siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 4 நவம்பர், 2013

ரேபிஸ் நோய்த் தொற்று: 10 பேர் மருத்துவமனையில்


 
பிரான்சில் ரேபிஸ் நோய்க்கான அறிகுறிகளுடன் 10 பேர் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த வாரம் இரண்டு மாத பூனைக்குட்டி ஒன்று பாரிசுக்கு 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பகுதியில் இருந்து தத்தெடுக்கப்பட்டது.

மூன்று நாட்கள் கழித்து இந்த பூனைக்குட்டி உயிரிழந்தது விட்டது, அப்போது தான் பூனைக்கு ரேபிஸ் நோய் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இந்த பூனையுடன் தொடர்பில் இருந்த 10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் 5 பேருக்கு தற்காப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.
இவர்கள் பூனையில் அருகில் இருந்ததால், நோய்த் தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மற்ற உயிரினங்களுக்கு நோய் பரவியுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கு முன்பாக கடந்த 1998ம் ஆண்டு நரி ஒன்றுக்கும், 2008ம் ஆண்டு நாய் ஒன்றுக்கு இந்த நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

படகு கவிழ்ந்து மியான்மரில் பரிதாபம்: 62 பேர் பலி


 மியான்மரில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி 62 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மியான்மரில் இருந்து வங்கதேசத்துக்கு நேற்று பெண்கள்,

 குழந்தைகள் உட்பட 70 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று வங்காள விரிகுடா கடலில் சென்றது.
அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றியதாலும், தற்போது மழை காலம் என்பதால் கடுமையான காற்று வீசியதாலும், எதிர்பாராத விதமாக படகு சேதம் அடைந்தது.

இதனால் கடல்நீர் புகுந்ததும், பாரம் தாங்காமல் நடுக்கடலில் கவிழ்ந்தது.
இதில் படகில் இருந்த குழந்தைகள் உள்பட 70 பேரும் நடுக்கடலில் தத்தளித்தனர்.

இதில் இன்று காலை குழந்தைகள் உள்பட 8 பேரை மீட்டதாக மியான்மர் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீதமுள்ளவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்கள் கடலில் மூழ்கி பலியாயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மியான்மரில் நடைபெறும் வன்முறைகளுக்கு பயந்து கடந்த 18 மாதத்தில் மட்டும் 2.5 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
 

ஞாயிறு, 3 நவம்பர், 2013

செட்டிபாளையம் பிரதான வீதியில் பாரிய விபத்து



மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் செட்டிபாளையம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் பாரிய பஸ் விபத்தொன்று இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச்சென்ற தனியார் பஸ் ஒன்றும் மட்டக்களப்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற ஏறாவூர் இலங்கை போக்குவரத்து சபை சாலைக்குச் சொந்தமான பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

பஸ்களில் பயணம் செய்த பயணிகளுக்கு எவ்வித உயிராபத்தும் ஏற்படவில்லை. தனியார் பஸ் சாரதி ஒருவரே காயமடைந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

திங்கள், 21 அக்டோபர், 2013

கனடாவில் மாணவர் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற



மோதலில் தமிழ் இளைஞன் பலி கனடாவின் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகமருகே இரு மாணவர் குழுக்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை ஏற்ப்பட்ட மோதலில். மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி இறந்துள்ளார்

சனி, 19 அக்டோபர், 2013

இங்கிலாந்து ராணியுடன் பெண் கல்வி போராளி மலாலா சந்திப்பு


பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்டு மரணத்தில் இருந்து மீண்ட மலாலா யூசப்சாய்க்கு சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் உயரிய சகாரோவ் மனித உரிமை பரிசு வழங்கப்பட்டது.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் மலாலாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இதுதவிர பல்வேறு சர்வதேச கவுரவ விருதுகளையும் பெற்றுள்ள மலாலா சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்து உரையாற்றினார்.

அவருக்கு கவுரவ குடியுரிமை வழங்க கனடா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது வெளியிடப்படும் என தெரிகிறது.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ரவுல் வேலன் பெர்க், நெல்சன் மண்டேலா, தலாய் லபாமா, ஆங்சான் சூகி, நிசாரி இஸ்மாயிவ் மதகுரு அகா கான் ஆகியோருக்கு அடுத்தபடியாக கனடா நாட்டின் கவுரவ குடியுரிமையை பெறும் ஆறாம் நபர் மலாலா என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபத்தும் மலாலாவை சந்திக்க அழைப்பு அனுப்பினார்.

லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு தந்தை ஜியாவுதீனுடன் சென்ற அவர், தனக்கு தலிபான்களால் நேரிட்ட அவலம் தொடர்பாக எழுதிய ‘ஐ ஆம் மலாலா’ என்ற புத்தகத்தை ராணிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
இங்கு வந்ததை நான் உயரிய கவுரவமாக கருதுகிறேன். இங்கிலாந்து உள்பட எல்லா நாடுகளிலும் வாழும் நிறைய குழந்தைகள் கல்வி உரிமை பெறாமல் உள்ளனர்.

நிறைய குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் உள்ளனர்.
அவர்களின் கல்விக்காக எனது பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்று ராணியிடம் மலாலா கூறினார்.
அப்போது இடைமறித்த ராணியின் கணவர், ‘எங்கள் நாட்டில் பிள்ளைகளை வீட்டில் இருந்து விரட்ட வேண்டும் என்பதற்காகவே பள்ளிகளுக்கு அனுப்பி விடுகின்றனர்’ என்று நகைச்சுவையாக கூறினார்.

ராணியின் எதிரில் அடக்கமாக இருக்க வேணடும் என்பது மரபு. இதையறிந்த மலாலா முகத்தில் பொங்கி வந்த சிரிப்பை கைகளால் மறைத்துக் கொண்டார்.

வியாழன், 17 அக்டோபர், 2013

விமானம் ஆற்றில் விழுந்ததில் 11 நாடுகளைச் சேர்ந்த


தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடு லாவொஸ் நாட்டில் விமானமொன்று ஆற்றில் விழுந்ததில் 11 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 49 பயணிகள் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்.

இந்நாட்டின் வடமேற்கில் சீனாவும், மியான்மாரும் கிழக்கில் வியட்நாம் நாடும், தெற்கில் கம்போடியா, மேற்கில் தாய்லாந்து ஆகியன எல்லைகளாக அமைந்துள்ளன.

நேற்று லாவோஸில் உள்ள லாவோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று தலைநகர் வியன்டியானேவில் இருந்து நாட்டின் தென்பகுதியில் உள்ள ஒரு நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டது
.
லாவோசில் உள்ள மேகாங் என்ற ஆறு அருகே சென்ற போது, விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால், விமானம் திடீரென நடுஆற்றுக்குள் விழுந்து நொறுங்கியது. தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை இந்தக் கொடூர விபத்தில் 11 நாடுகளைச் சேர்ந்த 49 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, விபத்திற்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை.




 

புதன், 16 அக்டோபர், 2013

மலலாவுக்கு கௌரவ குடியுரிமை அளிக்க கனடா


இஸலாமிய பெண்களது கல்வி உரிமைக்காக போராடியவரும் , இதற்காக தலிபான்களால் சுடப்பட்ட பின்னரும் தொடர்ந்து தனது கொள்கையில் விடாப்பிடியாய் அதே நேரத்தில் அமைதியான வழியில்

 போராடி வருபவருமான அமைதிக்கான நோபெல் பரிசுக்கு பரிந்துரைக்கபப்ட்ட மலலாவுக்கு கௌரவ குடியுரிமை அளிக்க கனடா முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது இந்தக் குடியுரிமை மலலாவுக்கு வழங்கப்படும்

 பட்சத்தில் தலாய் லாமா, Aung San Suu Kyi, அகா கான் , நெல்சன் மண்டேலா மற்றும் Raoul Wallenberg ஆகியோர் வரிசையில் கௌரவ கனடிய குடியுரின்ம பெறும் ஆறாவது நபர் என்ற பெருமையை மலலா பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

செவ்வாய், 15 அக்டோபர், 2013

காசா- இஸ்ரேல் இடையே ரகசிய சுரங்கப்பாதை


 
காசாவிலிருந்து இஸ்ரேல் வரைவுள்ள சுமார் 2.5 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதையை இஸ்ரேல் இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஹமாஸ் பிரிவினர் ஆட்சி செய்யும் பகுதியான காசாவிலிருந்து இஸ்ரேல் வரை தோண்டப்பட்டுள்ள சுமார் 2.5 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதையை இஸ்ரேலிய இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் நுழைவு வாயில் இஸ்ரேல்- காசா எல்லையை ஒட்டியுள்ள கிபுட்சு என்ற இடத்தில் உள்ளது.

ஹமாஸ் பிரிவினர் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும், இதில் ஏதேனும் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்தும் ஆராயப்படுகிறது.
இதன் எதிரொலியாக காசாவிற்கு செல்லவிருந்த கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ரகசிய சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்த இராணுவத்தினரை பிரதமர் பெஞ்சமின் நேதன்ஞாஹு பாராட்டியுள்ளார்.

ஆயினும், ரகசிய சுரங்கத்தை ஹமாஸ் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அந்நாட்டு ராணுவத் தகவல் அதிகாரியான அபு ஒபைடா மறுத்துள்ளார்.

மேலும் இதேபோன்று ஆயிரக்கணக்கான சுரங்கங்களை இஸ்ரேல் இராணுவத்தினர் தோண்டக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று சுரங்கப்பாதை வழியே கடந்த 2006 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய ராணுவ வீரரான கிலா ஸ்காலிட் என்பவரைக் ஹமாஸ் ராணுவத்தினர் கடத்திச் சென்று ஐந்து வருடம் காவலில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பெண்ணுக்கு கத்திக்குத்து கனடாவில்


 டொரண்டோவை சேர்ந்த பெண்ணை மர்ம நபர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
கனடாவின் வடமேற்கு டொரண்டோவில் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை 5.30 மணிக்கு அவரச அழைப்பு வந்ததை தொடர்ந்து, பொலிஸ் அதிகாரிகள் விரைந்து சென்றனர்.

அப்போது, பெண் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார், ஆனால் மற்ற அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக நபர் ஒருவரை கைது செய்ததுடன், ஏதேனும் உள் பிரச்னையின் காரணமாக இது நடந்திருக்கலாம் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பில் ஏதும் தெரிந்தால் தங்களை அணுகும்படி தெரிவித்துள்ளனர்.
 

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

ஆப்கன்- அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் ?


நேட்டோ படைகளைத் திரும்பப் பெறும் ஒப்பந்தம் தொடர்பாக ஆப்கனுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதிகளை ஒடுக்க, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையைச் சேர்ந்த 87,000 வீரர்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் படைவீரர்களை அடுத்த ஆண்டு இறுதிக்குள் திரும்பப் பெறும் எண்ணத்தில் அமெரிக்கா உள்ளது.

அந்த படைகளை வாபஸ் பெறும் ஒப்பந்தத்தில் ஆப்கனுடன், இந்த மாத இறுதிக்குள் ஒப்பந்தம் செய்யவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
நேட்டோ படைவீரர்கள் ஒட்டுமொத்தமாக ஆப்கனை விட்டுச்சென்றால், நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஆப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், ஜான் கெர்ரி ஆகியோர் இடையே 2-ஆவது நாளாக சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

முன்னேற்ற நிலை: இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், "இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னேற்ற நிலையை அடைந்துவருகிறது. இதில் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன' என்றனர்.