பரீட்சை நிலையங்களில் உதவியாளர்கள் பணியில்
இருந்ததாகக் கூறி பணம் பெற்றுக் கொள்ளப்படும் மோசடிச் செயல் இடம் பெற்று வருவதாகக்
கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பரீட்சை மத்திய நிலையங்களில் உள்ள பரீட்சை
அலுவலகங்களுக்கு ஒரு உதவியாளர் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் நாடு முழுவதும்
உள்ள அநேக பரீட்சை நிலையங் களில் உதவியாளர்கள் பெற்றுக் கொள்ளப்படவில்லை எனக்
கல்விசாரா ஊழியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இவ்வாறு உதவியாளர்களைப் பெற்றுக் கொள்ளாமல்
போலிப் பெயர்களைக் கூறி உதவியாளர்களுக்கான பணத்தை சில பரீட்சை மத்திய நிலைய
பொறுப்பதி காரிகள் பெற்றுக் கொள்வதாகக் கல்விசாரா ஊழியர் சங்கம் விடுத்துள்ள
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்துப் பல வருடங்களாகப் பரீட்சைகள்
ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ள போதும் நடவடிக்கை எதுவும்
எடுக்கப்பட வில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments:
கருத்துரையிடுக