siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 1 மே, 2013

பெண்களுக்கும் கருத்தடை மாத்திரையை விற்கலாம்:


முறையற்ற கருசிதைவுகள் மூலம் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களைக் குறைக்க டொக்டரின் மருந்துசீட்டு இல்லாமல் 15 வயது பெண்களுக்கும் கருத்தடை மாத்திரையை விற்கலாம் என்று அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
தேவையற்ற கருவை தவிர்க்க பெண்கள் பல்வேறு கருத்தடை முறைகளை கடைபிடிக்கின்றனர். அவற்றில், தனது துணைவருடன் உடலுறவில் ஈடுபட்ட 72 மணி நேரத்திற்குள் கருத்தடை மாத்திரை உட்கொள்ளும் முறையும் ஒன்று.
பெரும்பாலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் பெண்களின் விருப்பத் தேர்வு இவ்வகை மாத்திரைகள் தான்.
எதிர்பாராத விதமாக உடலுறவு கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகும் பெண்கள், கவலையில்லாமல் மருந்துக் கடைகளுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி உபயோகிக்க தொடங்கினர்.
மேலும் மிக குறைந்த வயதில் பெண்கள் ஆண் துணையை தேடிக்கொள்கிறார்கள் என்று கருதிய அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கவுன்சில், கடந்த 2011ல் இவ்வகை மாத்திரைகளை டொக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு விற்க தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இந்த தடையை நீக்கி 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் இனி 'பிளான்-பி-ஒன் ஸ்டெப்' எனப்படும் கருத்தடை மாத்திரைகளை டொக்டரின் பரிந்துரை இன்றி வாங்கிக் கொள்ளலாம் என்று அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கவுன்சில் நேற்று அறிவித்துள்ளது.
மேலும் இதன் மூலம் கடந்த 2011ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தடை மசோதாவில் 17 வயது என்பதை மாற்றி 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு என்று மாற்ற போவதாகத் தெரிவித்துள்ளது
 

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

10 தனியார் தொலைக்காட்சிச் சேவைகளை ஒரே நேரத்தில் தடை//


 இந்த அதிரடி நடவடிக்கை ஷைட்டி முஸ்லிம்களால் ஆளப்படும் ஈராக்கில் கடந்த ஒரு வாரத்துக்குள் சுன்னி போராளிகளுடன் மூண்ட மோதலில் 180 பேர் வரை கொல்லப் பட்டதையடுத்து மேற்கொள்ளப் பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட சேனல்களில் 8 சுன்னி முஸ்லிம்களுக்குச் சார்பாகவும் ஈராக் பிரதமர் நூரி அல் மலிக்கினை விமர்சித்து வந்தவை எனவும் கூறப்படுகின்றது. இது மட்டுமன்றி ஈராக் அரசு சுன்னி முஸ்லிம்களால் அவ்வப் போது மேற்கொள்ளப் படும் ஆர்ப்பாட்டங்களையும் இராணுவக் கரம் கொண்டு அடக்கி வருகின்றது. இறுதியாக ஹாவ்ஜா எனும் நகர மத்தியில் மேற்கொள்ளப் பட்ட சுன்னி பேரணியினை அடக்க முயன்றதில் 23 பொது மக்களும் 3 இராணுவத்தினரும் பலியாகியிருந்தனர்.
 இந்நிலையில் குடா நாடும் எண்ணெய் வளம் மிகுந்ததுமான கட்டாரினைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் அல்ஜசீரா ஈராக்கின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் மிகுந்த ஏமாற்றத்தினை அடைந்திருப்பதாகக் கருத்து வெளியிட்டுள்ளது. அல்ஜசீரா மேலும் கூறுகையில் நாம் பக்கச்சார்பின்றியே ஈராக்கில் நடக்கும் சம்பவங்களைப் பல வருடங்களாக ஒளிபரப்பி வந்ததாகவும் ஒரே நேரத்தில் 10 சேனல்களைத் தடை செய்வது என்பது அடக்கு முறையையே குறிப்பதாக அமையும் எனவும் இது உலக நாடுகளுக்கு வெளிப்படை எனவும் தெரிவித்துள்ளது.

ஈராக்கில் ஷியா மற்றும் சுன்னி முஸ்லிம்களுக்கிடையே அடிக்கடி நடந்து வரும் மோதல்களில் பலர் பலியாகி வருகின்றனர். இது குறித்த செய்திகளைப் பாரபட்சமின்றி ஒளிபரப்பி வருவதால் அந்நாட்டில் இயங்கும் அல்ஜசீரா உட்பட 10 முக்கிய தொலைக்காட்சிச் சேவைகளை அதிரடியாக ஈராக் அரசு தடை செய்துள்ளது,தடை செய்யப் பட்டவற்றில் அல் ஜசீரா, அல் ஷரீக்கியா, பாக்தாத், பலுஜா, அல்-கர்பியா, ஆகியவை முக்கியமானவை ஆகும்.

இளநரையை போக்க வழிகள்??


 
   - பசு மோர் இளநரையை போக்கும் அருமருந்து. வாரம் இருமுறை மோர் தலைக்கு தேய்த்து குளிக்கலாம் உஷ்ணம் நீங்கும்.
  - தேங்காய் ௭ண்ணெயை காய்ச்சி அதில் கறிவேப்பிலை போட்டு வேகவைக்கவும். இந்த ௭ண்ணெய்யை தினசரி தலைக்கு தேய்த்து வர கூந்தல் இயற்கை நிறத்திற்கு மாறும்.
   - உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது பித்தத்தை குறைக்கும். அதேபோல் முசுமுசுக்கை இலையின் சாறு ௭டுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த ௭ண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை படிப்படியாக மாறுவதை காணலாம்.
    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். அதை சுத்தமான தேனுடன் சேர்த்து ஊறவைத்து தினசரி காலையில் அதை சாப்பிட்டு வர பித்தம் தணியும் இளநரை தானாகவே மாறும்.
  - தேங்காய் ௭ண்ணெயில் ௭லுமிச்சை சாறு கலந்து மசாஜ் செய்யவும். இதனால் இளநரை தானாகவே மாறும். கூந்தல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும்.
  இன்றைக்கு 15 வயது முதலே ஆண், பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. இளநரையை போக்க நம் வீட்டிலேயே மருந்திருக்கிறது. அவை என்னவென்று பார்க்கலாம்.
யோகிப்பது போன்றவைகளினாலும் தலைமுடி வெள்ளையாகிறது,

திங்கள், 29 ஏப்ரல், 2013

உண்மைக்கு இடமில்லை! ஹிருனிகா -


இந்த நாட்டில் உண்மைக்கு இடமில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
 நடக்கும் எல்லா விடயங்கள் பற்றியும் நாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.
 துமிந்த சில்வா தொடர்பில் தீர்மானிக்கும் ஆற்றல் ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது.
நான்கு குடும்பங்களைச் சீரழித்த துமிந்த சில்வா, ஜனாதிபதியிடம் ஆசி பெற்றுக்கொள்ள சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியிடம் நியாயம கோர உள்ளதாக ஹிருனிகா தெரிவித்துள்ளார்.
 இந்த அரசாங்கம் இரண்டு முகங்களைக் கொண்டது – சஜித் பிரேமதாச
 இந்த அரசாங்கம் இரண்டு முகங்களைக் கொண்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 உள்நாட்டுக்கு ஒரு முகத்தைக் காட்டும் அரசாங்கம் வெளிநாட்டுக்கு வேறு முகத்தை காட்டி வருகின்றது.
 போர் வெற்றி குறித்த பிரச்சாரங்களைத் தவிர நாட்டி வேறு எந்த அபிவிருத்தியும் கிடையாது.
 நாட்டின் அபிவிருத்தியை சோடா போத்தல் அபிவிருத்தியாக அடைளப்படுத்த முடியும்.
 மின்சாரக் கட்டண உயர்வின் மூலம் நாட்டின் அனைத்து மக்கள் மீதும் அரசாங்கம் மின்சாரத்தை பாய்ச்சியிருந்தது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 கட்டான பிரதேசத்தில் நடைபெற்ற மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

கேஸ் கசிவு ஏற்பட்டு அடுக்கு மாடிக்கட்டிடம் இடிந்து ?


பிரான்சின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ரெய்ம்ஸ் நகரின் மையப்பகுதியிலுள்ள லில்லே என்ற ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது.
4 மாடிகள் கொண்ட அந்த கட்டிடத்தின் ஒரு வீட்டினுள் கேஸ் கசிவு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி கீழே இடிந்து விழுந்துள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டனர். இந்த இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 9 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்
 

தீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது அதிரடி தாக்குதல்:,,


ஈராக் நாட்டில் சன்னி பிரிவு முஸ்லிம்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியான அன்பர் மாகாணத்தில் நேற்று 5 ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
கடந்த செவ்வாய்க் கிழமையன்று ஹவிஜா நகரில் உள்ள சன்னி பிரிவினர் முகாமின் மீது ஈராக் படைகள் அதிரடித் தாக்குதல் நடத்தியதில் 170 பொதுமக்கள் பலியாகினர்.
இதற்கு பதிலடி தரும் விதமாக சன்னி தீவிரவாதிகள் மேற்கு மற்றும் வடக்கு ஈராக் பகுதிகளில் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.
நேற்று, அன்பர் மாகாணத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 5 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தற்போது அன்பர் மாகாணத்தின் ரமாடி நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது
 

சிறைச்சாலையில் இரு பிரிவினரிடையே கடும்?:


மெக்ஸிகோ நாட்டின் சான் லூயி போடோசி மாநிலத்தில் உள்ள, லா பிலா சிறைச்சாலையில் நேற்று கைதிகளின் இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
அவர்கள் ஒருவருக்கொருவர், வீட்டு உபயோகத்திற்காக செய்யப்பட கத்திகளாலும், ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டனர் என்று அரசாங்கத் தரப்பில் கூறப்படுகின்றது. ஆயினும், காவல்துறை தற்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகத் தெரிகின்றது.
சிறைச்சாலைகளில் அளவுக்கு மேற்பட்ட கைதிகள் இருப்பதால், போதை மருந்துக் கும்பல்களிடம் இதுபோன்ற சண்டை சச்சரவுகள் அடிக்கடி எழுகின்றன என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற சண்டையில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 12க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர். கைதிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதுவே இதற்கு முக்கிய காரணம் என்றும், இந்த செயல்பாடுகள் மாற்றப்பட்டால் தான் இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் எனவும் அந்நாட்டின் மனித உரிமைக் கழகங்கள் தெரிவிக்கின்றன.
 

மூடப்போவதில்லை: புதிய விரிவாக்கத்திற்கு


நோவார்ட்டிஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் நியோன் என்ற ஊரிலிருந்து தனது மருந்து உற்பத்தியை மூடிவிடப் போவதாக அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது அதனை மூடப்போவதில்லை என்றும் 150பிராங்க செலவில் நிறுவனத்தை நவீனப்படுத்த போவதாகவும் தெரிவித்துள்ளது.
மூன்றாண்டுகளில் 60 மில்லியன் பிராங்கும் அதனைத் தொடர்ந்து 2020ல் 90மில்லியன் பிராங்கும் முதலீடு செய்யப்பட்டு சிறப்பு மையமாக Centre of Excellence ஆக செயல்படும் என நோவார்ட்டிஸின் தலைவர் பாஸ்கல் ஃபிரானீசென் வியாழனன்று தெரிவித்தார்.
நோவார்டிஸ் நிறுவனம் ஒன்றரை ஆண்டுகள் முன்னரே மூடப்போவதாக தெரிவித்திருந்ததை தொடர்ந்து அந்நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் 320 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து நிறுவன மேலாளர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையில் ஊழியர்கள் ஊக்கத்தொகை, சம்பள உயர்வு, வரி சலுகைகளை தியாகம் செய்தனர்.
இத்தகைய காரணங்களை தொடர்ந்து நோவார்ட்டிஸ் நிறுவனம் முதலீட்டை அதிகரித்து சிறப்பு மையத்தின் உற்பத்தியை அதிகரிக்கவுள்ளது.
 

ரஷ்யாவில் 140 இஸ்லாமிய தீவிரவாதிகள் ?,

அமெரிக்காவின் பொஸ்டன் மரதன் போட்டியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும், ரஷ்யாவின் செச்ன்யாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும் அவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஆதரித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் நேற்று ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு வந்த இஸ்லாமியர்களில் 140 பேரை தீவிரவாதச் செயல்களில் தொடர்புடையவர்கள் என்று கருதி ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும், பாதுகாப்பு அதிகாரிகளும் கைது செய்துள்ளனர்.
இவர்களில் 30 பேர், தங்கள் நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் இங்கு வந்துள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொஸ்டன் சம்பவம் நடந்த ஒரு வார காலத்திற்குள் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் மீது எடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை
 

சனி, 27 ஏப்ரல், 2013

நாடளாவிய ரீதியில் 48 மணித்தியாலம் பணிப்பகிஷ்கரிப்பு'''


இது தொடர்பில் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் கே.வி. ஜயசேன கூறுகையில்,
 புகையிரத ஊழியர்களுக்கான சம்பள முரண்பாடை கடந்த பல வருட காலமாக நீடித்து வருகின்றது. தற்போது பல்வேறு வகையிலும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் சம்பள உயர்வு தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தெளிவுபடுத்தியபோதும் அது போதிய பயனை எட்டவில்லை.
 இந்நிலையில் எமது சம்பள உரிமை குறித்து போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவுடன் பல நேரடி சந்திப்புக்களை மேற்கொண்டபோதிலும் வெறும் இழுத்தடிப்புகளே ஏற்பட்டது.
 இந்நிலையிலேயே புகையிரத ஊழியர் தொழிற்சங்கங்கள் பலவும் இன்று (வெள்ளிக்கிழமை) சந்திப்பினை மேற்கொண்டு இறுதித் தீர்மானமொன்றை எடுத்தது. இதன் பிரகாரம் நாளை நள்ளிரவு முதல் 48 மணித்தியாலம் பணிப்பகிஷ்கரிப்பில் புகையிரத ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். இதனால் நாடளாவிய ரீதியில் அனைத்து புகையிரதங்களும் ஸ்தம்பிதமடையும்.
 தொடர்ந்தும் அரசாங்கத்தின் பேச்சை நம்பி உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்று அவர் கூறினார்.
சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கத்துடன் இணக்கப்பாடு ஏற்படாமையினால் நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.