இது குறித்த ஒப்பந்தம் செய்யும் நடவடிக்கை
கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
இதில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிதொ
ஹொபொ மற்றும் கொலம்போ பிரென்ட இன்நீட் சங்கத்தின் தலைவி கல்யானி ரணசிங்க ஆகியோர்
கையெழுத்திட்டனர்.
சமூக நலத்திட்ட நன்கொடை உதவியாக அடிமட்ட மனித
பாதுகாப்புக்கான நன்கொடை திட்டத்தின் கீழ் இந் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிதியின் மூலம் குறித்த நிறுவனத்திற்கு
தேவையான மேலதிக இயந்திரங்களும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இலவசமாக செயற்கை உபகரணங்களை தேவாயானோருக்கு
வழங்கி வரும் கொலம்போ பிரென்ட இன்நீட் சங்கத்தினால் கொழும்பில் செயற்கை உறுப்பு
தயாரிப்பதற்கான செயற்பட்டறைகளை நிறுவதற்கும் விருத்தி செய்வதற்கும் இந்த திட்டம்
அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஊடாக வருடாந்தம் 1000 பேரை
சமூகத்தில் மீளிணைந்து கொள்ளவும் சமூக சூழ்நிலைகளை மேம்படுத்திக்கொள்ளவும் நேரடியாக
உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது
0 comments:
கருத்துரையிடுக