04.09.2012.BY.rajah.தமிழில் உருவாகும் புதுவை மாநகரம் படத்தில் கிரண் ஒரு பாட்டிற்கு குத்தாட்டம் ஆடியுள்ளார்.
நடிகை கிரண் மறுபடியும் கொலிவுட்டில் கால் பதிக்க உள்ளார்.
புதுவை மாநகரம் படத்தில் வரும் பாடல் ஒன்றிற்கு ஆட்டம் போட கிரணுக்கு படத்தின் தயாரிப்பாளர் அன்பான கோரிக்கை விடுத்தார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த கிரண், கூடவே சம்பளத்தையும் மிகவும் உயர்த்தி கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர், இப்பாடலில் நடித்தால் மறுபடியும் தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கு கிரண், தங்கத்திற்கு என்றுமே மதிப்பு குறையாது. அது கழுத்தில் கிடந்தாலும் சரி, வீட்டில் பூட்டி வைத்தாலும் சரி தங்கம் தங்கம்தான்.
அதுபோலத்தான் நானும் என்று கிரண் பதிலளிக்க தயாரிப்பாளர் அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்து இப்படத்தில் ஆட வைத்திருக்கிறார்