siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

ஈழத்துக்கு இந்தியா அனுமதி

12.08.2012.சென்னையில் தி.மு.க தலைவர் கலைஞர் தலைமையில் நடக்கும் டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முன்னர் கூறியிருந்தது. ஆயினும் இப் போது மீண்டும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
மாநாட்டின் தலைப்பில், ''ஈழம்'' என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுரை கூறி, வெளியுறவு அமைச்சகம் கடந்த வியாழக்கிழமையன்று டெசோ மாநாட்டு அமைப்பின் செயலர் ஹஸன் முகமது ஜின்னாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், இதற்குத் தி.மு.க தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஈழம் என்பது பல்லாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை என்றும், அதில் தவறு ஏதும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக, மத்திய அரசுக்கு தி.மு.க சார்பில் கடிதமும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு தற்போது அனுமதியளித்துள்ளது. டெசோ மாநாடு தொடர்பான வழக்கு விசாரணை நேற்று சனிக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, டெசோ மாநாட்டு அமைப்பாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் இந்தத் தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, டெசோ மாநாட்டில், ஈழம் என்ற சொல்லைப் பயன் படுத்த இந்திய மத்திய அரசு தடைவிதித்துள்ள்போதும், மாநாட்டில் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது எனத் தி.மு.க. முன்னதாக முடிவு செய்திருந்தது.
"ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று உள்துறை அமைச்சரிடம் இருந்தோ, பிரதமரிடம் இருந்தோ கடிதம் வரவில்லை.ஈழம் என்ற வார்த்தை தமிழ் இலக்கியங்களில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இடம்பெற்றுள்ளது.
"பட்டினப்பாலை என்ற இலக்கிய நூலில் பூம்புகார் கடற்கரையில் வந்து நின்ற படகுகளில் இறக்குமதி, ஏற்றுமதிக்காக வந்த பொருள்கள் என்ன என்பதைக் குறிக்க ஈழத்து உணவும் காழகத் தாக்கமும் என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. எனவே ஈழம் என்பது இல்லாத சொல் அல்ல, கற்பனை சொல்லும் அல்ல. வரலாற்றிலேயே இடம்பெற்ற சொல்'' என்று தி.மு.க. தெரிவித்திருந்தது

0 comments:

கருத்துரையிடுக