siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 18 ஜூலை, 2012

JUKE - இலங்கைச் சந்தையில் நுழையும் புத்தம் புது SUV _

18.07.2012அசோஷியேட்டட் மோட்டார்வேய்ஸ் பிரைவேற் லிமிடட் (AMW) புத்தம் புதிய நிசான் JUKE இன் அறிமுகம் குறித்து அறிவித்தது.

வியத்தகு பாணியில் அமையப்பெற்றுள்ள JUKE, நிசானின் பிரபல்யம் மிக்க Patrol, X-trail மற்றும் Murano தற்போது யூனியன் பிளேசில் உள்ள AMWஇன் நிசான் காட்சியறையில் பரிசோதனை ஓட்டங்களுக்காக கிடைக்கின்றது.

சிறப்பான உட்புற மற்றும் வெளிப்புற வடிவமைப்பு கொண்ட JUKE , ஒரேநேரத்தில் CO2 வெளியேற்றத்தை குறைப்பதுடன், கணிசமான அளவில் எரிபொருள்சிக்கனத்தை மேம்படுத்தும் நிசானின் "தூய இயக்கம்" தொழினுட்பத்துடன்ஒருங்கிணைக்கப்பட்ட 1.6-லீற்றர் DOHC எஞ்சின் இனைக் கொண்டுநம்பமுடியாத செயற்திறனைக் வெளிப்படுத்துகின்றது.

AMW பொது முகாமையாளர் யொகான் டி சொய்சா குறிப்பிடுகையில் "சௌகர்யம், பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரிய கச்சிதமான SUV இன் உயர் இருக்கையமர்வு நிலைப்படுத்தல்களைக் கொண்டிருந்தாலும், வேறு வாகனங்களில் இருந்து வேறுபாட்டை காட்டும் விதத்தில் நேர்த்தியான பாணியில் JUKE அமைக்கப்பட்டுள்ளது" என்றார்

ஈர்ப்புமிகு வடிவமைப்பு, கச்சிதமான கையாளுகை, இதமான பயண அனுபவம் மற்றும் பாவனையாளர் ஸ்நேகமுடைய தொழிட்பம் ஆகியவற்றின் கலவையான JUKE இலங்கையில் அதிகரித்து வரும் SUV சந்தையில் விசுவாசமிக்க பிரத்தியேகமான வாடிக்கையாளர் தொகுதியினைப் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வலுப்படுத்தப்பட்ட ப்ரீமியட் லெதர் இருக்கைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் எரிபொருள் தாங்கியினால் தூண்டப்பட்டு உருவாக்கப்பட்ட சென்டர் கொன்சோல் மற்றும் இருதடவைகள் பூசப்பட்ட ஹை-குளொஸ் வர்ணப்பூச்சு ஆகியவற்றினை JUKE இன் உட்புறப்பகுதி கொண்டுள்ளது. கியர்ஷிப்ட் ஆனது கொன்சோலின் மேற்புறத்தில், ஸ்போர்ட்டி டிறைவிங் அனுபவத்திற்கான ஷோர்ட் ஷிப்டர் லீவருடன் அமைந்துள்ளது. பிற்புறத்தில் 60/40 ஸப்ளிட் பெஞ்ச் இருக்கைகள் மற்றும் பயணிகள் மற்றும் சரக்குகளைக் கொண்டு செல்வதற்கான வசதிகொண்ட ஃப்ளாட் லோட் தரைப்பகுதியையும் கொண்டுள்ளது.

டச் பெனல் காட்சித்திரை கொண்ட DVD பிளேயர், பிற்புறப்பகுதியைக் காட்டும் கமரா மற்றும் நிசானின் நுண்ணறிவுமிக்க புஷ் பட்டன் இக்னீஷியன், ஸ்பீட் சென்சிங் ஸ்டீயரிங், கதவுகளை பூட்டும் கட்டமைப்பு, USB மற்றும் Bluetooth இணைப்பு போன்ற சிறப்பம்சங்கள் தற்போது கிடைக்கும்.

ஆறு எயார் பேக்’குகள், அன்ரி-லொக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) மற்றும் வெய்க்கிள் டைனமிக் கொன்ட்ரோல் (VDC) போன்ற பல நியம பாதுகாப்பு அம்சங்களும் குறித்த வாகனத்தில் உள்ளன.

டிரான்ஸ்மிஷன் கட்டமைப்பானது Xtronic CVT (tm) (Continuously Variable Transmission) தானியங்கியாக வழங்கப்படுவதால் நிலையான கியர் தொகுதியை உபயோகிக்கும் பாரம்பரிய டிரான்ஸ்மிஷன் கட்டமைப்பைப் போலல்லாது, மிருதுவானதும், ‘ஸ்ரெப்லெஸ்" விகிதாசார மாற்றங்களையும் வழங்குகின்றது.

புத்தமைவு ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கட்டமைப்பானது (Integrated Control –I-CON) நிசான் தொழினுட்பத்தில் இணைந்து கொள்ளும் மற்றுமொரு புதிய விடயமாகும். குறித்த I-CONகட்டமைப்பு குறித்த ஒரு செற்றிங்க்ஸில் தானியங்கி காலநிலைக் கட்டுப்பாட்டு கட்டமைப்பு கொன்ட்ரோலராக செயற்படுவதுடன், ஏனையவற்றில் மூன்று வித்தியாசமான throttle/transmission (CVT)/steering response செற்றிங்க்ஸ் உடன் நோர்மல் - நாளாந்த ஓட்டத்திற்கும், ஸ்போர்ட்ஸ் - உள்ளாந்த செயற்திறன்மிகு உணர்வுக்கும், ஈக்கோ – மிக அதிகபட்ச செயற்பாட்டிற்கும் என டிறைவ் மோட் செலக்டராக செயற்படுகின்றது.

___ 

0 comments:

கருத்துரையிடுக