siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

இந்தோனேசியாவில் தரித்துள்ள கப்பலில் இருந்து இலங்கை அகதிகள் வெளியேற மறுப்பு




 
 
04.09.2012.BY.rajah.மேற்கு இந்தோனேசியாவில் எரிபொருள் தீர்ந்தநிலையில் தரித்து நிற்கும் கப்பலில் இருந்து வெளியேற 53 இலங்கை அகதிகளும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
 
இந்தநிலையில் தமது கப்பலுக்கு எரிபொருளை நிரப்பித்தருமாறும் தாம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவேண்டும் என்றும் குறித்த அகதிகள் கோருவதாக இந்தோனேசிய பொலிஸ் கப்டன் அப்துராச்சமான் சுர்யாங்கேரா தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமாத்திரா தீவுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் வைத்து இந்தோனேசிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டது.

குறித்த கப்பலில் உள்ள அகதிகள் தமக்கு உணவு, எரிபொருள் மற்றும் நீரை பெற்றுக்கொள்வதற்காக தங்கம் மற்றும் நகைகளை கொடுப்பதற்கு தயாராக உள்ளதாக இந்தோனேசிய கடற்படையினருக்கு தகவல் கிடைத்தமையை அடுத்தே அவர்கள் அதனை இடைமறித்தனர்.

இதனையடுத்து, அந்தக்கப்பல் இந்தோனேசியாவின் மேற்கு துறைமுகம் ஒன்றுக்கு கொண்டு வரப்பட்டது. இதேவேளை 43 பேரைக்கொண்ட மற்றும் ஒரு இலங்கை அகதிகள் கப்பல் கடந்த வாரம் மென்டாவை என்ற பகுதியில் வைத்து இந்தோனேசிய கடற்படையினரால் காப்பாற்றப்பட்டது.

இதில் பயணித்தவர்கள் 9 நாட்களாக உணவு மற்றும் நீர் இன்றி தத்தளித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது