siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

முற்றுகிறது வேம்படி அதிபர் பிரச்சினை ஒரே நாளுக்குள் தீர்வு வேண்டும் இன்றேல் வெடிக்கும் போராட்டம் பழைய மாணவிகள் போர்க் கொடி

04.09.2012.BY.rajah.யாழ். குடாநாட்டின் புகழ் பூத்த பெண்கள் பாடசாலையான வேம்படி மகளிர் கல்லூரியில் நிரந்தர அதிபரை நியமிக்கும் பிரச்சினை முற்றி வெடித்துள்ளது. இந்தப் பிரச்சினையில் சுமுகமான ஒரு முடிவை ஏற்படுத்த கல்வி அதிகாரிகள் தவறி விட்டனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள பழைய மாணவிகள் சங்கம் போராட்டத்துக்குத் தயாராகி உள்ளது.
இன்று ஒரு வேலை நாள் கால அவகாசத்தை கல்வி அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள பழைய மாணவிகள், தீர்வு கிடைக்கவில்லை என்றால் நாளை முதல் கவனவீர்ப்புப் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பில் பழைய மாணவிகள் சங்கம், மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதில், "இந்தப் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்காது ஒதுக்கித் தள்ளிவிட்டனர்'' என்று கல்வி அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.
"ஏறத்தாழ மூன்று மாதங்களாக எமது பாடசாலையின் அதிபர் நியமனம் தொடர்பாக நிலவி வரும் குழப்ப நிலையினால் வேதனையுறுகின்றோம். பொறுப்பான பதவியில் இருக்கும் அலுவலர்கள் இவ்வாறு தமது கடமையைச் செய்யாதிருப்பது மிகவும் விரக்தியை ஏற்படுத்துகிறது.
இவர்களின் பொறுப்பற்ற தன்மை யாழ்ப்பாணத்தின் கல்வித் தராதர வீழ்ச்சிக்கும் பாடசாலைகளின் நிர்வாக ஒழுங்கீனத்துக்கும் அடிகோரும். இந்த நிலைமை இன்னும் 3 மாதங்களில் சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் கல்வியைப் பெரிதும் பாதிக்கும்'' என்று பழைய மாணவிகள் சங்கக் கடிதத்தில் காட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது