This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
வெள்ளி, 12 ஏப்ரல், 2013
வியாழன், 11 ஏப்ரல், 2013
வெள்ளை மாளிகைக்கு அருகில் தரித்து நின்ற வாகனத்தால்,.,
வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. எனவே, இங்க பலத்த காவலுக்கும், கெடுபிடிகளுக்கும் பஞ்சமிருக்காது.ஆனால், அதையும் மீறி இன்று அதிபரின் வெள்ளை மாளிகை அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வாகனத்தால் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டடிருந்த அதிகாரிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் இன்று மூடப்பட்டன. மக்பர்சன் சதுக்கத்தில் உள்ள சுரங்க ரெயில் நிலையத்திற்கு செல்லும் பாதையும் அடைக்கப்பட்டது. வாகனம் யாருடையது என்பது குறித்து அதிகாரிகள் புலன் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளை மாளிகையின் இருபுறமும் செல்லும் பேருந்துப் போக்குவரத்தும் பாதிக்கப்படைந்தது.
அங்க நின்ற வாகனத்தால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
புதன், 10 ஏப்ரல், 2013
எதிரிகளை அழிக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணை: ??
சுமார் 900 கி.மீற்றர் வரை பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்கை அழிக்கவல்ல சக்தி வாய்ந்த 'ஹேட்ப்-4' ரக ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் இன்று நடத்தியுள்ளது.
'ஷாஹீன்-1' என்றும் அழைக்கப்படும் இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது என்றும் இன்றைய சோதனை வெற்றிகரமாக முடிந்தது எனவும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டிலிருந்து இதுவரை பாகிஸ்தான் ஏராளமான ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. அணு ஆயுதங்களை சுமந்தபடி 60 கி.மீற்றர் வரை பாய்ந்து செல்லக்கூடிய 'ஹேட்ப்-9', ஆயிரத்து 300 கி.மீற்றர் தூரம் வரை பாயும் 'ஹேட்ப்-5' உள்ளிட்ட ஏவுகணைகளை அந்நாடு இதுவரை சோதித்துள்ளது.
போர் திட்டங்களுக்கான லெப்டினன்ட் ஜெனரல் தலைவர்(ஓய்வு) காலித் அஹமத் கித்வாய், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளின் முன்னிலையில் பாகிஸ்தான் கடல் பகுதியில் இருந்து இன்றைய ஏவுகணை பரிசோதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
சிறுவனின் துப்பாக்கிச் சூட்டில் 6 வயது சிறுவன் ?
அமெரிக்காவில் 4 வயது சிறுவன் தனது வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து வைத்துக்கொண்டு பக்கத்து வீட்டு 6 வயது சிறுவனுடன் கடந்த திங்களன்று விளையாடி இருக்கிறான்.இதில் எதிர்பாராதவிதமாக அந்த துப்பாக்கியிலிருந்த குண்டு 6 வயது சிறுவனின் நெற்றியில் பாய்ந்து இருக்கிறது. இச்செய்தி சுட்டவனின் தாயாருக்கு தெரியவர, உடனடியாக மீட்புக்குழுவினருக்கு தெரிவித்து இருக்கிறார். அங்கு வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடுமையாக பாதிக்கப்பட்ட அச்சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அச்சிறுவன் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிகளை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் கொண்டுவர நாடு தழுவிய விவாதங்கள் நடைபெறும் நிலையில் இதுபோன்று சம்பவம் நடந்துள்ளது. இதனால், உயிருக்கு பங்கம் விளைவிக்கும் பொருட்களை பாதுகாப்பாக வைக்கத்தவறிய பெற்றோர் மீது இப்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது
செவ்வாய், 9 ஏப்ரல், 2013
பிரான்ஸ் படைகள் நடத்திய பயங்கர???
ஆப்பிரிக்காவின் மேற்கே அமைந்துள்ள மாலி நாட்டில் கடந்த 2012ம் ஆண்டு முதல் அரசுக்கெதிராக போராளிகள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.
இதில் மாலி அரசுக்கு ஆதரவாக பிரான்ஸ் அரசு, தமது படை வீரர்களை அனுப்பியது. எனவே இப்படைகள் மாலி அரசு இராணுவத்துடன் இணைந்து போராளிகள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி ஒடுக்கியது.
ஆனால் பதுங்கியுள்ள போராளிகள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் பிரான்ஸ் அரசு தனது 4000 படை வீரர்களின் 1000 படை வீரர்களை நிரந்தரமாக மாலியில் நிறுத்தவும், மீதி இருக்கும் 3000 படை வீரர்களை இம்மாத இறுதிக்குள் திரும்பப்பெறவும் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 1000 ராணுவ வீரர்கள் கொண்ட பிரான்ஸ் படை 'ஆபரேஷன் கஸ்டாவ்' என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலை, மாலியின் கோவா நகரத்தில் நடத்தியது.
பிரான்ஸ் ராணுவம் இதுவரை நடத்திய தாக்குதல்களிலேயே மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். இதில் அதிக அளவில் டாங்கிகள், ஹெலிகொப்டர்கள், போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இஸ்லாமிய குழுக்களின் கோட்டையாக கருதப்படும் மலைகள் சூழ்ந்த பகுதிகளில் பிரான்ஸ் படைகள் இந்த தாக்குதல் நடத்தி போராளிகளின் 340 பீரங்கி குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் வாகனங்களை கைப்பற்றியுள்ளதாகவும், மேலும் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வழிகளையும் மூடிவிட்டதாகவும் பிரான்ஸ் அரசு கூறியுள்ளது.
இதில் போராளிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் இல்லை. இந்த தகவலை நேற்று பிரான்ஸ் அரசு வெளியிட்டது
போர்: அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த சுவிஸ்.,.
வடகொரியா தென்கொரியா நாடுகளுக்கிடையே தற்பொழுது போர் மூளும் சூழ்நிலையில் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசும் இடமாக சுவிட்சர்லாந்தது அமையும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது.
வடகொரியா அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் சுவிட்சர்லாந்தில் நடத்தலாம் என்று வெளியுறுவுத்துறையின் தகவல் தொடர்பாளி, சுவிஸ் நியுஸ் ஏஜென்சிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா தனது மூன்றாவது அணு ஆயுத சோதனையை நடத்தியதால் ஐ.நா அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.
இதனால் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா தென்கொரியாவில் படைவீரர்களுக்கு ராணுவப் பயிற்சி அளித்ததின் பெயரில் போருக்கான அறை கூவல் வடகொரியாவிடமிருந்து வந்ததுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு வடகொரியா சென்று வந்த சுவிஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் மிச்சலீன் கேமி ரே(Micheline Calmy-Rey) ஊடகத்திற்கு அளித்துபேட்டியில், அந்நாடு வெடிபொருள் கிடங்காகத் திகழ்கிறது என்றும் ஒரு தீப்பொறி விழந்தால் போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வடகொரியா, வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் தமது தாயகம் திரும்பலாம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வடகொரியா போருக்குத் தயாராகி வருவதை உணர்த்துகிறது.
இதனால் வடகொரியாவில் இருக்கும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை தாயகம் திரும்ப தேவையான ஏற்பாடுகளை சுவிஸ் செய்து கொடுக்கும் என்று சுவிஸ் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
மேலும் சுவிஸ் வெளியுறுவத்துறை தனது இணையதளத்தில் இருந்து பயணிகள் வடகொரியாவிற்குச் செல்வதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளன
திங்கள், 8 ஏப்ரல், 2013
அமெரிக்கா- பாகிஸ்தான் இடையே ரகசிய ஒப்பந்தம்
|
ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவது தொடர்பாக பாகிஸ்தான்- அமெரிக்கா இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில், பாகிஸ்தான் தனது மண்ணில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு அனுமதி அளித்துள்ளது. எனினும் தனது அணுசக்தி திட்டங்கள், காஷ்மீர் தீவிரவாதிகள் பயிற்சி பெறும் மலைப்பிரதேசங்கள் மீது ஆளில்லா விமானங்கள் பறக்கக் கூடாது என்ற நிபந்தனைகளின் பேரில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. மற்றும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனங்கள் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மேற்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் மட்டும் ஆளில்லா விமானத்தை இயக்கலாம் என அனுமதி தரப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆளில்லா விமானத் தாக்குதலின் போதும் பாகிஸ்தானிடம் அனுமதி பெற வேண்டும். தாக்குதல் இலக்கு குறித்தும் தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கன் தலிபான்களின் நெருங்கிய கூட்டாளியான பாகிஸ்தான் பழங்குடியின தலைவர் நெக் முகமதுவை கொல்ல சிஐஏ ஒப்புக் கொண்ட பின்னரே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக புஷ் இருந்த போது தொடங்கப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்கள் தற்போதைய அதிபர் ஒபாமா காலத்திலும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது |
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
விமானப்படை தாக்குதலுக்கு 10 குழந்தைகள் உள்பட
ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் தீவிரவாதிகளை வேட்டையாட நேட்டே விமானப்படை தாக்குதல் நடத்தியது. ஷிகால் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் ஆப்கானிஸ்தான் ராணுவப் படைகளுக்கும் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டை தீவிரமடைந்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு நேட்டோ விமானப்படை அழைக்கப்பட்டது.
விரைந்து வந்த நேட்டோ விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 10 குழந்தைகள், 1 பெண் உள்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பலியாகினர்.
படுகாயமடைந்த 6 பெண்கள் குனார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஷிகால் மாவட்ட கவர்னர் அப்துல் ஜாகிர் தெரிவித்தார்
விரைந்து வந்த நேட்டோ விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 10 குழந்தைகள், 1 பெண் உள்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பலியாகினர்.
படுகாயமடைந்த 6 பெண்கள் குனார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஷிகால் மாவட்ட கவர்னர் அப்துல் ஜாகிர் தெரிவித்தார்
ராஜபக்சே எச்சரிக்கை !
சர்வதேச நாடுகள் இலங்கையில் அமைதியைக் குலைக்க முயற்சிக்கக் கூடாதாம் : ராஜபக்சே எச்சரிக்கை !
கொழும்பு: சர்வதேச நாடுகள் இலங்கையில் அமைதியைக் குலைக்க முயற்சிக்கக்கூடாது என இலங்கை அதிபர் ராஜபக்சே எச்சரிக்கை விடுத்துள்ளாராமில ! கொழும்பில் நடைபெற்ற இலங்கை சுதந்திரா கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், இலங்கை மக்கள் வதந்திகளுக்குப் பலியாகாமல் நாட்டின் அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் இறுதிப்போர் நடந்தபோது இலங்கைக்கு பல்வேறு நாடுகள் நெருக்கடி கொடுத்ததாக தெரிவித்த அவர், தற்போது வடக்கு மற்றும் தெற்குப் பகுதி மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதாகத் தெரிவித்தார். இந்த நிலையில் உள்நாட்டு அமைதியை சீர் குலைக்கும் வகையில் அரசியல் கட்சிகளோ, தனி நபர்களோ செயல்படக் கூடாது என்றும் ராஜபக்சே எச்சரித்தார்.
ஐ.நா தீர்மானத்தை சில நாட்களில் செயல்படுத்தாவிட்டால் நடவடிக்கை என்று அமேரிக்கா எச்சரிக்கை விடுத்த நிலையில் ராஜபக்சே இந்த மிரட்டலை விடுத்துள்ளார். நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியாவும் வலியுறுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமிழ் நாடு சட்டமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணத்தை மத்திய அரசு ஏற்றுக்கொளவில்லை என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது.
கொழும்பு: சர்வதேச நாடுகள் இலங்கையில் அமைதியைக் குலைக்க முயற்சிக்கக்கூடாது என இலங்கை அதிபர் ராஜபக்சே எச்சரிக்கை விடுத்துள்ளாராமில ! கொழும்பில் நடைபெற்ற இலங்கை சுதந்திரா கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், இலங்கை மக்கள் வதந்திகளுக்குப் பலியாகாமல் நாட்டின் அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் இறுதிப்போர் நடந்தபோது இலங்கைக்கு பல்வேறு நாடுகள் நெருக்கடி கொடுத்ததாக தெரிவித்த அவர், தற்போது வடக்கு மற்றும் தெற்குப் பகுதி மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதாகத் தெரிவித்தார். இந்த நிலையில் உள்நாட்டு அமைதியை சீர் குலைக்கும் வகையில் அரசியல் கட்சிகளோ, தனி நபர்களோ செயல்படக் கூடாது என்றும் ராஜபக்சே எச்சரித்தார்.
ஐ.நா தீர்மானத்தை சில நாட்களில் செயல்படுத்தாவிட்டால் நடவடிக்கை என்று அமேரிக்கா எச்சரிக்கை விடுத்த நிலையில் ராஜபக்சே இந்த மிரட்டலை விடுத்துள்ளார். நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியாவும் வலியுறுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமிழ் நாடு சட்டமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணத்தை மத்திய அரசு ஏற்றுக்கொளவில்லை என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது.
சனி, 6 ஏப்ரல், 2013
இராணுவ எல்லைமுகாமை போராளிகள் கைப்பற்றினர்
சிரியாவில் ஆட்சி மாற்றம் வேண்டி அதிபர் ஆசாத் ஆட்சிக்கு எதிராக போராளிகள் கடந்த 2 வருடங்களாக சண்டையிட்டு வருகின்றனர்.
இந்த சண்டையில் இதுவரை அங்கு 75000 மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜோர்டான் எல்லைப்பகுதியில் உம் அல் மயாதென் ராணுவ முகாமில் இருந்த அதிபர் ஆசாத்தின் படையினருடன் போராளிகள் கடந்த ஒரு வாரகாலமாக தீவிர சண்டையிட்டனர்.
அதன் பிறகு அவர்களை விரட்டியடித்து, பின்னர் அப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக போராளிகள் அறிவித்துள்ளனர்.
இந்த சண்டையில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றிய முழுவிவரங்கள் கிடைக்கவில்லை என்று மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

























