வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
இத்தாலியின்
முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து
நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இத்தாலியின் பிரதமராக சில்வியோ பெர்லுஸ்கோனி பதவி வகித்த போது, வரி ஏய்ப்பு
செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் மீது குற்றவியல் வழக்கும், வரி ஏய்ப்பு செய்ததற்கான வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, பெர்லுஸ்கோனிக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தாலிய சட்டப்படி வழக்குகள் மீதான தீர்ப்புகள் இரண்டு கட்ட மேல்முறையீடுகளில் உறுதி செய்யப்பட வேண்டும். எனவே பெர்லுஸ்கோனி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நான்காவது முறையாக இத்தாலி தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப் போவதாக பெர்லுஸ்கோனி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது |
வெள்ளி, 26 அக்டோபர், 2012
சர்ச்சைக்குரிய முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனிக்கு சிறைத்தண்டனை
வெள்ளி, அக்டோபர் 26, 2012
செய்திகள்