siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 18 ஜூலை, 2012

புத்திர பாக்கியம் தரும் முத்தாலம்மன்

18.07.2012
பல வருடங்களுக்கு முன்பு சென்னையின் மேற்கு மாம்பலம் பகுதி சிறிய கிராமமாகவே விளங்கியது. ஏரிக்கரை சாலையின் பகுதியில் அமைந்துள்ள முத்தாலம்மன் ஆலயம் அப்போது தோன்றியதுதான். தற்போது புகழ் பெற்று விளங்குகிறது இந்த ஆலயம். ஒரு குட்டையில் தான் இருப்பதை வெளிப்படுத்தினாள் அம்மன். அவளை ஆரம்பத்தில் ஓர் ஓலைக்குடிசையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். காலப்போக்கில்தான் அம்மனுக்கு பெரிய ஆலயமே உருவானது.
ஐந்து தலை நாகம் குடை பிடிக்க அன்னையின் கோலம் எழிற்கோலம். ஆலயம் வளர்ச்சியடைந்த போது கழுத்தளவு உள்ள இந்தப் பழமையான சிலையின் பின் அம்மனின் முழு உருவச் சிலை அமர்ந்த கோலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிங்கப்பூரில் கட்டப்பட்ட ஒரு கோயிலுக்குத் தயாரான இந்த சிலை சென்னையிலேயே தங்கிவிட்டது ஓர் அற்புதமான சம்பவம். நான்கு திருக்கரங்களோடு, இடது காலை மடித்து, வலது காலை தரையில் வைத்துக் கொண்டு, கைகளில் ஆயுதங்கள், டமருகம், கபாலம் ஏந்தி வீராஸனத்தில் அன்னை காட்சி தருகிறாள். அம்மனின் இந்த அற்புத தரிசனம் காண்போரின் உள்ளத்தை விட்டு அகலாது.
இவ்வாலயத்தில் ஆஞ்சநேயர், கௌமாரி, மாகேஸ்வரி, பிராம்மி, துர்க்கையம்மனுக்கு சந்நிதிகள் உள்ளன. நவகிரக சந்நிதியும் உண்டு. தல விருட்சமாக அரச மரம் அமைந்துள்ளது. நாகதோஷம் நீங்கவும், புத்திர பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் ஏராளமானோர் முத்தாலம்மனை வழிபடுகின்றனர். முக்கிய விசேஷங்கள் இவ்வாலயத்தில் நடைபெறுகின்றன. வருடந்தோறும் ஆடி மாதம், நான்காம் ஞாயிற்றுக் கிழமை கூழ்வார்த்தல் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. நாமும் ஆடி மாதத்தில் முத்தாலம்மனை வழிபட்டு ஆனந்தம் அடைவோம்

0 comments:

கருத்துரையிடுக