siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

கலக்கலான கொமெடி படத்தில் விவேக்-சோனியா அகர்வால் ஜோடி

30.09.2012.By.Rajah,கொலிவுட்டில் விரைவில் வெளியாக உள்ள த்ரில்லர் படமான 'சௌந்தர்யா'வை இயக்கியவர் சந்திரமோகன்.
இவர் தற்போது ஏ.பி.சி.ட்ரீம்ஸ் எண்டர்டெயினர்ஸ் சார்பில் 'பாலக்காட்டு மாதவன்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இதில் கொலிவுட்டின் நட்சத்திர கொமெடியன் விவேக், நடிகை சோனியா அகர்வாலுடன் இணைந்து நடித்துள்ளார்.
இது குறித்து சந்திரமோகன் கூறுகையில், கதையின் நாயகனாக கலக்கல் கதாபாத்திரத்தில் விவேக் ரசிகர்களை சிரிக்க வைக்கப்போகிறார்.
கதையின் நாயகியாக நடித்துள்ள சோனியா அகர்வாலுக்கு இப்படம் திருப்புமுனையாக அமையும்.
தமிழ் சினிமாவின் திரைக்கதை திலகம் கே.பாக்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
அவரின் ஆலோசனையில் படத்தின் திரைக்கதை மேலும் சுவாரஸ்யமாகி வலிமை பெற்றுள்ளது.
மலையாள பட உலகின் பழம்பெரும் நடிகை 'செம்மீன்' ஷீலா, இப்படத்தின் கதையை கேட்டு சிரித்து, சிரித்து கண்கலங்கினார் என்றும் மலையாள படங்களுக்கு இசையமைத்த அஜம்ல் அஜீஸ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார் எனவும் கூறியுள்ளார்

நான் கவர்ச்சியா நடிக்கக் கூடாதா? விஜயலட்சுமி

30.09.2012.By.Rajah.கொலிவுட்டில் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் நடிகை விஜயலட்சுமி.
இவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். தற்போதும் வெளியாகவுள்ள வனயுத்தம் படத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடித்துள்ளார்.
அடுத்து வர இருப்பது தமிழ் படம் எடுத்த சி.எஸ்.அமுதனின் ரெண்டாவது படம்.
இதில் விஜயலட்சுமி படு கவர்ச்சியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் கூறுகையில், படத்துல எனக்கு நெகட்டிவ் கேரக்டர். எதையும் தூசு மாதிரி பார்க்குற பொண்ணு. எவ்வளவு திமிரா நடிக்க முடியுமோ, அவ்வளவு திமிரா நடிச்சிருக்கேன்.
எத்தனை படத்துலதான் குடும்ப குத்துவிளக்காக நடிச்சிட்டிருக்க முடியும். அதான் கிளாமரா நடிச்சிருக்கேன்.
ஏன் நான் கவர்ச்சியா நடிக்க கூடாதா என்ன? வனயுத்தம் பார்த்துட்டு ரெண்டாவது படம் பார்த்தீங்கன்னா கொஞ்சம் ஷாக்காத்தான் இருக்கும் என்கிறார்

ஆதிபகவன் படப்பிடிப்பு முடிந்தது: ஜெயம் ரவி மகிழ்ச்சி

30.09.2012.By.Rajah.அமீர் இயக்கி வரும் ஆதிபகவன் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி இசை சேர்ப்பு மற்றும் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக ஆதிபகவனுக்காக விதவிதமான கெட்-அப்புகளை போட்டு அதை மறைத்து வாழ்ந்து வந்த ரவி இப்போது நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ஆதிபகவன்ல ஒப்பந்தம் ஆகுறப்பவே இவ்ளோ காலம் ஆகும்னு எனக்குத் தெரியும்.
கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் பரவாயில்லையான்னு அமீர் சார் ஆரம்பத்திலேயே சொல்லிட்டார்.
ஏன்னா இது நிழல் உலக தாதாக்களோட கதை. படப்பிடிப்பு நடந்தப்போ கஷ்டமாத்தான் இருந்திச்சு.
அமீர் சார் அவர் நினைக்கிறது நம்மகிட்டேருந்து வர்ற வரைக்கும் விடமாட்டார்.
ஒரு சின்ன ஷாட்டுக்கு ஒரு நாள் வரைக்கும்கூட மெனக்கெடுவார். என்னடா நல்லா மாட்டிக்கிட்டோமேன்னு சில நேரங்கள்ல யோசிச்சிருக்கேன்.
ஆனா இப்போ படத்தை பார்க்குறப்போ அவ்ளோ சந்தோஷமா இருக்கு.
ரவி உங்களுக்கு பெரிய ஹிட் கொடுக்குறேன்னு அவரும் சொல்லியிருக்கார் என்றும் அது நடக்கும்னு நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார்


 
 

அனுஷ்காவின் பெரிய மனசு

30.09.2012.By.Rsajah.நடிகை அனுஷ்கா, நடிப்பதோடு மட்டும் நில்லாமல் தன்னுடன் உள்ளவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்.
தன் உதவியாளராக இருக்கும் திருநங்கைக்கு(வானம்) தான் நடிக்கும் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களைக் கொடுக்குமாறு இயக்குனரிடம் பரிந்துரை செய்கிறார்.
இரண்டாம் உலகம் படப்பிடிப்பில் சக நடிகர், நடிகைகளுக்கு யோகா கற்றுத் தந்தார்.
தெலுங்கில் நடிகை அமலா பாலுக்கு வாய்ப்பு வாங்கி தருகிறார். இது தவிர தற்போது புதிய விடயம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது தனக்கு நீண்ட காலமாக கார் ஓட்டியவருக்கு ஒரு காரைப் பரிசளித்துள்ளாராம்.
என்ன தான் நீண்ட காலமாக வாகன ஓட்டுநராக இருந்தாலும் யாரும் காரை பரிசளிப்பதில்லை. ஆனால் அனுஷ்கா இவ்வாறு செய்தமை அவருடைய நன்மதிப்பை திரையுலகில் சற்றே உயர்த்தியிருக்கிறது.
தற்போது இரண்டாம் உலகம், அலெக்ஸ் பாண்டியன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

வித்யாபாலனுக்கு பூனை என்றாலே அலர்ஜியாம்

30.09.2012.By.Rajah.கமெரா முன்பு கவர்ச்சி காட்டவே பயம் கொள்ளாத பாலிவுட் நடிகை வித்யா பாலனுக்கு பூனை என்றாலே அலர்ஜியாம்.மறைந்த நடிகை சில்க் கதாப்பாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்றவர் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.
இதன் மூலம் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
படப்பிடிப்புகளில் மிகவும் தைரியமாக நடந்து கொள்ளும் வித்யாவுக்கு பூனைகள் என்றால் அலர்ஜியாம்.
ஒரு தடவை கமலிஸ்தான் ஸ்டியோவில் நடந்த படப்பிடிப்பிற்காக வந்திருந்தார் வித்யா பாலன்.
பரபரப்பான படப்பிடிப்புக்கு மத்தியில் உணவு இடைவேளை வந்தது.
அப்போது தனக்குரிய கேரவனுக்குள் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது சில பூனைகள் உள்ளே நுழைய, மிகவும் சப்தமிட்டுள்ளார் வித்யா பாலன்.
உடனே படக்குழுவினர் விரைந்து கேரவனை திறந்து பூனைகளை விரட்டியுள்ளனர்

பிறந்து, 20 நாட்களேயான பெண் குழந்தை விற்க முயற்சி. தாய், புரோக்கர்அதிரடி கைது


Sunday30,September2012.By.Rajah.பிறந்து, 20 நாட்களேயான பெண் குழந்தையை, 5,000 ரூபாய்க்கு விற்க முயன்ற தாய் மற்றும் புரோக்கரை போலீஸார் கைது செய்தனர்.திருச்சி உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். கார் டிரைவர். இவரது மனைவி கலைவாணி, 20. கலைவாணி, கர்ப்பமாக இருந்த போது அவரது கணவர் பிரிந்து சென்று விட்டார்.கடந்த, 20 நாட்களுக்கு முன், கலைவாணிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. கணவர், உறவினர்கள் துணை இல்லாததால், குழந்தையை வளர்க்க முடியாமல் கலைவாணி கஷ்டப்பட்டார்.முதலியார்சத்திரம் நடுத்தெருவைச் சேர்ந்த ராஜூ மனைவி பானு, 27விடம், கலைவாணி தன் நிலையை கூறினார். "குழந்தையை யாரிடமாவது விற்றுவிடலாம்' என, பானு ஆலோசனை கொடுத்தார்.

பீமநகர் கோரிமேடு கூனிபஜாரைச் சேர்ந்தவர் பரமசிவம்- முத்துலட்சுமி தம்பதியருக்கு, மூன்று மகன்கள். பெண் குழந்தை இல்லாததால், பானு, கலைவாணியின் பெண் குழந்தையை, முத்துலட்சுமியிடம் கொண்டு போய் கொடுத்தார்.முத்துலட்சுமிக்கும், அவரது மகன்களுக்கும், குழந்தையை பிடித்திருந்தது. குழந்தையை வளர்க்கும் எண்ணத்துடன் இருந்த முத்துலட்சுமியிடம், பானு, 5,000 ரூபாய் கேட்டார். அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி, பாலக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.பாலக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து, பெண் குழந்தையை பணத்துக்கு விற்க முயன்ற பானு, குழந்தையின் தாய் கலைவாணி ஆகியோரை கைது செய்தனர்.திருச்சி அரசு மருத்துவனையில் உள்ள, அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தையை ஒப்படைத்தனர்.

சனி, 29 செப்டம்பர், 2012

அநாதைகள் போல விடப்பட்டுள்ளோம்

29.09.2012.By.Rajah. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை முல்லைத்தீவு அரச அதிபர் கூறுவது பொய் சூரியபுரம் காட்டில் உள்ள மக்கள் குமுறல்அநாதைகள் போல காட்டுப் பகுதிக்குள் சுடலைக்குள் தள்ளிவிட்டு இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. அவ்வாறு இருக்கும் போது அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் கூறியிருப்பது வேதனைக் குரியது. அவர் கூறுவதில் உண்மை இல்லை.
இவ்வாறு தமது உளக் குமுறலை வெளியிட்டுள் ளனர் சூரியபுரம் காட்டுப் பகுதியில் தங்கவைக்கப் பட்டுள்ள மக்கள். மனிக்பாம் நலன்புரி நிலையத்திலிருந்து அழைத்து வரப்பட்டு கேப்பாபிலவுக் கிராமத்தைச் சேர்ந்த 110 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் சூரியபுரம் காட்டுப்பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் இந்த மக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் முல்லைத்தீவு அரச அதிபர் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக சூரிய புரம் பகுதியிலுள்ள மக்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் தமது ஆதங்கத்தை வெளியிட்டனர். சூரியபுரத்தில் தங்கியுள்ள குடும்பஸ்தர் ஒருவர் இது குறித்து தெரிவித்ததாவது
முகாமிலிருந்து எங்களை மந்தைகள் போல் ஏற்றிவந்து இந்த காட்டுப் பகுதியில் அநாதரவாக விட்டுள்ளனர். எமக்கு தற்காலிக வீடுகள் அமைப்பதற்கு தடி தண்டுகளோ ஏனைய வசதிகளோ வழங்கப்படவில்லை.
முகாமில் இருந்து கொண்டு வந்த தடிகளைப் பயன்படுத்தி தறப்பாள்களை கட்டி அதற்குள் பலத்த சிரமத்தின் மத்தியில் வாழ்கின்றோம்.
மின்சாரம் இல்லை. அதேவேளை விளக்குகளும் இல்லை. வெறும் மண்ணெண்ணெய் மட்டும் வழங்குகின்றனர். இதனை வைத்து நாம் என்ன செய்வது. குடிதண்ணீர் வசதியில்லை. மலசலகூட வசதி செய்து தரப்படவில்லை. இளம் பெண்கள் ஊட்பட இயற்கைக் கடன்களைக் கழிப்தற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
தற்போது பெய்து வரும் மழையால் உடமைகள் நனைந்து விடுகின்றன. நாம் இங்கு கொண்டு வந்துவிடப்பட்டு நான்கு நாள்கள் கடந்த நிலையிலும் எந்த ஒரு அரச அதிகாரிகளும் எம்மை வந்து பார்க்கவில்லை. இவ்வாறு இருக்கையில் எமக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது வேடிக்கையானது என்றனர்.
இது தொடர்பாக அங்குள்ள இளம் குடும்பப் பெண் ஒருவர் தெரிவிக்கையில்
நாம் காட்டுப் பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்கின்றோம். எனது வீட்டுக்குப் பின்புறம் பெரும் காடு. அப் பகுதியில் இரவு பகல் என்று பாராது இராணுவத்தினர் வந்த வண்ணம் உள்ளனர்.
தனிமையில் இருக்க முடியவில்லை. அடிக்கடி இராணுவப் புலனாய்வாளர்கள் சுற்றிச் சுற்றி வருகின்றனர். எமது வீடுகள் தூரத் தூர இருப்பதால் தனிமையில் இருக்கும் போது எனன் நடைபெறுமோ தெரியாது அச்சமாக உள்ளது. இதேவேளை ஒழுங்கான வீடு இல்லாத காரணத்தால் வீட்டுப் பொருள்களைப் பாதுகாக்க முடியாதுள்ளது. என்றார்

அரசியல் தீர்வு ஒன்றை எட்ட தமிழருக்கு சர்வதேச ஆதரவு; அரசு இனியும் தட்டிக் கழிக்க முடியாது என்கிறார் சம்பந்தன்

29.09.2012.By.Rajah.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதன் முறையாக மாகாண சபைக்கு வந்திருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு நிலையான அரசியல் தீர்வை எட்டுவ தற்காக சர்வதேசத்தின் ஆதரவும் பங் களிப்பும் எமக்குக் கிடைத்திருக்கிறது. ஆகவே தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டிய தேவை இப்போது அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அதில் சர்வதேச மும் உறுதியாக உள்ளது. நீதியை நியாயத்தை உருவாக்காமல் அரசு இனியும் தட்டிக் கழிக்க முடியாது. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
கிழக்குமாகாண சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம் நேற்றுத் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சபைக்குத் தெரிவான 11 உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் தலைமை உரை நிகழ்த்துகையிலேயே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவித்தவை வருமாறு:
நாம் ஒரு தனித் தேசிய இனம். எமக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கின்றது. நாம் சரித்திர ரீதியாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வந்திருக்கின்றோம். எம்முடன் இஸ்லாமிய சகோதரர்களும் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். இன்றும் நாம் பெரும்பான்மையுடன்தான் இருக்கின்றோம்.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இந்நிகழ்வை நான் கருதுகின்றேன். இம்முறை நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டோம். நாங்கள் மாகாணசபையை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
தவறானவர்களின் கையில் மாகாணசபை நிர்வாகம் இருக்கக்கூடாது. கடந்தமுறை போன்ற நிலைமை தமிழ் மக்களுக்கு இம்முறையும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டோம்.
ஆட்சி அமைக்கக்கூடிய அதிகாரம் கிடைக்கவில்லையென்றாலும் மாகாணசபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட 12 தமிழ் உறுப்பினர்களில் 11 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தெரிவுசெய்யப்பட்டிருப்பரென்பது சாதாரண விடயமோ அல்லது இலகுவான விடயமோ அல்ல.
கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் நிற்கின்றார்கள். கொள்கை ரீதியாக தமிழ் மக்கள் இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். முழுமையான வெற்றியைப் பெறுவதற்கு இன்னும் 6 ஆயிரம் வாக்குகளே தேவைப்பட்டன. அதை 3 மாவட்டத்திலிருந்தும் பெற்றிருக்கலாம். ஆனால், மக்கள் முழுமையான பங்களிப்பைச் செய்தார்கள். எமது மக்களுடைய ஜனநாயகத் தீர்ப்பை அரசும், உலக நாடுகளும் மதிப்பளிக்க வேண்டியிருக்கின்றது.
எமது மக்களுடைய தீர்ப்பைப் புறந்தள்ள முடியாது. தெரிவுசெய்யப்பட்ட 11 பேரும் நிதானமாகச் செயற்படவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு அரசு பல முயற்சிகளைச் செய்தது. ஆனால், அது பலிக்கவில்லை. ஏனைய அரசியல் கட்சிகளை அவர்கள் உடைத்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எவராலும் உடைக்கமுடியாது. நாங்கள் ஒற்றுமையாக எமது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு இணங்க செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டில் சர்வதேசம் எங்களை அங்கீகரித்துள்ளது. தமிழ் மக்களின் நம்பிக்கையின் பிரதிநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அரசின் பல்வேறு திட்டங்களால் எமது இனப் பரம்பல் சிதைக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் குடிப்பரம்பலை இனப் பரம்பலை செய்யக்கூடாது என்று கேட்கின்றோம். இந்நிலையால்தான் எங்களது கலாசாரம் சிதைக்கப்படுகின்றது. எமது பிரதிநிதித்துவம் குறைவடைகின்றது. நாம் அரசியல் தீர்வில் உறுதியாக இருக்கின்றோம்.
நாடு பிரிக்கப்படவேண்டும் என்று கேட்கவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுதந்திரமாக நிம்மதியாக சொந்த இடத்தில் உரிமையுடன் வாழவேண்டும் என்ற உறுதியான முடிவை எமது மக்கள் கூறியிருக்கின்றார்கள். அரசுடன் நாம் ஒத்துழைத்துச் செயற்படத் தயாராக இருக்கின்றோம். எமது மக்களுடைய உரிமைகள் தட்டிக்கழிக்கப்படுமாயின், சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பிக்க நாம் ஒருபோதும் பின்நிற்கமாட்டோம் என்றார்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபை, பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்

நீதானே என் பொன்வசந்தம்:

என்னோட வா வா பாடல் வரிகள் தமிழில்.29.09.2012.By.Rajah.
நீதானே என் பொன்வசந்தம் திரைப்பட பாடல் என்னோட வா வா வரிகள் தமிழில். நீதானே என் பொன்வசந்தம் திரைப்பட பாடல் வரிகள் தமிழில்

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
நீ என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் தண்டிக்கவும் உன்னக்கு உரிமை இல்லையா?
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்
கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்கி
நீ சாய்வதும் என்னை கொஞ்சம் பார்க்கதானடி
கண்ணை மூடி தூங்குவதை போல்
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கதானடி
இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும்
தீயாக பார்காதடி….
சின்ன பிள்ளை போல நீ அடம்பிடிப்பதென்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களைத்தான் எண்ணி சொல்ல
கேட்டு கொண்டால் கழுகும் பயந்து நடுங்கும்
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்
காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்
சின்ன சின்ன தலைகணமே
காதல் அதை பொறுக்கண்ணுமே இல்லையெனில்
கட்டி வைத்து உதைகணுமே
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டும்மடி
மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போனபோதும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் தண்டிக்கவும் உன்னக்கு உரிமை இல்லையா?
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

நகைச்சுவை வீடியோ (Funny Video)

29.09.2012.By.Rajah.உலகப்புகழ் பெற்ற நகைச்சுவை இடைவிடாமல் சிரிப்பதற்காக உலகப்புகழ் பெற்ற நகைச்சுவை</