18.07.2012 விற்பனை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கணனி
உற்பத்தியாளர் என்ற பெயரை லெனோவோ நிறுவனம் இவ்வருடம் கைப்பற்றும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது முதலிடத்தில் உள்ள எச்.பி. நிறுவனம் தனது இடத்தினை இழக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
தொழில்நுட்பத்துறையில் சீன நிறுவனமொன்று இவ்வாறு முதலிடத்தினை பிடிக்கவுள்ளமை இதுவே முதல் முறையெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
சீனா தொழில்நுட்பத்துறையில் வேகமாக முன்னேறுவதனையே இது காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிடல், வெளிநாட்டு நிறுவனங்களைக் கையகப்படுத்தல், வேகமாக வளர்ச்சியடைந்து வரும் உள்நாட்டு சந்தை ஆகியவனவே இதற்கான காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
கடந்த வருடத்தின் 3 ஆம் காலாண்டுப்பகுதியிலேயே லெனோவோ நிறுவனம் உலகின் 2 ஆவது மிகப்பெரிய கணனித்தயாரிப்பு நிறுவனமாக முன்னேறியது.
இவ்வருடத்தின் ஏப்ரல் மற்றும் ஜூன் காலப்பகுதிகளில் லெனோவோ நிறுவனம் கணனிச்சந்தையில் 14.9 வீதத்தினைக் கொண்டிருந்தது.
இது எச்.பி நிறுவனத்தின் 15.5 வீதத்தினை விட வெறும் 0.6 வீதமே குறைவானதாகும்.
தற்போதைய புள்ளிவிபரங்களின் படி அவ் இடைவெளி 0.2 வீதங்களாகக் குறைந்துள்ளதாகவும் இதனால் உலகின் மிகப்பெரிய கணனி தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரைப் பெறுவதற்கு இன்னும் சில மாதங்களே தேவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சீனாவில் ஹுவாயி நிறுவனம் உலகின் மிகப்பெரிய தொடர்பாடல் தொழில்நுட்ப சாதனங்கள் தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரைப் பெறவுள்ளது.
அத்துறையில் முதலிடத்திலிருக்கும் சுவீடன் நாட்டு எரிக்ஸன் நிறுவனத்தினை ஹுவாயி கூடிய விரைவில் முந்தவுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன

0 comments:
கருத்துரையிடுக