siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

தொடர்ந்தும் அச்சுறுத்தவே வடக்கில் இளைஞர்கள் கைது

           
 
இந்த அரசாங்கள் தமிழர்கள் மத்தியில் அச்சநிலையினை ஏற்படுத்தி இயல்பு வாழ்வினைக் குழம்பும் நோக்குடனேயே வடக்கில் இளைஞர் யுவதிகளை தொடர்ந்தும் கைதுசெய்து வருகின்றது என தெரிவித்த கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சிறிதரன் இதனைக் தடுக்க சர்வதேச நாடுகள் தலையிட்டு தடுத்துநிறுத்த முன்வரவேண்டும் என தெரிவித்தார்.
வடக்கில் நடைபெற்றுவரும் கைதுகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் கொழும்பு ஊடகத்துக்கு தெரிவிக்கையில்,
வடக்கில் தமிழ் இளைஞர்கள், யுவதிகளை இராணுவத்தினர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் கைதுசெய்து வருகின்றனர். யாழ்.பல்கலைக் கழக மாணவர்களையும் தாக்கிக் கைதுசெய்துள்ளனர். தமிழர்களைத் தொடர்ந்தும் அச்சுறுத்தி அவர்களின் இயல்பு வாழ்வினைக் குழப்பும் நோக்குடனேயே இந்த அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது.
யுத்தத்திற்குப் பின்னரான வடக்கின் அபிவிருத்தி என காப்பெற் வீதிகள் மட்டுமே இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.
இம் மக்களின் வாழ்வாதாரத்தினை வளப்படுத்தி பொருளாதாரத்தினை மேம்படுத்த இந்த அரசாங்கம் எதையுமே செய்யவில்லை.
குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள், கைத்தொழில் பேட்டைகள் போன்ற எவையுமே வடக்கில் இன்னமும் அமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் வேலை வாய்ப்புக்கள் இன்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இம் மக்களின் இயல்பு வாழ்வினை குழப்பும் நோக்குடன் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இதற்காகவே தமிழ் இளைஞர், யுவதிகளைக் கைதுசெய்கின்றனர்.
இதனால் வட பகுதித் தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனைத் தடுத்து நிறுத்த சர்வதேச நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.

முக்கிய தளபதி பலி: அல்கொய்தா இயக்கத்துக்கு பின்னடைவா?

 
அமெரிக்காவின் அதிரடி தாக்குதலில் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி படுகொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானின் வடமேற்கே உள்ள வஜிரிஸ்தான் பகுதியே அல்கொய்தா தீவிரவாதிகளின் புகலிடமாக அமைந்துள்ளது.
இங்கு தீவிரவாதிகளை அழிப்பதற்காக அமெரிக்கா அடிக்கடி வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதி அபு ஜாயித் உட்பட 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா கடந்த ஜூன் மாதம் நடத்திய தாக்குதல்களில் அல்கொய்தா இயக்கத் தளபதியான அபு யாஹ்யா அல் லிபி உயிரிழந்ததை தொடர்ந்து, அவன் இடத்தில் அமர்த்தப்பட்டவன் தான் இந்த அபு ஜாயித்.
அபு ஜாயித், அமெரிக்க தாக்குதல்களில் பலியாகி இருப்பது அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதல்களை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது.
இது குறித்து வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அறிவோம். அல்கொய்தா இயக்கத்தின் மூத்த தளபதி பலியானதாகவும் எங்களுக்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால் பலியானது யார் என்பதை எங்களால் உறுதி செய்ய முடியாது என கூறினர்

போபா புயலின் கோரத் தாண்டவத்துக்கு 600 பேர் பலி: மீண்டும்

 
பிலிப்பைன்ஸை புரட்டி போட்ட போபா புயலுக்கு, இதுவரையிலும் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். தற்போது பிலிப்பைன்சின் வடபகுதியில் 250 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருக்கும் இப்புயல், மீண்டும் தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது மணிக்கு 250 கிலோ மீற்றர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வாரம் தாக்கிய புயலின் தாண்டவத்திலிருந்தே மக்கள், இன்றளவும் வெளிவராத நிலையில் சிக்கி தவிக்கின்றனர்.
பல கிராமங்கள் அடியோடு நாசமாகி விட்டதால், நிவாரண பணிக்கு சர்வதேச உதவியை பிலிப்பைன்ஸ் நாடு கேட்டுக் கொண்டுள்ளது{காணொளி, }

சனி, 8 டிசம்பர், 2012

அரசாங்கம் சொல்வது ஒன்று செய்வது வேறொன்று!- ஐ.நா குழுவிடம்


 
யுத்தம் நிறைவுபெற்றிருந்த நிலையில், நாட்டில் ஜனநாயகமும், நல்லிணக்கமும் ஏற்படும் என தமிழர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அத்தனையும் பொய்யாக்கப்பட்டுள்ளதாக ஜ.நாவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவிடம் யாழ். ஆயர் தலைமையிலான குழுவினர் தெரியப்படுத்தியுள்ளனர்.
நியூயோர்க்கிலுள்ள ஜ.நாவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் இன்று காலை யாழ்.ஆயர் தலைமையிலான குழுவினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதில் ஜப்பான், தென்னாபிரிக்கா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போதே மேற்படி விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்கு மேலும் குறிப்பிடப்பட்டதாவது. நாட்டில் சகலரும் சமமானவர்களாக கணிக்கப்படும் நிலை ஏற்படுத்தப்படவேண்டும். ஆனால் தற்போது அந்த நிலை கிடையாது. ஏற்றத்தாழ்வுகளும் வேற்றுமைகளும் அதிகரித்திருக்கின்றன.
மேலும் தற்போது தமிழர் பிரதேசங்களில் இடம்பெறும் சம்பவங்களின் மூலம் அரசாங்கம் ஏதோவொன்றை மறைத்து வைத்துக்கொண்டு செயற்படுவதாகவே எண்ணத்தோன்றுகின்றது.
மக்களுடைய மனங்களை வெல்லாமல், யுத்த வெற்றியின் களிப்பில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை ஆபத்தானவை ஒவ்வொருவரும் தங்களது தனித்துவங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ஏது நிலைகள் வேண்டும். ஆனால் அது இல்லை.
அரசாங்கம் சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக இருக்கின்றது. இராணுவத்தினரின் அதிகளவு பிரசன்னத்தை தமிழர் தாயகப் பிரதேசங்களில் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பில் ஜ.நாவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பில் ஜனாதிபதியுடனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடனும் பேசியிருக்கின்றோம். தற்போது எமது விஜயத்தின் முக்கிய நோக்கம் தமிழர்களுடைய மனோநிலையை அறிவதே.
எனவே இது குறித்து நாம் அக்கறையுடனிருக்கின்றோம் என குறிப்பிட்டனர். மேலும் இந்த குழுவினர் இன்று காலை யாழ்.அரசாங்க அதிபர், வடமாகாண ஆளுநர் ஆகியோரை யாழ்.நகரில் சந்தித்து பேசினர்.

இதேவேளை, தமிழர்களின் பகுதியில் மேற்கொள்ளப்படும் அரசினால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு தொடர்பில் கேள்விகேட்ட தென்னாபிரிக்க பிரதிநிதி, தழிழர்கள் அவர்களது சொந்தக் காணியில் குடியிருக்க அனுமதிக்காமை குறித்து அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இச்சந்திப்பில் இலங்கையின் ஜ.நா பிரதிநிதி, பாலிதகோஹன்ன உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்{புகைப்படங்கள்காணொளி,}
.
 

முதலாம் ஆண்டு நினைவுதினம் சின்னத்தம்பி நவரத்தினம்



சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பிநவரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினம்இன்று
அன்புள்ளம் கொண்டு நீ பண்பாய் பழகிடுவாய்
அமைதியாய் என்றும் பாசமாய் பேசிடுவாய்.
வந்தாரை வரவேற்க்கும் வள்ளல் நீ
வற்றாத உன் வள்ளல் குணமண்ணா.
மங்கையின் அன்பு மணாளன் நீ
பிள்ளைகளின் ஆசை தந்தை நீ
உன் உறவுக்கு நல்ல சொந்தம் நீ
ஊரில் எல்லோருக்கும் என்றும் நண்பன் நீ.
நீ மறந்து ஒராண்டு போனதென்ன.
உனை நித்து நெஞ்சம் துடிப்பது என்ன
ஒராண்டென்ன ஆண்டுகள் ஆகட்டும் ஆயிரம்
மறவோம் நாம் உன் அன்பு முகம்.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்…
நவரத்தின அண்ணாவின் ஒராண்டு நினைவு நாளில் அவரது நினைவில் தவித்திருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை சிறுப்பிட்டி இணையயமும் நவற்கிரி இணையங்களும் தெரிவித்துகொள்கின்றது
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி…!!!
                       

 

இராணுவ ஆட்சியே காரணம் !தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!


யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை, கைது செய்யப்பட்டமை மற்றும் அச்சுறுத்தப் பட்டமை போன்ற சம்பவங்கள் வடக்கில் நிலவும் இராணுவ ஆட்சியினாலேயே நிகழ்ந்தன.
இதனாலேயே பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் குழம்பியுள்ளன. இதனைத் தடுக்க அரசு நட வடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு ஐக்கிய நாடுகள் தூதுக்குழுவினரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும், ஜப்பா னின் ஐ.நா. நிரந்தரப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும் இடையே கொழும்பில் நேற்றுமுன்தினம் இரவு சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:
பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் கைது செய்யப்படுகின்றமை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இந்த நடவடிக்கைகள் மாணவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்ற ஏக்கத்தில் உள்ளனர். மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையால் பல்கலைக்கழகத்தில் கற்றல் செயற்பாடுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கு எல்லாம் மூலகாரணம் வடக்கில் தொடர்ந்தும் நிலவும் இராணுவ ஆட்சியே. இதனை நீக்கி சுமுகநிலை ஏற்படுத்துவதற்கு அரசு எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
இதனை நாம் ஐ.நா. குழுவுக்குத் தெளிவாக எடுத்துக் கூறியதுடன் நிலைமைகளை நேரடியாகச் சென்று பார்வையிடுமாறும் கேட்டுள்ளோம். இதேவேளை பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொள்ளும்

வெள்ளி, 7 டிசம்பர், 2012

இங்கிலாந்தில் பரபரப்பு. கேத் வின்செண்ட் கர்ப்ப


 
ரகசியங்களை வெளியிட்ட நர்ஸ் திடீர் தற்கொலை.இங்கிலாந்து இளவரசி கேத் வின்செண்ட் கர்ப்பம் குறித்த தகவல்களை ஆஸ்திரேலிய வானொலிக்கு கொடுத்த லண்டன் மருத்துவமனை நர்ஸ் திடீரென தற்கொலை செய்து கொண்டார்

விற்பனைக்கு வருகின்றது நோக்கியாவி​ன் தலைமை அலுவலகக் கட்டிடம்

கைப்பேசி உற்பத்தியில் உலகளாவிய ரீதியில் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நோக்கியா நிறுவனமானது பின்லாந்தின் எஸ்பூ நகரில் அமைந்துள்ள தனது தலமை அலுவலகக் கட்டிடத்தினை விற்பனை செய்யும் முடிவுக்கு வந்துள்ளது.
சுமார் 170 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான இந்த அலுவலக கட்டிடத்தினை விற்பதற்கு கடந்த ஒக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன் இவ்வருட இறுதிக்குள் விற்பனையாகிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
48,000 சதுரமீட்டர்கள் உடைய இந்த அலுவலகக்கட்டிடத்தில் 1997ம் ஆண்டிலிருந்து 15 வருடங்களாக நோக்கியா நிறுவனம் செயற்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

Firefox உலாவியில் Facebook Messenger-இனை பயன்படுத்து​வதற்கு

பில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள பேஸ்புக் சமூக வலைத்தளமானது தொடர்ச்சியாக பல புதிய அம்சங்களை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வருகின்றது. இதன் தொர்ச்சியாக அண்மையில் குரோம் உலாவியில் பயன்படுத்தக்கூடியவாறான Facebook Messenger - இனை அறிமுகப்படுத்தியிருந்தது.
தற்போது இந்த வசதியினை Firefox உலாவிகளிலும் பயன்படுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது.
இவ்வசதியினை Firefox உலாவியின் பிந்திய பதிப்புக்களில் பெற்றுக் கொள்வதற்கு https://www.facebook.com/about/messenger-for-firefox எனும் இணைப்பில் கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் காணப்படும் Turn On எனும் பொத்தானை அழுத்தினால் போதுமானது.


வீரர்களுக்கு அங்கேயே காய்கறிகள் கிடைக்கும் வகையில் தோட்டம்

          
சந்திரன மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஆய்வுகள் நடத்திவருகின்றன

இதற்கிடையில் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு அங்கேயே உணவுக்கு புத்தம் புதிய காய்கறிகள் கிடைக்கும் வகையில் தோட்டம் அமைக்க முடியுமா? என்ற முயற்சியில் சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் தீவிரமாக ஈடுபட்டது.

இதற்காக பெரிய பரிசோதனை கூண்டு அமைத்து ஆய்வு நடத்தினார்கள். இந்த பரிசோதனையில் வெற்றி பெற்றிருப்பதாக ஆராய்ச்சி நிலையத்தின் துணை இயக்குனர் டெங் யிபிங் தெரிவித்துள்ளார்.

“டைனமிங் பேலன்ஸ்டு மெக்கானிஷம்” என்பதை பயன்படுத்தி ஆகாய வெளியில் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு மற்றும் தண்ணீரை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களுக்கு உணவு மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை கொடுக்க முடியும் என்ற நிலை உருவாகப் போகிறது