siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 13 ஜூலை, 2013

இறந்த நபர் மேயராக தெரிவான அதிசயம் !!!

மெக்சிகோவில் இறந்த நபர் ஒருவர் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு மெக்சிகோவில் உள்ள ஓயாகசா நகருக்கு அருகே உள்ளது சான் அகஸ்டின் அமாடென்கோ என்ற கிராமம்.
இந்த கிராமத்தில் மேயரை தெரிவு செய்வதற்கான நடந்த தேர்தலில், லெனின் கார்பெல்லிடோ என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், லெனின் கடந்த 2010ம் ஆண்டு இறந்துவிட்டதாக வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ் கிடைத்துள்ளது தான்.
அதன் பிறகு தான் லெனின் போலியாக இறப்புச் சான்றிதழ் வாங்கியது தெரிய வந்தது.
முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு லெனின் மற்றும் 4 பேர் சேர்ந்து தன்னை கற்பழித்ததாக பெண் ஒருவர் பொலிசில் புகார் கொடுத்தார்.
இந்த வழக்கில் கைதாவதில் இருந்த தப்பிக்க லெனின் இறந்துவிட்டதாக அவரது இறப்பு சான்றிதழை பொலிசாரிடம் அவரது உறவினர் ஒருவர் காட்டியுள்ளார்.
இறந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஒருவர், மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

அந்தரங்க உறுப்புகளை சோதனையிட தடை

குவாண்டோமோ பே தடுப்பு முகாமில் உள்ள கைதிகளின் அந்தரங்க உறுப்புகளை சோதனையிட வாஷிங்டன் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின் குவாண்டோமோ பே தடுப்பு முகாமில் சுமார் 160க்கும் மேற்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்களது வழக்கறிஞர்களை சந்தித்த பின்னரும், அவர்களுடன் தொலைபேசியில் உரையாடிய பின்னரும் மிக கேவலமான சோதனைக்கு உள்ளாவதாக புகார் எழுந்தது.
மேலும் பாதுகாப்பு காரணங்களை காட்டி அவர்களது அந்தரங்க உறுப்புகளை இராணுவத்தினர் சோதனை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இவ்வாறான சோதனைகள் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், பழைய முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தாங்கள் மிக மோசமான சோதனைகளுக்கு ஆளாவதை கண்டித்து கைதிகள் பலரும் உண்ணாவிரதம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது

வியாழன், 11 ஜூலை, 2013

பென்ஸ் கார்களுக்கு பிரான்சில் தடை

ஜேர்மனியின் புதியரக மெர்டிஸ் பென்ஸ் கார்களுக்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது.
கடந்த ஜனவரி ஒன்று முதல் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு, புதியதாக உருவாக்கப்படும் கார்களில் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத ஆர்1234 ஒய் எப் வகை குளிர்சாதனக் கருவிகளையே உபயோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஆனால் ஜேர்மனியின் பென்ஸ் உற்பத்தி நிறுவனமான டெய்ம்லர் நிறுவனம், இந்த வகை குளிர்சாதனக் கருவிகளில் உள்ள வாயு எளிதில் தீப்பற்றிக் கொள்ளும், விபத்து நேரிட்டால் கார் வெடித்துச் சிதறிவிடும் வாய்ப்பும் உண்டு என்று தெரிவித்துள்ளது.
அதனால், இந்த நிறுவனம் வாடிக்கையாளரின் பாதுகாப்பிற்கு நம்பகத்தன்மை கொண்ட பழைய வகையான ஆர் 134ஏ குளிர்சாதனக் கருவிகளையே தொடர்ந்து புதிய ரகங்களிலும் உபயோகப்படுத்துகின்றது.
இந்நிலையில் இந்த வகை கார்களுக்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது.
ஆனால் மற்ற எந்த ஐரோப்பிய நாடுகளும் தங்களின் புதிய ரக கார்களுக்குத் தடை விதிக்கவில்லை என்று டெய்ம்லர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஐரோப்பிய யூனியனின் செயல்பிரிவான ஐரோப்பிய கமிஷன் சென்ற மாதம், ஜேர்மன் நிறுவனம் தொடர்ந்து பழைய ரக குளிர்சாதனக் கருவிகளையே தங்கள் வாகனங்களில் உபயோகிக்குமானால் பொருளாதாரத் தடை விதிக்கப்பபோவதாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது
 
பெண் கல்லால் அடித்து கொலை: பாகிஸ்தானில் பயங்கரம்

பாகிஸ்தானில் செல்போன் வைத்திருந்த பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் தேரா காஜி கான் என்ற கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார்.
இது குறித்த தகவல் தெரியவந்ததும், அந்த ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டது.
பின்னர் பஞ்சாயத்து உத்தரவை மீறி செல்போன் பயன்படுத்தியதற்காக 2 குழந்தைகளுக்கு தாயான அப்பெண்ணை கல்லால் அடித்துக் கொல்லுமாறு பஞ்சாயத்தார்கள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து அப்பெண்ணை அவரது மாமா மற்றும் உறவினர்களே கல்லால் அடித்துக் கொன்றனர்.
இத்தகவலை கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்கள் இரண்டு பேர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தை சேர்ந்த 3 பேர்களுக்கு எதிராக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதன், 10 ஜூலை, 2013

இந்திய தேசத்தின் சுதந்திர போராட்ட வரலாறு

இங்கிலாந்து பாடப்புத்தகத்தில் இந்திய தேசத்தின் சுதந்திர போராட்ட வரலாறு இடம்பெற உள்ளது.
அதாவது பள்ளியில் பயிலும் 5 முதல் 16 வயது வரையிலான மாணவர்களின் பாடப்புத்தகத்தில் தான் இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு இடம்பெறப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு அறிவிக்கப்படும்.
இப்புதிய பாடத்திட்டம் அடுத்தாண்டு செப்டம்பர் முதல் அமலில் வரும் என்றும், இதற்கு பிரிட்டிஷ் பாடத்திட்டத்தில் புதிய அத்தியாயம் எனவும் பெயரிட்டுள்னர்.
மேலும் இங்கிலாந்து 1901ம் ஆண்டு முதல் இதுவரையிலும் கடந்து வந்த பாதை மாணவர்களுக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும் என்பதே இப்பாடத் திட்டத்தின் நோக்கம் எனவும் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்
 
செவ்வாய், 9 ஜூலை, 2013

வேலையில்லா திண்டாட்டத்தில் தவிக்கும் ஜேர்மன் மக்கள்

 ஜேர்மன் நாட்டு மக்கள் வேலையின்மை மற்றும் பணம் பற்றாக் குறைவு குறித்து மிகுந்த கவலையில் இருப்பதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேலையில்லா திண்டாட்டம் குறித்து 7 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 72 சதவீதம் ஸ்பானிஷ் (Spanish), 69 சதவீதம் பிரான்ஸ் (France), மற்றும் 32 சதவீதம் ஜேர்மன் (German) மக்கள் இந்த ஆய்வு குறித்து பதிலளித்துள்ளனர்.
ஐரிஸ்(Irish) மற்றும் ஸ்வேட்ஸ்(Swedes) நாடுகள் மிகவும் கவனமாக இருந்ததாகவும் ஆனால் ஜேர்மன் நாடானது வேலையின்மை குறித்து மிகவும் கவலையில் இருப்பதாக இலாப நோக்கமற்ற சந்தை ஆராய்ச்சி குழு தகவல் தெரிவித்துள்ளது.
ஒட்டு மொத்தமாக இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளின் சதவீதமானது ஜேர்மன் நாட்டினருக்கு 2.5 பிரச்சனைகளும் மற்றும் ஐரிஸ்(Irish), ஸ்வேடஸ்(Swedes) நாட்டினருக்கு 1.2 பிரச்சனைகள் இருப்பதாக அந்நாட்டினர் பதிலளித்துள்ளனர்.
ஐரோப்பா முழுவதும் உள்ள 10 பிரச்சனைகளில் முக்கியமானதாக வேலையின்மை, பணவீக்கம், பொருளாதார பற்றாக்குறை, வீட்டு வாடகை மற்றும் கல்வி, ஊழல் என்று இந்த மாதிரியான பிரச்சனைகளே அதிகம் காணப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் இன்றியமையாத பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் ஐரோப்பாவில் 2013ம் ஆண்டிற்கான இன்றியமையாத பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்யப்படவில்லை.
ஐரோப்பாவில் ரஷ்யா மற்றும் நெதர்லாந்து நாடுகளைத் தவிர 37 சதவீதம் பேர் வேலையின்மை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
மேற்கொண்ட ஆய்வானது 13,300 மக்களிடம் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆஸ்திரியா, ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போலந்து, ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளடங்கியுள்ளன.
முதன்முறையாக அயர்லாந்து நாடானது இந்த ஆய்வில் சேர்த்துக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இலங்கைச் சிறுவன் அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில்

11 வயதான இலங்கைச் சிறுவன் ஒருவன் அவுஸ்திரேலியாவின் தஸ்மானியா  தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோரியதனால் இவ்வாறு சிறுவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

குறித்த சிறுவன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தஸ்மானியா ஹோபார்ட் முகாமிற்கு அண்மையில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் டோனி புர்க்கே விஜயம் செய்துள்ளார். குறித்த தடுப்பு முகாம் சிறுவர்களை நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்க உகந்ததல்ல எனத் தெரிவித்துள்ளார்.

11 வயதான இலங்கைச் சிறுவனை தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

திங்கள், 8 ஜூலை, 2013

இடைக்கால பிரதமரை நியமிப்பது குறித்து ஆலோசனை

எகிப்து நாட்டில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரியாக இருந்த, ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக, 2011ம் ஆண்டு, மிகப் பெரிய மக்கள் புரட்சி ஏற்பட்டது.
பல மாதங்கள் நீடித்த போராட்டத்தில், முபாரக் பதவியி லிருந்து தூக்கி எறியப்பட்டார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த, முகமது முர்சி, அதிபராக பொறுப்பேற்றார். முகமது முர்சி பதவி ஏற்று ஓராண்டாகியும், நாட்டின் நிலை சீரடையாததால், மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுக்கு எதிராக, தலைநகர் கெய்ரோவில் உள்ள, தாஹிர் சதுக்கத்தில், சமீபத்தில், இரண்டு லட்சத்திற்கும் அதிக மானவர்கள் கூடி, முர்சி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த விஷயத்தில் முர்சி உரிய நட வடிக்கை எடுக்காததால், கடந்த வாரம், இராணுவப் புரட்சி மூலம், அதிபர் பதவியிலிருந்து முர்சி தூக்கி எறியப் பட்டார். தற்போது அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் புதிய இடைக்கால ஜனாதிபதியாக தலைமை நீதிபதி, மன்சூர் பொறுப்பேற்றுள்ளார்.
எகிப்துநாட்டில் ஜனநாயகம் கோரி போராடியவர்களில்,சர்வதேச அணுசக்தி முகமையகத்தின் முன்னாள் தலைவர், முகமது அல் பாராடியும் ஒருவர்.
எகிப்தில் ராணுவப் புரட்சி மூலம் முர்சி அரசு நீக்கப்பட்டது, ஏற்றுக் கொள்வதற்கு கடினமான விஷயம் தான். எனினும்,உள்நாட்டு கலவரம் ஏற்படுவதைத் தடுக்க வேறு வழியில்லை என, எல்பாராடி தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே அல் பாராடி, எகிப்து இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.
இந்த தகவலை, அந்நாட்டு இடைக்கால ஜனரதிபதி மன்சூர் மறுத்துள்ளார். புதிய பிரதமரை நியமிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்

இளவரசன் மரணம் தமிழினத்திற்கு ஏற்பட்ட இழிவு-நாம் தமிழர் கட்சி!

ஏற்பட்ட பெரும் துயரம் என்பது மட்டுமின்றி அது காதலையும் வீரத்தையும் போற்றும் எம் தமிழ் தேசிய இனத்தின் மாண்பிற்கும் பண்பாட்டிற்கும் ஏற்பட்ட ஒரு இழிவாகும்.
தமிழினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் ஒரு இளைஞனுக்கும் இடையே இயற்கையாகவும் இயல்பாகவும் ஏற்பட்ட ஒரு உறவை சாதியமாக்கி அரசியலாக்கியதன் விளைவு அது முதலில் திவ்யாவின் தந்தையையும் இப்போது அவரை காதலித்து மணமுடித்த இளைஞர் இளவரசனையும் பலிகொண்டுள்ளது பெரும் வேதனையாகும்.
தமிழர் இலக்கியத்தில் காதல் போற்றப்படுகிறது தமிழர் வாழ்வியலில் வீரத்திற்கு இணையான உன்னத இடம் காதலுக்கு தரப்பட்டுள்ளது நமது கல்வியிலுன் கூட காதல் இலக்கியங்கள் இடம்பெறுகின்றன காதலை மையக் கருவாக வைத்து வெளியான பல நூற்றுக்கணக்கான தமிழ்த் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றதோடு காலத்தால் அழியாத காவியங்களாக இன்றளவும் போற்றப்படுகின்றன. இப்படி தமிழரின் வாழ்வியலில் நீக்கமுடியாத ஒரு இடத்தைப் பெற்ற காதல் இன்றைக்கு தமிழினத்தை கூறுபோடும் சாதியப் பகைக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் தமிழினத்தின் ஒற்றுமைக்கும் ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் அதற்கு முழு முதற் காரணம் திவ்யா – இளவரசன் காதல் உரிய வகையில் கையாளப்படாததும் தாங்கள் செய்துவரும் அரசியலுக்கான கருவியாக ஆக்கப்பட்டதே. சமூக நீதிக்காக அரசியல் செய்யலாம் அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் சாதிக்காக அரசியல் செய்வதை ஒரு நாகரீக சமூகம் ஏற்றுக்கொள்ளலாகுமா?
தமிழ்நாட்டின் சமூக வாழ்வில் ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கான காதலர்கள் பெற்றோர்களின் சம்மதத்துடனும் ஆதரவுடனும் மணம் செய்துகொண்டுதான் வருகிறார்கள். ஆனால் சில காதல் திருமணங்கள் மட்டுமே இப்படி சாதிய பார்வையாலும் தங்கள் சாதியின் மாண்பைக் காக்க புறப்பட்ட சாதிய அரசியல்வாதிகளாலும் பிரச்சனையாக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட பிரச்சனைகள் தமிழினமும் தமிழ்நாடும் தன்னை எதிர்நோக்கியுள்ள பல்வேறு பெரும் சிக்கல்களுக்காக போராட ஒன்றுபட்டு நிற்க வேண்டிய அடிப்படையை தகர்த்து விடுகிறது.
இதனை தமிழின மக்கள் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும் அதிலும் குறிப்பாக இளைய சமூதாயம் நம் இனத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் சக்திகளை அவைகளின் அரசியலை ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். நம்மை பிளக்கும் சாதிய சக்திகளையும் அவைகள் உருவாக்கும் கீழ்த்தரமான உணர்வுகளையும் புறந்தள்ளிட வேண்டும். இதனை செய்யத் தவறினால் தமிழனுக்கு என்று ஒரு அரசியலை உருவாக்கும் நமது முயற்சியும் நம் இனத்தின் விடுதலையும் உரிமை மீட்பும் கேள்விக்குறியாகிவிடும் என்பதை தமிழினத்திற்கு நாம் தமிழர் கட்சி வலியுறுத்திக் கூற கடமைபட்டுள்ளது

இளவரசன் மரணம் தமிழினத்திற்கு ஏற்பட்ட இழிவு-நாம் தமிழர் கட்சி!

தர்ம்புரியைச் சேர்ந்த இளைஞர் இளவரசனின் மரணம் அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பெரும் துயரம் என்பது மட்டுமின்றி அது காதலையும் வீரத்தையும் போற்றும் எம் தமிழ் தேசிய இனத்தின் மாண்பிற்கும் பண்பாட்டிற்கும் ஏற்பட்ட ஒரு இழிவாகும்.