siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 23 நவம்பர், 2012

16 வயதுப் பெண்ணின் தலையில் அறைந்து ரோட்டில் விழுத்திய ?

    
 
பெண்ணொருவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள நடைபாதையில் நடந்து செல்லும் போது நபர் ஒருவரின் அதிரடித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

அடிபட்ட அதிர்ச்சியில் குறித்த பெண் விழுந்த இடத்திலேயே மயக்கமாகியுள்ளார்.

இந்தக் காட்சிகள் சி.சி.ரி.வி கமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

கிழக்கு லண்டனின் Plaistow பகுதியில் மேற்படி துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெண்ணை அடித்த குறித்த நபர் சாதாரணமாக நடந்து சென்றுள்ளார்.
 

  குறித்த அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாக லண்டன் Scotland Yard பொலிஸ் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கருத்துத் தெரிவிக்கையில்,

16 வயதுப் பெண்ணைத் தாக்கிய 34 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கிழக்கு லண்டனின் Plaistow பிரதேசத்தின் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. சிறு காயங்களுடன் குறித்த பெண் தற்போது தேறி வருகின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் லண்டன் பொலிசாரின் குற்றவியல் பிரிவினரின் 020 8217 5890,,,,,ä or 0800 555 111தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்{காணொளி,}

எமக்கு இப்போது அரசியல் தீர்வு ஒன்றுதான் தேவை !


         
 
கடந்த மூன்று வருடங்களாக முல்லைத்தீவின் ""சைக்கிள் புதைகுழிகளுக்குள்'' கிடந்து வெயிலிலும் மழையிலும் நனைந்து அந்தச் சைக்கிள்களின் டயர்கள் உருகி உருத்தெரியாமல் போய்விட்டன.
வலிகாமத்தில் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாழும் கோணப்புலம் முகாமில்தான் பவலோஜினியின் வீடு இருக்கிறது. அங்கிருந்து வாரத்தில் ஒரு தடவை அல்லது இரு தடவைகள் ரவிக்குமார் 95 கிலோ மீற்றர் தூரம் பயணித்து சைக்கிள் புதைகுழிக்குப் போய் வருகிறார்.
2009, போரின் இறுதிக் கட்டத்தில் முல்லைத்தீவின் மிக ஒடுங்கிய நிலப்பகுதிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களும் விடுதலைப் புலிகளும் தள்ளிச் செல்லப்பட்ட பின்னர் அவர்களால் கைவிடப்பட்ட ஒவ்வொரு துண்டு இரும்பையும் சேகரிப்பதற்காகவே ரவிக்குமார் அங்கு சென்று வருகிறார் என்கிறார் பவலோஜினி.
போரின் போது நடத்தப்பட்ட கடும் எறிகணை வீச்சுக்களால் சிதைந்து குப்பையாகிப் போன பஸ்கள், கார்கள், வான்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சைக்கிள்கள் வீதியோரங்களில் இன்னும் அப்படியே கிடக்கின்றன. ரவிக்குமாரைப் போன்ற இரும்பு சேகரிப்பவர்கள் அவற்றுக்குள் சிறப்பானவையான சைக்கிள்கள் போன்றவற்றை வேட்டையாடி விற்பதற்காக வீட்டுக்கு எடுத்து வருகிறார்கள்.
பவலோஜினியின் வீட்டு முற்றத்தில் குவிந்து கிடக்கும் சைக்கிள் மலையின் நிழலில் நாம் இருந்து பேசிக் கொண்டிருக்கையில், இந்தச் சைக்கிள்களை கிலோ 49 ரூபா படி வாங்குவதற்கு முஸ்லிம் வியாபாரிகள் இருக்கிறார்கள் என்கிறார் பவலோஜினி. இவற்றை நாமே கொழும்புக்கு எடுத்துச் சென்றால் பழைய இரும்புச் சந்தையில் கிலோ 65 ரூபா வரைக்கும்கூட விற்கக்கூடியதாக இருக்கும். ஆனால் போக்குவரத்துச் செலவைப் பற்றித்தான் யோசிக்க வேண்டி இருக்கிறது என்று அவர் மேலும் சொல்கிறார்.
கோணப்புலம் முகாமில் இருக்கும் ஏனைய பலரும்கூட இதே தொழிலில்தான் ஈடுபட்டிருக்கிறார்கள். சில நாள்களுக்கு முன்னர், தனது அயல் வீட்டுக் குழந்தைகளுக்குத் தானே உணவூட்டினார் என்கிறார் பவலோஜினி. அவர்களின் பெற்றோர்கள் பழைய இரும்பு தேடி புதைகுழிக்குப் போன நிலையில் இரண்டு நாள்களாகத் திரும்பி வராமையே அதற்குக் காரணம்.
முல்லைத்தீவில் குவிந்து கிடக்கும் இந்தப் பழைய இரும்புக் குவியல்கள், போர் எவ்வளவு கொடூரமாக நிறைவுக்கு வந்தது என்பதை நினைவுபடுத்துகிறது. அது மட்டுமல்ல, கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்த போர் மற்றும் முரண்பாடுகளில் இருந்து வெளியேவர யாழ்ப்பாண மக்கள் எவ்வளவு தூரம், கடந்த காலத்திலும் சரி இப்போதும் சரி சிக்கல்படுகிறார்கள் என்பதையும் காட்டுகிறது.
போருக்குக்குப் பின்னரான யாழ்ப்பாணம், அது முன்னர் இருந்த மாதிரியிலிருந்து மிக வித்தியாசமானதாக இருக்கிறது. இரவு நேரத்தைப் போர்த்தியிருந்த இருளும் பயமும் இப்போது அங்கில்லை, சோதனை நிலையங்களில் நின்றபடி டோர்ச்சு வெளிச்சத்தைப் பீச்சியடித்து வீதியை மறிக்கும் சிப்பாய்கள் இல்லை, பெரும் வெடிச் சத்தத்துடன் விழுந்து வெடிப்பதற்கு முன்னர் தலைக்கு மேலாகக் கூவிக் கொண்டு செல்லும் எறிகணைகளும் இப்போது இல்லை.
இப்போது சோதனைச் சாவடிகள் இல்லை. ஒப்பீட்டளவில் இராணுவத்தினரின் பிரசன்னமும் குறைந்துவிட்டது. இரவு வேளைகளிலும் கடைகள் திறந்திருக்கின்றன. எல்லா நேரங்களிலும் மக்கள் வீதிகளில் நடமாடுகிறார்கள். வீதிகளை நிறைத்திருந்த சைக்கிள்கள் மற்றும் பெற்றோல் தட்டுப்பாட்டால் மண்ணெண்ணெயில் ஓடிய மொறிஸ் மைனர் கார்கள் என்பன எல்லாம் மறைந்து இப்போது வீதிகளை இயல்பான வாகனங்கள் நிறைத்துள்ளன.
இந்த மாற்றங்களுக்குள் ஒன்றாகத் துரையப்பா விளையாட்டு அரங்குக்கு முன்பாக (தபால் தலைமையகத்தின் அருகில்) பெரிய உல்லாச விடுதி ஒன்று முளைத்துள்ளது. அதன் உரிமையாளர் திலக் தியாகராஜா, இன்று யாழ்ப்பாணத்தின் மிகப் பெரிய தனியார் முதலீட்டாளர். தியாகராஜா யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறிய போது அவருக்கு வயது 17. ஐக்கிய இராச்சியத்தில் அவர் இப்போது வாழ்கிறார்.
42 அறைகளைக் கொண்ட அவரது விடுதியான டில்கோ தியாகராஜா மற்றும் அவரது மனைவியான கோகிலா ஆகியோரின் பெயர்களின் ஆங்கில முதல் எழுத்துக்களைச் சேர்த்ததே டில்கோ என்ற பெயர் இப்போது எதிர்பார்ப் பின் குறியீடாக நின்று கொண்டிருக்கிறது. குறைந்தது தியாகராஜா சொல்வதைப் போன்று யாழ்ப்பாண மக்கள் இழந்துவிட்ட பெருமைகளை மீட்டு எடுக்கும் எதிர்பார்ப்பின் குறியீடாகியிருக்கிறது.
அமைதியை அடைய வேண்டும் என்றால் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் எனது நம்பிக்கை. நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வேலைகளை உருவாக்குவதும் உள்ளூர்த் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதும்தான் என்கிறார் 56 வயதான விடுதி உரிமையாளர். அவர் லண்டனுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் மாறி மாறி தனது வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருக்கிறார். அங்கே, லண்டனுக்கு வெளியே அவரது வீடான சிங்வெல்லில் அவர் ஒரு பட்டயக் கணக்காளர். அவரது மனைவி இரு பிள்ளைகளும் அங்கேயே இருக்கிறார்கள்.
அவரை வெளிநாட்டுக்கு ஓடவைத்த 1970களின் இலங்கையின் நிலைமையை நினைவுபடுத்திப் பார்க்கையில். தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் வேலைகளை உருவாக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதுதான் எனது நோக்கம் என்கிறார் அவர்.

உடையார்கட்டு பிரதேசத்தில் இருவரது சடலங்கள் மீட்பு !

          
 
முல்லைத்தீவு உடையார்கட்டு குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இருவரது சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உடையார்கட்டைச் சேர்ந்த எஸ். கோணேஸ்(வயது35), எஸ்.சின்னவன்(வயது40), ஆகிய இருவரும் நேற்று முன்தினம் (புதன் கிழமை) மாலை குளத்தில் நீராடச் சென்றுள்ளனர்.
எனினும் இருவரும் மீண்டும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் இவர்கள் இருவரையும் தேடியுள்ளதுடன், நேற்று காலை முதல் குளத்திலும் சுழியோடிகள் மூலம் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இருவரது சடலங்களும், நேற்று மாலை நீரிலிருந்து மீட்கப்பட்டிருக்கின்றது. எனினும் இறப்பு எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து தகவல்கள் எவையும் தெரியவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், சடலங்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிங்கள எம்.பி வேலை பார்த்த பெண் ஒருவரின் மார்பை

         
 
லண்டன் விம்பிள்டன்னில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில், வேலை பார்த்த பெண் ஒருவரின், மார்பை எட்டிப் பிடிக்க முனைந்தார் என்ற குற்றத்துக்காக முன் நாள் இலங்கைத் தூதரும் எம்.பியுமான, ரியூட குணசேகர கடந்த மே மாதம் கைதாகியிருந்தார். உடல் நோவைக் குறைக்க தசைகளை மசாஜ் செய்து விடும் பெண்ணோடு இவர் தகாத முறையில் நடந்துகொண்டது உறுதிசெய்யப்பட்டது.
அத்தோடு விம்பிள்டன் நீதிமன்றம் இவரை குற்றவாளி என அறிவித்து, தீர்ப்பும் வழங்கியுள்ளது இதில் வியப்பான விடையம் என்னவென்றால், பெரும் செல்வந்தரான இவர் மீது நீதிபதி மேலதிக விசாரணை ஒன்றை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார் என்பது தான் ! பட்ட காலிலேயே படும் என்பார்கள் ! அது போல 2 வது வழக்கும் இவர்மீது பதிவாகி இருக்கு என்றால் பாருங்களேன் !

77 வயதாகும் ரியூட குணசேகர ஒரு மூத்த இலங்கை இராசதந்திரி ஆவர். இவர் விம்பிள்டன் பகுதியில் வசித்து வருகிறார். போலந்து நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக இருந்த இவர், 2 பிள்ளைகளின் தகப்பனுமாவார்.
இவருக்கு பல வர்த்தக நிலையங்கள் கொழும்பில் உள்ளது என்று கூறப்படுகிறது. அத்தோடு இவர் பெரும் செல்வந்தரும் ஆவார். கடந்த மே மாதம் இவர் சுவீடிஷ் மசாஜ் எடுப்பதற்காக ஒரு நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கே அவரைப் படுக்கவைத்து, ஒரு பெண் இவர் உடல் நோவைப் போக்க மசாஜ் செய்துள்ளார்.
ஆனால் சிறிது நேரத்தில், அப் பெண்ணோடு சில்மிஷங்கள் செய்ய ஆரம்பித்துள்ளார் ரியூட குணசேகர. இதனையும் அவர் பொறுத்துக்கொண்டுள்ளார். ஆனால் இறுதியில் எட்டி மார்பைப் பிடிக்க முனைந்தவேளை, அப் பெண் அங்கே உள்ள ஆபத்து மணியை அடித்துள்ளார். இதனையடுத்து நிலைய காவலாளிகள் உள்ளே நுளைந்து குணசேகரவை பிடித்து, பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நீதிமன்றில், குணசேகர தாம் அப்பெண்ணைத் தொட முயற்ச்சிக்கவில்லை என்றும் அப்பெண்ணே தன்னிடம் மேலதிகப் பணத்தைக் கோரியதாகவும் கூறினார். ஆனால் இந்தப் பம்மாத்து வார்த்தைகளை பிரித்தானிய நீதிபதிகள் ஏற்க்க மறுத்துவிட்டனர். குறிப்பிட்ட பெண்ணையும், மசாஜ் சென்ரன் பாதுகாப்பு ஊழியரையும் விசாரித்த நீதிபதிகள், இறுதியில் குணசேகர குற்றவாளி என அறிவித்துள்ளார்கள்.
குறிப்பிட்ட பெண்ணுக்கு 1,000 பவுன்சுகள், நஷ்ட ஈடுகொடுக்கவேண்டும் எனவும், பிரித்தானிய நீதிமன்றத்துக்கு மேலும் 1,200 பவுண்டுகளை தண்டமாகக் கட்டவேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனிடையே தன்னிடம் வக்கீல் வைத்து வாதாடப் பணம் இல்லை என்று, குணசேகர கூறி, நீதிமன்ற திணைக்களத்திடம் இருந்து(லீகல் ஏய்ட்) பெற்றுள்ளார். இவர் வழக்கை வாதாட, சுமார் 4,170 பவுண்டுகளை அத் திணைக்களம் வழங்கியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள மக்கள் வேலை செய்து, தாம் உழைக்கும் சம்பளத்தில் வரிப்பணத்தைக் கட்டி வருகின்றனர். இதில் ஒரு பகுதி நீதிமன்ற திணைக்களத்தில் சேமிக்கப்பட்டு வருகிறது.

இந்த வரிப் பணத்தில் இருந்து 4,170 பவுண்டுகளை இவருக்கு ஏன் கொடுக்கவேண்டும் என்று, நீதிமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பெரும் செல்வந்தரும், பிசினஸ் தாதாவுமான குணசேகரவுக்கு ஏன் இவ்வாறு மக்கள் நிதியில் இருந்து பணம் வழங்கப்படவேண்டும் என்று அரச தரப்பு வக்கீல் கேள்வி எழுப்பினார்.
அதிர்ந்துபோன நீதிபதிகள், இது குறித்து பிறிதொரு தனிப்பட்ட விசாரணை நடத்துமாறு பொலிசாருக்கும் வருமானத் துறைக்கும் கட்டளையிட்டுள்ளனர். மொத்தத்தில் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் குணசேகர. இலங்கை எம்.பி யின் அட்டகாசம் என்ற தலைப்பில், பல உள்ளூர் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது. இது இலங்கை அரசுக்கு மேலும் கிடைத்திருக்கும் ஒரு சாட்டை அடி ஆகும். சிங்களவர்கள் தமிழர்களை மட்டுமல்ல வெள்ளை இனத்தவர்களையும் பாலியல் பலாத்காரம் செய்து வருகின்றனர். ஒரு வெளிநாட்டு இராஜதந்திரியே இப்படி என்றால், இலங்கை இராணுவம் எப்படி இருக்கும் ? என்று இனை வெள்ளை இனத்தவர்களும் ஊகிக்க முடியும் அல்லவா

வியாழன், 22 நவம்பர், 2012

அனலைதீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் வாகனத்துடன் எரித்து கொலை

            )
கனடா மொன்றியலில்யாழ்.அனலைதீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின்தாய்வாகனத்துடன்எரித்துகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 29 ம் திகதி மொன்றியலில் வைத்து 37 வயதுடையயாழ்.அனலைதீவைசேர்ந்தவிக்னேஸ்வரன் யோகராணிஎன்பவர்வாகனத்துடன்சேர்த்து எரிக்கபட்டுள்ளதாகமொன்றியல் போலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவதினம்காலை9 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்தை பல 911அவசர தொலைபேசி அழைப்பை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் எரிந்த வாகனத்துகுள் இருந்து இரண்டு உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடர்ந்தனர்.
எரியூட்டப்பட்ட 2 உடல்களில் ஒன்று ஆண் மற்றையது பெண்ணினுடையதும் என்பதும், இருவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள் என்பதும் ஆனால் முன் விரோதமே கொலைக்கு காரணம் என்றும் நம்பப்படுகிறது

சதி திட்டம் தீட்டியவர்களை மத்திய அரசு விட்டுவைத்துள்ளது!சீமான்

          

 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சதி திட்டம் தீட்டியவர்களாக இருக்கலாம் என்று நீதிபதி ஜெயின் ஆணையத்தால் சுட்டிக் காட்டப்பட்டசந்திராசாமி, சுப்பிரமணியசாமி போன்றோரை விசாரிக்கமத்தியகாங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனநாம்தமிழர்கட்சிதலைவர்சீமான்கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
மும்பை தாக்குதல் தீவிரவாதிகளில் ஒருவரான அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டு விட்டதால் மும்பை தாக்குதல் வழக்கு முடிந்து விட்டதாக மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் சிண்டே கூறி இருப்பது வியப்பாக உள்ளது.
தாக்குதலுக்கான சதி திட்டத்தை தீட்டியவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவுகின்றனர். அவர்களை பற்றி வாக்கு மூலம் அளித்த அஜ்மல் கசாப்பை மத்திய அரசு அவசரமாக தூக்கிலிட்டு உள்ளது.
இதற்கு முன் பல தாக்குதல்களை நடத்தி உள்ள லஸ்கர்- இ-தொய்பா தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இயங்கி வருகின்றனர். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த மேற்கொண்ட முயற்சி என்ன?
எய்தவன் இருக்க அம்பை மட்டும் தூக்கில் போடுவதால் எதிர்காலத்தில் தாக்குதல்கள் நிகழாமல் தடுத்திட முடியுமா? குற்ற செயலில் ஈடுபட்டவர்களை தண்டித்து விட்டு அதோடு வழக்கை முடித்து விடுவது சதிகாரர்களை தப்ப விடும் நடவடிக்கை.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சதி திட்டம் தீட்டியவர்களாக இருக்கலாம் என்று நீதிபதி ஜெயின் ஆணையத்தால் சுட்டிக் காட்டப்பட்ட சந்திராசாமி, சுப்பிரமணியசாமி போன்றோரை விசாரிக்க மத்திய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் குற்றச் செயலில் தொடர்பற்றவர்களான முருகன, சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கிறது.
தங்கள் தலைவரை சதித் திட்டம் தீட்டி கொன்றவர்கள் யார் என்பதை விசாரித்து நாட்டிற்கு தெரிவிக்க வேண்டும் என்று ஒரு காங்கிரஸ்காரர் கூட அக்கறையுடன் குரல் எழுப்பவில்லை.
சதிகாரர்கள் அதிகாரத்துடன் உலவி வருகின்றனர். இப்படி சதிகாரர்களை விட்டு குற்றச் செயலில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டவர்களை தூக்கிவிட்டு கொள்வதால் தீவிரவாத நடவடிக்கைகளை தடுத்து விடமுடியாது. மரண தண்டனை என்பது மனிதாபிமான மற்ற தண்டனை. இவ்வாறு அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இலங்கை காதலியை மணக்க இந்திய மேஜருக்கு

        
 
இலங்கைக் காதலியை திருமணம் செய்யவதற்கு விரும்பிய இந்தியஇராணுவமேஜருக்குநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. செலவுத் தொகையாக 75,000 ரூபாவை அறிவிட்டுக்கொண்டு அவரை இராணுவ சேவையிலிருந்து விடுவிக்குமாறு கர்நாடகா மேல் நீதிமன்றம் இந்திய இராணுவத்துக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.

இலங்கைப் பெண்ணொருவரை திருமணம் செய்வதற்காக தனது இராணுவ பதவியை ராஜினாமா செய்ய முற்பட்ட இந்திய இராணுவத்தின் மேஜர் பதவிநிலை வகிக்கும் அதிகாரி ஒருவரின்ராஜினாமாகடிதத்தை இராணுவம் ஏற்க மறுத்ததை அடுத்து அவர் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.


இந்திய இராணுவத்தின் சமிக்ஞை படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் விகாஸ் குமார் என்பவரே இந்த வழக்கைத் தாக்கல் செய்தவராவார். இராணுவ சமிக்ஞை படைப்பிரிவில் அதிகாரிகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாலும் இலங்கைப் பெண்ணுடன் இவருக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்த வேண்டியிருப்பதாலுமே அவரது ராஜினாமாவை ஏற்க முடியாதுள்ளது என இந்திய இராணுவம் அறிவித்திருந்தது.


இருப்பினும், விகாஸ் குமாரின் ராஜினாமாவை இராணுவம் மறுக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், இந்த தீர்ப்பினை எதிர்த்து இந்திய இராணுவம் மேன்முறையீடு செய்திருந்தது.


மேஜர் விகாஸ் குமாரின் காதலியான இலங்கைப் பெண் அனிலா ரணமாலி குணரத்ன, பெங்களூரில் முதுமாணிப் பட்டக் கற்கை நெறியொன்றை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், இவர்கள் ஈவரும் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்யவிருந்தனர்.


இந்திய இராணுவ சட்டப்படி, வெளிநாட்டுப் பிரஜையொருவரை இந்திய இராணுவத்தில் உள்ள ஒருவர் திருமணம் செய்ய முடியாது. இதனாலேயே விகாஸ் குமார், தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார்.


இந்நிலையில், வழக்கை விசாரித்த கர்நாடகா மேல்நீதிமன்றம், வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய இராணுவ மேஜரிடமிருந்து செலவுத் தொகை அறவிட்டு அவரை இராணுவத்திலிருந்து விடுவிக்குமாறு பணித்தது

ஆப்கானில் 14 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

ஆப்கானிஸ்தானில் கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு பிறகு அதாவது 2001ஆம் ஆண்டிலிருந்து தூக்கு தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படவில்லை.
ஆனால் கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் கற்பழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் போன்றவற்றிற்காக தூக்கிலிடப்பட்டதாக அரசு கூறியுள்ளது.
மேலும் அங்கு இன்னும் 250 தூக்கு தண்டனை கைதிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த செயலுக்கு மனித உரிமை அமைப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏமனில் இராணுவ விமானம் தரையில் மோதி விபத்து: 10 பேர் பலி


{ புகைப்படங்கள்,}ஏமனில் இராணுவ விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 10 பேர் உயிரிழந்தனர். ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அருகே உள்ள விமான தளத்தில் அவசரமாக தரையிறங்க முயன்றது.
அப்போது இயந்திரம் பழுதானதால் அருகே உள்ள அல்-ஹசாபா பகுதியில் தரையில் மோதி விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

கிரிக்கெட் விளையாடுவாரா போல்ட் !

    
ஒலிம்பிக் போட்டிக்கு பின், கிரிக்கெட் அல்லது கால்பந்து போட்டிகளில் விளையாடுவது குறித்து உசைன் போல்ட் முடிவு செய்ய உள்ளார்.
ஜமைக்காவின் "மின்னல் வேக' வீரர் உசைன் போல்ட், 26. கடந்த 2008ல் நடந்த பீஜிங் ஒலிம்பிக் 100, 200 மற்றும் 4*100 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற இவர், சமீபத்தில் முடிந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று சாதித்தார்.
தடகளப் போட்டியில் அசத்தி வரும் இவர், கிரிக்கெட் அரங்கில் காலடி வைக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலியாவில் நடக்கும் "பிக் பாஷ்' டுவென்டி-20' தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி இவரை ஒப்பந்தம் செய்ய போவதாக கூறப்பட்டது. இதற்காக சமீபத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி கேப்டன் ஷேன் வார்னுடன், போல்ட் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கு பின் கால்பந்து விளையாட ஆர்வமாக இருப்பதாக திடீரென கூறினார். இதனால் உசைன் போல்ட், கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது கால்பந்து போட்டிகளில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது
இதுகுறித்து உசைன் போல்ட் ஏஜன்ட் ரிக்கி சிம்ஸ் கூறுகையில், ""உசைன் போல்ட் தற்போது தடகளப் போட்டியின் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இவர், அடுத்த ஆண்டு மாஸ்கோவில் நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டுள்ளார். தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின் தான் கிரிக்கெட் அல்லது கால்பந்து போட்டிகளில் விளையாடுவது குறித்து முடிவு செய்வார். அதாவது வரும் 2016ல் பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு பின் முடிவு செய்வார்,'' என்றார
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் மீடியா மானேஜர் ஜெஸ் குக் கூறுகையில், ""பிக் பாஷ் தொடரில் போல்ட் விளையாட, கடந்த இரண்டு மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் இவர் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டு வருவதால், இம்முறை பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. அடுத்த தொடரில் பங்கேற்பது குறித்து விரைவில் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.