siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

கிழக்கில் ஆளும்கட்சி தோல்வியைத் தழுவும்!- புலனாய்வுத்தகவல்

 
04.09.2012.BYrajah.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நிச்சயமாகத் தோல்வியைத் தழுவும் என்று அரசாங்கத்திற்கு புலனாய்வு அமைப்புகள் தகவல் வழங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் எதிர்கட்சிகளின் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளதாக அந்த புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பரப்புரைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் நிலையிலும் அதற்கடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும், ஐதேக ஆகியன இரண்டாம், மூன்றாம் இடங்களிலும் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி, கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளதாகவும் புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, கிழக்கு மாகாண நிலவரம் தொடர்பான இரகசியக் கலந்துரையாடல் ஒன்று, நேற்றிரவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் பொலன்னறுவவில் நடத்தப்படுவதற்கு ஏற்பாடாகியிருந்தாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.