|
கவிதை என்றொரு ஊடகமாம் - அது
களைகள் அனைத்தும் களைந்திடுமாம்.
சிந்தனை சிந்திடும் சான்றோரின் - உயர்
சிந்தைகள் யாவும் சுமந்திடுமாம்.
அரும்பென கற்பனை பூத்திடுமாம் - கட்டிக்
கரும்பென கலைச்சொல் இனித்திடுமாம்.
விருந்தென இதனை படித்திட்டால் - மேலும்
அறுந்திடும் ஆசை பிறந்திடுமாம்.
சாதிக் கொடுமையை சாடிடுமாம் - உயர்
நீதிக்கு தொள்தனை தந்திடுமாம்.
கருவகம் ஆகிடும் உருவகமாய் - அந்த
உருவகம் ஆகிடும் உயிரகமாய்.
அணிநயம் ஆகிடும் அணிகலனாய் - அந்த
அணிகலன் எய்திடும் நனிபயனாய்.
உலகில் இதுபோல் கலையுண்டோ - உடன்
உரைத்திட வாரீர் உயர்ந்தோரே .....
உன்னில் தொலைந்தது,
ஒரு கண்சிமிட்டலால்தான்,
அந்த கண்சிமிட்டும்,
நேரத்தில்தான்,
என் உலகம்,
நனைத்து போகிறது.
ஒரு மழை சாரலை போல
ஒரு கண்சிமிட்டலால்தான்,
அந்த கண்சிமிட்டும்,
நேரத்தில்தான்,
என் உலகம்,
நனைத்து போகிறது.
ஒரு மழை சாரலை போல