siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 21 ஜூலை, 2013

சிறைக் கைதிகளை விடுதலை செய்ய இஸ்ரேல் முடிவு


இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை ஏற்படுவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக இஸ்ரேல் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தங்கள் நாட்டு சிறையில் இருக்கும் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கடந்த சில மாதங்களுக்குள் ஆறாவது முறையாக இஸ்ரேலுக்கு வந்தபோது, நடந்த நான்கு நாட்கள் பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த முடிவு எட்டப்பட்டது.
இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில்,
ஜோன் கெரி அடுத்த வாரத்தில் இதுகுறித்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வாஷிங்டனில் தொடங்கலாம் என்று அறிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டினால்தான், மற்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதால் ஜான் கெர்ரி இதில் தீவிரமாக முயற்சி செய்தார் என்று பத்திரிகையாளர் செய்தி தெரிவிக்கின்றது.
இஸ்ரேலிய மனித உரிமை கழகத்தின் கணக்கீட்டின்படி 4,817 பாலஸ்தீனியர்கள் கைதிகளாக உள்ளதாகவும், அவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரியவருகின்றது.
பாலஸ்தீனியர்களும் அவர்கள் தரப்பில் கடந்த ஒன்பது மாதங்களாக சமரசப் பேச்சுவார்த்தைக்கு முயற்சித்து வந்ததாக பிரதமர் லிகட் பெடிநோவின் கட்சி உறுப்பினரான ஸ்டெய்னிட்ஸ் தெரிவித்தார். ஆனால், இஸ்ரேலால் ஆக்ரமிக்கப்பட்ட வெஸ்ட்பேங்க் மற்றும் கிழக்கு ஜெருசலேமில் நடைபெறும் கட்டுமானத் தீர்வு நிறுத்தம் போன்ற பாலஸ்தீனத்தின் முன் நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்க மறுத்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
கட்டுமான நிறுத்தம் அல்லது இஸ்ரேலின் சலுகைகளோ, எல்லைகளோ வரையறுக்கப்படும் முன்னால் பாலஸ்தீனம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாது என்றும் அவர் கூறினார்.
கடந்த 2010ஆம் ஆண்டு இரண்டு நாடுகளும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது கட்டுமானப்பணிகள் குறித்த விஷயத்தில் உடன்படிக்கை ஏற்படாததால் பேச்சுவார்த்தை நின்றுபோனது. இத்தகைய கட்டுமானங்கள் சர்வதேச விதிகளுக்கு முரணானவை என்றபோதிலும் இஸ்ரேல் அதனை மறுத்துள்ளது

சிறை விலைமாதர்களை விலை கொடுத்து வாங்கிய!!


இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோயின் மூன்று உதவியாளர்கள் விலைமாதர்களை விலைகொடுத்து வாங்கிய குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவருக்கும் ஐந்து தொடக்கம் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
17 வயதான பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கென பணம் வழங்கிய குற்றச்சாட்டில் சில்வியோ பெர்ஸ்கோனிக்கு கடந்த மாதம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் தம்மீதான குற்றச்சாட்டை சில்வியோ பெர்லஸ்கோனியும், குறித்த 17 வயதுப் பெண்ணும் நிராகரிப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.
இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள போதிலும், அவர் தொடர்ந்தும் சுதந்திரமாக நடமாடுவதுடன், பாராளுமன்ற உறுப்பினராகவும்

ஆடம்பர திருமணம்: சீன தலைவர் கட்சியிலிருந்து?


மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் நடத்திய, சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர், பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் புதிய அதிபர் சி ஜின்பிங், கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
சீனாவின், ஹீபி மாகாணத்தின், பிங்டிங்பாவ் நகர கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலராக இருந்தவர் யூ ஷû வாங். சமீபத்தில், இவரது மகளுக்கு, 20 லட்சம் ரூபாய் செலவில் திருமணத்தை நடத்தினார்.
திருமணத்தின் போது ஏராளமான மொய் பணமும், அன்பளிப்புகளும் கிடைத்தன.
கட்சியின் சிக்கன நடவடிக்கையை மீறி செயல்பட்டதாக, இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இவர் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
திருமணத்தின் போது கிடைத்த மொய் பணம் மற்றும் அன்பளிப்புகளை திருப்பிக் கொடுக்கும்படி, அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

சனி, 20 ஜூலை, 2013

தீவிரவாதியின் 5 குழந்தைகள் குண்டு வெடித்து ?


ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதி தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த குண்டு வெடித்து ஒரு தீவிரவாதியின் குடும்பமே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாத கும்பலான தலிபான் இயக்கத்தின் பக்திக்கா மாகாண தளபதியாக இருப்பவன் அப்துல்லா. அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை கொல்லும் நோக்கத்தில் நேற்று முன்தினம் தனது வீட்டில் அப்துல்லா ரகசியமாக வெடி குண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தான்.
குண்டுகளை காய வைத்துவிட்டு அப்துல்லா வெளியே சென்றிருந்தபோது அவனது குழந்தைகள் அந்த வெடி குண்டுகளை எடுத்து பந்து போல் உருட்டி விளையாடின. சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனையடுத்து, மற்ற குண்டுகளும் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இந்த விபத்தில் அப்துல்லாவின் வீட்டில் இருந்த ஒரு பெண்ணும் அவனது 5 குழந்தைகளும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலியான குழந்தைகள் 3 முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ஒன்றிய கண்காணிப்பாளர்களை அழைக்கவும்-


 ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தேர்தல் கண்காணிப்பாளர்களை கொண்டுவருமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
தேர்தல் கண்காணிப்பாளர்கள் என்ற வகையில் அவர்களுக்கு உலகளாவிய அங்கீகாரம் உள்ளதால் அவர்கள் கருத்துக்கு கூடிய நம்பகத்தன்மை இருக்கும். இதை நாம் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம் என்று பவ்ரல் அமைப்பின் தலைவர் ஜெஸிமா இஸ்மெயில் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணையாளருடன் நான் தொடர்புகொண்டபோது ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் வரும் சாத்தியம் இன்னும் உள்ளது என்றும். ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளிலிருந்து கண்காணிப்பாளர்களை அழைப்பதை தான் நிராகரிக்கவில்லையென பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் றோகன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
சுதந்திர தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பைச்சேர்ந்த நேபாளம் பங்களாதேஷ் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் 10 பேரை பவ்ரல் அழைக்கவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
'ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு தேர்தல் செயன்முறையில் பங்குபற்றுவதற்கு பிரஜைகளை இணைத்துக்கொள்ளல்' எனும் திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் 88 677 அமெரிக்க டொலர்களை வழங்கும்போதே பவ்ரவ் அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு ஜப்பானிய தூதரகத்தில் நேற்று நடைபெற்றது. வட மாகாண சபைத்தேர்தலுக்காக 4500 தேர்தல் கண்காணிப்பாளர்களை பயிற்றுவிப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது

வியாழன், 18 ஜூலை, 2013

குழந்தை பிறக்க தாமதம் ஏன் கேத் மிடில்டனுக்கு ?


இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியும், நிறைமாத கர்ப்பிணியுமான கேத் மிடில்டன் பிரசவத்திற்காக லண்டன் செயிண்ட்மேரிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு கடந்த வாரம் சனிக்கிழமை குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது, இதனால் போனில் எப்போது தகவல் வரும் என அரச குடும்பமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
இதேபோன்று பிறக்க போகும் குழந்தையும், தாயையும் புகைப்படம் எடுப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த பத்திரிக்கையாளர்களும், புகைப்பட நிபுணர்களும் குவிந்துள்ளனர்.
இதற்கிடையே ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா? என்று பெரிய அளவில் சூதாட்டமே நடக்கிறது.
மேலும் குழந்தை பிறப்புக்காக ராணுவத்தில் இருந்து விடுமுறையில் வந்துள்ள இளவரசர் வில்லியம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சகோதரர் ஹாரியுடன் போலோ விளையாடி பொழுதை கழிக்கிறார்

சேர்க்கையாளர்கள் திருமண சட்டமூலத்திற்கு மகாராணி ""


இங்கிலாந்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துக்கொண்டு சேர்ந்து வாழ்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வந்தது.
பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் சில மாநிலங்கள் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு அங்கீகாரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை வலுப்பெற்றது.
இதுதொடர்பாக ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கிடையே கருத்து பேதம் ஏற்பட்டதால் இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடித்தது. பல ஆண்டு கால தடைகளை முறியடித்து பாராளுமன்ற கீழ்சபையில் ஓட்டெடுப்பின் மூலம் இந்த மசோதா வெற்றி பெற்றது.
மேல்சபையான பிரபுக்கள் சபையில் சிறிய விவாதத்திற்கு பின்னர் ஓட்டெடுப்பு இல்லாமல் இந்த மசோதா நிறைவேறியது.
இங்கிலாந்து நாட்டு சட்டப்படி, எல்லா மசோதாக்களும் இங்கிலாந்து ராணியின் ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டமாக முடியும். எனவே, இந்த சட்ட மசோதா ராணியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இந்த மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்கான அறிவிப்பு நேற்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட போது எம்.பி.க்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இதனையடுத்து, ஓரின சேர்க்கையாளர்கள் தேவாலயங்களில் திருமணம் செய்துக்கொண்டு சேர்ந்து வாழ்வதற்கு இங்கிலாந்தில் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் அடுத்த (2014) ஆண்டு துவக்கத்தில் முதல் ஓரினச் சேர்க்கையாளர் திருமணம் இங்கிலாந்தில் நடைபெறும் என தெரிகிறது

5520 லட்சம் கோடி ரூபாய் கணக்கில் வந்ததால் இன்ப அதிர்ச்சி!!


அமெரிக்காவை சேர்ந்த கிரிஸ் ரெனால்ட்ஸ்(56) என்பவர் பழங்கால கார் உதிரி பாகங்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வருகிறார்.
இணையதளம் மூலமாக இந்த தொழிலை செய்ய வசதியாக 'ஆன் லைன் பேங்கிங்' எனப்படும் உடனடி பணப் பறிமாற்ற நிறுவனமான 'பே பால்' நிறுவனத்தில் இவர் கணக்கு தொடங்கியுள்ளார்.
சென்ற மாதத்தின் கணக்கு இறுதி அறிக்கையை பே பால் நிறுவனம் கிரிஸ் ரெனால்டுக்கு அனுப்பி வைத்தது.
இதைக் கண்ட அவருக்கு இன்ப அதிர்ச்சியில் மூச்சே நின்று விடுவது போல் ஆகிவிட்டது. அவரது கணக்கில் கையிருப்பாக 92 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு 5 ஆயிரத்து 520 லட்சம் கோடி ரூபாய்)இருப்பதாக அந்த மாத அறிக்கை குறிப்பிட்டது.
பே பால் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கணக்கு வைத்திருக்கும் கிரிஸ் ரெனால்ட், 'இதுவரை இந்த கணக்கின் மூலம் மாதமொன்றுக்கு 100 டாலர்களுக்கு மேல் நான் வரவு - செலவு செய்தது கிடையாது.
என் கணக்கில் இவ்வளவு பெரிய தொகை இருப்பதாக அறிக்கை வந்ததும், நாம் வங்கிக்கு இவ்வளவு பணம் கட்ட வேண்டுமா? என்று பயந்து விட்டேன். பிறகுதான் என் கணக்கில் இந்த தொகை பற்றாகி இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக 'ஆன் லைன்' மூலம் என் கணக்கு விபரத்தை சரிபார்த்த போது எனது கையிருப்பு பூஜ்ஜியம் டாலராக இருந்தது' என்கிறார்.
கம்ப்யூட்டர் குளறுபடியால் இந்த தவறு நேர்ந்து விட்டதாக பே பால் நிறுவனம் அறிவித்துள்ளது.
உண்மையாகவே இவ்வளவு பெரிய தொகை உங்களுக்கு கிடைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? என்று அவரிடம் கேட்டபோது, 'நான் சமூக பொறுப்பு மிகுந்த குடிமகன். முதலில் அமெரிக்காவின் எல்லா கடனையும் அடைத்துவிட ஏற்பாடு செய்வேன்' என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார்

புதன், 17 ஜூலை, 2013

பாதியில் இடைநிறுத்தப்பட்ட விண்வெளி பயணம்


நாசா விண்வெளி மையத்திலிருந்து ஆறு விண்வெளிவீரர்கள் விண்ணிற்கு செலுத்தப்பட்டுள்ளனர்.
அதில் லுகா பர்மிடானோ என்ற இத்தாலி வீரர் விண்ணில் நடக்க இருக்கும் முதல் இத்தாலியர் என்ற பெருமையுடன் கிறிஸ்டோபர் காசிடி என்ற மற்றொரு வீரருடன் இன்று விண்வெளியில் நடக்க ஆரம்பித்தார்.
விண்வெளியில் நடத்தப்பட வேண்டிய வழக்கமான பராமரிப்பு பணியுடன், கேபிள் இணைப்பு போன்ற பணியையும் செய்வதற்காக அவர்கள் ஆறு மணி நேரம் விண்வெளியில் இருப்பதாக இருந்தது. ஆனால், ஒரு மணி நேரத்திற்கெல்லாம் பர்மிடானோ தனது பின்னந்தலையில் நிறைய தண்ணீர் இருப்பதுபோல் உணருவதாக சொன்னதும் கண்காணித்துக் கொண்டிருந்த அனைவரும் திடுக்கிட்டனர்.
முதலில், அதனை வியர்வை என்று அவர் நினைத்தார். தண்ணீர் குடிப்பதற்காக ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர்ப் பையிலிருந்து கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று அவரது சக வீரர் காசிடி தெரிவித்தார். ஆனால், சிறிது நேரத்திற்கெல்லாம் அந்தத் தண்ணீர் அவரது கண்ணில் நிறைய ஆரம்பித்தது.
இதனால் நாசா மையம் இருவரையும் விண்வெளி மையத்திற்கு திரும்ப அழைத்தது. அதற்குள் அவரது மூக்கு,வாய் போன்ற இடங்களிலும் நீர் சேர ஆரம்பித்து அவரால் நாசாவின் அறிவிப்பைக் கூட கேட்க இயலவில்லை. பர்மிடானோ திரும்புவதற்கு உதவிய காசிடி, உடனடியாக தாங்கள் நின்றிருந்த பகுதியை சுத்தம் செய்த பின்னர் மீண்டும் விண்வெளி மையத்திற்குள் நுழைந்தார்.
அங்கிருந்த மீதி நால்வரும் பர்மிடானோவின் ஹெல்மெட்டைக் கழற்றி அவரது தலையைத் துவட்ட உதவினர். நாசாவின் தொலைக்காட்சியில் தோன்றிய பர்மிடானோ அனைவரையும் நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தார்.
இந்த நீர்க்கசிவு எதனால் ஏற்பட்டது என்று ஆராயப்பட்டு வருகின்றது. கடந்த 2004-ம் ஆண்டு, ரஷ்ய வீரர்களும், அமெரிக்க வீரர்களும் விண்வெளியில் நடந்தபோது, அவர்கள் அணிந்திருந்த உடையில் ஏற்பட்ட பிரச்சினையினால் 14 நிமிடத்திற்கெல்லாம் திரும்ப அழைக்கப்பட்டனர். இப்போது இவர்களின் விண்வெளி நடை ஒரு மணி 32 நிமிடம் நீடித்தது
 

மண்டேலாவின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட


தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பினத் தலைவரும், இனவெறிக் கொள்கையை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டு ஜனாதிபதியாக உயர்வு பெற்ற நெல்சன் மண்டேலாவின் பிறந்ததினம் வெகு விமர்சையாக கொண்டாப்படவுள்ளது.
எதிர்வரும் 18ம் தேதி அவரின் பிறந்த நாள் ஆகும்.
உயிர் காக்கும் சாதனங்களின் உதவியுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்த நாளை உலகளாவிய அளவில் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பொது வாழ்க்கையில் நெல்சன் மண்டேலாவின் 67 ஆண்டு கால தொண்டினை போற்றும் விதமாக 67 நிமிடங்களை பொதுப்பணிக்கு செலவிட உள்ளேன் என இங்கிலாந்தின் பிரபல தொழிலதிபரான ரிச்சர்ட் பிரான்சன் தெரிவித்துள்ளார்.
மண்டேலா பிறந்த ஊரில் வரும் 18ம் தேதி அவரது பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட சிறப்பு அறிவியல் பாடசாலை திறக்கப்படுகிறது. தென்னாபிரிக்காவிலுள்ள பாடசாலைகளுக்கு  வர்ணம் பூசவும், ஏழை குழந்தைகளுக்கு இலவச ஆடைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 17 நகரங்களில் நலத்திட்ட உதவிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஆப்பிரிக்க இசை கலைஞர்கள் மெல்போர்ன் நகரில் மாபெரும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தனது வாழ்நாளில் 46 ஆண்டுகளை சிறை தண்டனையில் கழித்த மண்டேலா 2010ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக நெல்சன் மண்டேலா கடந்த மாதம் 8ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலைமை மோசமாகவே, உயிர் காப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டன.
இதனிடையில் மண்டேலா குடும்பத்தினரின் கல்லறைப் பிரச்சினைகள் நீதிமன்றம் வரை சென்றன. அவ்வழக்கை விரைந்து முடிப்பதற்காக மண்டேலா கோமா நிலைக்குச் சென்றுவிட்டார் என்றும் சொல்லப்பட்டது.
பின்னர், அரசும், அவரது மனைவி மற்றும் நண்பர்கள் அனைவரும் இதற்கு மறுப்பு அறிக்கையும் விடுத்தனர். பொதுமக்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 6 வாரங்கள் கடந்த நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. அவரது மனைவியும் அதனை ஆமோதித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா முழுவதும் இருக்கும் பாடசாலை குழந்தைகள் ஒரே நேரத்தில் அவரை வாழ்த்தி 'ஹேப்பி பேர்த் டே டூ யூ..' என இசைக்க உள்ளனர்