07.09.2012.by.rajah.தனியார் பஸ் சேவைக்கான நேர அட்டவணைக் குழறுபடி
காரணமாக நேற்று முன்தினம் சுமார் 15 மணி நேரம் யாழ்ப்பாணத்திலிருந்து
வவுனியாவுக்கும் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குமான தனியார் பஸ் சேவைகள்
எதுவும் இடம்பெறாத காரணத்தால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தேசிய
போக்குவரத்து ஆணைக்குழுவினர் சுழற்சி முறையில் வவுனியா யாழ்ப்பாணம் தனியார் பஸ்
சேவைக்கான நேர அட்டவணை ஒன்று கடந்த முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டி
ருந்தது. இந்த நேர அட்ட வணை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா செல்லும் பஸ்களுக்கு
பொருந்தாத வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்ற தனியார் பஸ்கள் நேற்று முன்தினம் பிற்பகல் 3
மணிக்கு பின்னர் சேவையை இடைநிறுத்தியிருந்தன.
திடீரென இடைநிறுத்தப்பட்ட தனியார் பஸ் சேவை யால்
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வருகை தரவிருந்த பயணிகள் நேற்று முன்தினம்
பெரும் அவல நிலையை எதிர்கொண்டனர்.
இது தொடர்பாக யாழ். மாவட்ட தனியார்
போக்குவரத்துச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ; தேசியபோக்கு வரத்து
ஆணைக்குழுவால் சுழற்சி முறையில் வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணை
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா செல்லும் பஸ்களுக்கு பொருந்தாத வகையில்
அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பஸ் உரிமையாளர்கள் சேவையில் ஈடுபடுவதைத்
தவிர்த்துவிட்டனர். இது தொடர்பாக யாழ். மாவட்ட அரச அதிபரிடம் தெரிவித்த போது
கொழும்பு தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவிடம் எதிர்வரும் 15 ஆம் திகதி
கலந்துரையாடி முடிவு எடுக்கும் வரை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் புதிய நேர
அட்டவணைப்படி பஸ் சேவையை நடத்துமாறும் தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டது. இது
தொடர்பாக வவுனியா மாவட்ட தனியார் பஸ் சங்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,
தற்போது வழமைபோன்று சேவை இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
|
வெள்ளி, 7 செப்டம்பர், 2012
யாழ்.-வவுனியா தனியார் பஸ்களின் திடீர் புறக்கணிப்பால் பயணிகள் அவலம்
வெள்ளி, செப்டம்பர் 07, 2012
இணைய செய்தி