபர் க.கணேஷ் காலத்தில்
மானிப்பாய், சுன்னாகம், கோப்பாய், நல்லூர் உள்ளிட்ட பிரதேச சபைகளை நகர சபைகளாக தரம்
உயர்த்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்மொழிந்து 4 வருடங்கள்
கழிந்த நிலையிலும் இந்த விடயம் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வடக்கில் சிறுவர் வைத்தியசாலை அமைய வேண்டும் என
பல கோரிக்கைகள் முன்வைத்த போதும் இதுவரை பதில் இல்லை.இவ்வாறான விடயங்களுக்கு மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழு ஊடாக நல்லதொரு அபிவிருத்தி ஏற்பட வேண்டும் எனவும் பிரதேசசபை
உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர். அத்துடன் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் எத்தனை
தீர்மானங்களுக்கு ஒருங்கிணைப்புக் குழு ஊடாக அபிவிருத்தி எய்தப்பட்டது?
அபிவிருத்தி எய்தப்படாமல் எத்தனை தீர்மானங்கள்
உள்ளன என்பன பற்றியும், மாவட்ட அரச அதிபர் வழங்கி உதவ முன்வர வேண்டும் எனவும்
அவர்கள் கேட்கின்றனர்.
|
வெள்ளி, 7 செப்டம்பர், 2012
அராலி-வேலணை கடற்பாதை அபிவிருத்தி செய்வது எப்போது?; பிரதேச சபையினர் கேள்வி
வெள்ளி, செப்டம்பர் 07, 2012
இணைய செய்தி