04.09.2012.BYrajah.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் படம் விறுவிறுவென வளர்ந்து வருகின்றது.
ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையானை கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையிடுகிறார்.
தீபிகா படுகோனை நாயகியாக நடிக்க ஆதி, நாசர், சரத்குமாருக்கு முக்கிய வேடங்கள் தரப்பட்டிருக்கின்றன.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி நடிக்கிறார் என்பது சிறப்பம்சம்.
லண்டன் டெஸ்ட்ராய்டு ஸ்டுடியோ, கேரளா திருவனந்தபுரத்தில் இருக்கும் அக்ஸல் ஸ்டுடியோவில் ரஜினி, தீபிகா படுகோன் தொடர்பான காட்சிகளை படம் பிடித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து 'டைட்டானிக்' படத்துக்கு பணியாற்றிய 3டி தொழில்நுட்ப கலைஞர்கள் 3 பேர் சென்னை வந்துள்ளனர்.
இப்போது கோச்சடையான் படத்துக்கான கிராஃபிக்ஸ் வேலையில் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.
எந்திரன் இசைவெளியீட்டு விழாவை சிங்கப்பூரில் நடத்தியது போல கோச்சடையான் இசை வெளியீட்டை ஒக்ரோபரில் ஜப்பானில் நடத்துகிறார்கள்.
இதற்காக ரஜினி ஜப்பானிய மொழி கற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.