siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

தனிநாடாக பிரியக்கூடாது: அவுஸ்திரேலிய பிரதமர்

  ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து ஸ்கொட்லாந்து மக்கள் தனியாக பிரிந்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென அவுஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து தனிநாடு கோரும் வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது.
வாக்கெடுப்பு பத்திரத்தில் சுதந்திர நாடாக மாறுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆம் இல்லை என்ற வார்த்தைகள் மாத்திரமே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆம் என்ற புள்ளியிடலில் புள்ளியிட வேண்டாம் என அவுஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் இந்த கருத்தனை வெளியிட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

ஆஸ்திரேலிய மருத்துவமனை மன்னிப்பு கோரியது.

    அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் உள்ள ஆஸ்டின் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் சிகிச்சை பெற்றுவரும் 200 நோயாளிகளைத் தவறுதலாக இறந்தவர்கள் என்று அறிவித்துவிட்டது. இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மருத்துவமனை நிர்வாகம் இன்று பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளது. தங்களிடம் பணிபுரியும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவமனையை விட்டு செல்லும்போது அந்தந்த மருத்துவர்களுக்கு அனுப்பப்படும் தகவல் குறிப்புகளில் கவனக்குறைவாக இதுபோல் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று இம்மருத்துவமனையின் சுகாதாரப்பிரிவு இயக்குனர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், மேலும் இந்தத் தவறு குறித்து அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர் என்றும் நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது. இதனால் நோயாளிகளின் கவனிப்பு பாதிக்கப்படவில்லை என்றும் இந்த அறிக்கை தெரிவித்தது. இந்தத் தவறு ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என்று கூறிய ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம், இதனால் பணியில் இருந்த மருத்துவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றது. எதிர்த்தரப்பு உறுப்பினர்களோ சுகாதார அமைப்பின் அதிகப்படியான வேலைப்பளுவை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகின்றது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
 
 
 

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

தவறான கிரீன் சிக்னல்: பள்ளத்தில் பாய்ந்த மூதாட்டியின் கார்

ஜேர்மனியில் தவறான போக்குவரத்து விளக்கால் கார் நேருக்கு நேர் மோதியதில் மூன்று நபர்கள் காயம் அடைந்துள்ளனர். ஜேர்மனியின் கொப்லென்ஸ் நகரில் சாலை ஒன்றில் போக்குவரத்து விளக்கு தவறாக காட்டியுள்ளது. இரு சாலையில் மத்தியில் இருந்த இந்த விளக்கு, இரு சாலையினருக்கும் பச்சை விளக்கு காட்டியதால் 72 வயது மூதாட்டி ஓட்டிய கார் மற்றொரு காரின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ஏதிரே வந்த காரில் இருந்த 46 வயது நபர் தனது காரை திருப்ப முயன்ற போது இந்த விபத்து நடந்துள்ளது. வேகமாக மோதியதால் மூதாட்டியின் கார் பறந்து சென்று பள்ளத்தில் விழுந்துள்ளது. இதனால் இவர் பலத்த காயமடைந்துள்ளார். தற்போது இந்த சாலை தற்காலிகமாக மூடப்பட்டு தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

முதியவரின் திருட்டுத்தனம் அம்பலம்

பிரான்ஸ் நாட்டில் முதியவர் ஒருவர் பழமை வாய்ந்த பொருட்களை திருடி விற்ற குற்றத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 60 வயது மது தயாரிப்பாளர் ஒருவர் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது பொலிசார் அவரது காரினை சோதனை நடத்தியதில், 112 ரோமன் நாணயங்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், பொலிசார் இவர் வீட்டை சோதனை செய்த போது, பழமை வாய்ந்த நாணயங்கள் மற்றும் ஏராளமான நகைகள் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து உரிமம் இல்லாமல் தொல்பொருட்களை விற்றதற்காக 200,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

சனி, 9 ஆகஸ்ட், 2014

பிரித்தானியா வீசாவுக்கு விண்ணப்பிப்போருக்காக புதிய திட்டம் அறிமுகம்!

 இலங்கையில் இருந்து பிரித்தானியா வீசாவுக்கு விண்ணப்பிப்போருக்காக புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இது கடவுச்சீட்டை திரும்ப வழங்கும் ( passport-back service) சேவை என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. புதிய அறிமுகத்தின்படி வீசாவுக்காக ஆவணங்களை சமர்ப்பிப்போர் வீசா தயாரிப்பு நடைபெறும் பெரும்பாலான காலத்தில் தமது கடவுச்சீட்டை தம்வசம் வைத்திருக்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி சுற்றுலா, வியாபாரம் உட்பட அடிக்கடி பிரித்தானியாவுக்கு சென்று திரும்புவோரும் இதில் உள்வாங்கப்படுவார்கள். இதேவேளை இந்த திட்டத்துக்காக 9400 ரூபா மேலதிக கட்டணமாக அறவிடப்படவுள்ளது.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

பார்க்கும் பெண்களை எல்லாம் கொன்று குவிக்கும் மர்ம நபர்

பிரேசிலில் மர்ம நபர் ஒருவர்  கண்ணில் பட்ட  பெண்களை எல்லாம் கொல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் கொயானியா நகரத்தில் மர்ம நபர் ஒருவன் பெண்களை தேடி தேடி கொலை செய்து வருகிறான்.
மோட்டார் சைக்களில் உலா வரும் அந்நபர் இளம்பெண்கள் அருகில் சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளான்.
இதுவரை 13 வயதில் இருந்து 29 வயதிற்கு உட்பட்ட 12 பெண்களை கொலை செய்துள்ள அவன், கடைசியாக இரு தினங்களுக்கு முன்பு 14 வயது சிறுமியை கொலை செய்துள்ளான்.
இந்நிலையில் இவன் அடுத்து யாரை கொலை செய்யப்போகிறான் என தெரியாமல் பெண்கள் பீதியில் உள்ளனர்.
தற்போது இவனை பிடிக்க தீவிர முயற்சி கொண்ட பொலிசார் நகரம் முழுவதும் வலைவரித்தபோதும் இதுவரை அவன் சிக்கவில்லை.
மேலும் ஒவ்வொரு பெண்ணை கொலை செய்யும்போதும், அவன் வெவ்வேறு மோட்டார் சைக்கிளில் வருவதால் அவனை பிடிப்பதில் பொலிசார் திணறி வருகின்றனர்.


இங்குஅழுத்தவும்மற்றைய செய்திகள்
 

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா

  பொருளாதார மேம்பாட்டிற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் முடிவை உக்ரைன் எடுத்தபோது, ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புத்தின் அதனை நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட பிரிவினை மோதல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. உக்ரைனின் கிழக்குப் பகுதி பிராந்தியத்தில் ஒன்றான கிரிமியா உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கு இடையே ரஷ்யாவுடன் தன்னை இணைத்துக்கொண்டது. உக்ரைனின் இன்னும் சில பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைக்க ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 இதனை ரஷ்யா ஆதரிப்பதாகக் கூறி அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அந்நாட்டின் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. உக்ரைனில் நிலவும் நெருக்கடிக்கு காரணகர்த்தா ரஷ்யா என்பதை வெகுவாக விமர்சித்த கம்யூனிஸ்ட் நாடுகளில் போலந்தும் ஒன்றாகும். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக போலந்திலிருந்து இறக்குமதியாகும் காய்கறி, பழங்களுக்கு ரஷ்யா முற்றிலுமாகத் தடை விதித்துள்ளது. இந்த இறக்குமதியில் ஏராளமான பூச்சிக்கொல்லி மிச்சங்களும், நைட்ரேட் ரசாயனங்களும் கலந்துள்ளது என்று ரஷ்யாவின் உணவு சுகாதார அதிகாரிகள் தடை விதித்தபோது குறிப்பிட்டுள்ளனர். போலந்தில் விளையும் அப்பிள்களுக்கு ரஷ்யாவே பிரதான ஏற்றுமதி சந்தையாகும்.

ஆண்டுதோறும் ஒரு பில்லியன் யூரோ வரையிலான அந்நிய செலாவணியை போலந்திற்கு இந்த வர்த்தகம் பெற்றுத் தந்தது. இந்தத் தடை உத்தரவினால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவிகிதம் பாதிக்கப்படக்கூடும் என்று போலந்தின் துணைப் பிரதமர் ஜனுஸ் பிசோசின்ஸ்கி தெரிவித்துள்ளார். போலந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்

 விவசாயப் பொருட்களே 3.8 சதவிகிதத்தை அளிப்பதால் விவசாயிகள் தங்களின் வருமானத்திற்கான நஷ்ட ஈட்டை ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்டுப் பெறத் திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி ரஷ்யாவின் மீதான தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் அப்பிள் படங்களை அவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
.
  மற்றைய செய்திகள்

சனி, 2 ஆகஸ்ட், 2014

இரக்கமற்ற பெற்றோர்: மரணத்தின் பிடியில் குழந்தை (காணொளி, )

வாடகைத் தாய் மூலம் பெற்ற தமது பிள்ளையை, அவுஸ்திரேலிய தம்பதி ஒன்று தவிக்க விட்டுச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலிய தம்பதி ஒன்று வாடகைத் தாய் ஒன்றின் மூலம் பிள்ளையை  பெற்றெடுக்க முடிவு செய்தனர். இவர்மூலம் பிறந்த ஆரோக்கியமான பிள்ளையை எடுத்துக் கொண்டு, நோயாளிப் பிள்ளையை விட்டுச் சென்றுள்ளனர்.
தாய்லாந்தைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய பட்டாராமன் சனுபா என்ற பெண்மணியே இந்தப் பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தாய்லாந்தில் வறுமையில் வாடும் சனுபாவை,  அவுஸ்திரேலிய தம்பதியினர் தொடர்பு கொண்டு, தமது கருவை சுமக்க முடியுமா என்று கேட்டுள்ளனர். இதற்காக 16,000 டொலர்களை செலுத்தவும் இணங்கியிருக்கிறார்கள்.
இதன் பிரகாரம், அவுஸ்திரேலிய தம்பதியின் கருவைச் சுமந்த சனுபா கடந்த டிசம்பர் மாதம் இரட்டைக் குழந்தைகளை பெற்றிருக்கிறார்.
இந்தக் குழந்தைகளில் பெண் குழந்தை ஆரோக்கியமானதாக இருந்தபோதிலும், ஆண் சிசு டோவ்ன் சின்ட்ரோம் என்ற வளர்ச்சிக் குறைபாட்டு நோயால் பீடிக்கப்பட்டிருந்த விடயம் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலிய தம்பதி அதனை சனுபாவிடம் விட்டு, பெண் குழந்தையுடன் சொந்த நாட்டுக்கு சென்றுள்ளனர்.
தமது வயிற்றில் சுமந்த பிள்ளைக்கு கெமி என்று பெயர் சூட்டி கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ளும் சனுபாவிற்கு இன்னொரு சோதனை. கெமியின் இருதயத்தில் துவாரம் ஏற்பட்டுள்ளதென்ற செய்தி சனுபாவின் காதில் இடியாக விழுந்தது.
கெமி உயிர்வாழ வேண்டுமானால் பாரியதொரு சத்திரசிகிச்சை செய்ய  வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமையில் வாழும் வாடகைத் தாயால் அதற்குரிய பணத்தைத் திரட்டுவது முடியாத காரியம்.
எனினும் கெமியின் அவுஸ்திரேலிய தாய் தந்தை கைவிட்டபோதிலும், பொதுமக்கள் கைவிடவில்லை.
குழந்தையின் சிகிச்சைக்காக இணையத்தின் மூலம் பிரச்சாரமொன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்மூலம் 60,000 டொலர்களை திரட்டிக் கொடுத்துள்ளார்கள்.

மற்றைய செய்திகள்

திங்கள், 28 ஜூலை, 2014

பிரான்ஸில் போதைப் பொருளால் உயிரிழந்த குடும்பம்

பிரான்ஸில் ஓட்டுநர் ஒருவர் போதைப் பொருள் உட்கொண்டு லொறி ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸின் கிழக்கு பகுதியில் லொறி ஓட்டுநர் ஒருவர் தவறான பாதையில் லொறியை ஓட்டியுள்ளார்.
அப்போது எதிரே வந்த காருடன், லொறி ஓட்டுநர் நேருக்கு நேர் மோதியதால் காரில் இருந்த பெண்ணும் அவரது குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்
இந்நிலையில் படுகாயமடைந்த இந்த ஓட்டுநரை மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் அளவிற்கு அதிகமான போதைப் பொருளை உட்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

மற்றைய செய்திகள்

சுட்டுக்கொலை பொலிஸ்: மக்களுக்கு 5,000 யூரோ சன்மானம்

 ஜேர்மனியில் பொலிசார் ஒருவர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனியின் ப்ராங்பெட் நகரை சேர்ந்த பொலிசார் ஒருவர், தனது குடும்ப உறுப்பினர்களுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிக்கொண்டிருந்த போது மர்மநபர்கள் சிலர் அவரை சுட்டுள்ளனர்.
தற்போது இந்த கொலை தொடர்பாக, பொலிசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொலையாளியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 5,000 யூரோ சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கொலை தொடர்பாக 87 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் கொலைக்கான காரணம் அறியப்படவில்லை.
 மற்றைய செய்திகள்