siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

யாழ். கடல் நீரேரியில் அனுமதியின்றி கடலட்டை, நண்டு பிடிக்கத் தடை

12.08.2012.
யாழ். மாவட்டத்தில் உள்ள கடல் நீர் ஏரியில் கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி கடலட்டை, நண்டு பிடிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். மாவட்ட கடல் தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடல் நீர் ஏரிகளில் தொழிலாளர்கள் தமக்கென ஒரு இடத்தைப் பிடித்து அடைத்துக் கொண்டு தொழில் செய்து வருகின்றனர். கடலட்டைகள், நண்டுகள் என்பன ஆழ்கடலில் பிடிக்க முடியாது.
இதற்காக ஓரளவு நீர்ப்பரப்பிலே தடிகள் குற்றப்பட்டு, துளைகள் போட்டு வேலியடைத்து கடலட்டை குஞ்சுகள் விட்டு வளர்க்கப்படுகின்றன. கடலட்டைகள் பெறுமதி வாய்ந்ததால் அவற்றை வளர்ப்பதற்கு கடற்றொழிலாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடலட்டைகள், நண்டு பிடிப்பதற்கு தடை இல்லை. ஆனால் கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு கடலட்டை நண்டு பிடிக்க விரும்பு பவர்கள் தமக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கடிதத்தை வழங்க வேண்டும். பின் பணிப்பாளர் அனுமதி கிடைத்ததும் தொழில் செய்ய முடியும்.
தீவுப் பகுதிகளிலேயே அதிகம் சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடிக்கப்பட்டு வருகின்றன. என்று அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக