siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 19 நவம்பர், 2015

லண்டனில் சனிக்கிழமை ஸ்னோ -1 வரை குளிர் என அறியப்படுகிறது !

ஆர்டிக் துருவத்தில் கிளர்ச்சி காரணமக ,  கடும் உறைபனிக் காற்று அங்கிருந்து நகர்ந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. இது பிரித்தானியாவை சனிக்கிழமை இரவு கடக்க இருக்கிறது. இதனால் பிரித்தானியாவில் கடும் குளிர் ஏற்பட உள்ளதோடு 
ஸ்னோ (பனிப் பொழிவு) ஏற்பட உள்ளது. ஸ்காட்லாந்தில் சுமார் 8 அங்குல உயரத்திற்கு இந்த பனி மொழிவு காணப்படும் என்று 
கூறப்படுகிறது.
லண்டனில் சிலவேளை குறைவாக காணப்படலாம். எனவே ஞாயிற்றுக் கிழமை ,வீதிகளில் பனி காணப்படலாம். வாகனத்தை ஓட்டுபவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 18 நவம்பர், 2015

தீவிரவாதிகள் லண்டனிலும் ஊடுறுவியதாக அதிர்ச்சித் தகவல்!

பிரான்ஸ் நாட்டை உலுக்கியுள்ள தீவிரவாத தாக்குதல் ஒரு புறம் இருக்க. அங்கே சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி ஒருவரின் பாஸ்போட்டை எடுத்து ஆராய்ந்துள்ள பிரெஞ்சுப் பொலிசார் அதிர்ந்து போய் 
உள்ளார்கள்.
குறித்த தீவிரவாதியின் பின் புலத்தையும் நண்பர்கள் , மற்றும் உறவினர்கள் என்று பலரை பிரெஞ்சுப் பொலிசார் ஆராய்ந்துள்ளார்கள். இதனூடாக திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளது. குறித்த நபரின் உறவினர்கள் சிலர், மற்றும் நண்பர்கள் சிலர் ஏற்கனவே ஐரோப்பாவுக்குள் வந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதனை பிரெஞ்சு அரசு பிரித்தானிய அரசுக்கும் அறிவித்துள்ளது. இதனை அடுத்து சற்று முன்னர் பிரித்தானியாவில் டேவிட் கமரூன் அவர்கள் அதி உச்ச பாதுகாப்பு அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகளை அழைத்து “கோபிரா” கூட்டத்தை கூட்டியுள்ளார். லண்டனில் தாக்குதல் நடத்த என ஏற்கனவே சிலர் புகுந்துவிட்டதாக கருதப்படுகிறது.
அது எங்கே அல்லது எபொழுது என்று தான் தெரியவில்லை என்கிறார்கள். நிச்சயம் லண்டனில் ஒரு கூட்டத்தில் இதுபோன்ற தாக்குதல் நடைபெறும் என்று அடித்துக் கூறப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 16 நவம்பர், 2015

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விமானம்:விபத்தில் பரிதாப பலி (காணொளி இணைப்பு)

பிரித்தானிய நாட்டில் சிறிய ரக விமானத்தில் பயணம் செய்தபோது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தில் உள்ள சர்ரே பகுதியில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினர், நேற்று சிறிய ரக விமானம் ஒன்றில் பயணம் 
செய்துள்ளனர்.
குடும்பத்தினர் வசித்த பகுதியில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ள Dunkeswell Aerodrome என்ற கிராமத்திற்கு விமானம் பறந்து சென்றுள்ளது.
ஆனால், 4 மைல்கள் தொலைவிற்கு விமானம் பயணமானபோது அதில் திடீர் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விமானியின் கட்டுப்பாட்டை இழந்த அந்த சிறிய ரக விமானம் அதிவேகமாக தரையை நோக்கி பாய்ந்து விழுந்து நொறுங்கியுள்ளது.
இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விமான விபத்து தொடர்பாக ரிச்சார்ட் கோரிகன் என்ற பொலிசார் இன்று தகவல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், விபத்தில் 56 மற்றும் 20 வயதுடைய 2 ஆண்களும், 55 மற்றும் 23 வயதுடைய 2 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் நால்வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில்
 தெரியவந்துள்ளது.
எனினும், விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்பது தொடர்பாக வான்வெளி போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதால், அதன் முடிவுகள் வெளியான பின்னர் அனைத்து தகவல்கள் முழுமையாக தெரியவரும் என பொலிசார் 
தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வெள்ளி, 13 நவம்பர், 2015

இஸ்லாமிய பெண்னை ரயில் மீது பிடித்து தள்ளிய முதியவர்!!!

இங்கிலாந்தில் 81 வயது முதியவர், வந்துகொண்டிருந்த ரயிலின் மீது இஸ்லாமிய பெண் ஒருவரை பிடித்து தள்ளிய செயல் அங்கிருந்த பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Bakerloo ரயில் சுரங்கப்பாதையில் ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தேபோது, அங்கு நின்றுகொண்டிருந்த Yoshiyuki Shinohara(81) முதியவர், பர்தா அணிந்து வந்த குற்றத்திற்காக அந்த இஸ்லாமிய பெண்ணை பிடித்துதள்ளியுள்ளார்.
இதில் அப்பெண்ணின் முகத்தில் சிறிய உராய்வு ஏற்பட்டுள்ளது, பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அம்முதியவரை கைது செய்த பொலிசார், அவர் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக Westminster Magistrates நீதிமன்றத்தில் ஆஜரான முதியவரை, நவம்பர் 25 ஆம் திகதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் 
உத்தரவிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதன், 11 நவம்பர், 2015

விமானத்தை 480 KM பறந்து சென்று பிடித்த கில்லாடிகள்! (காணொளி )

ரோட்ல அவசரமா போறவங்கள பிளைட்டையா புடிக்கப் போறன்னு கேக்குறோம் சரி…. நெஜமாவே பிளைட்டப் புடிக்கிறதுக்காக, அதுவும் மணிக்கு 300 மைல் வேகத்துல பறந்து போறவங்கள 
என்னன்னு சொல்றது.
துபாய்ல, ஹெலிகாப்டரின் உதவியோட 1,600 அடி உயரத்திலிருந்து 2 பேர் குதிக்கிறாங்க. அதுல ஒருத்தர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த யீவ்ஸ் ரோசி, பார்ட் டைம் பைலட். இன்னொருத்தர், வின்ஸ் ரெபர்ட், ரெண்டு பேரும் மணிக்கு 300 மைல்(482 கிலோ மீட்டர்) வேகத்துல அதி வேகமா பறந்து போறது எதுக்குன்னா ஒரு பிளைட்டப் புடிக்க,
அதுவும் சாதாரண பிளைட் இல்ல, உலகத்துல இதுவரைக்கும் தயாரிச்சதுலயே ரொம்ப ரொம்ப பெரிய பேசஞ்ஜர் பிளைட்டான A380.
அந்த திகில் அனுபவத்தை பாருங்கள்:
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 5 நவம்பர், 2015

எரிமலை சீற்றம்-700 விமானங்கள் அவசர நிறுத்தம்

இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய எரிமலை, ரிஞ்ஜனி எரிமலை. இது அந்த நாட்டின் லாம்பாக் தீவில் உள்ளது. இந்த எரிமலையில் கடந்த வாரம் சீற்றம் ஏற்பட்டது. இதன்காரணமாக எரிமலை உச்சியில்
 இருந்து பெருமளவு
 சாம்பல் வெளியேறி வருகிறது. இந்த சாம்பல், விமானங்களின் என்ஜின்களில் புகுந்தால் அவை செயல் இழந்து விடும் ஆபத்து இருக்கிறது.
இதன் காரணமாக பாலியில் உள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. இன்று வரை அது மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
உலகின் மிகவும்
 பரபரப்பான விமான நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், 700 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எரிமலை வெடிப்பு நிலவரத்தை ஆய்வு செய்துதான் விமான நிலையத்தை மீண்டும் திறப்பது பற்றியும், விமானங்களை இயக்குவது பற்றியும் முடிவு எடுப்போம் என விமான நிலைய 
அதிகாரிகள் கூறினர்.
இதன் காரணமாக, பாலியில் கைது செய்யப்பட்டுள்ள நிழலுலக தாதா சோட்டாராஜன், இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வருகிற தகவல்கள் 
கூறுகின்றன.
இதேபோன்று அங்கு பயணம்மேற்கொண்டிருந்த துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, நேற்று மதியம் இந்திய நேரப்படி 12.15 மணிக்கு புரூனே செல்லவிருந்தார். பாலி விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் அவரது பயணமும் தாமதம் ஆகி உள்ளது.
இன்னொரு பக்கம் இந்தோனேசியாவில் நேற்று நில நடுக்கமும் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் கிழக்கு நுசாடெங்காரா மாகாணத்தில், ஆலோர் தீவு தொடரை மையமாக கொண்டு தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. 
இருப்பினும் மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளுக்கு வந்தனர். சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் ஏதும் இல்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 4 நவம்பர், 2015

விமானம் தெற்கு சூடானில் விபத்துக்கு உள்ளாகியது!!!

ரஷ்ய தயாரிப்பான சரக்கு விமானம் ஒன்று 20 பணியாளர்களுடன் தென் சூடானின் தலைநகர் ஜூபாவில் இருந்து புறப்பட்டது.   நைல் நதியின்  மேல் பறந்து கொண்டு இருந்த போது விமானம் விபத்து உள்ளானது. இந்த விபத்தில் 41 பேர் பலியானதாக  ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் மற்றும் சாட்சிகள் மூலம் தெரியவந்து உள்ளது.
தற்போதைய விபத்தில்  ஒரு குழந்தை மற்றும் ஒரு விமான பணியாளர் உயிர் பிழைத்து உள்ளதாக  ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் அட்னி வீக் அட்னி கூறி உள்ளார்.
கடந்த சனிக்கிழமை  எகிப்து நாட்டின் சுற்றுலா நகரமான ஷரம் எல் ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 224 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம் 23 நிமிடங்களில் எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் நெகேல் என்னுமிடத்தில் நடுவானில் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 224 பேரும் பலியானர்கள் என்பது
 குறிப்பிடதக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 3 நவம்பர், 2015

ரொக்கெட் தொழற்சாலைகளின் புகைப்படங்கள் வெளியாது?.

கிழக்கு ஜைநீரியாவில் ரொக்கெட் செய்யும் தொழிற்சாலைகள் குறித்த வெளிப்படையான ஒளிப்படங்களை இஸ்லாமியப் கிளர்ச்சிக் குழுவான பொகோ ஹராம் வெளியிட்டுள்ளது.இந்த புகைப்படங்களை அவர்கள் வாட்ஸ் அப் மூலம் கெமரூன் பகுதியின் தொலைப்பேசி இலக்கம் 
ஒன்றின் மூலம் பிபிசி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அத்துடன், இவ் ஒளிப்படங்கள் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புபட்ட வலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளது.
பொகோ ஹராம் கிளர்ச்சியாளர்கள் கடந்த காலங்களில் ரொக்கெட் மூலம் இயக்கப்படும் வெடிகுண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தி வந்தனர்.இவர்களுக்கு இந்த ஆயுதங்கள் எவ்வாறு கிடைக்கின்றன என நைஜீரியர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையிலேயே இந்த ஒளிப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை கிளர்ச்சிக் குழுவில் உள்ள அங்கத்தவர்கள், ஆயுதங்களை தயாரிக்கும் அளவிற்கு தொழில்நுட்ப அறிவை கொண்டுள்ளார்கள் 
என்பதை வெளிப்படுத்தும்
 வகையில் அமைந்துள்ளது.இந்த ஒளிப்படங்கள் போர்னா மாநிலத்தில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றிலேயே எடுக்கப்பட்டுள்ளதாக
 நம்பப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 31 அக்டோபர், 2015

திடீர் தீ விபத்து! கொண்டாட்டத்தின் போது 27 பேர் பலியான பரிதாபம்!!!

ருமேனியாவில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ருமேனியாவின் புக்கரெஸ்டில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நேற்று நள்ளிரவு வானவேடிக்கையுன் இசை நிகழ்ச்சி
 நடைபெற்றது.
இதில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் கூரை தீப்பிடித்து எரிந்ததுடன் மளமளவென பரவ தொடங்கியது.
இதனையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறும் போது, பலர் தீயில் சிக்கி 
பரிதவித்தனர்.
இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர், 155 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் காயமடைந்த நபர்களுக்கு ரத்தம் தேவைப்படுவதால் பொதுமக்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தவும் துணை பிரதமர் காப்ரியேல் ஒப்ரியா தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





வியாழன், 22 அக்டோபர், 2015

65 லட்சம் கார்களை டொயோட்டோ நிறுவனம் திரும்ப பெறுகிறது

உலகம் முழுவதிலிருந்தும் உள்ள 65 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக டொயோட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
பவர் விண்டோ சுவிட்ச்கள் தேவைக்கும் அதிகமான சூடாகி அதன் காரணமாக உருகவும் தீ பற்றும் வாய்ப்பும் உள்ளதால் அவற்றை திரும்ப பெற்று, குறைப்பாட்டை சரி செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>