siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 24 அக்டோபர், 2012

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 12 பேர் பலி

புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2012, By.Rsajah{காணொளி}
தைவானில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாயினர், 72 பேர் காயமடைந்தனர். தைவான் நகரில் உள்ள மருத்துவமனையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஐந்து மாடிகள் கொண்ட இந்த மருத்துவமனையின் இரண்டாவது தளம் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் 12 பேர் பலியாயினர், 72 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த நபர்கள் இந்நகரில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குளிர்பதன அறையில் ஏற்பட்ட தீ விபத்தே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.


ஈரானில் 10 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2012, By.Rajah.
ஈரானில் போதை பொருளை கடத்திய குற்றத்திற்காக 10 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானில் கடத்தல், கொலை, கொள்ளை, பெண்களை துன்புறுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அளிப்பது வழக்கம்.
இதன்படி போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக 10 பேருக்கு புதிதாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்பு சபை உடனடியாக இதனை நிறுத்துமாறு பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் இரண்டு முக்கிய போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த நபர்களுக்கே இத்தண்டனை விதித்துள்ளதாகவும், இஸ்லாமிய சட்டதிட்டத்தின் படி இது சரியான நடவடிக்கையே எனவும், நாட்டில் போதைபொருள் பிரச்சினை வளர்வதை தடுக்க இதை தவிர வேறு வழி தம்மிடம் இல்லை எனவும் ஈரானிய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் 344 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

மிட் ரோம்னியை மிஞ்சினார் ஒபாமா

 புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2012.By.Rajah.{காணொளி,}
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமாவுக்கு 48 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிடுகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே மேடையில் விவாதிப்பது கடந்த 1960ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
இதன் படி முதல் சுற்று விவாதம் டென்வர் நகரிலும், இரண்டாவது சுற்று விவாதம் நியூயார்க்கிலும், மூன்றாவது சுற்றி விவாதம் புளோரிடாவிலும் நடந்தது.
இந்த விவாதங்களில் ஒரே மேடையில் அமர்ந்து கொண்டு ஒபாமாவும், மிட்ரோம்னியும் விவாதிப்பனர்.
முதல் சுற்று விவாதத்தில் மிட்ரோம்னியும், 2-வது சுற்று விவாவதத்தில் பராக் ஒபாமாவும் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த 3-வது சுற்று விவாதத்தில், ஒருகட்டத்தில் ஒபாமாவின் வெளிவிவகார கொள்கைகளை மிட்ரோம்னி ஏற்றுக் கொண்டார்.
எனவே ஒபாமாவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக சி.என்.என் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
அடுத்த மாதம் நடக்க உள்ள தேர்தலில் ஒபாமாவுக்கு 48 சதவிகித ஆதரவு உள்ளதாகவும், மிட் ரோம்னிக்கு 40 சதவிகித ஆதரவு உள்ளதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
முதல் சுற்று விவாதம்

இரண்டாம் சுற்று விவாதம்

மூன்றாம் சுற்று விவாதம்


அஞ்சலிக்கு ஆர்யா கொடுத்த முத்தங்கள்


Wed, 24-10-2012.By.Rajah.கொலிவுட்டில் உருவாகி வரும் சேட்டை படத்திற்காக ஆர்யா, அஞ்சலி நடிக்கும் முத்தக்காட்சிகளை இயக்குனர் கண்ணன் எடுத்துள்ளார்.
பாலிவுட்டில் நகைச்சுவை சரவெடியாக வெடித்த டெல்லி பெல்லி படத்தின் ரீமேக்கே சேட்டை.
தமிழில் இப்படத்தை இயக்குனர் கண்ணன் உருவாக்க படத்தில் ஆர்யா, அஞ்சலி, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
விறுவிறுப்பான படப்பிடிப்பில் ஆர்யா அஞ்சலியின் முத்தக்காட்சிகளை இயக்குனர் கண்ணன் எடுத்து முடித்திருக்கிறார்.
அநேகமாக இக்காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
டெல்லி பெல்லி படத்தில் நாயகி பூர்ணா ஜெகனாதன் காரை ரிவர்ஸில் எடுக்கும் போது நாயகன் இம்ரான்கான் முத்தமிடுவது போன்ற காட்சிகளை அமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

முதல் மனிதன் குரங்கு இல்லையாம்..

  October 24, 2012.By.Rajah.அணில்! சொல்கிறது புதிய ஆய்வு நமது மூதாதையர்கள் அதாவது முதல் மனிதன் குரங்கு போல இல்லாமல்,அணில் போன்று இருந்ததாக புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புர்கடோரியஸ் என்ற பாசில் மூலம் இது தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாசிலில் உள்ள உருவம் தான் உலகின் மிகப் பழமையான, மிகவும் ஆரம்ப கால மனித உயிரின் முதல் படி என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த உருவம் அணிலைப் போல இருப்பதாகவும், இதுதான் மனிதனின் ஆரம்ப கால உருவமாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த ஆரம்ப கால மனித உருவமானது பெரும்பாலும் மரங்களிலேயே வசித்து வந்ததாகவும், பழங்களைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், இதற்கு முன்பு புர்கடோரியஸின் பல் மட்டுமே சிக்கியிருந்தது. தற்போதுதான் அதன் எலும்புக் கூட சிக்கியுள்ளது.
இந்த அணில் வகை உயிரினமானது தனது கால்களை எல்லாப் பக்கமும் திருப்பும் வகையில் இருந்துள்ளது.
மேலும் அதன் கால் எலும்பு மூட்டுகளும் மனிதர்களுக்கு இருப்பதை போலவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த அணில் போன்ற உயிரினம் தான் பின்னாளில் மனித உருவமாக மாறியிருக்கலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

தனது மரணத்தை முன்னரே பேட்டியின் மூலம் தெரிவித்த யாஷ் சோப்ரா

 

October 24, 2012.By.Rajah{காணொளி, .புகைப்படங்கள்}பாலிவுட்டில் “கிங்க் ஆப் ரொமான்ஸ்” என வர்ணிக்கப்படும் யாஷ் சோப்ரா, தன் மரணத்திற்கு முன்னதாக சிறப்பு பேட்டி ஒன்று கொடுத்தார்.
அண்மையில் தனது 80 வது பிறந்த தினத்தை நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து கொண்டாடினார் யாஷ் சோப்ரா.
அப்போது உங்களின் அடுத்த திட்டம் என்ன என்ற கேள்விக்கு தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் Jab Tak Hai Jaan எனது இறுதிப்படம் என கூறினார்.
இவர் இயக்கிய படங்கள் Kabhie Kabhie, Silsila, Chandni ,Dil to Pagal Hai போன்றவை உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்ற படங்களாகும்.
இந்தியா சினிமாவின் ஜாம்பவானாக இருந்த யாஷ் சோப்ரா, தனது திரைப்படங்களின் மூலமாக பல தலைமுறையினரை மகிழ்வித்துள்ளார் என இந்திய பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து பேசிய உரையாடல் ஒன்று தற்போது நமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.




 

செவ்வாய், 23 அக்டோபர், 2012

ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்!!!

       
 
Wednesday24October2012 .By.Rajah.உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மைஇல்லைஎன்றுபயப்படுகிறார்கள் அதனைப்பற்றிஒருவிரிவானஅலசல். பெரும்பான்மையானஆண்கள்தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.
முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.

ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.

விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.

துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்

* விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.

ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.

முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.

ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்.

சூரிய குளியலும் பாலியல் உணர்வை தூண்டும் !புதிய ஆய்வு!


     
Wednesday24October2012.By.Rajah.வயாகரா மாத்திரை ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. இனி வயாகரா தேவையில்லை.
சூரிய குளியலே போதும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவ பல் கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பொதுவாக ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன் “பாலியல்” ஆர்வத்தை தூண்டுகிறது. இதற்கு வைட்டமின் “டி” அதிக அளவில் தேவைப்படுகிறது.
வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. எனவே சூரிய குளியலே போதும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 
இந்த புதிய ஆய்வின் மூலம் ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் படுத்தபடி சூரிய குளியல் செய்தாலே போதும் ரத்தத்தில் பாலியல் உணர்வை தூண்டும் டெஸ்ட் டோடெரோன் அளவு 69 சதவீதம் உயர்கிறது என்று தெரிய வந்துள்ளது.

ஈழத்து மக்களையும் மீனவர்களையும் சின்மயி அவமானபடுத்தினாரா???


Wednesday.24.October 2012.By.Rajah.டுவிட்டரில் தன்னைப்பற்றி அவதூறாக எழுதுபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கடந்த தினங்களுக்கு முன்பு பாடகி சின்மயி புகார் கொடுத்திருந்தார்.
சின்மயி புகாரின் பேரில் சென்னை மாநகர காவல்துறையின் கணனி குற்றப் பிரிவினர் சரவணகுமார் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெண்களைத் தொந்தரவு செய்வது தொடர்பான சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழும் சின்மயிக்கு மிரட்டல் விடுத்ததாக இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழும் வழக்குக்கள் பதிவாயிருக்கின்றன.
இந்நிலையில் நிஃப்ட் எனப்படும் சென்னை நாகரிக ஆடைகளுக்கான கல்லூரிப் பேராசிரியர் சரவணகுமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சின்மயி செய்தது என்ன?
சினிமா பின்னணி பாடகி சின்மயி டுவிட்டரில் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இவர்கள் அவதூறாக எழுதியுள்ளனர்.
நாங்கள் மீன்களை துன்புறுத்துவதில்லை, வெட்டி கொல்வதுமில்லை என முத்து உதிர்த்திருக்கிறார் சின்மயி.
இது மீன் உண்பவர்களை மட்டுமல்ல, மீன் பிடித்தலையே தொழிலாகக் கொண்டுள்ள மீனவர்களையும் அவமதிப்பதாகும் என இப்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதுமட்டுமின்றி மீன்களை மீனவர்கள் கொல்கிறார்கள், மீனவர்களை இலங்கை கடற்படை கொல்கிறது, இரண்டும் ஒன்றுதான், இதில் இலங்கையை கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது? என்றும் சின்மயி கூறியிருந்தாராம்.
ஈழத்து மக்களை, மீனவர்களை அவமானப்படுத்தியதோடு, மீனை உணவாகத் தந்து வறியோரின் பசிபோக்கிய இயேசு பிரானைய குற்றம் சாட்டுவதாகத்தான் சின்மயி கருத்து உள்ளதாக இணையத்தில் சின்மயிக்கு எதிரானோர் அணி திரள ஆரம்பித்துள்ளனர்.
இவ்வளவு நாளாக அடக்கி வாசிக்கப்பட்ட இந்த ஜாதியினர் எப்பொழுது எந்த தைரியத்தில் பேசுகிறார்கள் என்பதும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதற்கிடையே இணையதளங்கள் வாயிலாக பாலியல் தொந்திரவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு ஒருவர் கைதாவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

உயரத்தில் என்னோட சாதனைப் படைக்க யாராவது இருக்கீங்களா!!

         
Wednesday 24 October 2012 By.Rajah.
போலந்து நாட்டின்,ஜரோஷின் எனும் பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன ஆல்தோ ஷனி எனும் நாய்க்குட்டி உலகிலேயே உயரம் குறைந்த நாய்க்குட்டி என்ற சாதனையை தன் வசப்படுத்தியுள்ளது.
இதன் உயரம் 2.36 அங்குலமாகக் காணப்படுவதுடன் நியைானது 100 கிராம்களாக உள்ளது. இதன்படி இந்த நாய்க் குட்டியானது தனது எஜமானியின் கைப்பேசியைக் காட்டிலும் உயரம், எடை என்பனவற்றில் குறைந்ததாக காணப்படுகின்றது.