0709.2012.by.rajah.ஐரோப்பாவுக்கு சட்டவிரோத குடியேற்றவாசிகளை
ஏற்றிச்சென்றதாகக் கூறப்படும் மீன்பிடிப் படகொன்று நேற்று துருக் கியின் மேற்குப்
பகுதிக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த வேளை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 58
பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக துருக்கியின் அனடோலியா செய்திச்சேவை
தெரிவித்துள்ளது.
43 பேரின் சடலங்கள் கடலில் இருந்தும் 15 பேரின்
சடலங்கள் படகிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளதாக துருக்கியின் இஸ்மீர் மாகாணத்தின்
ஆளுநர் தெரிவித்ததாக அச்செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது.
படகில் பயணம் செய்தவர்களில் 46 பேர்
காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் உயிர் தப்பியவர்களில் படகின் இயக்குநர் அவரின்
உதவியாளர் ஆகியோரும் அடங்குவகுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிரேக்க தீவான டஹ்சின் குர்ட் பெயோக்லூவுக்கு
அருகிலுள்ள துருக்கிய நகரான அஹ்மெத்பெய்லியிலிருந்து இப்படகு புறப்பட்டதாகவும்
பின்னர் பாறையொன்றில் மோதியதாலேயே விபத்து இடம்பெற்றதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். இப்படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் சிரியா மற்றும்
ஈராக் முதலான நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் இவர்களுள் சிறார்களும்
அடங்குவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். இந்தப் படகில் இலங்கையர்கள்
எவராவது பயணித்தார்களா என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை
|
வெள்ளி, 7 செப்டம்பர், 2012
துருக்கிக் கடலில் கவிழ்ந்தது படகு அகதிகள் 58 பேர் நீரில் மூழ்கிச் சாவு
வெள்ளி, செப்டம்பர் 07, 2012
இணைய செய்தி