07.09.2012.BY.Rajah.தேங்காய் உடலுக்கு மட்டும்
ஆரோக்கியத்தை தரவில்லை, சருமத்திற்கும் பல நன்மைகளை தருகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய் ஆகவும், அதற்கு முன்
உடல் ஆரோக்கியத்திற்கு இளநீராகவும் மற்றும் இதன் ஓடு வீட்டில் சமைப்பதற்கு தேவையான
நெருப்பை மூட்ட என்றெல்லாம் உதவுகிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க * ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் கூழ் எடுத்துக் கொண்டு, அதில் சிறிது பேக்கிங் சோடாவை கலந்து, முகம், கை மற்றும் கால்களுக்கு 2-3 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் அதனை வெதுவெதுப்பான நீரால் கழுவி விட வேண்டும். இது சருமத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த ஸ்கரப். இதனால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் சற்று கூடும். * மற்றொரு முறை தேங்காய் தண்ணீரை வைத்து செய்வது. அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் நீர் மற்றும் ஏதேனும் பருப்பு பேஸ்ட் எடுத்து கலந்து கொண்டு, சருமத்திற்கு 1-2 நிமிடம் தேய்த்து, பின்னர் கழுவ வேண்டும். இதனால் சருமத்திற்கு தேவையான நீர் சத்து கிடைப்பதோடு, அழகும் அதிகரிக்கும். * தேங்காயை சிறிது ஆப்ரிக்காட் பழத்துடன் அரைத்து, முகத்திற்கு ஃபேசியல் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் சற்று இறுக்கமடைந்து இளமை தோற்றத்தை தரும். சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க * தேங்காய் சருமத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த மாஸ்சுரைசர். தினமும் படுக்கும் முன் சிறிது தேங்காய் நீரை சருமத்திற்கு தடவி, பின்னர் படுக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அனைத்து புள்ளிகளும் நீங்கி, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும். * தேங்காய் நீருடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, பின் சருமம் முழுவதும் தடவி, ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமம் எண்ணெய் பசையுடன் காணப்படுவதோடு, பளபளப்பாக மின்னவும் செய்யும். * தினமும் குளித்த பின்னர், தேங்காய் பாலை வைத்து முகத்தினை கழுவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின்னர் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். ஆகவே முகம் நன்கு பொலிவோடு இருப்பதோடு, சற்று சருமத்தின் நிறம் அதிகரித்தும் காணப்படும். முகப்பரு நீங்க * முகப்பரு விரைவில் போவதற்கு, ஈஸியான வழி இருக்கிறது. அதற்கு தொடர்ந்து இரவில் படுக்கும் முன் தேங்காய் நீரை முகத்திற்கு தடவி பிறகு தூங்க வேண்டும். இதனை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்தால், முகப்பரு நீங்கி சருமம் மென்மையாகவும், சருமத்துளைகள் நீங்கியும் காணப்படும். * இல்லையென்றால் தேங்காயின் கூழ் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து ஒரு ஃபேஸ் பேக் போன்று, வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம் |
வெள்ளி, 7 செப்டம்பர், 2012
முகப் பொலிவிற்கு தேங்காய்
வெள்ளி, செப்டம்பர் 07, 2012
உடல் நலம்