வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
ஆப்கானிஸ்தானில் இராணுவ வீரர்களுடன்
பணியில் ஈடுபட்டிருந்த போது, உயிரிழந்த அமெரிக்க நாய்க்கு வீர தீர செயலுக்கான
பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் மோப்ப நாய்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் ஐந்து மாத காலம் பணியில் ஈடுபட்ட தியோ என்ற நாய் தலிபான்கள் வைத்த வெடி குண்டுகளையும், வெடி மருந்து பொருட்களையும் கண்டுபிடித்தது. இதன் மூலம் அமெரிக்க வீரர்கள் பலர் உயிர் பிழைத்தனர். எனினும் கடந்தாண்டு மார்ச் மாதம் தலிபான்களின் தாக்குதலில் அமெரிக்க வீரர்களுடன் தியோவும் பலியானது. வீர தீர செயல் புரியும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த பி.டி.எஸ்.ஏ என்ற அமைப்பு சாதனை பதக்கம் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த வகையில் தியோவுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த விருது 64 பிராணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 27 நாய்களும், 32 புறாக்களும், மூன்று குதிரைகளும், ஒரு பூனையும் அடக்கம். |
வெள்ளி, 26 அக்டோபர், 2012
ஆப்கானிஸ்தான் சண்டையில் பலியான நாய்க்கு வீர தீர விருது
வெள்ளி, அக்டோபர் 26, 2012
செய்திகள்