siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 18 ஜூலை, 2012

திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் தேவஸ்தான பட்டு வஸ்திரம்



18-07.2012).
திருப்பதி, ஜூலை 16: திருமலையில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரத்தை ஸ்ரீரங்கம் தேவஸ்தானம் சமர்ப்பித்தது.
÷திருமலையில் திங்கள்கிழமை காலை கடந்த வருட வரவு செலவு கணக்குகளை மலையப்ப ஸ்வாமி முன்பு அதிகாரிகள் படித்துக் காட்டினர். நிகழாண்டுக்கான புதிய புத்தகங்களையும் அவர் முன் சமர்ப்பித்தனர். இதுவே ஆனிவார ஆஸ்தானம். இதையொட்டி மாலையில் பூப்பல்லக்கும் நடைபெற்றது.
÷திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த பெரிய ஜீயரும், சின்ன ஜீயரும் கொடுத்த பட்டு வஸ்திரத்தை மலையப்ப ஸ்வாமிக்கும் அவர் சேனாதிபதி விஷ்வக்சேனருக்கும் அணிவித்தனர். வருடத்திற்கு ஒரு முறை கைசிக ஏகாதசி நாளன்று ஸ்ரீரங்க தேவஸ்தானத்திற்கு பட்டு வஸ்திரத்தை திருமலை தேவஸ்தானம் வழங்குவது வழக்கத்திலுள்ளது. அதேபோல் ஆனிவார ஆஸ்தானம் அன்று திருமலை தேவஸ்தானத்திற்கு பட்டுவஸ்திரத்தை ஸ்ரீரங்க தேவஸ்தானம் வழங்கி வருகிறது.
÷அதன்படி திங்கள்கிழமை காலை ஸ்ரீரங்க தேவஸ்தானம் சார்பில் தமிழக அறநிலையத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், துணை ஆணையர் தனபால், திருத்தணி தேவஸ்தான இணை ஆணையர் கவிதா ஆகியோர் பட்டு வஸ்திரத்தை திருமலை தேவஸ்தானத்திற்கு வழங்கினர்.
÷இவ்விழாவில் தேவஸ்தான அறங்காவல் குழுத் தலைவர் பாபி ராஜு, செயல் அலுவலர் எல்.வி. சுப்பிரமணியம், செயல் இணை அலுவலர் கே.எஸ். சீனிவாச ராஜு, தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜி.வி.ஜி. அசோக்குமார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
÷ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி திங்கள்கிழமை சுப்ரபாத சேவை மட்டும் நடந்தது. கல்யாண உற்ஸவம், வசந்த உற்ஸவம், பிரம்மோற்ஸவம், ஊஞ்சல் சேவை, ஸஹஸ்ர தீபாலங்கார சேவை முதலியன ரத்து செய்யப்பட்டன.

0 comments:

கருத்துரையிடுக