siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

கூட்டமைப்பு எம்.பிக்கள் எவரும் பங்கேற்கவில்லை; கோப்பாய் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்

07.09.2012.by.rajah.
இராணுவத்தினரால் காணிகள் அபகரிக்கப்படுவது தொடர்பில் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது பிரதேச சபை உறுப்பினர்களோ எவரும் கோப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதில் ஈ.பி.டி.பியின் பிரதேச சபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் இராணுவத் தினருக்குக் காணிகள் வழங்குவது தொடர்பில் ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை. கோப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் தலைமை வகித்தார்.இந்தக் கூட்டத்துக்குச் சகல திணைக்களங்களின் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பாதுகாப்புத் தரப்பினர், சிவில் சமூகத்தினர், சாதாரண பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொள்ள முடியும்.
கோப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இறுதியாக கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்றது. 9 மாதங்களின் பின்னர் இந்தக் கூட்டம் நேற்று மீண்டும் நடைபெற்றது.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருக்கும் கடந்த மாதம் 30 ஆம் திகதி தபால் மூலமாக அழைப்பு அனுப்பப்பட்டதாகக் கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்தார்.
இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலோ ஐ.தே.க. சார்பில் எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் இதில் கலந்துகொள்ளவில்லை.