04.09.2012.BYrajah.செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்' படத்திற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்றிருந்த ஆர்யா சென்னை திரும்பியுள்ளார்.
ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் படம் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தன்னுடைய படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியிருக்கிறார் ஆர்யா.
இந்த விடயம் விஷ்ணுவர்தனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில் அஜித்- விஷ்ணுவர்தன் இணையும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்ற போது ஆர்யா சம்பந்தப்பட்ட சில காட்சிகளை படமாக்கினார்கள்.
அதற்கு பிறகு ஆர்யா இரண்டாம் உலகம் படத்திற்காக ஜார்ஜியா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆர்யா திரும்பி இருப்பதால், சென்னையில் அஜீத்- ஆர்யா சம்பந்தப்பட்ட இதர காட்சிகளை காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் விஷ்ணுவர்தன்.
அதுமட்டுமன்றி ஆர்யா- டாப்ஸி சம்பந்தப்பட்ட காட்சிகளையும் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்.
இப்படத்தின் பெயர் 'ஜெய்தேவ்', 'சுராங்கனி' என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் போஸ்டர்கள் எதுவுமே அதிகாரபூர்வமானது இல்லையாம்.
விரைவில் படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் விஷ்ணுவர்தன். இதற்கான புகைப்பட படப்பிடிப்புகள் விரைவில் நடைபெற இருக்கிறது