siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 11 ஜனவரி, 2013

மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்: 115 பேர் பலி

பாகிஸ்தானில் நேற்று தொடர்ச்சியாக நடந்து குண்டுவெடிப்பு சம்பவங்களில் 115 பேர் கொல்லப்பட்டனர், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். குவெட்டாவை தலைநகராகக் கொண்ட தென் மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் தொடர்ந்து வன்முறைகளும், பயங்கரவாதத் தாக்குதல்களும் தலைவிரித்தாடி வருகின்றன.
இங்கு தான் ஷியா முஸ்லீம்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள் என்பதால், தொடர்ந்து சன்னி முஸ்லீம்கள் இந்தப் பகுதியைக் குறி வைத்துத் தாக்கி வருகின்றனர்.
இங்கு வசிக்கும் ஷியா பிரிவினர் பெரும்பாலும் ஆப்கானிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள பில்லியர்ஸ் அரங்கொன்றில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 85 பேர் வரை கொல்லப்பட்டனர், இதனால் அப்பகுதியே போர்க்களம் போன்று காட்சியளித்தது.
இறந்தவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன, காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர், ஆனால் மருத்துவமனைகளில் இடமில்லாமல் அவை நிரம்பி வழிந்தன.
குவெட்டா தவிர மிங்கோரா என்ற இடத்தில் நடந்த இன்னொரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் நேற்று மொத்தம் 4 இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.

வியாழன், 10 ஜனவரி, 2013

பூமகள் சனசமூகநிலையம் இணையத்துக்கு அனுப்பிய பதில்

சிறுப்பிட்டி இணைய நிர்வாகத்தினருக்கு உங்கள் இணையத்தில் பூமகள் சனசமூகநிலைய நிர்வாகத்தினருக்கு எழுதிய செய்தி படித்தோம் அதற்கு பதிலலளிக்கும் முகமாக நீங்கள் எமது கிராமத்தில் மேற்கொண்டுவரும் நற்பணிகளை அறிவோம் ஆதலால் எமது பூமகள் சனசமூகநிலையம் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதோடு எமது கிராமமுன்னேறத்துக்குஆகவும் கிராம மக்களின் முன்னேறத்துக்குஆகவும் நாம் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்துடன்இணைந்து இனி வரும் காலங்களை வளமானதாக்க முடிவு செய்துள்ளோம் ஒற்றுமையே உயர்வு தரும் பின்குறிப்பு :நன்றி உங்களின் பதில் கடிதத்துக்கு காலமறிந்து நீங்கள் எடுத்த முடிவால் இந்த இணையமும் சிறுப்பிட்டி மேற்கு (தாய்) ஒன்றியமும் பெரு மகிழ்வு கொள்கின்றது.இதற்க்கான வெளிப்படையான எமது பதில் மிக மிக விரைவில் இணையத்தில் பதிவிடப்படும். பதிவிட்ட கணமே செயல் பாட்டிலும் இறங்கும். நன்றி செயல்பாட்டுடன் கூடிய ஒற்றுமையே நீண்ட கால பலனை நம் உறவுகளுக்கும் எமக்கும் நிறைவைதரும். சிறுப்பிட்டி மேற்கு லண்டன் கிளை ஒன்றியத்தினரே உங்களுக்கான காலம் இன்னும் இரண்டு நாட்க்களே சிந்தித்து கிராம நலன் கருதி உங்களின் முடிவை இணைய மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்

38 மாணவர்கள் பயணித்த பள்ளிப் பேருந்தில் தீ

உச்சிப்பனிச் சறுக்கு விளையாட பெல்ஜியத்திலிருந்து இத்தாலிக்குக் குழந்தைகளை ஏற்றி வந்த பேருந்து யூரி மாநிலத்தில் திடீரென தீப்பிடித்தது. உடனே ஓட்டுநர் சாலை ஓரமாக வண்டியை நிறுத்தி 38 மாணவர்களையும் பாதுகாப்பாக இறக்கிவிட்டார். உடன் சென்ற 7 பெரியவர்களும் எவ்வித ஆபத்துமின்றி உயிர் தப்பினர். கோத்தார்டு குகைப்பாதைக்குள் நுழையும் இடத்தில் கடந்த 8ம் திகதி அதிகாலை 5 மணியளவில் A2 நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்ததாக யூரி மாநிலப் பொலிசார் தெரிவித்தனர். கோட்ஹார்டு தீயணைப்புப் படை வீரர் தீயை அணைத்தனர். 12000 ஃபிராங்க் மதிப்பிலான பொருட்சேதம் இத் தீவிபத்தில் ஏற்பட்டுள்ளது. பொலிசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். கடந்த டிசம்பர் 20 அன்று கோட்ஹார்டு குகைப்பாதையில் காரும் சரக்குப் பெட்டக வண்டியும் மோதியது குறிப்பிடத்தக்கது

அதிர்ச்சியில் உறைந்து போனது மூதூர் பிரதேசம்!



மகளின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த தாய் நேற்று அதிர்ச்சியில் உறைந்து போனாள். அந்தத் தாயுடன் இணைந்து மூதூரும் சோகத்தில் உறைந்துபோனது.

மூதூர் ரிஸானா நபீக்கிற்கு நேற்று நண்பகல் நேரம் சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட தகவலை கேள்வியுற்ற ரிஸானாவின் தாய் செய்வதறியாது திகைத்து நின்றாள்; நம்ப மறுத்தாள். ரிஸானாவின் தந்தை மௌனித்தார். இரு தங்கைகளும் கதறி அழுதனர்.
ரிஸானாவின் தாய், தந்தை மட்டுமல்ல, இலங்கை வாழ் மக்கள் எவருமே நினைத்துப் பார்த்திருக்காத இந்தத் துயரச் சம்பவம் நேற்று இலங்கைக்கு அறியக் கிடைத்தபோது நாடே சோகத்தில் மூழ்கியது.
ரிஸானாவின் சொந்த ஊரான மூதூர் பிரதேசம் கதறியழுதது. உறைந்து போய்நின்ற ரிஸானாவின் தாய் துடியாய் துடித்தாள். தன் கையால் மார்பில் அடித்துக் கதறினாள்.
15 வருடங்கள் பாலூட்டி, சீராட்டி வளர்த்த தனது அன்பு மகளின் மரணம் இவ்வாறு அமைந்துவிட்டதே என எண்ணி விம்மினாள்.
ரிஸானாவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப் பட்டுவிட்டதை அறிந்த மூதூர் தொகுதி மக்களும், ஏனைய பிரதேச மக்களும் ரிஸானாவின் வீட்டை நோக்கி அலையாகத் திரண்டனர்.
பள்ளிவாசல்களில் விசேட துஆப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஜனாஸாத் தொழுகைகளும் நடத்தப்பட்டன. ரிஸானா விரைவில் விடுதலையாவாள் என்று போலி வாக்குறுதிகளை வழங்கி அரசியல் நடத்திய அரசியல்வாதிகளை ரிஸானாவின் இல்லத்தில் திரண்ட மக்கள் சாபம் உண்டாகட்டும் எனக் கூறி திட்டித் தீர்த்தனர்

வராத மாணவியை பள்ளியிலிருந்து நீக்கலாம். அமெரிக்க கோர்ட்

           
 

அமெரிக்க பள்ளிகளில், மாணவர்களின் நடமாட்டத்தை கண்டறிய, அடையாள அட்டையில் பொருத்தப்பட்டுள்ள, "மைக்ரோ சிப்' நடைமுறைக்கு, கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின், சில மாகாணங்களில் உள்ள பள்ளிகளில், அடையாள அட்டையில், "மைக்ரோ சிப்' பொருத்தப்பட்டு, ஜி.பி.எஸ்., தொழில்நுட்ப முறைப்படி, மாணவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

வகுப்புகள் துவங்குவதற்கு முன்னும், மணி அடித்த பிறகும், வராத மாணவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதை அறிந்து, அதற்கேற்ப, அவர்களது வருகை பதிவேட்டில், "பிரசன்ட்' அல்லது, "ஆப்சென்ட்' போடப்படுகிறது. கடந்த, 2005ம் ஆண்டே, கலிபோர்னியா மற்றும் ஹூஸ்டன் மாகாணங்களில், இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கடும் எதிர்ப்பால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆனால், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில், இந்த திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.
மாணவர்கள் கழிப்பறையில் இருந்தாலும், அவர்கள் சாப்பிடும் மதிய உணவில், என்னென்ன பதார்த்தங்கள் உள்ளன என்பதெல்லாம், "மைக்ரோ சிப்' மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. "இந்த நடைமுறையினால், எங்கள் தனிமை பாதிக்கப்படுகிறது' என, ஆன்ட்ரியா என்ற மாணவி, கோர்ட்டில் மனு செய்துள்ளார். "பள்ளி நிர்வாகத்தின் இந்த நடைமுறை, கிறிஸ்துவ மதப்படி தவறானது' என, ஆன்ட்ரியாவின் பெற்றோரும், கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் குறிப்பிடுகையில், "அடையாள அட்டையில் நாங்கள் பொருத்தியுள்ள, "மைக்ரோ சிப்' பள்ளி வளாகத்துக்குள் தான் வேலை செய்யும். ஆன்ட்ரியா சொல்வது போல, கழிப்பறையில் கூட, இந்த, "மைக்ரோ சிப்' சிஸ்டம் வேலை செய்வது சங்கடமாக இருந்தால், அடையாள அட்டையை கழற்றி வைத்துச் செல்லலாம்' என்றனர்.
இந்த மனுவை விசாரித்த டெக்சாஸ் கோர்ட் நீதிபதி ஆர்லேண்டோ கார்சியா, தீர்ப்பில் கூறுகையில், ""பள்ளியில், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள, "மைக்ரோசிப்' அடையாள அட்டையை அனைத்து மாணவர்களும் அணிந்து வரும் போது, ஆன்ட்ரியா மட்டும் எதிர்ப்பது ஏற்க முடியாது. இந்த நடைமுறையை ஆன்ட்ரியா பின்பற்றாவிட்டால், அவளை, பள்ளியிலிருந்து, நீக்க நிர்வாகத்துக்கு உரிமை உண்டு,'' என்றார்

புதன், 9 ஜனவரி, 2013

பூமியைப் போலவே 1700 கோடி கிரகங்கள்! {காணொளி}

அதிர்ச்சித் தகவல் பால்வெளி அண்டத்தில் மட்டுமே நமது பூமியின் அளவுடைய 1700 கோடி கிரகங்கள் இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விண்ணியலாளர்கள் கூறுகின்றனர். நமது சூரியனைப் போன்ற அளவு கொண்ட நட்சத்திரங்களை நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி ஆராய்ந்தது. அப்படியான நட்சத்திரங்களில் ஆறில் ஒன்றில் பூமியின் அளவுகொண்ட கிரகங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கலிஃபோர்னியாவில் உள்ள அமெரிக்க விண்ணியல் ஆராய்ச்சிக் குழுமத்தின் முன்பு இந்த ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பூமியை ஒத்த அளவில் ஏராளமான கிரகங்கள் இருந்தாலும், இவற்றில் பெரும்பான்மையானவை உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு அதிக வெப்பம் கொண்டவையாக இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டினர். ஒரு கோளத்தில் உயிர்கள் வாழ்வதற்கு, திரவ வடிவில் நீர் வேண்டும். ஆனாலும் ஆயிரங்கோடிக் கணக்கில் பூமியை ஒத்த கிரகங்கள் இருக்கின்றபடியால், பூமியைப் போல உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற அம்சங்களைக் கொண்ட கிரகம் ஒன்றை விண்ணியல் நிபுணர்கள் நிச்சயம் கண்டறிவார்கள் என்று பிபிசியிக் அறிவியில் துறை செய்தியாளர் கூறுகிறார் [காணொளி]

தாதியொருவரை பாலியலுக்கு அழைத்த சிங்கள மருத்துவர் கைது!

சிங்கப்பூர் ஷெங்கி பொது மருத்துவமனையொன்றில் தாதியொருவரை பல தடவைகள் பாலியல் வன்முறையாக தீண்ட முட்பட்ட இலங்கை மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் அவர் குறித்த தாதியை பாலியல் ரீதியாக அணுக முட்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. சேனக லியனகே எனப்படும் 37 வயதான மருத்துவர் 26 வயதான சிங்கப்பூர் தாதியை நேற்று முன்தினமும் இவ்வாறு பலவந்தமாக அணுகியதாக தாதி முறையிட்டதை அடுத்து மருத்துவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதேவேளை, இலங்கையில் மருத்துவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை திறனுடன் மேற்கொள்ளவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சின் செயலாளரை தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நவீன் டி சொய்சா இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், அண்மையில், இடம்பெற்ற சில சம்பவங்களின் போது, சுகாதார அமைச்சின் விசாரணை பிரிவு செயற்பட்ட விதம் தொடர்பில் இந்த தெளிவுபடுத்தல் வழங்கப்படவுள்ளது. விசாரணை என்ற பேரில் மருத்துவர்களுக்கு எதிராக பழிவாங்கல் இடம்பெற்றுள்ளன. இதனால் தற்போதுள்ள விசாரணைக் குழுவை களைக்க வேண்டும். எந்தவொரு குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளையும் ஒருவருடத்திற்குள் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நவீன் டி சொய்சா சுட்டிக்காட்டியுள்ளார்.

செவ்வாய், 8 ஜனவரி, 2013

துறைமுகத்தை வந்தடைந்த அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பல்!

அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பல் எச்எம்ஏஎஸ் அன்சாக், நேற்று நல்லிணக்க அடிப்படையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதனை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர். இக்கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்ட ஜோன் ஸ்ராவிரிடிஸ், மேற்கு கடற் பிராந்திய கட்டளைத்தளபதி ரியர் அட்மிரால் ரோஹான் அமரசிங்கவை மேற்கு கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். இருவருக்குமிடையே இருதரப்பு விவகாரங்கள் குறித்த விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது [புகைப்படங்கள்]
எச்எம்ஏஎஸ் அன்சாக் ஒரு போர்க்கப்பலாகும். இது கடற்படை ஹெலிகொப்டரை ஏற்றிச் செல்லக்கூடியது. 118 மீற்றர் நீளமுடைய இக் கப்பலில் 29 அதிகாரிகளும் 163 படையினரும் வருகை தந்துள்ளனர். எதிர்வரும் 9ம் திகதி வரை இது இலங்கையில் தரித்திருக்கும். இவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பல விசேட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வர் என இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேபோன்று நேற்று முன் தினம் இரு ஜப்பானிய கப்பல்களும் கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது

18 மில்லியன் தரம் குறைந்த போலி காண்டம்கள். சுகாதாரத்துறை??

இங்கிலாந்து முழுவதும் சுமார் 18 மில்லியன் போலி காண்டம்கள் சட்டத்திற்கு புறம்பாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் தேவையில்லாத கர்ப்பங்களும், பால்வினை நோய் பரவுவதற்கான அபாயம் இருப்பதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இங்கிலந்து அரசின் சுகாதாரத்துறை அதிகாரி நேற்று விடுத்த ஒரு எச்சரிக்கை அறிக்கையில், நாடு முழுவதும் சுமார் 18 மில்லியன் தரம் குறைவாக உருவாக்கப்பட்ட போலி காண்டம்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், இதை உபயோகிப்பவர்களுக்கு எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும், மேலும் தேவையில்லாத கர்ப்பங்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற போலி காண்டம்களை கடைகளில் விற்பனை செய்வதை தடை செய்து, காண்டம் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியுள்ளார். கடந்த 18 மாதங்களில்தான், இவ்வகையான போலி காண்டம்களின் இறக்குமதி அதிகரித்துள்ளதாகவும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் இங்கிலாந்து குடும்ப கட்டுப்பாடு அலுவலகம் தெரிவித்துள்ளது. Durex போன்ற தரமான நிறுவனத்தின் காண்டம்களை மட்டுமே உபயோகிக்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ள குடும்ப கட்டுப்பாடு அலுவலகம், போலி காண்டம்களை இனம் கண்டு, தவிர்க்குமாறு அறிவித்துள்ளது. மேலும் காண்டம் இறக்குமதி குறித்து புதிய வகையான சட்டதிருத்தம் செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது

பாணிபூரி சாப்பிடும் பழக்கம் உள்ளவரா? ஜாக்கிரதை!

  

இந்திய மாநிலமான மகாராஷ்டிரத்தில் பாணிபூரி விற்கும் நபர் தான் பயன்படுத்தும் பாத்திரத்தில் சிறுநீர் பிடிப்பதையும், பின்பு