siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 29 டிசம்பர், 2012

இந்தியாவின் வீரமகள் இறந்துவிட்டாள்: ஜனாதிபதி ?

இந்தியாவின் வலிமை மிக்க இளைய சமுதாயத்தின் அடையாளமாக திகழ்ந்த வீரமகளை நாடு இழந்து விட்டதென ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது உயிருக்காகவும் கவுரவத்துக்காகவும் கடைசி நிமிடம் வரை தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் அந்த மாணவி போராடினார்.
இந்தியாவின் வலிமை மிக்க இளைய சமுதாயத்தின் அடையாளமாக, உண்மையான முன்மாதிரியாக திகழ்ந்த இந்தியாவின் வீரமகளை இழந்த இந்த நாடு துயரப்படுகின்றது.
துரதிர்ஷ்டவசமாக அவரை இழந்து துயரப்படும் குடும்பத்தினர் இந்த இழப்பை தாங்கும் வலிமையை பெற பிரார்த்திக்கின்றேன்.
அதே வேளையில், அவரது மரணம் வீணாகிப் போகும் என்ற முடிவுக்கு நாம் வந்து விடக்கூடாது.
இதை போன்ற சம்பவம், இனி எப்போதுமே ஏற்படாது என்ற பாதுகாப்பை தருவதற்கு தேவையான அனைத்தையும் நாம் செய்வோம் என்று தனது அனுதாப செய்தியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இதேவேளையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் இரங்கல் தெரிவித்திருப்பதுடன் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் கிடைக்க வழி செய்வோமென கூறியுள்ளனர்.

அமெரிக்கர்கள் தத்து எடுப்பதை தடுக்கும் புதிய சட்டம். புதின் அதிரடி


 

ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்து எடுப்பதை தடுக்கும் புதிய சட்டம் ஒன்று ரஷியாவில் கொண்டு வரப்பட்டது. இதில் ஜனாதிபதி புதின் நேற்று கையெழுத்திட்டார். இது ஜனவரி 1–ந் தேதி முதல் அமலுக்கு வரும்.
இந்த தகவலை மாஸ்கோவிலுள்ள ஜனாதிபதி மாளிகை தெரிவித்தது. மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் ரஷியர்களை தண்டிக்கும் சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்து இருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ரஷியா தற்போது இந்த புதிய சட்டத்தை இயற்றி இருக்கிறது.
இதன் மூலம் இரு நாடுகள் இடையே உறவு பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது

ஆங்சான் சூகி பயன்படுத்திய கம்பளி ரூ.25 லட்சத்துக்கு ஏலம்

.
 
மியான்மர் எதிர்க்கட்சியின் தலைவர் ஆங்சான் சூகி. நாட்டில் ஜனநாயகம் வேண்டி ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடினார். எனவே அவர் சுமார் 18 ஆண்டுகள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார்.
சமீபத்தில் விடுதலையான இவர் தற்போது உலக நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இவர் தனது கட்சி வளர்ச்சி மற்றும் கல்வி வளர்ச்சி திட்டத்துக்காக நிதி திரட்டி வருகிறார்.
இதற்காக அவர் தனது கம்பளி ஆடையை ஏலத்தில் விட்டார். சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறத்தில் 'வி' வடிவிலான கழுத்து அமைப்பை கொண்ட அந்த ஆடை ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போனது. அதை மியான்மரின் தனியார் 'எப்.எம். ரேடியோ' நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.
யங்கூனில் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதும் போராட்டங்களின் போதும் இந்த கம்பளி ஆடையை பயன்படுத்தியுள்ளார்

காணாமல் போன குழந்தை 3 ஆண்டுகளுக்கு பின் மீட்பு


காணாமல் போன குழந்தை 3 ஆண்டுகளுக்கு பின்பு திரும்ப கிடைத்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆத்யா அஞ்சும் வில்கின்சன் என்ற சிறுமி மூன்று வயதாக இருக்கும் போது, காணமால் போய்விட்டார்.
இதனையடுத்து ஆத்யாவை, அவரது தந்தை அழைத்து சென்றது தெரியவந்தது. பின் குழந்தையை பார்க்க வேண்டும் என தாய் கெஞ்சி கேட்டும், மறுத்து விட்டார்.
இதனால் கோபமடைந்த பெண், கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
உடனே இவருக்கு சிறைத்தண்டனை விதித்து, குழந்தை கண்டுபிடிக்கும்படி பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இச்சிறுமி பாகிஸ்தானில் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே பாகிஸ்தானிலிருந்து மென்செஸ்டருக்கு அழைத்து வரப்பட்ட சிறுமியை, தாய் கண்ணீர் மல்க வரவேற்றார்.
அவர் கூறுகையில், ஆத்யாவை கடந்த 2009ஆம் ஆண்டில் தான் பார்த்தேன். அதன் பின்பு மூன்றாண்டுகள் கழித்து பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.
கடந்த 2008ஆம் ஆண்டில் கணவன்- மனைவி இருவரும் விவாகரத்து செய்ததே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





வர்த்தகர்களை நோக்கி வெள்ளை வான்


கண்டி முத்துமாரி ஸ்டோர்ஸ் உரிமையாளர் கோவிந்தசாமி அருணாச்சலம் பிரபாகரன் என்பவர் இனந்தெரியாத நபர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார்.

இந்த கடத்தல் சம்பவம் நேற்று (28) இரவு 9.40 அளவில் இடம்பெற்றுள்ளதென தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக சிவில் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மலபார் வீதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளை கம்பளை பகுதியில் வைத்து இக்கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடத்தப்பட்டவர் 56 வயதுடைய கோவிந்தசாமி அருணாச்சலம் பிரபாகரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்

சுவிஸில் நாய், பூனைக்கறி சாப்பிடும் விவசாயிகள்

சுவிட்சர்லாந்தின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் நாய் மற்றும் பூனை இறைச்சிகளை சாப்பிடுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உலகில் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் நாய், பூனை சாப்பிடுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.
சுவிஸ் குளிர்பிரதேசம் என்பதால் அங்குள்ள மக்கள் இறைச்சியை பெரும்பாலும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
ஆனால் நாய், பூனை என்பது வீட்டின் செல்லப்பிராணிகள், இதன் இறைச்சிகளை சாப்பிடுவதை சமூகம் ஏற்றுக்கொள்ளாது.
சுவிஸில் அல்பென்ஸெல் மற்றும் செயிண்ட் கேலன் மாநிலங்களில் வாழும் விவசாயிகள் இந்த பிராணிகளை அதிகம் விரும்பி உண்கின்றனர்.
இது குறித்து அவர்கள், இறைச்சி என்றால் ஆடு, மாடு, பூனை, நாய் என்ற வேறுபாடு கிடையாது என்றார்.
சுவிஸில் இதை தடுக்கும் படியான அதிகாரப்பூர்வ சட்டமேதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 28 டிசம்பர், 2012

வசதிக்கு பஞ்சமில்லை: மனநிறைவுடன் புத்தாண்டை வரவேற்கும்

 
கனடாவில் வாழும் மக்கள் புத்தாண்டை மிகுந்த நம்பிக்கையோடும் புத்துணர்ச்சியோடும் வரவேற்க காத்திருக்கின்றனர். கனடியர்களின் புத்துணரச்சிக்கு அடிப்படை காரணம், தங்களது நிதி நிலைமை சிறப்பாக இருக்கிறது என்று அவர்கள் நம்புகின்றனர்.
இது தொடர்பாக ஹேரிஸ்- டெசிமோ நிறுவனம் மூலமாக கருத்துக்கணிப்பு நடத்திய CIBC, 70 சதவீதம் பேர் தங்களது தற்போதைய நிதிநிலை குறித்து மனநிறைவடைந்துள்ளனர்.
ஆனால் இந்த மனநிறைவு சென்ற ஆண்டு 63 சதவீதம் பேரிடம் மட்டுமே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் மற்றொருமொரு சிறப்பாவது, 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 73 சதவீதம் பேர் மிகுந்த மனநிறைவுடன் இருக்கின்றனர்.
ஆனால் 25-34 வயதுடையவர்களில் 67 சதவீதம் பேர் மட்டுமே மனநிறைவு பெற்றுள்ளனர்.
இதுதவிர மேலும் பலர், எதிர்காலத்தில் தங்களின் நிதிநிலமை சிறப்படையும் என்றும் தாம் எதிர்பார்த்த இலக்குகள் அடைவது உறுதி என்றும் நம்புகின்றனர்.
இந்த நம்பிக்கை சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 2 சதவீதம் உயர்ந்து 74ஐ எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கனடா முழுவதும் அக்டோபர் 25 முதல் நவம்பர் 4 வரை 2000 பேரிடம் தொலைபேசி மூலம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

கத்தி, துப்பாக்கியுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள்

இங்கிலாந்தில் 10 வயதுக்கு குறைவான மாணவர்கள் கத்தி, சுத்தி, துப்பாக்கியுடன் பள்ளிக்கு வருகின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேற்கத்திய நாடுகளில் துப்பாக்கி கலாசாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத சூழல் நிலவுகிறது
அமெரிக்காவில் சமீபத்தில் ஆசிரியை மகன் ஒருவன் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 20 குழந்தைகள் உள்பட 28 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இதையடுத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் தினமும் 4 சிறுவர்கள் கத்தி, சுத்தி, துப்பாக்கியுடன் பள்ளிக்கு வருவது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பிரலப பத்திரிக்கையான டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில், இங்கிலாந்தில் 4 மாணவர்களாவது தினமும் கத்தி, சுத்தி, துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பள்ளிக்கு வருகின்றனர்.
மாணவர்கள் சிலர் உலோகத்தால் நட்சத்திர வடிவில் தயாரிக்கப்படும் நிஞ்சா ஸ்டார் ஆயுதத்தை கொண்டு வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் 10 வயதுக்கு உட்பட்டவர்கள்.
மாணவர்களிடம் கடந்த 5 ஆண்டுகளில் 4,150க்கும் அதிகமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் 20க்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையங்களின் ஆவணங்களில் இருந்து தெரிய வந்தது. சில பள்ளிகளில் கோடாரியை கூட மாணவர்கள் கொண்டு வந்ததை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரபல பாடகி விட்னி ஹுஸ்டன் கொலை செய்யப்பட்டாரா? திடுக்கிடும் ?

பிரபல பொப் இசை பாடகி விட்னி ஹுஸ்டன்(வயது 48), சில மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் மரணமடைந்தார்.
அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில் கோகைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை அதிகளவு உட்கொண்டதே இவரது மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது இவர் மரணம் தொடர்பில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
சிகாகோ நகரின் காவல் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது நடித்து கொண்டிருக்கும் பால் ஹுபுல் என்பவர் இது தொடர்பாக சமீபத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அமெரிக்காவில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு விட்னி ஹுஸ்டன், ரூ. 9 கோடி வரை பாக்கி வைத்திருந்தார்.
இந்த கடனை வசூலிக்கும் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம். பிவர்லி ஹில்ஸ் ஓட்டலில் அவர் தங்கியிருந்தபோது, அடையாளம் தெரியாத 2 நபர்கள் அவருடன் இருந்தது ஹோட்டல் கமெராவில் பதிவாகியுள்ளது.
இவர்கள், விட்னி ஹுஸ்டன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து அவரை கொன்றிருக்கலாம். அவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அவர் போராடியிருக்கக்கூடும். இந்த வாதத்துக்கு வலுசேர்க்கும் வகையில் அவரது உடலில் சில காயங்களும் காணப்பட்டன.
என்னிடம் உள்ள ஆதாரங்களை பொலிசாரிடம் நான் ஒப்படைத்துள்ளேன். அவர்கள் விரைவில் இதை ஆதாரமாக வைத்து, புதிய கோணத்தில் விட்னி ஹுஸ்டனின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுரங்கத் தொழிலில் முதலீடு அதிகரிக்கிறது:

சுவிஸ் சுரங்கத்தொழில் ஜாம்பவானான எக்ஸ்ட்ராட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பாப்புவா நியு கினியாவில் ஃபிரீடா ஆற்றங்கரையில் உள்ள தங்கம் மற்றும் செம்புச் சுரங்கத்தை மேம்படுத்த முன்பு கணக்கிட்டதை விட 300 மில்லியன் டொலர் கூடுதலாகத் தேவைப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. சுவிஸ் நிறுவனம், பாப்புவா நியு கினியாவில் உள்ள ஹைலாண்டஸ் பசிஃபிக் என்ற நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து அந்தத் தீவில் சுரங்கத்தொழிலை மேற்கொண்டுள்ளது. முன்பு 5.3 மில்லியன் டொலர் முதலீடு செய்தால் போதும் என்ற திட்டமிட்டது.
இப்போது 5.6 மில்லியனாக உயர்ந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் புனல் மின்சார முறையை விடுத்து எரிவாயு மின்சார முறையைப் பின்பற்ற வேண்டும் என்று இந்நிறுவனம் முடிவெடுத்ததே ஆகும். 82 சதவீதம் பங்குகளுக்குச் சொந்தமான எக்ஸ்ட்ராட்டா நிறுவனம் திட்ட ஆய்வு அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டது.
முதலீடு அதிகரிப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம், கழிவு மேலாண்மைக்கான செலவினங்களில் ஏற்பட்ட மாற்றம் ஆகும்; என்று Xstrata திட்ட மேலாளர் பால்கோ குறிப்பிட்டுள்ளார்.
ஹைலாண்ட்ஸ் பசிஃபிக் நிறுவனம் தனியாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், அமெரிக்கச் செலாவணியின் மதிப்பு குறைந்ததால் முதலீடு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த சுரங்கம் மட்டுமின்றி உலகில் உள்ள மற்ற சுரங்கங்களிலும் செலவுகள் அதிகரித்து இருப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
போன ஜுன் மாதம், தன்னுடைய பங்குகளை விற்கப் போவதாக எக்ஸ்ட்ராட்டா குறிப்பால் உணர்த்தியது. முதலீட்டுச் செலவுகளின் உயர்வினை உத்தேசித்தே பங்கு விற்பனை குறித்து இந்நிறுவனம் சிந்தித்திருக்கலாம்.
ஃபிரீடா ஆற்றங்கரையில் உள்ள சுரங்கங்களில் 204,000 டன் செம்பும் 305,000 அவுன்ஸ் தங்கமும் கடந்த இருபது ஆண்டுகளில் கிடைத்துள்ளது. எக்ஸ்ட்ராட்டா இந்தச் சுரங்கத்தை 2007 முதல் எடுத்து நடத்தி வருகிறது.
ஹைலாண்டஸ் பசிபிக் தனது அறிக்கையில், அடுத்த ஆண்டில் தானும் எக்ஸ்ட்ராட்டாவும் பாப்புவா நியு கினியாவின் அரசுடன் சமபங்கு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக தெரிவித்துள்ளது