siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

இலங்கை சரக்கு கப்பல் தொடர்ந்தும் டேபன் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது!




 

04.09.2012.BY.rajah.டேபன் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை சரக்கு கப்பல் தொடர்ந்தும் அங்கு நங்கூரம் இடப்பட்ட நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கொடியுடனான இந்த கப்பல் தான்சானியாவைச் சேர்ந்த கப்பல் நிறுவனம் ஒன்றிற்கு விற்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து தென் ஆபிரிக்க கடல் பாதுகாப்பு அதிகார சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்படாத நிலையிலேயே கப்பலை தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர், எம்.வி. லங்கா மஹாப்பொல என்ற இந்த கப்பலில் பணியாற்றிய மாலுமிகள் தமக்கான 85 ஆயிரம் அமெரிக்க டொலர் வேதனத்தை வழங்க கப்பல் நிறுவனம் தவறிவிட்டதாக முறையிட்டனர்.

இவர்களது முறைப்பாடு குறித்த விசாரணையின் பின்னர், இவர்களுக்கான வேதனம் வழங்கப்பட்டு, அவர்கள் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

புதிதாக பணிக்கமர்த்தப்பட்ட கப்பல் பணியாளர்கள் கப்பலில் பணியாற்றுவதற்கான உரிய வசதிகள் இல்லை என தெரிவித்திருந்தனர்.

இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தென் ஆபிரிக்க கடல் பாதுகாப்பு அதிகார சபை, கப்பல் மாலுமிகளுக்கு சர்வதேச தரத்துடனான வசதிகள் இல்லை என தெரிவித்திருந்தனர்.

இதன் அடிப்படையிலேயே கப்பல் தொடர்ந்தும் டுபாய் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன