siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 4 செப்டம்பர், 2012


தமிழ்நாட்டுக்கு செல்வதை தவிருங்கள்: சிங்கள மக்களுக்கு இலங்கை அரசின் வேண்டுகோள்

04.09.2012.BYrajah.
 
இலங்கை குடிமக்கள் மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாட்டுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று இலங்கை அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

சமீபத்தில் தமிழ் நாட்டுக்கு வரும் சிங்களவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக கூறும் இலங்கை வெளிநாட்டமைச்சு, எனவே இலங்கை குடிமக்கள் தங்களது பாதுகாப்பை மனதில் கொண்டு, இனி மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாட்டுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு செல்வதில் பிரச்சினை ஒன்றும் இல்லை என்றும் அது கூறியிருக்கிறது.

சமீப காலங்களில் தமிழ் நாட்டுக்கு வந்த இலங்கை சுற்றுலா பயணிகள், யாத்ரிகர்கள், விளையாட்டு மற்றும் கலாசார துறை தொடர்பானவர்கள், தொழில் முறை பயிற்சிக்காக வருபவர்கள் என பல்தரப்பட்டவர்கள் இது போன்ற அச்சுறுத்துலுக்கு ஆளாவதாக அது கூறியிருக்கிறது.

அதேவேளை, இந்த விடயத்தில் சிங்கள பயணிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை இலங்கை கேட்டிருக்கிறது

முற்றுகிறது வேம்படி அதிபர் பிரச்சினை ஒரே நாளுக்குள் தீர்வு வேண்டும் இன்றேல் வெடிக்கும் போராட்டம் பழைய மாணவிகள் போர்க் கொடி

04.09.2012.BY.rajah.யாழ். குடாநாட்டின் புகழ் பூத்த பெண்கள் பாடசாலையான வேம்படி மகளிர் கல்லூரியில் நிரந்தர அதிபரை நியமிக்கும் பிரச்சினை முற்றி வெடித்துள்ளது. இந்தப் பிரச்சினையில் சுமுகமான ஒரு முடிவை ஏற்படுத்த கல்வி அதிகாரிகள் தவறி விட்டனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள பழைய மாணவிகள் சங்கம் போராட்டத்துக்குத் தயாராகி உள்ளது.
இன்று ஒரு வேலை நாள் கால அவகாசத்தை கல்வி அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள பழைய மாணவிகள், தீர்வு கிடைக்கவில்லை என்றால் நாளை முதல் கவனவீர்ப்புப் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பில் பழைய மாணவிகள் சங்கம், மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதில், "இந்தப் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்காது ஒதுக்கித் தள்ளிவிட்டனர்'' என்று கல்வி அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.
"ஏறத்தாழ மூன்று மாதங்களாக எமது பாடசாலையின் அதிபர் நியமனம் தொடர்பாக நிலவி வரும் குழப்ப நிலையினால் வேதனையுறுகின்றோம். பொறுப்பான பதவியில் இருக்கும் அலுவலர்கள் இவ்வாறு தமது கடமையைச் செய்யாதிருப்பது மிகவும் விரக்தியை ஏற்படுத்துகிறது.
இவர்களின் பொறுப்பற்ற தன்மை யாழ்ப்பாணத்தின் கல்வித் தராதர வீழ்ச்சிக்கும் பாடசாலைகளின் நிர்வாக ஒழுங்கீனத்துக்கும் அடிகோரும். இந்த நிலைமை இன்னும் 3 மாதங்களில் சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் கல்வியைப் பெரிதும் பாதிக்கும்'' என்று பழைய மாணவிகள் சங்கக் கடிதத்தில் காட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் கைது

 
04.09.2012.BY.rajah.அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முகவரை சந்திக்கச் சென்ற இலங்கை அகதி ஒருவரை தமிழக பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சியை சேர்ந்த நிரோஜன் (23) என தெரிவிக்கப்படுகிறது. இவர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்துள்ளார்.
இவர் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்வதற்காக, கரூரில் உள்ள முகவரை சந்திக்க கரூர் பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கியூ பிரிவு பொலிசார், நிரோஜனை பிடித்து விசாரித்ததில், மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்தவர் என தெரியவந்தது.
நிரோஜன் தற்போது மண்டபம், கியூ பிரிவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

இலங்கை சரக்கு கப்பல் தொடர்ந்தும் டேபன் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது!




 

04.09.2012.BY.rajah.டேபன் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை சரக்கு கப்பல் தொடர்ந்தும் அங்கு நங்கூரம் இடப்பட்ட நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கொடியுடனான இந்த கப்பல் தான்சானியாவைச் சேர்ந்த கப்பல் நிறுவனம் ஒன்றிற்கு விற்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து தென் ஆபிரிக்க கடல் பாதுகாப்பு அதிகார சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்படாத நிலையிலேயே கப்பலை தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர், எம்.வி. லங்கா மஹாப்பொல என்ற இந்த கப்பலில் பணியாற்றிய மாலுமிகள் தமக்கான 85 ஆயிரம் அமெரிக்க டொலர் வேதனத்தை வழங்க கப்பல் நிறுவனம் தவறிவிட்டதாக முறையிட்டனர்.

இவர்களது முறைப்பாடு குறித்த விசாரணையின் பின்னர், இவர்களுக்கான வேதனம் வழங்கப்பட்டு, அவர்கள் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

புதிதாக பணிக்கமர்த்தப்பட்ட கப்பல் பணியாளர்கள் கப்பலில் பணியாற்றுவதற்கான உரிய வசதிகள் இல்லை என தெரிவித்திருந்தனர்.

இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தென் ஆபிரிக்க கடல் பாதுகாப்பு அதிகார சபை, கப்பல் மாலுமிகளுக்கு சர்வதேச தரத்துடனான வசதிகள் இல்லை என தெரிவித்திருந்தனர்.

இதன் அடிப்படையிலேயே கப்பல் தொடர்ந்தும் டுபாய் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்தோனேசியாவில் தரித்துள்ள கப்பலில் இருந்து இலங்கை அகதிகள் வெளியேற மறுப்பு




 
 
04.09.2012.BY.rajah.மேற்கு இந்தோனேசியாவில் எரிபொருள் தீர்ந்தநிலையில் தரித்து நிற்கும் கப்பலில் இருந்து வெளியேற 53 இலங்கை அகதிகளும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
 
இந்தநிலையில் தமது கப்பலுக்கு எரிபொருளை நிரப்பித்தருமாறும் தாம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவேண்டும் என்றும் குறித்த அகதிகள் கோருவதாக இந்தோனேசிய பொலிஸ் கப்டன் அப்துராச்சமான் சுர்யாங்கேரா தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமாத்திரா தீவுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் வைத்து இந்தோனேசிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டது.

குறித்த கப்பலில் உள்ள அகதிகள் தமக்கு உணவு, எரிபொருள் மற்றும் நீரை பெற்றுக்கொள்வதற்காக தங்கம் மற்றும் நகைகளை கொடுப்பதற்கு தயாராக உள்ளதாக இந்தோனேசிய கடற்படையினருக்கு தகவல் கிடைத்தமையை அடுத்தே அவர்கள் அதனை இடைமறித்தனர்.

இதனையடுத்து, அந்தக்கப்பல் இந்தோனேசியாவின் மேற்கு துறைமுகம் ஒன்றுக்கு கொண்டு வரப்பட்டது. இதேவேளை 43 பேரைக்கொண்ட மற்றும் ஒரு இலங்கை அகதிகள் கப்பல் கடந்த வாரம் மென்டாவை என்ற பகுதியில் வைத்து இந்தோனேசிய கடற்படையினரால் காப்பாற்றப்பட்டது.

இதில் பயணித்தவர்கள் 9 நாட்களாக உணவு மற்றும் நீர் இன்றி தத்தளித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது

கிழக்கில் ஆளும்கட்சி தோல்வியைத் தழுவும்!- புலனாய்வுத்தகவல்

 
04.09.2012.BYrajah.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நிச்சயமாகத் தோல்வியைத் தழுவும் என்று அரசாங்கத்திற்கு புலனாய்வு அமைப்புகள் தகவல் வழங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் எதிர்கட்சிகளின் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளதாக அந்த புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பரப்புரைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் நிலையிலும் அதற்கடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும், ஐதேக ஆகியன இரண்டாம், மூன்றாம் இடங்களிலும் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி, கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளதாகவும் புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, கிழக்கு மாகாண நிலவரம் தொடர்பான இரகசியக் கலந்துரையாடல் ஒன்று, நேற்றிரவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் பொலன்னறுவவில் நடத்தப்படுவதற்கு ஏற்பாடாகியிருந்தாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மன்னார் முஸ்லிம் மீள்குடியேற்ற கிராமத்தில் தற்காலிக கொட்டில்கள் ஆயுததாரிகளால் தீ வைப்பு!

04.09.2012.BYrajah.
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மறிச்சுக்கட்டி மரைக்கார் தீவு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டில்கள் மற்றும் பொதுக் கட்டிடம் என்பனவற்றின் மீது நேற்று இரவு தீவைப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இதன் போது 7 தற்காலிக கொட்டில்களும், ஒரு பொது நோக்கு மண்டபமும் தீயில் எரிந்து சாம்பராகியுள்ளது. நேற்று இரவு 9.00 மணியளவில் இ்க்கிராமத்துக்குள் புகுந்த ஆயுதம் தறித்த கும்பல் சம்பவத்தை செய்ததாக அம்மக்கள் தெரிவித்தனர்.
இரவு வேளையில் வந்த ஆயுத தாரிகள் பல கொட்டில்களை அகற்றி வாகனத்தில் ஏற்றிதாகவும், பி்ன்னார் குடிசைகள் சிலவற்றிக்கு தீ வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற போது ஆயுததாரிகளிடம் அதனை செய்ய வேண்டாம் என்றும் தாங்கள் குடிப்பதற்கு வைக்கப்பட்டுள்ள தண்ணீரையாவது எடுத்துக் கொள்வதற்கான அனுமதியினை தாருங்கள் என்று மன்றாட்டமாக கேட்ட போது ஆயுததாரிகள் அனுமதியளிக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
தீ வைப்பு சம்பவம் இடம் பெற்றினைதையடுத்து, அப்பிரதேச மக்கள் இரவினை கழிப்பதற்கு கூட நாதியற்ற நிலையில் இருந்ததாக வயோதிபர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது இக்கிராமத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிலாவத்துறை காவற்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கேள்வியுற்றதும், அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் உடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையினை எடுத்துவருவதாக தெரியவருகின்றது.
இதே வேளை இ்ந்த சம்பவம் குறித்து முல்லிக்குளம் கடற்படைத்தள பிரதம அதிகாரியுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் நீண்ட பேசியுள்ளதாக பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன

மன்னாரிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற பலரது நிலை தெரியவில்லை

04.08.2012.BYrajah.
மன்னார் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியா சென்ற பலரது நிலை இதுவரை என்னவென்று தெரியாதமையால் அவர்களுடைய குடும்பங்களும் உறவினர்களும் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் அவுஸ்திரேலியா செல்வதாகக் கூறிப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்களில் பலர்அவுஸ்திரேலியா சென்றடைந்த நிலையில் தமது குடும்பத்தாருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆனால் பெரும்பாலானோர் இதுவரை எந்தவிதத் தொடர்புகளும் இன்றி இருப்பதாக அவர்களது உறவினர்களும், குடும்பத்தினரும் அச்சம் வெளியிட்டுள்ளனர். பலர் கடலில் வைத்துக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 2 – அறிமுகம் – வீடியோ

04.09.2012.BY.rajah.ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5 ஐ செப்டம்பரில் வெளியிடுவது என அறிவித்தது முதல்
கூகிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் ஆப்பிள் தயாரிப்புக்களின் விற்பனையை முறியடிக்க முயற்சித்து வருகின்றன.
முன்னர் கூகிள் அதன் நெக்சஸ்-7 டேப்லட்டை google.com இன் முகப்பில் விளம்பரத்தை வெளியிட்டு விற்பனையை தொடங்கி ஆச்சரியமளித்தது.
இதே போல் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் வெற்றிகரமாக விற்பனையானதைத் தொடர்ந்து அதன் 2வது பதிப்பை வெளியிட்டுள்ளது.
கேலக்ஸி நோட் 2 வீடியோ விளக்கம் இங்கே…