siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 18 ஜூலை, 2012

கரிகிருஷ்ணப் பெருமாள் கோயில் குளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

18 Jul 2012
சுற்றுச்சுவர் இல்லா நிலையில் உள்ள கரிகிருஷ்ணப் பெருமாள் கோயில் குளம்.
பொன்னேரி, ஜூலை 17: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் புதுப்பிக்கப்பட்ட கரிகிருஷ்ணப் பெருமாள் கோயில் குளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
÷திருவாயர்பாடியில் உள்ள ஆரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கரிகிருஷ்ணப் பெருமாள் கோயில் பராமரிப்பின்றி, பாழடைந்து குளம் முழுவதும் புதர் மண்டி கிடந்தது.
÷இதனால் ஆண்டு தோறும் இக்கோயிலில் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் தெப்பத் திருவிழாவின் போது கரிகிருஷ்ணப் பெருமாள் திருக்குளத்தின் வெளிப்புறத்தில் சுற்றி வரும் நிலை இருந்தது.
÷பாழடைந்த நிலையில் இருந்த திருக்குளத்தை புனரமைப்பு செய்யக் கோரி பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நிதியின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை பொன்னேரி பேரூராட்சி நிர்வாகம் சீரமைத்தது.
÷இதையடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற சித்திரை பிரம்மோற்சவ விழாவில் 40ஆண்டுகளுக்குப் பிறகு இக்குளத்தில் தெப்பத்தில் அமர்ந்து கரிகிருஷ்ணப் பெருமாள் வலம் வந்தார்.
÷குளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை... பாழடைந்த நிலையில் இருந்த இக்குளத்தை பல லட்ச ரூபாய் செலவு செய்து புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுக் குப்பைகள் குவிந்து குளத்து நீர் மாசடைவதை தவிர்க்கவும், சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் குளத்தில் தவறி விழுவதால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும், குளத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
÷அகத்தீஸ்வரர் குளத்துக்கும்... பொன்னேரி பழைய பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் ஆலய குளத்தில் இதுவரை நீர் வற்றியதில்லை. பொன்னேரி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிலத்தடி நீராதாரமாக விளங்கும் இக்குளத்தில் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளால் குளத்து நீர் மாசடைந்து வருகிறது.÷எனவே இக்குளத்துக்கும் சுற்றுச்சுவர் அமைக்க பொன்னேரி எம்.எல்.ஏ பொன்.ராஜா, பொன்னேரி பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி மோகனசுந்தம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்

0 comments:

கருத்துரையிடுக