siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 25 ஆகஸ்ட், 2012

சுவிஸில் நீச்சல் பயிற்சியின் போது காணாமல் போன இரு இலங்கையர்களில் ஒருவர் மீட்பு


25.08.2012.
 

சுவிட்சர்லாந்தின் ரிஆஸ் அருவியில் நீந்திக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போன இலங்கையர்கள் இருவரில்  ஒருவர், ஆர்கௌ பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை ரிஆஸ் அருவியில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு இலங்கை அகதிகள் காணாமல் போயினர்.
அவர்களில் ஒருவர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் அவர்கள் இருவருக்கும் நீச்சல் பயிற்சி வழங்கிய ஆசிரியர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவரது கவனக்குறைவின் காரணமாகவே இவர்கள் காணாமல் போயினர் என உறுதியாகும் பட்சத்தில், அவருக்கு தண்டனை வழங்கப்படும் என, சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்

நேருக்கு நேர் மோதிய இரு பேருந்துகள்!- ஒருவர் பலி! 11 படுகாயம்

 
சனிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2012,
 
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி வந்த அரச பேருந்து ஒன்றும், வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் - அனுராதபுரம் வீதியிலுள்ள 5ம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை 1.45 அளவிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

முக்கொலை சந்தேகநபர் பிரசான் நகைகளை 5 இலட்சத்திற்கு அடகுவைத்தமை அம்பலம்



சனிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2012,
 

வெள்ளவத்தை முக்கொலை தொடர்பில் கைதான சந்தேகநபரான பிரசான் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொட்டாஞ்சேனைப் பகுதியில் அடகுவைத்துள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் 15,17 ஆகிய இரண்டு நாட்களில் கொட்டாஞ்சேனைப் பகுதியிலுள்ள நகை அடகுபிடிக்கும் கடையொன்றில் பெருந்தொகையான தங்கநகைகளை கொண்டுசென்று அடகுவைத்து பணம் பெற்றுள்ளமை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தங்க ஆபரணங்களை சந்தேகநபரான பிரசான் கொட்டகலை ராணியப்பு தோடத்தில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டிலிருந்து எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் கொழும்புக்கு வந்து மருந்துப் பொருட்களின் விற்பனை பிரதிநிதியாகத் தொழில் புரிந்துள்ளார்.
அந்தஸ்துக்கு மீறிய விதத்தில் இரண்டு காதலிகளுடனும் வாகனங்களுடனும் ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்த இவர் பணப்பிரச்சினை காரணமாக ஊருக்குச் சென்று தந்தையின் ஊழியர் நம்பிக்கை நிதியப்பணத்தைக் கேட்டுள்ளார்.
தந்தை அதனை கொடுக்க மறுத்ததால் ஆத்திரமுற்ற இவர் தந்தை, தாய், சகோதரி ஆகிய மூவரையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவின் படி மூவரையும் கொழும்புக்கு அழைத்து வந்துள்ளார்.
தான் ஒரு மருந்துவப் பொருட்களின் விற்பனை முகவர் என்பதால் மிக எளிதாக மூவருக்கும் நஞ்சூட்டியுள்ளார்.
நஞ்சூட்டிய பின்னர் நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? என்ற எண்ணத்தில் தாயினதும் சகோதரியினதும் தங்கநகைகளை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளமை விசாரணையின்போது தெரியவந்துள்ளது

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

ஆசியாவிலேயே அதிவேகமான கடலுக்குக் கீழான தரவுப் பரிமாற்ற இணைப்பு

24-08-2012.
ஆசியாவிலேயே அதிவேகமாக தரவுகளைப் பரிமாறிக் கொள்வதற்கு உதவும் புதிய அதிவேக கடலுக்குக் கீழான இணைப்பு திறந்து வைக்கப்படவுள்ளது.

7800 கிலோ மீற்றர் நீளமான இந்தக் கடலுக்குக் கீழான இணைப்பானது ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை இணைக்கிறது.

இந்த இணைப்பின் மூலம் தரவுகள் செக்கனுக்கு 40 ஜிகாபைட்ஸ் வேகத்தில் பரிமாற்றப்படுகிறது.

இது சிங்கப்பூருக்கும் டோக்கியோவுக்குமிடையிலான எந்தவொரு இணைப்பை விடவும் 3 மில்லி செக்கன்கள் வேகமானதாகும்.

கணனிகளால் வியாபாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் தரவுப் பரிமாற்றம் மூலம் ஒரு செக்கனிலும் குறைந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான தரவுப் பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.

வங்கிகளுக்கிடையிலான கடும் போட்டி காரணமாக தரவுப் பரிமாற்றத்தில் ஏற்படும் ஒரு செக்கன் தாமதமானது அவற்றின் இலாபத்தின் அளவைப் பாதிப்பனவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது

நயன்தாராவை அசர வைத்த அஜீத்!

24.08.2012.பில்லா-2வை அடுத்து, விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் அஜீத், அந்த படத்துக்காக, 15 கிலோ வரை, உடல் எடையை குறைத்துள்ளார். அவரது தோற்றத்தைப்
பார்த்து, படப்பிடிப்புக் குழு அசந்து நிற்கிறது. இது பற்றி, அந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா கூறும்போது, "பில்லா படத்தில் பார்த்த அஜீத்துக்கும், இப்போதைய அஜீத்துக்கும், எந்த வித்தியாசமும் தெரியவில்லை. முன் இருந்த மாதிரியே, இப்போதும் இளமையாக இருக்கிறார். அதேசமயம், இன்னும், "ஸ்லிம்மாகி விட்டார். தொழில் மீது பக்தியும், ஈடுபாடும் கொண்டவர்களால் தான், கதையின் தன்மைக்கேற்ப
தன்னை மாற்றிக் கொள்ள இயலும் என்கிறார்

தமிழுக்கு வந்த கன்னடத்து பைங்கிளி

24.08.2012.அட்டகத்தி படத்தின் மூலம், தமிழுக்கு வந்திருக்கும் கன்னட நடிகை நந்திதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிக கோடிகளை அள்ளிக்கொண்ட இவருக்கு, அடுத்து, வெங்கட்பிரபுவின் உதவியாளர் இயக்கும், "நளனும் நந்தினியும் என்ற படமும் கிடைத்துள்ளது. அதனால், தேடி வந்த கன்னட படங்களை கூட தவிர்த்து விட்டு,
முழுநேர தமிழ் நடிகையாகப் போவதாக, கோலிவுட் கோதாவில் இறங்கி விட்ட நந்திதா, "திறமைக்கு மட்டுமே முதலிடம் கொடுப்பேன்; கிளாமரில் லிமிட் தாண்ட மாட்டேன் என்கிறார்

கண்டிஷன் போட்டால்வீட்டில் தான் இருக்க வேண்டும் - ஜனனி அய்யர்!

24.08.2012.பாலா இயக்கிய, "அவன் இவன் படத்தில் அறிமுகமான ஜனனி அய்யர், தற்போது
ஸ்ரீகாந்துடன், "பாகன் படத்தில் நடித்து வருகிறார். அவரிடத்தில், "ஆரம்பத்தில்
நீங்கள் நிறைய, "கண்டிஷன் போட்டதாகக் கூறப்பட்டதே? என்று கேட்டதற்கு, "அது
என்னைப் பற்றி வெளியான வதந்தி. நான் யாரிடமும் கண்டிஷன் போடுவதில்லை. அப்படி செய்தால் யாரும் வாய்ப்பு தர மாட்டார்கள். நான் வீட்டில் தான் உட்கார்ந்திருக்க வேண்டும் என்கிறார். மேலும், "டைரக்டர்கள் என்ன சொல்கின்றனரோ... அதன்படி நடித்துக் கொடுக்க தயாராக இருக்கிறேன், என்று சொல்லும் ஜனனி அய்யர், "கதைக்கு தேவையான அளவு கவர்ச்சியாக நடிப்பதற்கும் தயாராகி விட்டேன். அதனால், கமர்சியல் பட டைரக்டர்கள், தாராளமாக என்னை அணுகலாம் என்றும் அழைப்பு விடுக்கிறார்

வேன்கள் திடீரென தீப்பற்றியெரிந்து நாசம்

24.08.2012.மடவளை பஸார், ரவூப் ஹக்கீம் மாவத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு தனியார் வேன்கள் தீப்பிடித்து ஒன்று முற்றாகவும் மற்றது பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளன.
முற்றாக எரிந்த வேன் இரவுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு விட்டு உரிமையாளரின் வீட்டு முற்றத்தில் இன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதிகாலைவேளை அது தீப்பற்றியுள்ளதை அவதானித்து அணைக்க முயற்சித்தபோதும் அது கைகூடவில்லை.
அதேநேரம் அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வேனும் தீப்பற்றிய போதும் அயலவர்கள் உதவியால் அது அணைக்கப்பட்டுள்ளது.
தீப்பற்றியமைக்குத் தொழில்நுட்பக் கோளாறா அல்லது நாசவேலையா எனத் தெரியவில்லை.வத்துகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 
 

 

 

 

புதிய ரயில் வண்டி அட்டனில் வெள்ளோட்டம்

24.08.2012.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரயில் வண்டி நேற்று மாலை அட்டன் ரயில் நிலையத்திலிருந்து வெள்ளோட்டம் விடப்பட்டது.

சீனாவில் இருந்து தருவிக்கப்பட உள்ள 13 புதிய இரயில் வண்டிகளில் 5 வண்டிகள் ஏற்கனவே இலங்கையை வந்தடைந்துள்ளன. இவற்றில் ஒன்றை மலையக மார்க்கத்தில் ஈடுபடுத்துவதற்கான பரீட்சார்த்த பயணமே நேற்று மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை ரயில்வே திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.
 

வெள்ளவத்தை முக்கொலை: சந்தேக நபர் கைது

வெள்ளவத்தையில் தாய்,தந்தை,தங்கையைக் கொலை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
குருநாகல் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்தவேளை சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அயலவர்கள் தரும் தகவல் (ஒலிப்பதிவு)