siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 26 அக்டோபர், 2012

அமெரிக்காவில் குழந்தை கடத்தல்: தகவல் தருபவர்களுக்கு பரிசு

 வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012, By.Rajah.
அமெரிக்காவில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 10 மாத குழந்தை குறித்து தகவல் தருபவர்களுக்கு 30 ஆயிரம் டொலர் பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கிங் ஆஃப் பிரஷ்யா பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் மர்ம நபர்களால் கடந்த 23ஆம் திகதி பெண் குழந்தை சாவ்னி கடத்தப்பட்டார்.
இதைத் தடுக்க முயன்ற குழந்தையின் பாட்டி சத்யவதியை மர்ம நபர்கள் கொன்றுவிட்டனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்யவதியின் இறுதிச் சடங்கில் இங்குள்ள அமெரிக்கவாழ் இந்தியர்கள் பலரும் பங்கேற்று, மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை நடத்தினர்.
கடத்தப்பட்ட குழந்தையை மீட்க உள்ளூர் பொலிசாருடன் இணைந்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
குழந்தையை பத்திரமாக மீட்பது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக பென்சில்வேனியா மாநகர காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
குழந்தையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் எத்தகைய விபரீத நடவடிக்கையையும் இத்தருணத்தில் எடுக்க தாங்கள் விரும்பவில்லை என்று மாநகர அட்டர்னி ரிசா வெட்ரி ஃபெர்மென் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடத்தப்பட்ட குழந்தை குறித்து தகவல் தருபவர்களுக்கு 30 ஆயிரம் டொலர் பரிசு அளிக்கப்படும் என அங்குள்ள தெலுங்கு சமூகம் அறிவித்துள்ளது.