siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

நீரில் மூழ்கியது காலி!காற்றுடன் கூடிய மழை எச்சரிக்கை!

         
Sunday 28 October 2012.By.Rajah.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த குறைந்த தாழமுக்கமானது தற்போது வலுவடைந்துதாழமுக்கமாக மாறியுள்ளதாக திணைக்களத்தின் கடமைநேர வானிலை நிபுணர் எஸ்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய வானிலையை அடுத்து காலி நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
காலி சங்கமித்த பாடசாலைக்கு அருகிலுள்ள வீதி நீரில் மூழ்கியுள்ளமையினால் போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபில தெரிவித்துள்ளார்.
கராபிட்டி பகுதியின் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
எச்சரிக்கை! வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
யாழ். கிழக்கு கடற்பரப்பில் 600 கடல் மைல் தொலைவில் வங்காள விரிகுடாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திடீர் தாழமுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தினால் காற்றின் வேகம் அதிகரித்திருக்மென்றும் கடல் அலைகளின் வேகம் அதிகரித்திருக்குமென்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், மேற்குறிப்பிட்ட 3 மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது

கொலை செய்தது குடும்ப நண்பரே..அதிர்ச்சி தகவல். ?

         
Sunday 28 October 2012  By.Rajah.
 அமெரிக்காவில் கடத்தப்பட்ட 10 மாத பெண் குழந்தையின் சடலம், அபார்ட்மென்ட் தரை தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குடுமுலகுண்டலா கிராமத்தில் வசிப்பவர் வேலுகொண்டா. இவரது மனைவி சத்யவதி (61). இவர்களுடைய மகன்கள் சிவா, கிருஷ்ணா. இவர்கள் இருவரும் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக உள்ளனர். பென்சில்வேனியா மாநிலம் கிங் ஆப் புரூசியா பகுதியில் சிவா வசிக்கிறார். இவரது மனைவி லதா. இவரும் சாப்ட்வேர் இன்ஜினியர். இருவரும் வேலைக்கு செல்வதால், இவர்களது 10 மாத பெண் குழந்தை சானி வென்னாவை பாட்டி சத்யவதி கவனித்து வந்தார். கடந்த திங்கட்கிழமை வீட்டில் பேத்தியுடன் இருந்தார் சத்யவதி.

அப்போது வீட்டுக்குள் நுழைந்த 3 மர்ம ஆசாமிகள், சத்யவதியை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொன்று விட்டு குழந்தையை கடத்தி சென்றனர். தகவல் அறிந்து எப்.பி.ஐ. புலனாய்வு ஏஜென்சி மற்றும் போலீசார் குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில் குழந்தையை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.16 லட்சம் பரிசு அளிப்பதாக வட அமெரிக்க தெலுகு சங்கத்தினரும் போலீசாரும் அறிவித்தனர். இந்நிலையில், 10 மாத பெண் குழந்தை சானி வென்னாவின் சடலம், கிங் ஆப் புரூசியாவில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் பேஸ்மென்ட்டில் கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து பிலடெல்பியா போலீசார் கூறுகையில், பாட்டி, குழந்தை கொலை தொடர்பாக குடும்ப நண்பர் ரகுநாதன் எண்டமூரி என்பவரை கைது செய்துள்ளோம். குழந்தையை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதற்கான ஆதாரங்களை கைப்பற்றி உள்ளோம். இவர் மீது கொலை, கடத்தல், கொள்ளை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம் என்றனர். அமெரிக்காவில் இரட்டை கொலை நடந்துள்ளது அங்குள்ள இந்தியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது

கே.பியின் திரைமறைவுக் கும்பல் அம்பலம்! ?

         
Sunday 28 October 2012  By.Rajah.
இரகசிய ஈமெயில் ஒன்று அம்பலமானதால், பல விடையங்கள் வெளியாகியுள்ளதாக ஆங்கிலப் ஊடகமான கார்டியன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் சில புலம்பெயர் தமிழர்களை அழைத்து தாம் சமரசம் பேசவிருப்பதாக இலங்கை அரசு அறிவித்தது. இதனை மகிந்தவே நடத்துவார் என்றும் அது தம்பட்டம் அடித்தது.
இதனை அடுத்து பிரித்தானியா கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகள், தாமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என வெளிப்படையாக அறிவித்தது யாவரும் அறிந்ததே. இந் நிலையில் கே.பி சில தமிழர்களுடன் மின்னஞ்சல் மூலம் தொடர்புகளை மேற்கொண்டுள்ளார். இவர்களில் உள்ள வெள்ளை ஆடு ஒன்று, (கறுப்பாடு இல்லை) இந்த மின்னஞ்சலில் ஒன்றை காப்பி எடுத்து, அப்படியே ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அனுப்பிவிட்டார். இதனை சாட்சியாக வைத்தே தற்போது பல செய்திகள் வெளியாகியுள்ளதாக ஸ்ரீலங்கா கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு கடந்த அரசில் இருந்து, நிதி அமைச்சர் இளையதம்பி, அவைத் தலைவர் பென் பால்ராஜன், கனடாவில் இருந்து இன்பம், லண்டனில் இருந்து லேபர் பார்டி கவுன்சிலர் கணா, நோர்வேயில் இருந்து சர்வே, இதில் பங்குகொள்வதாக கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் இவர்கள் தான் ஒட்டுமெத்த புலம்பெயர் தமிழர்களின் தலைவர்கள் என்று நினைக்கிறது இலங்கை அரசு ! இல்லை இல்லை இப்படி ஒரு படம் காட்டப்பட்டுள்ளது. இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினால், புலம்பெயர் தமிழர்கள் தமது கோரிக்கையை கைவிட்டுவடுவார்களாம் ! மற்றது மகிந்தர் வெளிநாடு வந்தால் போராட்டம் நடத்தமாட்டார்களாம்.
இது எல்லாவற்றையும் நாங்க பாத்துகொள்ளுவோம் என்று இவர்கள் ஒரு 70MM படம் ஓட்டியுள்ளார்கள்போல. இதை டாரக்ட் பண்ணுவது கே.பியாம் !

இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக இணைத்து, இலங்கைக்கு அனுப்ப GTV இன் உரிமையாளர் செல்வி நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தார் என்ற செய்தியும் மின்னஞ்சலில் உள்ளதாக, ஸ்ரீலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக அரசாங்கத்தின் இரகசியப் பிரதிநிதி ஒருவர் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா சென்றுவந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் புலிகள் ஆதரவாளராக இருந்த நோர்வேயில் வசிக்கும் சர்வே தற்போது இலங்கை அரசின் சார்பாக இயங்குவது யாவரும் அறிந்த விடையம். ஆனால் நாடு கடந்த அரசின் பிரதிநிதிகள் இதில் ஏன் கலந்துகொள்ளவேண்டும் என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இதேவேளை பிரதமர் ருத்திரகுமாரனுக்குத் தெரியாமல் தான் இச் சந்திப்பு நடைபெறவிருப்பதாகவும், வெளியான அந்த மின்னஞ்சலில் உள்ளதாக ஸ்ரீலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளின் பாரிய பின்னடைவை சந்திக்க 2006ம் ஆண்டில் இருந்தே கே.பி தான் காரணம் என அந்த ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
2006ம் ஆண்டில் இருந்தே, கே.பி இலங்கைப் புலனாய்வுத் துறையின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான கபில ஹந்தவிதாரண வுடன் தொடர்புகளில் இருந்துள்ளார். அவர் வழங்கிய பல தகவல் தான் புலிகள் அழிக்கப்பட ஏதுவாக இருந்தது என்பதனை எந்தத் தமிழர்களும் மறந்துவிடவில்லை.

மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டில், போனமுறையை விட மிகவும் கடினமான இலங்கைக்கு எதிரான தீர்மாணம் ஒன்றைக் கொண்டுவர மேற்குலகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் இருந்து தப்ப முடியாது என்பதனை உணர்ந்த இலங்கை தற்போது, புலம்பெயர் நாட்டில் உள்ள பல தமிழ் தலைவர்களையும், அமைப்புகளையும் வளைத்துப்போடும் குள்ளத்தனத்தை கையாண்டு வருகிறது.
இதன் ஒரு அங்கமாகவே கே.பியை சு.ப தமிழ்செலவன் அவர்களின் வீட்டில் அமர்த்தி, தேசிய தலைவர் பாவித்த ஒரு வீடை காரியாலயமாக்கி, புலம்பெயர் தமிழ் மக்களை கே.பி ஊடாக தம் பக்கம் இழுக்க முயற்சிகளை அது மேற்கொண்டு வருகிறது. கே.பி சு.ப தமிழ்ச் செல்வன் அவர்களின் வீட்டில் இருந்தால், தமிழ் மக்கள் என்ன அவரை நம்பி விடுவார்களா ? துரோகி என்றுமே துரோகிதான் !

மின்னல் தாக்குதலின் காரணமாக 44 பேர் பலி!???

          
Sunday 28 October 2012  By.Rajah. 
இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதிக்குள் மின்னல் தாக்குதலின் காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை நாட்டின் பல பாகங்களிலும், மின்னல் தாக்குதலுக்கு இலக்கான பலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் மின்னல் தாக்குதலின் காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏப்ரல் மாதத்திலேயே மின்னலின் காரணமாக அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இம்மாதத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே மழைகாலங்களில் மக்கள் தமக்கான பாதுகாப்பு குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது

சனி, 27 அக்டோபர், 2012

இரு வருட காலமாக நாய்க்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்!

         
Sunday 28 October 2012  By.Rajah. 
கடந்த இரு வருட காலமாக நாயொன்றுக்கு பெண்ணொருவர் தாய்ப்பால் ஊட்டி வரும் விசித்திர சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
ரெறி கிரஹாம் (44 வயது) ௭ன்ற இரு பிள்ளைகளின் தாயாரான மேற்படி பெண், தனது 9 வயது மகளால் வளர்க்கப்படும் ஸ்பைடர் ௭ன்ற நாய்க்கு கடந்த இரு வருடங்களாக தாய்ப்பாலூட்டி வருகிறார்.

இது தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

அவரது மார்பில் ஏற்பட்ட ஒரு பாதிப்பு காரணமாக அவருக்கு அவரது பிள்ளைக்கு தாய்ப்பாலூட்ட முடியாது போயுள்ளது.

இந்நிலையில் ஸ்பைடர் ௭ன்ற மேற்படி நாய்க்கு தாய்ப்பாலுட்டுகையில் தான் நிறைவான தாயொருவராக உணர்வதாக அவர் கூறினார்.

2010 ஆம் ஆண்டில் தனக்கு புதிதாக பிறந்த மகனுக்கு தாய்ப்பாலை நேரடியாக ஊட்ட முடியாததால் அதனைப் புட்டிப்பால் போத்தலில் அடைத்து ஊட்டிய வேளை அப்பால் போத்தலின் வாய்ப்பகுதியை ஸ்பைடர் நக்கியதாகவும், அதைத் தொடர்ந்து அது தாய்ப்பால் குடிப்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்ததாகவும் ரெறி கிரஹரம் தெரிவித்தார்

சின்ன வயசில எவ்வளவு கற்பனை!

         
Sunday 28 October 2012 { புகைப்படங்கள்}
இந்த நிகழ்வினை மிகவும் உன்னிப்பாக புகை படங்களை உற்று பார்க்கவும்









சூப்பர் சிங்கர் ஜூனியர் விண்ணேர்{காணொளி}

27.102012.By.Rajah. - பகுதி 7777-

பணத்தை மீண்டும் ஒப்படைத்த வினோத கொள்ளையர்கள்:?

 
சனிக்கிழமை, 27 ஒக்ரோபர் 2012,By.Rajah. ( கோண்டாவிலில் சம்பவம் )
கொள்ளையடித்து சென்ற 18 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்தவர்களிடம் மீண்டும் கொள்ளையர்களே கொண்டு வந்து ஒப்படைத்த வினோத சம்பவம் கோண்டாவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 23ம் திகதி கனடாவில் வசிப்பவர் வவுனியாவிலுள்ள ஒருவருக்கு வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் 18 லட்சம் ரூபா பணம் கொடுக்க வேண்டியிருந்துள்ளது.
இதனை யாழ்ப்பாணத்திலுள்ள உறவினர் மூலம் அவருக்கு வழங்க முன் வந்துள்ளார். அவரும் யாழ்ப்பாணம் வந்து செல்லும் சிரமத்தால் தனது நண்பரை அனுப்பி அதனை பெற்றுள்ளார்.
இதன்பின்னர் குறித்த பணத்தை அன்றைய தினமே வங்கியில் வைப்பு செய்யுமாறு நண்பருக்கு தெரிவித்தபோதும் அவரால் வங்கி மூடும் நேரத்திற்கு முன்னர் வைப்பு செய்ய முடியவில்லை.
இதனால் வீட்டிலே பணத்தை வைத்திருந்தபோது துப்பாக்கி முனையில் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் அதனை பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் பணத்தை இழந்தவர் கோப்பாய் பொலிஸிலும் முறைப்பாடு செய்தார்.
ஆனால் அடுத்தநாள் அதிகாலை கொள்ளையடித்த வீட்டின் குப்பை கொட்டும் பகுதியில் சிவப்பு நிறபை ஒன்றில் குறித்த பணம் முழுவதும் கட்டப்பட்ட நிலையில் கொண்டு வந்து போடப்பட்டிருந்தது.
இதனை அவதானித்த பணத்தை பறிகொடுத்தவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பணத்தை மீட்டுச் சென்றனர். அத்தோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பணம் திரும்ப கொண்டு வந்து போட்டப்பட்டது பொது மக்கள் மத்தியில் கடும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதோடு பேசு பொருளாகவும் மாறியுள்ளது.

வெள்ளி, 26 அக்டோபர், 2012

சர்ச்சைக்குரிய முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனிக்கு சிறைத்தண்டனை

 வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012, By.Rajah.
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தாலியின் பிரதமராக சில்வியோ பெர்லுஸ்கோனி பதவி வகித்த போது, வரி ஏய்ப்பு செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து அவர் மீது குற்றவியல் வழக்கும், வரி ஏய்ப்பு செய்ததற்கான வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, பெர்லுஸ்கோனிக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இத்தாலிய சட்டப்படி வழக்குகள் மீதான தீர்ப்புகள் இரண்டு கட்ட மேல்முறையீடுகளில் உறுதி செய்யப்பட வேண்டும்.
எனவே பெர்லுஸ்கோனி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நான்காவது முறையாக இத்தாலி தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப் போவதாக பெர்லுஸ்கோனி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தேர்தலுக்கு முன்பே வாக்களித்தார் ஒபாமா?

 வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012, By.Rajah( காணொளி.புகைப்படங்கள்)
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே சிகாகோவில் பராக் ஒபாமா இன்று வாக்களித்தார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெறுகிறது.
இத்தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவும், எதிர் வேட்பாளர் மிட் ரோம்னியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே ஒருவர் தமது வாக்கை செலுத்த முடியும். இதனடிப்படையில் தேர்தலுக்கு 12 நாட்களுக்கு முன்பே சிகாகோவில் ஒபாமா இன்று வாக்களித்தார்.
இதற்காக தமது தேர்தல் பிரச்சாரத்தை 48 மணி நேரம் நிறுத்தி வைத்த ஒபாமா, இன்று காலையிலேயே வாக்குச் சாவடிக்குச் சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.
ஒபாமாவின் மனைவி மிச்செல் ஏற்கனவே 16ஆம் திகதி வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.